முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி அவரே சொந்தமாக ஏற்படுத்திக் கொண்டது எஸ்.ரட்னஜீவன் ஹ_ல்

கடந்த இரவு(ஜூன் 15ல்) நான் சில உணவு வகைகளைப் பெற்றுக்கொள்வதற்காக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய கடையான அமூலுக்கு சென்றபோது, அந்தக் கடைக்காரர் இன்று(16 ஜூன்) சிக்கலில் மாட்டியுள்ள முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக தமிழ் மக்கள் பேரவை கடையடைப்பு ஒன்றை நடத்தும்படி அறிவித்து உள்ளதால் அதற்கு பதிலளித்து கடையை இன்று திறப்பதா வேண்டாமா என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்.

தினக்கூலிக்கு உழைப்பவர்கள் எல்லாமே மூடப்பட்டால் உயிர்வாழ்வதற்காக அமைதியாக தியானம் செய்தார்கள். இன்று தனது பாணை வாங்குவதற்கு கொள்வனவாளர்கள் இருப்பார்களா என்று எனது பேக்கரிக்காரர் ஆச்சரியப்பட்டார். வலம்புரி பத்திரிகை இன்று கடைகள் மூடப்படும் என்று ஏற்கனவே 10 ரூபா விலையுள்ள தனது சிறப்பு செய்தித்தாள் மூலம் அறிவித்துள்ளது.

இன்று காலை நான் வைத்தியசாலைக்குச் செல்லவேண்டியிருந்தது. பல கடைகள் ஆனால் வழக்கமான புறக்கணிப்பு சமயங்களில் மூடப்படுபவகளைக் காட்டிலும் குறைவான அளவில் மூடப்பட்டிருந்தன. நோயாளிகள் எல்.ரீ.ரீ.ஈ யின் கீழ் இருந்த காலத்திற்குப் பல வருடங்களுக்குப் பின்னர் தங்கள் உண்மையான உணர்வுகளைக் காட்டாது அமைதியாக இருந்தார்கள், ஆனால் அவர்களது ஆத்திரம் முச்சக்கரவண்டிகளைப் பயன்படுத்துவது பற்றி அவர்கள் முணுமுணுப்பதில் இருந்து வெளிப்பட்டது. நீண்ட காலமாக தனது எக்கோ கார்டியாகிராபுக்காக காத்திருந்த பெண் ஒருவர் முச்சக்கர வண்டி கட்டணம் காரணமாக அதை இழக்க முடியாத நிலையில் இருந்தார்.

யாழ்ப்பாண வாத்தக சம்மேளனத் தலைவர் ஜெயசேகரம், வழக்கமாக கடைக்காரர்கள் இப்படியான புறக்கணிப்பிற்கு இணங்க வேண்டுமா என எங்களிடம் கேட்பார்கள் ஆனால் இந்தமுறை அவர்கள் எங்களுடன் ஆலோசிக்கவில்லை எனக் கருத்து தெரிவித்தார்.யாழ்ப்பாண பேரூந்து நிலையத்தில் ஒரே ஒரு பேரூந்து மட்டுமே நிறுத்தப்பட்டிருந்தது. அநேக கடைகள் ஒரு கதவைத் திறந்து வழக்கம்போல வியாபாரம் செய்து கொண்டிருந்தன. “தமிழ் மக்கள் பேரவை வழக்கமாக தங்கள் தலைமைப் பேச்சாளராக கொண்டிருப்பவர் பல்கலைக்கழகத்தில் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதற்காக காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்ட ஒருவர், நாங்கள் அவர்களுக்கு ஆதரவு வழங்க மாட்டோம், ஆனால் எங்கள் கதவுகளை மூடியிருப்பது ஒரு எச்சரிக்கைக்காக” என்று ஒரு கடைக்காரர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனது நிறுவனத்தின் கிளைக்கு தலைமை வகிக்கும் கணக்காளர் ஒருவர், “முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சம்பந்தனுக்குப் பிறகு தமிழ் தேசியக் கூட்டமைப்பை தன்வசப் படுத்திக் கொள்வதற்காக தன்னை பிரபாகரனின் வாரிசு போல காட்டிக்கொள்ள முயலுகிறார்” என்று சொன்னார். அங்கு பல்வேறு வகையான ஊழல்கள் இருந்தன. அனந்தியால் (காணாமல்போன எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர் எழிலனின் மனைவி) குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. அவரது பல குற்றச்சாட்டுகள் செயல்திறன் குறைவு என்பதைப்போல அhத்தமற்றவை, ஆனால் சில உண்மையான குற்றச்சாட்டுகளும் இருந்தன.

ஒரு ரி.என்.ஏ பிரமுகர், விக்னேஸ்வரன் சம்பந்தனுக்கு விசுவாசமான அமைச்சர்களை இலக்கு வைக்கிறார், டெனீஸ்வரன் (ரெலோ அடைக்கலநாதனின் மருமகன்), மருத்துவர் சத்தியலிங்கம் (அவர் தனது தந்தையான வவுனியா யாழ் அகற்றிச் சங்க பாதுகாவலரின் நிலைப்பாட்டில் இருந்து தனது நிலைபை;பாட்டை மிதமாக்கிக் கொண்டவர்) மற்றும் ரி.குருகுலராஜா அவர் சம்பந்தனின் பரம ரசிகர். எறியப்பட்ட மற்றொரு அமைச்சர் ஐங்கரநேசன், சுன்னாகம் மின் நிலையத்தை வாங்கியது மற்றும் அதன் கழிவு எண்ணெய் நிலத்தடி நீருக்குள் சென்றது போன்ற தீவிரமான பல குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக உள்ளன.

சி.வி விக்னேஸ்வரன் இந்த குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக இரண்டு ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் ஒரு ஓய்வுபெற்ற ஸ்ரீலங்கா நிருவாக சேவை உத்தியோகத்தர் அடங்கலான மூவரைக் கொண்ட ஒரு மதிப்பான குழுவை நியமித்தார். இதற்கிடையில் சி.வி.விக்னேஸ்வரனின் அமைச்சர் ஐங்கரநேசன் தங்கள் சொந்த துறையில் நிபுணத்துவம் வாய்ந்த சில தமிழர்களை பணியமர்த்தி இருந்தார், ஆனால் அவர்கள் நீரியல் சோதனைகளில் நிபுணத்துவம் பெற்றிருக்கவில்லை. இந்தக் குழு ஐங்கரநேசனின் செயல்களுக்கு வெள்ளையடித்து தவறுகளை மறைத்தது. ஆனால் விசாரணைக் குழு இறுதியாகத் தனது அறிக்கையை வெளியிட்டபோது அந்த வெள்ளையடிப்பு விவகாரம் வெளிப்பட்டது. அது ஐங்கரநேசன் ஊழல்கள் செய்ததில் குற்றவாளி எனக்கண்டது, மற்றும் அவருக்கு வெள்ளையடித்துக் காப்பாற்றிய தமிழர்கள் குழு நிர்வாண நிலைக்கு தள்ளப்பட்டது.

எதிர்பாராத விதமாக, ஒரு ஆசிரியர் தனது மாணவியான ஒரு பெண்மீது துஷ்பிரயோகம் மேற்கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கான விசாரணையை முன்னெடுக்காததுக்காக தீவிரமான தவறிழைத்ததாக குருகுலராஜாமீது குற்றம் சாட்டப்பட்டது. சத்தியலிங்கம் மற்றும் டெனிஸ்வரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டார்கள். இப்போது விக்கினேஸ்வரன் தடுமாற்றம் அடைந்தார். அவர் அந்த அறிக்கைக்கு மேன்முறையீடு செய்வதற்கு கால அவகாசம் பெற விரும்பினார். அதனால் அவர் அமைச்சர்கள் நாலுபேரும் இராஜினாமாச் செய்யவேண்டும் அல்லது கட்டாய விடுமுறையில் செல்லவேண்டும் என அறிவித்தார். அப்போதுதான் விஷயங்கள் வெடித்தன.

எப்போ விசாரணைக்குழு நியமிக்கப்பட்டுவிட்டதோ பின்னர் அதன் அறிக்கையை பின்பற்றுவதைத் தவிர வேறு தெரிவு இல்லை என்கிற நிலைப்பாட்டை இப்போது ரி.என்.ஏ எடுத்துள்ளது. விக்னேஸ்வரனுக்கு தடைவிதித்து அவருக்கு எதிராக வட மாகாணசபையின் 15 அங்கத்தவர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமர்பித்தபோது, தமிழ் மக்கள் பேரவை தனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதைக் கண்டது மற்றும் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக அது கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தது.

நான் வைத்தியசாலையில் இருந்து கோவில் வீதி வழியாக திரும்பி வந்தபோது, ஒரு ஐம்பது பேர் வரையான ஒரு கூட்டம் ஸ்ரீ.ல.சு.க பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் வீட்டுக்கு முன்னால் வேலைகள் பெறவேண்டி காத்திருப்பதைக் கண்டேன். நான் அதைக் கடந்து கோவிலுக்கு அருகில் வந்தபோது அதே அளவான ஒரு கூட்டம் (நிருபர்கள் அதை தள்ளுபடி செய்தால் ஆனால் அதிலும் சிறிய என்று சேர்க்கவும்) சி.வி விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக காத்திருந்தது. அது பேராசிரியர் சிற்றம்பலம் (தமிழரசுக் கட்சியின் உப தலைவர்), சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஈபிஆர்எல்எப்) மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (தமிழ் காங்கிரஸ்) போன்ற பல வகையானவர்களைக் கொண்ட ஒரு குழு. குறிப்பாக அந்தக் கூட்டத்தின் கோஷம் ஊழலைவிட சுமந்திரனுக்கு எதிரானதாகவே இருந்தது என்று அந்தக் கூட்டத்தில் இருந்த நண்பர் ஒருவர் குறிப்பிட்டார். சுமந்திரனை கொழும்பில் இருந்து கொண்டுவந்தது கிறிக்கட் பந்தயத்தில் எத்தனை ஸ்ரீலங்கா விக்கட்டுகள் விழுந்தன என்று எண்ணுவதற்கு அல்லாது  யுத்தத்தில் எத்தனை தமிழர்கள் இறந்தார்கள் என்று எண்ணுவதற்கு அவர் பயிற்றப்படவில்லை என்று அந்தக் கூட்டத்தில் பேசியதாக அந்த நண்பர் தெரிவித்தார். எனக்கு உண்மையான இலக்கு சம்பந்தன் என்றே தோன்றுகிறது. பிரேமச்சந்திரனுக்கு, ஐங்கரநேசன் போனால் சி.வி. விக்னேஸ்வரனைப் பயன்படுத்தி  அவருக்குப் பதிலாக தனது சகோதரனான சர்வேஸ்வரனை அமைச்சராக்கும் சொந்த திட்டம் உள்ளது என்று ரி.என்.ஏ உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார். பிரேமச்சந்திரன் ஐங்கரநேசனை ஈபிஆர்எல்எப் இலிருந்து வெளியேற்றியவர் ஆவார்.

தமிழரசுக் கட்சியின் உயர்மட்ட நிருவாகி ஒருவர் கருத்து வெளியிடும்போது, இந்த நெருக்கடி சி.வி.விக்னேஸ்வரனின் சொந்த செயற்பாட்டால் ஏற்பட்டது என்றார். ரி.என்.ஏ யில் உள்ள தமிழரசுக் கட்சியின் ஏனைய கூட்டாளிகளுடன் இந்த நெருக்கடியை தணிப்பது பற்றி விக்னேஸ்வரன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார், ஆனால் தமிழரசுக் கட்சியின் மாவை சேனாதிராஜாவுடன் இதுபற்றிப் பேசவில்லை, அது ஏன் என்று சம்பந்தன் விசாரித்தபோது, சேனாதிராஜாவின் தொலைபேசி இலக்கம் தன்னிடம் இல்லை என்று பதில் வந்ததாம். அந்த நிருவாகி “இந்த முதலமைச்சரைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று என்னிடம் கேலியாக வினாவினார்.

விசாரணை அறிக்கை நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்,- குருகுலராஜா மற்றும் ஐங்கரநேசன் ஆகியோர் பதவியை இராஜினாமாச் செய்வார்கள் ஆனால் டெனிஸ்வரன் மற்றும் மருத்துவர் சத்தியலிங்கம் ஆகியோர் மீதான குற்றங்கள் தெளிவு படுத்தப்படாததால் அவர்கள் பதவியை தொடருவார்கள் என சம்பந்தன் சொன்னதால் இந்த நெருக்கடி தணிக்கப்படும் எனத் தெரிகிறது. அதுதான் ஒப்பந்தம் என்று தோன்றுகிறது, ஆனால் சி.வி.விக்னேஸ்வரன் அதற்கு வெளிப்படையாக ஆம் என்று சம்மதம் தெரிவிக்கவில்லை.

நாங்கள் காத்திருக்க வேண்டிய தேவை உள்ளது. சம்பந்னைப் போன்ற விவேகமான மனிதர்கள் நம்மைச் சுற்றி உள்ளார்கள், தமிழர்களுக்கு நிலுவையில் உள்ள பிரச்சினைகளை அரசாங்கம் தீர்த்து வைக்க வேண்டும். ஒருவேளை அவர் போய்விட்டால் தீவிரவாதிகளுடன் மட்டுமே பேச்சுக்கள் நடத்தவேண்டி இருக்கும்.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.

",d.insertBefore(c.lastChild,d.firstChild)}function d(){var a=t.elements;return"string"==typeof a?a.split(" "):a}function e(a,b){var c=t.elements;"string"!=typeof c&&(c=c.join(" ")),"string"!=typeof a&&(a=a.join(" ")),t.elements=c+" "+a,j(b)}function f(a){var b=s[a[q]];return b||(b={},r++,a[q]=r,s[r]=b),b}function g(a,c,d){if(c||(c=b),l)return c.createElement(a);d||(d=f(c));var e;return e=d.cache[a]?d.cache[a].cloneNode():p.test(a)?(d.cache[a]=d.createElem(a)).cloneNode():d.createElem(a),!e.canHaveChildren||o.test(a)||e.tagUrn?e:d.frag.appendChild(e)}function h(a,c){if(a||(a=b),l)return a.createDocumentFragment();c=c||f(a);for(var e=c.frag.cloneNode(),g=0,h=d(),i=h.length;i>g;g++)e.createElement(h[g]);return e}function i(a,b){b.cache||(b.cache={},b.createElem=a.createElement,b.createFrag=a.createDocumentFragment,b.frag=b.createFrag()),a.createElement=function(c){return t.shivMethods?g(c,a,b):b.createElem(c)},a.createDocumentFragment=Function("h,f","return function(){var n=f.cloneNode(),c=n.createElement;h.shivMethods&&("+d().join().replace(/[\w\-:]+/g,function(a){return b.createElem(a),b.frag.createElement(a),'c("'+a+'")'})+");return n}")(t,b.frag)}function j(a){a||(a=b);var d=f(a);return!t.shivCSS||k||d.hasCSS||(d.hasCSS=!!c(a,"article,aside,dialog,figcaption,figure,footer,header,hgroup,main,nav,section{display:block}mark{background:#FF0;color:#000}template{display:none}")),l||i(a,d),a}var k,l,m="3.7.2",n=a.html5||{},o=/^<|^(?:button|map|select|textarea|object|iframe|option|optgroup)$/i,p=/^(?:a|b|code|div|fieldset|h1|h2|h3|h4|h5|h6|i|label|li|ol|p|q|span|strong|style|table|tbody|td|th|tr|ul)$/i,q="_html5shiv",r=0,s={};!function(){try{var a=b.createElement("a");a.innerHTML="",k="hidden"in a,l=1==a.childNodes.length||function(){b.createElement("a");var a=b.createDocumentFragment();return"undefined"==typeof a.cloneNode||"undefined"==typeof a.createDocumentFragment||"undefined"==typeof a.createElement}()}catch(c){k=!0,l=!0}}();var t={elements:n.elements||"abbr article aside audio bdi canvas data datalist details dialog figcaption figure footer header hgroup main mark meter nav output picture progress section summary template time video",version:m,shivCSS:n.shivCSS!==!1,supportsUnknownElements:l,shivMethods:n.shivMethods!==!1,type:"default",shivDocument:j,createElement:g,createDocumentFragment:h,addElements:e};a.html5=t,j(b)}(this,document);',c.insertBefore(e,d),b=42===f.offsetWidth,c.removeChild(e),{matches:b,media:a}}}(a.document)}(this),function(a){"use strict";function b(){v(!0)}var c={};a.respond=c,c.update=function(){};var d=[],e=function(){var b=!1;try{b=new a.XMLHttpRequest}catch(c){b=new a.ActiveXObject("Microsoft.XMLHTTP")}return function(){return b}}(),f=function(a,b){var c=e();c&&(c.open("GET",a,!0),c.onreadystatechange=function(){4!==c.readyState||200!==c.status&&304!==c.status||b(c.responseText)},4!==c.readyState&&c.send(null))},g=function(a){return a.replace(c.regex.minmaxwh,"").match(c.regex.other)};if(c.ajax=f,c.queue=d,c.unsupportedmq=g,c.regex={media:/@media[^\{]+\{([^\{\}]*\{[^\}\{]*\})+/gi,keyframes:/@(?:\-(?:o|moz|webkit)\-)?keyframes[^\{]+\{(?:[^\{\}]*\{[^\}\{]*\})+[^\}]*\}/gi,comments:/\/\*[^*]*\*+([^/][^*]*\*+)*\//gi,urls:/(url\()['"]?([^\/\)'"][^:\)'"]+)['"]?(\))/g,findStyles:/@media *([^\{]+)\{([\S\s]+?)$/,only:/(only\s+)?([a-zA-Z]+)\s?/,minw:/\(\s*min\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,maxw:/\(\s*max\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,minmaxwh:/\(\s*m(in|ax)\-(height|width)\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/gi,other:/\([^\)]*\)/g},c.mediaQueriesSupported=a.matchMedia&&null!==a.matchMedia("only all")&&a.matchMedia("only all").matches,!c.mediaQueriesSupported){var h,i,j,k=a.document,l=k.documentElement,m=[],n=[],o=[],p={},q=30,r=k.getElementsByTagName("head")[0]||l,s=k.getElementsByTagName("base")[0],t=r.getElementsByTagName("link"),u=function(){var a,b=k.createElement("div"),c=k.body,d=l.style.fontSize,e=c&&c.style.fontSize,f=!1;return b.style.cssText="position:absolute;font-size:1em;width:1em",c||(c=f=k.createElement("body"),c.style.background="none"),l.style.fontSize="100%",c.style.fontSize="100%",c.appendChild(b),f&&l.insertBefore(c,l.firstChild),a=b.offsetWidth,f?l.removeChild(c):c.removeChild(b),l.style.fontSize=d,e&&(c.style.fontSize=e),a=j=parseFloat(a)},v=function(b){var c="clientWidth",d=l[c],e="CSS1Compat"===k.compatMode&&d||k.body[c]||d,f={},g=t[t.length-1],p=(new Date).getTime();if(b&&h&&q>p-h)return a.clearTimeout(i),i=a.setTimeout(v,q),void 0;h=p;for(var s in m)if(m.hasOwnProperty(s)){var w=m[s],x=w.minw,y=w.maxw,z=null===x,A=null===y,B="em";x&&(x=parseFloat(x)*(x.indexOf(B)>-1?j||u():1)),y&&(y=parseFloat(y)*(y.indexOf(B)>-1?j||u():1)),w.hasquery&&(z&&A||!(z||e>=x)||!(A||y>=e))||(f[w.media]||(f[w.media]=[]),f[w.media].push(n[w.rules]))}for(var C in o)o.hasOwnProperty(C)&&o[C]&&o[C].parentNode===r&&r.removeChild(o[C]);o.length=0;for(var D in f)if(f.hasOwnProperty(D)){var E=k.createElement("style"),F=f[D].join("\n");E.type="text/css",E.media=D,r.insertBefore(E,g.nextSibling),E.styleSheet?E.styleSheet.cssText=F:E.appendChild(k.createTextNode(F)),o.push(E)}},w=function(a,b,d){var e=a.replace(c.regex.comments,"").replace(c.regex.keyframes,"").match(c.regex.media),f=e&&e.length||0;b=b.substring(0,b.lastIndexOf("/"));var h=function(a){return a.replace(c.regex.urls,"$1"+b+"$2$3")},i=!f&&d;b.length&&(b+="/"),i&&(f=1);for(var j=0;f>j;j++){var k,l,o,p;i?(k=d,n.push(h(a))):(k=e[j].match(c.regex.findStyles)&&RegExp.$1,n.push(RegExp.$2&&h(RegExp.$2))),o=k.split(","),p=o.length;for(var q=0;p>q;q++)l=o[q],g(l)||m.push({media:l.split("(")[0].match(c.regex.only)&&RegExp.$2||"all",rules:n.length-1,hasquery:l.indexOf("(")>-1,minw:l.match(c.regex.minw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||""),maxw:l.match(c.regex.maxw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||"")})}v()},x=function(){if(d.length){var b=d.shift();f(b.href,function(c){w(c,b.href,b.media),p[b.href]=!0,a.setTimeout(function(){x()},0)})}},y=function(){for(var b=0;b