அத்­துடன் இந்­நோ­யி­னால் ­சராசரியாக நாளொன்றுக்கு 1000 பேர் வரை­யில்­ சிகிச்சைக்கு வந்துசெல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்­நி­லையில் இந்­நோயின் தாக்கம் தொடர்­பா­கவும்,

அதனை தவிர்ப்­ப­தற்­கா­ன வ­ழி­மு­றை­கள் ­தொ­டர்­பா­க­வும்­ வைத்­தி­யர்­ ஜ­மு­னாந்­தா தெரிவித்ததாவது,

தற்­போது அண்­மை­யா­ன­ ஒ­ரு­மா­த­கா­ல­மா­க­ பு­தி­ய­ ஒ­ரு ­நோய் ­ப­ர­வி­வ­ரு­கின்­றது.  இந் நோயா­ன­து­இன்­பு­ளு­வன்­ஸா­ வை­ர­ஸால்­ ஏற்­ப­டு­கின்­றது.  இதனால் சரா­ச­ரி­யா­க யாழ். போதனா வைத்­தி­ய­சா­லை­யின்­ வெ­ளி­நோ­யா­ளர்­ பி­ரிவில் 400  பேர் வரை­யில் ­சி­கிச்­சைக்­கா­க ­வ­ரு­கை­த­ரும் ­நி­லை­யில்­தற்­போ­து­ இவ்­எண்­ணிக்­கை­ ஆ­யி­ர­மாக அதி­க­ரித்­துள்­ளது.

இந்நோயின் ­தாக்­க­மா­ன­து ­வித்­தி­யா­ச­மா­ன­தா­க­ உள்­ளது.  குறிப்­பாக இந்­நோ­யின்­அ­றி­கு­றி­யா­க ­தொடர்ச்சியான காய்ச்சல்,  உடல் வலி, சளி,  தும்மல் காணப்­ப­டல்­ போன்­ற­ அ­றி­கு­றி­கள்­ தென்­படும். றிப்­பாக இந்­நோ­யின்­ அ­றி­கு­றியும்,  டெங்கு நோயின்­அ­றி­கு­றி­யும்­ ஒ­ரே­மா­தி­ரி­யா­க­ இ­ருப்­ப­தால் ­மக்கள் ­இந்­நோ­யை ­டெங்­கு­ நோ­யா­க ­த­வ­றா­க­ நி­னைக்­கும்­ சந்­தர்ப்­பங்­க­ளும்­ உண்டு.

ஒரு­வ­ருக்கு இந்­நோய்­ கா­ணப்­ப­டும்­போ­து­ அ­வ­ர­து ­தும்­ம­லா­லே­யே ­இந்நோய் ­மற்­றை­ய­வர்­க­ளுக்­கு­தொற்­று­கின்­றது.  அதா­வது ஒரு­வர்ம ற்­ற­வ­ருக்­கு ­எ­தி­ரா­க­ தும்­மும்­போ­து ­அ­வ­ர­து ­தும்மலிலிருந்து ­மற்­ற­வ­ருக்­கு­ சிந்­தும்­ ச­ளி­யால்­ இந்­நோய் ­ப­ர­வு­கின்­றது.

இந் நோயா­ன­து ­கு­ழந்­தைகள் மற்­றும்­வ­ளர்ந்­த­வர்­க­ளில்­ சலரோக நோ­யா­ளர்கள், கர்­ப­வ­திகள், அஸ்மா நோயா­ளிகள்,   போன்­ற­வர்­களை அதி­கம்­ தாக்­கு­கின்­றது.  இந்­நி­லையில் இந்­நோ­யால் ­பா­திக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கு ­நீராகாரம்,  நீர்­சத்து நிறைந்­த ­உ­ண­வு­கள் ­கொ­டுக்­க­வேண்­டி­ய­து­டன்­ வைத்தியசாலைக்கு ­வ­ரு­ப­வர்­க­ளுக்­கு­ அ­வர்­க­ளின்­ நோ­யின் ­தாக்­க­ அ­ள­வை ­பொ­றுத்­து ­சி­கிச்­சை­ வழங்கப்பட்டு வருகின்றது.

இவ்­வா­றான நிலை­யில்­ இந்­நோ­யி­னை­ த­விர்க்­க­வேண்­டு­மா­யின் ­தற்­போ­தை­ய ­சூழ்­நி­லை­யில்­ அ­தி­க­ள­வா­ன ­ச­ன­நெ­ருக்­கம்­ நி­றைந்­த­ இ­டத்­திற்­கு­ செல்­வ­தை ­த­விர்க்­க­வேண்டும். ஏனெனில்­ சு­வா­சம்­தொ­டர்­பா­ன ­நோ­யா­த­தால்­அ­தி­க­ள­வா­ன ­மக்­கள்­ நெ­ரி­ச­லா­ன­ இ­டத்­தில்­ இந்­நோய்­ ப­ர­வு­வ­து­ இ­ல­கு­வா­ன­தா­க­ இ­ருக்கும்.  மேலும் ஒரு­வர்­ தும்­மும்­போ­து ­மற்­றை­ய­வ­ருக்­கு­ எ­தி­ரே­ தும்­மா­து ­இ­ருக்­க­வேண்டும். இந்நோயின் கிருமியானது ஒரு கிலோமீற்றர் வரை தொற்றிக்கொள்ளும் தன்மையுடையது.

அத்துடன் ஒருவர் தும்மும்போது பிரத்தியேகமான கைக்குட்டையைப் பயன்படுத்துவதோடு, சளியைத் துடைக்கப் பயன்படுத்தும் துண்டுகளை பாவித்தபின்னர் தீயிலிட்டுக் கொழுத்தவேண்டும். இதேபோன்று கைகளை நன்கு சுத்தமான நீரில் சவர்க்காரம் போட்டுக் கழுவியபின்னரே எந்த வேலையையும் செய்யவேண்டும். இவற்றினூடாகவே இந்நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும். இவற்றைவிட இந்நோய்தொடர்பான அறிகுறிகள் காணப்படுமாயின் அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.