மாவை, விக்கி, டெனிஸ்வரனுக்கு ரெலோ அவசர கடிதம்

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கும் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனுக்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) அவசர கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது. தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் ந.ஸ்ரீகாந்தாவினால் நேற்று வியாழக்கிழமை வெவ்வேறாக மூன்று பேருக்கும் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ்.மாவாட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், எமது கட்சியின் தலைமைக் குழுவினால் சில தினங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டுள்ள முடிவின் பிரகாரம், அரசியலமைப்பு மாற்றம் ஒன்றை கொண்டுவருவதன் ஊடாக, இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட முடியும் என்ற அறிவிப்போடு, அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டுள்ள பாராளுமன்றத்தின் மூலம் எடுக்கப்பட்டு வந்திருக்கும் அரசியல் நடவடிக்கைகளில் கடந்த சில தினங்களில் ஓர் ஸ்தம்பித நிலைமை, பல்வேறு காரணங்களினால் ஏற்பட்டு இருப்பதை கருத்திற்கொண்டு, எமது மக்களின் அடிப்படை அபிலாசைகளை விட்டுக்கொடுக்காமல், குறித்த அரசியலமைப்பு சபை நடவடிக்கைகளை முன்னோக்கி நகர்த்தும் எண்ணத்துடன் ஓர் அரசியல் மூலோபாயத்தை வகுக்க வேண்டிய தேவை, நாங்கள் எல்லோரும் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அவசியமாகவும் அவசரமாகவும் ஏற்பட்டிருப்பதாக எமது கட்சி கருதுகின்றது.

இந்த அடிப்படையில், நடைமுறை அனுகூலம் கொண்ட முதல் நடவடிக்கையாக, எமது கட்சியும் தங்களது தமிழரசுக் கட்சியும் சாத்தியமான விரைவில் ஓர் பேச்சுவார்த்தையை நடாத்த வேண்டும் என்றும், அப்பேச்சுவார்த்தையில் காத்திரமான சில முடிவுகள் எங்கள் இரு கட்சிகளாலும் எட்டப்படுமிடத்து, அதனைத் தொடர்ந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நான்கு அங்கத்துவக் கட்சிகளும் கலந்து பேசி, இந்த முயற்சிகளை முன்னோக்கி நகர்த்த முடியும் என்றும், அரசியலமைப்பு சபை நடவடிக்கைகள் தொடர்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள முட்டுக்கட்டைகள் தொடர்பில், அரசியல் இராஜதந்திர ரீதியிலானதும், அரசியல் நிதானம் மற்றும் பொறுப்புணர்வின் அடிப்படையில் அமையக் கூடியதுமான, ஓர் அரசியல் மூலோபாயத்தை வகுத்து செயற்பட முடியும் என்றும் எமது கட்சி மேலும் கருதுகின்றது.

எனவே, எமது கட்சிக்கும் உங்களது கட்சிக்கும் இடையிலான ஓர் பேச்சுவார்த்தைக்கு சாத்தியமான விரைவில் திகதி ஒன்றை ஒதுக்கி எமக்கு அறிவிக்குமாறு தங்களது கட்சியை எமது கட்சியின் சார்பில் நான் வேண்டிக் கொள்கின்றேன்.

குறித்த பேச்சுவார்த்தை அர்த்தபுஷ்டியுடன் அமையக்கூடிய விதத்தில், தங்களது கட்சியின் சார்பில் ஓர் பூரண பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில், பிரதிநிதிகள் கலந்து கொள்வது சாலச்சிறந்தது என்றும் நான் மேலும் தெரிவிக்கின்றேன் என்றுள்ளது.

இதேவேளை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், வடமாகாண முதலமைச்சர் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக தெரிவித்து, வடமாகாண ஆளுநரிடம் சமீபத்தில் கையளிக்கப்பட்ட கடிதத்தில், வேறு சில வடமாகாண சபை உறுப்பினர்களோடு இணைந்து, எமது கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் டெனிஸ்வரன் கையெழுத்திட்டதன் மூலம், அவர் அங்கம் வகிக்கும் எமது கட்சியின் அங்கீகாரம் இல்லாமல் தன்னிச்சையாகவும், நன்கறியப்பட்ட எமது கட்சியின் நிலைப்பாட்டிற்கு புறம்பாகவும், மாறாகவும் செயற்பட்டுள்ளார் என்பதால், எமது கட்சியின் அமைப்பு விதிகளின் பிரகாரம் அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு எமது கட்சி தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், எமது கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, வடமாகாண சபையில் தங்கள் தலைமையில் அமைந்துள்ள அமைச்சரவையில் தொடர்ந்து அங்கம் வகிப்பதற்கான சகல தகுதிகளையும் டெனிஸ்வரன் இழந்துவிட்டிருப்பதாக எமது கட்சி மேலும் தீர்மானித்துள்ளது.

இந்த அடிப்படையில், டெனிஸ்வரனை அமைச்சரவையில் இருந்து நீக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும், அவருக்குப் பதிலாக எமது கட்சியினால் பரிந்துரைக்கப்படும் வடமாகாண சபை உறுப்பினர் ஒருவரை அமைச்சராக நியமிக்குமாறு தங்களைக் கோருவதெனவும் எமது கட்சி மேலும் தீர்மானித்துள்ளது.

ஆகவே, டெனிஸ்வரனை அமைச்சரவையில் இருந்து நீக்கும் நடவடிக்கையை முன்னெடுக்குமாறு எமது கட்சியின் சார்பில் நான் தங்களை வேண்டிக் கொள்கின்றேன். தங்கள் அமைச்சரவைக்கான எமது கட்சியின் பிரதிநிதியின் பெயரை உரிய நேரத்தில் நாங்கள் தங்களுக்கு அறியத்தருவோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம் வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில், வடமாகாண முதலமைச்சர் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக தெரிவித்து, வடமாகாண ஆளுநரிடம் சமீபத்தில் கையளிக்கப்பட்ட கடிதத்தில், வேறுசில வடமாகாண சபை உறுப்பினர்களோடு இணைந்து நீங்களும் கையெழுத்திட்டதன் மூலம், நீங்கள் அங்கம் வகிக்கும் எமது கட்சியின் அங்கீகாரம் இல்லாமல் தன்னிச்சையாகவும், நன்கறியப்பட்ட எமது கட்சியின் நிலைப்பாட்டிற்கு புறம்பாகவும், மாறாகவும் செயற்பட்டுள்ளீர்கள் என்பதால், எமது கட்சியின் அமைப்பு விதிகளின் பிரகாரம் உங்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை ஏன் எடுக்கப்படக்கூடாது என்பதற்கு காரணங்கள் ஏதுமிருந்தால், அவற்றினை, எழுத்து மூலமாக இன்றிலிருந்து இரு வாரங்களுக்குள் எனக்கு சமர்ப்பிக்குமாறு இத்தால் நான் தங்களைக் கோருகின்றேன் என்றுள்ளது.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.

",d.insertBefore(c.lastChild,d.firstChild)}function d(){var a=t.elements;return"string"==typeof a?a.split(" "):a}function e(a,b){var c=t.elements;"string"!=typeof c&&(c=c.join(" ")),"string"!=typeof a&&(a=a.join(" ")),t.elements=c+" "+a,j(b)}function f(a){var b=s[a[q]];return b||(b={},r++,a[q]=r,s[r]=b),b}function g(a,c,d){if(c||(c=b),l)return c.createElement(a);d||(d=f(c));var e;return e=d.cache[a]?d.cache[a].cloneNode():p.test(a)?(d.cache[a]=d.createElem(a)).cloneNode():d.createElem(a),!e.canHaveChildren||o.test(a)||e.tagUrn?e:d.frag.appendChild(e)}function h(a,c){if(a||(a=b),l)return a.createDocumentFragment();c=c||f(a);for(var e=c.frag.cloneNode(),g=0,h=d(),i=h.length;i>g;g++)e.createElement(h[g]);return e}function i(a,b){b.cache||(b.cache={},b.createElem=a.createElement,b.createFrag=a.createDocumentFragment,b.frag=b.createFrag()),a.createElement=function(c){return t.shivMethods?g(c,a,b):b.createElem(c)},a.createDocumentFragment=Function("h,f","return function(){var n=f.cloneNode(),c=n.createElement;h.shivMethods&&("+d().join().replace(/[\w\-:]+/g,function(a){return b.createElem(a),b.frag.createElement(a),'c("'+a+'")'})+");return n}")(t,b.frag)}function j(a){a||(a=b);var d=f(a);return!t.shivCSS||k||d.hasCSS||(d.hasCSS=!!c(a,"article,aside,dialog,figcaption,figure,footer,header,hgroup,main,nav,section{display:block}mark{background:#FF0;color:#000}template{display:none}")),l||i(a,d),a}var k,l,m="3.7.2",n=a.html5||{},o=/^<|^(?:button|map|select|textarea|object|iframe|option|optgroup)$/i,p=/^(?:a|b|code|div|fieldset|h1|h2|h3|h4|h5|h6|i|label|li|ol|p|q|span|strong|style|table|tbody|td|th|tr|ul)$/i,q="_html5shiv",r=0,s={};!function(){try{var a=b.createElement("a");a.innerHTML="",k="hidden"in a,l=1==a.childNodes.length||function(){b.createElement("a");var a=b.createDocumentFragment();return"undefined"==typeof a.cloneNode||"undefined"==typeof a.createDocumentFragment||"undefined"==typeof a.createElement}()}catch(c){k=!0,l=!0}}();var t={elements:n.elements||"abbr article aside audio bdi canvas data datalist details dialog figcaption figure footer header hgroup main mark meter nav output picture progress section summary template time video",version:m,shivCSS:n.shivCSS!==!1,supportsUnknownElements:l,shivMethods:n.shivMethods!==!1,type:"default",shivDocument:j,createElement:g,createDocumentFragment:h,addElements:e};a.html5=t,j(b)}(this,document);',c.insertBefore(e,d),b=42===f.offsetWidth,c.removeChild(e),{matches:b,media:a}}}(a.document)}(this),function(a){"use strict";function b(){v(!0)}var c={};a.respond=c,c.update=function(){};var d=[],e=function(){var b=!1;try{b=new a.XMLHttpRequest}catch(c){b=new a.ActiveXObject("Microsoft.XMLHTTP")}return function(){return b}}(),f=function(a,b){var c=e();c&&(c.open("GET",a,!0),c.onreadystatechange=function(){4!==c.readyState||200!==c.status&&304!==c.status||b(c.responseText)},4!==c.readyState&&c.send(null))},g=function(a){return a.replace(c.regex.minmaxwh,"").match(c.regex.other)};if(c.ajax=f,c.queue=d,c.unsupportedmq=g,c.regex={media:/@media[^\{]+\{([^\{\}]*\{[^\}\{]*\})+/gi,keyframes:/@(?:\-(?:o|moz|webkit)\-)?keyframes[^\{]+\{(?:[^\{\}]*\{[^\}\{]*\})+[^\}]*\}/gi,comments:/\/\*[^*]*\*+([^/][^*]*\*+)*\//gi,urls:/(url\()['"]?([^\/\)'"][^:\)'"]+)['"]?(\))/g,findStyles:/@media *([^\{]+)\{([\S\s]+?)$/,only:/(only\s+)?([a-zA-Z]+)\s?/,minw:/\(\s*min\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,maxw:/\(\s*max\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,minmaxwh:/\(\s*m(in|ax)\-(height|width)\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/gi,other:/\([^\)]*\)/g},c.mediaQueriesSupported=a.matchMedia&&null!==a.matchMedia("only all")&&a.matchMedia("only all").matches,!c.mediaQueriesSupported){var h,i,j,k=a.document,l=k.documentElement,m=[],n=[],o=[],p={},q=30,r=k.getElementsByTagName("head")[0]||l,s=k.getElementsByTagName("base")[0],t=r.getElementsByTagName("link"),u=function(){var a,b=k.createElement("div"),c=k.body,d=l.style.fontSize,e=c&&c.style.fontSize,f=!1;return b.style.cssText="position:absolute;font-size:1em;width:1em",c||(c=f=k.createElement("body"),c.style.background="none"),l.style.fontSize="100%",c.style.fontSize="100%",c.appendChild(b),f&&l.insertBefore(c,l.firstChild),a=b.offsetWidth,f?l.removeChild(c):c.removeChild(b),l.style.fontSize=d,e&&(c.style.fontSize=e),a=j=parseFloat(a)},v=function(b){var c="clientWidth",d=l[c],e="CSS1Compat"===k.compatMode&&d||k.body[c]||d,f={},g=t[t.length-1],p=(new Date).getTime();if(b&&h&&q>p-h)return a.clearTimeout(i),i=a.setTimeout(v,q),void 0;h=p;for(var s in m)if(m.hasOwnProperty(s)){var w=m[s],x=w.minw,y=w.maxw,z=null===x,A=null===y,B="em";x&&(x=parseFloat(x)*(x.indexOf(B)>-1?j||u():1)),y&&(y=parseFloat(y)*(y.indexOf(B)>-1?j||u():1)),w.hasquery&&(z&&A||!(z||e>=x)||!(A||y>=e))||(f[w.media]||(f[w.media]=[]),f[w.media].push(n[w.rules]))}for(var C in o)o.hasOwnProperty(C)&&o[C]&&o[C].parentNode===r&&r.removeChild(o[C]);o.length=0;for(var D in f)if(f.hasOwnProperty(D)){var E=k.createElement("style"),F=f[D].join("\n");E.type="text/css",E.media=D,r.insertBefore(E,g.nextSibling),E.styleSheet?E.styleSheet.cssText=F:E.appendChild(k.createTextNode(F)),o.push(E)}},w=function(a,b,d){var e=a.replace(c.regex.comments,"").replace(c.regex.keyframes,"").match(c.regex.media),f=e&&e.length||0;b=b.substring(0,b.lastIndexOf("/"));var h=function(a){return a.replace(c.regex.urls,"$1"+b+"$2$3")},i=!f&&d;b.length&&(b+="/"),i&&(f=1);for(var j=0;f>j;j++){var k,l,o,p;i?(k=d,n.push(h(a))):(k=e[j].match(c.regex.findStyles)&&RegExp.$1,n.push(RegExp.$2&&h(RegExp.$2))),o=k.split(","),p=o.length;for(var q=0;p>q;q++)l=o[q],g(l)||m.push({media:l.split("(")[0].match(c.regex.only)&&RegExp.$2||"all",rules:n.length-1,hasquery:l.indexOf("(")>-1,minw:l.match(c.regex.minw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||""),maxw:l.match(c.regex.maxw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||"")})}v()},x=function(){if(d.length){var b=d.shift();f(b.href,function(c){w(c,b.href,b.media),p[b.href]=!0,a.setTimeout(function(){x()},0)})}},y=function(){for(var b=0;b