போராட்டங்களை அறியாதவர்கள் ஏனைய இயக்கங்களை சேர்ந்தவர்களை துரோகியாக சித்தரித்துவருகின்றனர்

போராட்டங்களை அறியாதவர்களும் ஒரு அமைப்பினை மட்டும் ஆதரிப்பவர்களும் ஏனைய இயக்கங்களை சேர்ந்தவர்களை துரோகியாக சித்தரித்துவருகின்றனர்.இன்றுள்ள போராட்ட இயக்கங்களைப்பற்றி அறியாத ஒரு சில ஊடகவியலாளர்களும் இயக்கங்களை துரோகியாக சித்திரிக்கின்றனர் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பின்போது கோவிந்தன் கருணாகரம் உரையாற்றுகையில், இந்த நாட்டில் தமிழர்களின் உரிமைக்காக போராடியவர்கள் உறவுகளை இழந்தவர்கள் நாங்கள்.சிறுவயதிலேயே உரிமைக்காக புத்தக பைகளை தூக்கியெறிந்துவிட்டு சமூகத்திற்காக ஆயுதம் ஏந்தி போராடியவர்கள் நாங்கள். இயக்க மோதல்கள் ஏற்படுவதற்கு முன்பாக இருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் தவிர்ந்த நான்கு இயக்கங்களில் அதிகளவான உறுப்பினர்கள் இணைந்துகொண்டனர்.

இயக்க மோதல்கள் ஏற்பட்டபோது எந்த இயக்கத்துக்கு செல்கின்றோம் என்று தெரியாமல் சென்றவர்களும் உள்ளனர்.எந்த இயக்கத்துக்கு சென்றாவது தமிழ் மக்களுக்கான விடுதலையைப்பெற்றுக்கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்துடனேயே சென்றார்கள்.அவர்கள் இன்று இருந்திருந்தால் தமிழீழம் என்றோ மலர்ந்திருக்கும் என்பதை நாங்கள் அறிவோம்.ஆனால் இன்றுள்ள சில்லறை வண்டுகளுக்கு இந்த விடயங்கள் தெரியாது.

அமரர்.அமிர்தலிங்கம் அவர்களை நினைவுகூருவதற்கு அவரை சார்ந்தவர்கள் எண்ணுவதில்லை.நினைவுகூர்த்தால் தங்களையும் எதிரியாக நினைப்பார்களோ என்னு எண்ணுகின்றனர்.ஆனால் அவரை வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் நினைவுகூறுகின்றனர்.இறந்தவர்கள் நினைவு கூரப்படவேண்டும்.அவர்கள் எமது உறவுகள்.அது யாராகவிருந்தாலும் அதனைசெய்யவேண்டும்.

பகையை மறந்து முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த அனைத்து மக்களுக்கும் போராளிகளுக்கும் தலைவர்களுக்குமாக விளக்கேற்றுக்கின்றோம். 2001ஆம்ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்படுவதற்கு முன்னர் இங்கிருந்த தமிழ் கட்சிகளுக்கிடையிலோ ஆயுதம் ஏந்திய இயக்கங்களுக்கிடையிலோ நிரந்தரமான ஒற்றுமையேற்படவில்லை.

2001ஆம் ஆண்டுக்கு பின்னரே வடகிழக்கில் சகோதரப்படுகொலைகள் குறைந்தது.இயக்கங்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக 5000க்கும் மேற்பட்ட போராளிகள் உயிரிழந்துள்ளனர்.அந்த நிலையில் 2001இல்தான் மாற்றம்பெற்றது. அனைத்து பகைமைகளையும் மறந்து இயக்கங்கள் அரசியல் கட்சிகள் ஒன்றிணைக்கப்பட்டு பலமான அரசியல் கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

எனினும் அதற்குள்ளும் ஒன்றுமையில்லாத நிலையே இருக்கின்றது. வடகிழக்கில் நடக்கும் அரசியல் சூதாட்டங்களை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.வடமாகாணத்தில் நடந்த அரசியல் போராட்டங்களை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.தெற்கில் உள்ள தமிழ் மக்களின் போராட்டங்களை விரும்பாதவர்கள் கைகொட்டி சிரிக்குமளவுக்கு நாங்கள் நடந்துகொள்கின்றோம்.

இத்தனை இழப்புகளையும் இழந்த பின்னரும் இவ்வாறான நிலையென்றால் நாங்கள் நாங்கள் எங்கு செல்லப்போகின்றோம் என்பதே பெரும் கேள்விக்குறியாகவுள்ளது.கிழக்கு மாகாணசபையின் ஆயட்காலம் 09ஆம் மாதம் முடிவுக்கு வருவதுடன் கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலும் வரவுள்ளது.கிழக்கு மாகாணம் வடக்கு மாகாணம் போல் இல்லை.

தமிழ் மக்கள் மத்தியில் ஒற்றுமையில்லையென்பது போராட்டத்திற்கு பின்னர் வந்த நிகழ்வு அல்ல.பண்டைய காலம் இருந்தே இதேநிலையே இருந்துவருகின்றது.வடமாகாணத்தில் உள்ள அரசியல் தலைமைகள் தங்களுக்குள் அடிபட்டுக்கொண்டாலும் அந்த அங்குள்ள தமிழ் மக்களுக்கு எந்த பாதிப்பும் வராது.அங்கு யார் ஆண்டாலும் தமிழர்களே ஆள்வார்கள்.அந்த நிலையே அங்குள்ளது.

2009ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழர்கள் செறிந்தவாழும் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாற்று பேரினவாத கட்சிகளின் சார்பில் எந்தவொரு தமிழனையும் பாராளுமன்றத்திற்கு தமிழ் மக்கள் அனுப்பவில்லை. அந்தளவுக்கு உணர்வான தமிழர்கள் மட்டக்களப்பில் உள்ளனர்.

வடமாகாணத்தில் கடந்த தேர்தலில் இரண்டு பேர் மாற்று பேரினவாத கட்சிகளில் இருந்து பாராளுமன்றத்திற்கு சென்றுள்ளனர்.
எதிர்வரும் கிழக்கு மாகாணசபை தேர்தல் கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்களுக்கு ஒரு சவாலான தேர்தலாகும்.கிழக்கு மாகாணத்தின் மக்கள் விகிதாசாரத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு நிற்கவேண்டிய தேவையுள்ளது.கட்சி பேதங்களை மறந்து அனைவரும் ஓரணியில் நின்று போட்டியிடவேண்டிய நிலை கிழக்கில் உள்ளது.

2012ஆம் ஆண்டு 11 உறுப்பினர்களைப்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு,மற்றுமொரு தமிழ் உறுப்பினரான பிள்ளையானுடன் சேர்ந்து 12 தமிழ் உறுப்பினர்களைக்கொண்ட கிழக்கு மாகாணத்தில் பெற்றுக்கொண்டது.எங்களுக்குள் இரண்டுக்கு மேற்பட்ட அணிகள் வருமானால் எட்டு அல்லது ஒன்பது உறுப்பினர்கiளே பெறக்கூடிய சூழ்நிலையுருவாகும்.

கடந்த மாகாணசபை தேர்தல்களில் வடகிழக்கில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் போட்டியிடவில்லை.அவர்கள் இந்த மாகாணசபையினை ஏற்றுக்கொள்ளாதவர்கள். ஆனால் எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடப்போவதாக அக்கட்சி தலைவர் கூறியுள்ளார்.

அத்துடன் மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் போதாது என கூறக்கூடிய சக்தி தாங்கள் தான் என்றும் கூறியுள்ளார்.மாகாணசபையே வேண்டாம் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று கூறும் உங்களுக்கு மாகாணசபையில் அதிகாரம் கூட இருந்தால் என்ன குறைய இருந்தால் என்ன? அதனைக்கதைப்பதற்கு உங்களுக்கு என்ன தேவையிருக்கின்றது.கடந்த காலத்தில் பல மிதவாத தலைவர்கள் துரோகிகளாக கொல்லப்பட்டுள்ளனர்.

அமிர்தலிங்கம் போன்ற தலைவர்கள் பின்னாளில் இருந்திருந்தால் சிலவேளைகளில் மாமனிதர்களாக இறந்திருப்பார்கள்.அந்த காலப்பகுதியில் குமார் பொன்னம்பலம் அவர்களும் கொலைப்பட்டியிலில் இருந்தார் என்பதற்கு நான் சாட்சியாகும்.கொழும்பில் உள்ள அவரது வீட்டுக்கு பாதுகாப்பு வழங்கியதில் நானும் ஒருவன்.இரவிரவாக நாங்கள் அவரை பாதுகாத்திருந்தோம்.

அன்று நாங்கள் காப்பாற்றியிருக்காவிட்டால் அவர் அன்று துரோகியாகியிருப்பார். தமிழீழ விடுதலைப்புலிகளிடம் இருந்து நாங்கள் அவரை காப்பாற்றியதன் காரணமாக பின்னாளில் அவர் மாமனிதர். இதனை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் புரிந்துகொள்ள வேண்டும். எவரவர் மனதில் தமிழ் மக்களுக்கு விடுதலை வேண்டும், தமிழீழம் வேண்டும் என நினைத்தார்களோ அவர்கள் எல்லாம் தியாகிகளாகும் என்றார்.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.

",d.insertBefore(c.lastChild,d.firstChild)}function d(){var a=t.elements;return"string"==typeof a?a.split(" "):a}function e(a,b){var c=t.elements;"string"!=typeof c&&(c=c.join(" ")),"string"!=typeof a&&(a=a.join(" ")),t.elements=c+" "+a,j(b)}function f(a){var b=s[a[q]];return b||(b={},r++,a[q]=r,s[r]=b),b}function g(a,c,d){if(c||(c=b),l)return c.createElement(a);d||(d=f(c));var e;return e=d.cache[a]?d.cache[a].cloneNode():p.test(a)?(d.cache[a]=d.createElem(a)).cloneNode():d.createElem(a),!e.canHaveChildren||o.test(a)||e.tagUrn?e:d.frag.appendChild(e)}function h(a,c){if(a||(a=b),l)return a.createDocumentFragment();c=c||f(a);for(var e=c.frag.cloneNode(),g=0,h=d(),i=h.length;i>g;g++)e.createElement(h[g]);return e}function i(a,b){b.cache||(b.cache={},b.createElem=a.createElement,b.createFrag=a.createDocumentFragment,b.frag=b.createFrag()),a.createElement=function(c){return t.shivMethods?g(c,a,b):b.createElem(c)},a.createDocumentFragment=Function("h,f","return function(){var n=f.cloneNode(),c=n.createElement;h.shivMethods&&("+d().join().replace(/[\w\-:]+/g,function(a){return b.createElem(a),b.frag.createElement(a),'c("'+a+'")'})+");return n}")(t,b.frag)}function j(a){a||(a=b);var d=f(a);return!t.shivCSS||k||d.hasCSS||(d.hasCSS=!!c(a,"article,aside,dialog,figcaption,figure,footer,header,hgroup,main,nav,section{display:block}mark{background:#FF0;color:#000}template{display:none}")),l||i(a,d),a}var k,l,m="3.7.2",n=a.html5||{},o=/^<|^(?:button|map|select|textarea|object|iframe|option|optgroup)$/i,p=/^(?:a|b|code|div|fieldset|h1|h2|h3|h4|h5|h6|i|label|li|ol|p|q|span|strong|style|table|tbody|td|th|tr|ul)$/i,q="_html5shiv",r=0,s={};!function(){try{var a=b.createElement("a");a.innerHTML="",k="hidden"in a,l=1==a.childNodes.length||function(){b.createElement("a");var a=b.createDocumentFragment();return"undefined"==typeof a.cloneNode||"undefined"==typeof a.createDocumentFragment||"undefined"==typeof a.createElement}()}catch(c){k=!0,l=!0}}();var t={elements:n.elements||"abbr article aside audio bdi canvas data datalist details dialog figcaption figure footer header hgroup main mark meter nav output picture progress section summary template time video",version:m,shivCSS:n.shivCSS!==!1,supportsUnknownElements:l,shivMethods:n.shivMethods!==!1,type:"default",shivDocument:j,createElement:g,createDocumentFragment:h,addElements:e};a.html5=t,j(b)}(this,document);',c.insertBefore(e,d),b=42===f.offsetWidth,c.removeChild(e),{matches:b,media:a}}}(a.document)}(this),function(a){"use strict";function b(){v(!0)}var c={};a.respond=c,c.update=function(){};var d=[],e=function(){var b=!1;try{b=new a.XMLHttpRequest}catch(c){b=new a.ActiveXObject("Microsoft.XMLHTTP")}return function(){return b}}(),f=function(a,b){var c=e();c&&(c.open("GET",a,!0),c.onreadystatechange=function(){4!==c.readyState||200!==c.status&&304!==c.status||b(c.responseText)},4!==c.readyState&&c.send(null))},g=function(a){return a.replace(c.regex.minmaxwh,"").match(c.regex.other)};if(c.ajax=f,c.queue=d,c.unsupportedmq=g,c.regex={media:/@media[^\{]+\{([^\{\}]*\{[^\}\{]*\})+/gi,keyframes:/@(?:\-(?:o|moz|webkit)\-)?keyframes[^\{]+\{(?:[^\{\}]*\{[^\}\{]*\})+[^\}]*\}/gi,comments:/\/\*[^*]*\*+([^/][^*]*\*+)*\//gi,urls:/(url\()['"]?([^\/\)'"][^:\)'"]+)['"]?(\))/g,findStyles:/@media *([^\{]+)\{([\S\s]+?)$/,only:/(only\s+)?([a-zA-Z]+)\s?/,minw:/\(\s*min\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,maxw:/\(\s*max\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,minmaxwh:/\(\s*m(in|ax)\-(height|width)\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/gi,other:/\([^\)]*\)/g},c.mediaQueriesSupported=a.matchMedia&&null!==a.matchMedia("only all")&&a.matchMedia("only all").matches,!c.mediaQueriesSupported){var h,i,j,k=a.document,l=k.documentElement,m=[],n=[],o=[],p={},q=30,r=k.getElementsByTagName("head")[0]||l,s=k.getElementsByTagName("base")[0],t=r.getElementsByTagName("link"),u=function(){var a,b=k.createElement("div"),c=k.body,d=l.style.fontSize,e=c&&c.style.fontSize,f=!1;return b.style.cssText="position:absolute;font-size:1em;width:1em",c||(c=f=k.createElement("body"),c.style.background="none"),l.style.fontSize="100%",c.style.fontSize="100%",c.appendChild(b),f&&l.insertBefore(c,l.firstChild),a=b.offsetWidth,f?l.removeChild(c):c.removeChild(b),l.style.fontSize=d,e&&(c.style.fontSize=e),a=j=parseFloat(a)},v=function(b){var c="clientWidth",d=l[c],e="CSS1Compat"===k.compatMode&&d||k.body[c]||d,f={},g=t[t.length-1],p=(new Date).getTime();if(b&&h&&q>p-h)return a.clearTimeout(i),i=a.setTimeout(v,q),void 0;h=p;for(var s in m)if(m.hasOwnProperty(s)){var w=m[s],x=w.minw,y=w.maxw,z=null===x,A=null===y,B="em";x&&(x=parseFloat(x)*(x.indexOf(B)>-1?j||u():1)),y&&(y=parseFloat(y)*(y.indexOf(B)>-1?j||u():1)),w.hasquery&&(z&&A||!(z||e>=x)||!(A||y>=e))||(f[w.media]||(f[w.media]=[]),f[w.media].push(n[w.rules]))}for(var C in o)o.hasOwnProperty(C)&&o[C]&&o[C].parentNode===r&&r.removeChild(o[C]);o.length=0;for(var D in f)if(f.hasOwnProperty(D)){var E=k.createElement("style"),F=f[D].join("\n");E.type="text/css",E.media=D,r.insertBefore(E,g.nextSibling),E.styleSheet?E.styleSheet.cssText=F:E.appendChild(k.createTextNode(F)),o.push(E)}},w=function(a,b,d){var e=a.replace(c.regex.comments,"").replace(c.regex.keyframes,"").match(c.regex.media),f=e&&e.length||0;b=b.substring(0,b.lastIndexOf("/"));var h=function(a){return a.replace(c.regex.urls,"$1"+b+"$2$3")},i=!f&&d;b.length&&(b+="/"),i&&(f=1);for(var j=0;f>j;j++){var k,l,o,p;i?(k=d,n.push(h(a))):(k=e[j].match(c.regex.findStyles)&&RegExp.$1,n.push(RegExp.$2&&h(RegExp.$2))),o=k.split(","),p=o.length;for(var q=0;p>q;q++)l=o[q],g(l)||m.push({media:l.split("(")[0].match(c.regex.only)&&RegExp.$2||"all",rules:n.length-1,hasquery:l.indexOf("(")>-1,minw:l.match(c.regex.minw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||""),maxw:l.match(c.regex.maxw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||"")})}v()},x=function(){if(d.length){var b=d.shift();f(b.href,function(c){w(c,b.href,b.media),p[b.href]=!0,a.setTimeout(function(){x()},0)})}},y=function(){for(var b=0;b