சீரற்ற கால நிலையால் கிளிநொச்சி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் இவற்றுக்கான உடனடித் தீர்வுகளையும் ,தேவைகளையும் நிறைவேற்றும் பொருட்டு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகம்  தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அனர்த்தத்தினால் ஏற்ப்பட்ட பாதிப்புக்கள், எத்தனை குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது ,என்ன தேவைகள் இருக்கிறது என்ற பல்வேறு விடயங்கள் அவசரமாக ஆராயப்படுகின்றது

இக் கலந்துரையாடலில்  பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் , வடமாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் , மேலதிக அரசாங்க அதிபர் சத்தியசீலன் ,கிளிநொச்சி மாவட்ட இராணுவத்தளபதி , முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை , அரச அலுவலகங்களின் பிரதிநிதிகள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் அரசசார்பற்ற நிறுவனகளின் பிரதி நிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்