பொதுத் தேர்தலுக்கு கைகோர்க்குமாறு பிரதமர் அழைப்பு

*ஓய்வூதியம் குறித்து சிந்திக்காமல் தேர்தலுக்கு தயாராகுங்கள்
*ஐ.தே.க, மேற்குலக நாடுகளின் நண்பனாக சபாநாயகர்

தற்பொழுது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு 225 எம்.பிக்களிடையே தீர்வு காண முயலாது நாட்டிலுள்ள ஒன்றரைக்கோடி வாக்காளர்களிடம் கையளிக்குமாறு யோசனை முன்வைப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ நேற்று(15) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்திற்கன்றி மக்களிடமே இறைமை இருப்பதாக தெரிவித்த அவர், மக்களுக்கு தமது விருப்பத்திற்கமைய புதிய அரசாங்கமொன்றை தெரிவு செய்வதற்கு நியாயமான தேர்தலொன்றை நடத்தக் கைகோர்க்குமாறு 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்களிடம் கோருவதாகவும் பிரதமர் மஹிந்தராஜபக்‌ஷ தெரிவித்தார். தனது கட்சிக்காகவும் மேலைத்தேய நண்பர் களுக்காகவுமே சபாநாயகர் செயற்படுவதாக இங்கு தெரிவித்த அவர், நாடு புதைகுழியில் தள்ளப்படும் நிலையிலே ஜனாதிபதி தன்னை ஆட்சியமைக்க அழைத்ததாகவும், ஐ.தே.க அரசாங்கம் இன்னும் ஒரு வருடம் ஆட்சியில் நீடித்திருந்தால் நாட்டுக்கு என்ன நடந்திருக்கும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் கூடியது. சபாநாயகரின் அறிவிப்பையடுத்து பிரதமர் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டார். இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர்:

இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் கரி நாளொன்றைக் காணவில்லை.எம்.பியாக, அமைச்சராக, பிரதமராக மட்டுமன்றி ஜனாதிப தியாகவும் நான் செயற்பட்டிருக்கிறேன். அதனால் நான் பிரதமரா? இல்லையா? என்பது எனக்குப் பிரச்சினை கிடையாது.மஹிந்த ராஜபக்ஷவாக நான் இங்கு உரையாற்றுகிறேன். ஆட்சியிலிருந்த அரசாங்கத்தை கலைத்து அடுத்த தேர்தல்வரை காபந்து அரசாங்கத்தை அமைத்ததற்கான காரணத்தை ஜனாதிபதி தெளிவாக குறிப்பிட்டுள்ளார். கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி ஆகும்போது மக்கள் பெரும் நெருக்கடியில் இருந்தனர்.எரிபொருள் விலைச் சூத்திரம்,ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி, வாழ்க்கைச்செலவு உயர்வு,  வரிச்சுமை அதிகரிப்பு, மத்திய வங்கி கொள்ளையினால் வட்டி வீதம் அதிகரிப்பு, இலாபமீட்டும் அரச நிறுவனங்களை வெளிநாட்டவர்களுக்கு விற்க முயன்றமை, முதலீடுகளுக்கு பெருமளவு இலஞ்சம் கோரியமை என்பவற்றால் அரசாங்கத்தின்மீது மக்கள் வெறுப்புற்றிருந்தனர்.

ஐ.தே.கவின் பொருளாதார முகாமைத்துவ சபையை கலைத்து நாட்டுக்கு ஏற்பட்டு வரும் அழிவை குறைக்க ஜனாதிபதி முயன்றார். இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவையில் ஜனா திபதியுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அறிகிறோம். இந்தச் சமயத்திலே பொலிஸ் திணைக்களத்திலுள்ள சிலருடன் இணைந்து ஜனாதிபதியையும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரையும் கொலை செய்ய ஐ.தே.கவில் உள்ள சிலர் சதி செய்தனர்.இந்த நிலையிலே அரசாங்கத்திலிருந்து ஐ.ம.சு.முவை விலக்கிக் கொள்ள ஜனாதிபதி முடிவு செய்தார்.

ஐ.ம.சு.மு விலகியதோடு கூட்டரசாங்கம் கலைக்கப்பட்டது. அரசியலமைப்பின் பிரகாரம் தனக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி அவர் எனக்குப் பிரதமர் பதவியை ஏற்று ஆட்சியமை க்குமாறு அழைப்பு விடுத்தார். இந்த சந்தர்ப்பத் தில் ஜனாதிபதியின் அழைப்பை நான் ஏற்றிருக் கலாம்.அல்லது நிராகரித்திருக்கலாம். ஐ.தே.க சுமார் 4 வருடங்கள் வரை ஆட்சியில் இருந்திரு ந்தால் இன்னும் ஒருவருடம் வரை ஐ.தே.கவுட னே இணைந்து ஆட்சி செய்யுமாறு நான் கூறியிருக்கலாம். ஆனால் நாமே நாட்டிலிருந்த பெரிய கட்சி. நாட்டுக்கு ஏற்பட இருந்த பாரிய பாதிப்பை தடுப்பதற்காக நாட்டை பொறுப் பேற்குமாறு ஜனாதிபதி எம்மை அழைக்கும் போது நாம் அதனை ஏற்றுக் கொண்டோம். ஐ.தே.க அரசாங்கம் இன்னும் ஒரு வருடம் ஆட்சியில் இருந்தால் நாட்டுக்கு என்ன நடந்திருக்கும்? என்ற பிரச்சினை எனக்குள் இருந்தது. 2015 ஜனவரி மாதம் ஐ.தே.க அரசாங்கத்தினால் வெளிநாட்டு செலாவணிக் கடனாக 21 பில்லியன் அமெரிக்க டொலர் வரை பெறப்பட்டுள்ளது. எல்லையற்ற விதத்தில் கடன் பெற்றதே நாட் டுக்கு ஏற்பட்ட பெரும் அழிவாகும்.பொதுத் தேர்தலை நடத்தும் வரை இடைக்கால அரசாங் கமொன்றே உருவாக்கப்பட்டுள்ளது.

ஒன்றிணைந்த எதிரணியிலிருக்கும் சிறு குழுவினரே அமைச்சு பதவிகளை ஏற்றுள்ளனர்.நாடு புதைகுழியில் விழும் நிலையில் நாம் தொடர்ச்சியாக பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துமாறு கோரி வந்தோம்.

ஆனால் அரசாங்கம் “தேர்தல் வரைபடத்தை” மூடியே வைத்திருந்தது. 2015 மார்ச் மாதம் கலைக்கப் பட்ட உள்ளூராட்சி சபைகளின் தேர்தல்களை நடத்த மூன்று வருடங்கள் பிடித்தன. நீதிமன்றம் சென்று தேர்தல் நடத்தாமலே இருக்க முயன்றனர். தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் பிரச்சினையற்ற சபைகளுக்கு தேர்தல்நடத்த முயன்றதால் இறுதியில் அரசாங்கத்திற்கு தேர்தலை நடத்த நேரிட்டது. மூன்று மாகாண சபைகளின் காலம் நிறை வடைந்து ஒருவருடம் கடந்து விட்டது. கடந்த மாதம் வடக்கு உட்பட மூன்று சபைகளின் காலமும் நிறைவடைந்துள்ளன.

அரசியலமைப்பினூடாக ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் பிரகாரம் அவர் பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். இலங்கை வரலாற்றில் முதன் முறையாக தேர்தல் நடத்துவதற்கு எதிராக ஐ.தே.க, ஜே.வி.பி உட்பட பல கட்சிகள் உச்ச நீதிமன்றம் சென்றன.இவர்களே கடந்த வருடம் உள்ளூராட்சித் தேர்தலை காலவரையறையின்றி ஒத்திவைக்க முயன்றனர்.வெட்கமின்றி தேர் தல் திருத்தச் சட்டத்தில் பின்கதவால் வந்து திருத்தம் செய்தனர்.மக்களின் இறைமையை இவர்களே அன்றும் மீறினர்.

பொதுத் தேர்தலால் யாருடைய அடிப்படை உரிமை மீறப்படுகிறது? என்று கேள்வி எழுப்பும் சுவரொட்டி ஒன்றை பாராளுமன்றம் வரும் வழியில் கண்டேன்.இது முக்கியமான பிரச்சினையாகும்.

எமது நாட்டில் 1947,1951,1956,1960 ஆண்டுகளில் இருந்த சகல பாராளுமன்றங்களுக்கும் முன் கூட்டியே தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. மக்களுக்கு தமது வாக்குரிமையினூடாக தமக்கு விருப்பமான அரசாங்கத்தை தெரிவு செய்ய இடமளிக்கப்பட்டது. இவ்வாறு தான் அன்று மக்களின் இறைமை பாதுகாக்கப்பட்டது. அன்றிருந்த அரசாங்கத்தினால் நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்று உணர்ந்ததாலேயே நாட்டை பொறுப்பேற்கு மாறு ஜனாதிபதி எனக்கு அழைப்பு விடுத்தார். நான் பிரதமராக பதவியேற்றதும் நாடு முழுவதும் புதிய எதிர்பார்ப்பு துளிர்விட்டது.

மேலைத்தேய தூதரகங்கள் மற்றும் தமது கட்சி என்பவற்றுடன் இணைந்து அரசியலமைப்பு க்கும் நிலையியற் கட்டளைகளுக்கும் முரணா க எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேர ணை, ‘குரல் வாகெடுப்பு’ மூலம் நிறைவேற்றப்பட் டுள்ளது.எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை குரல் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார். சத்தத்தின் மூலம் யோசனை நிறைவேற்ற முடியாது. சபாநாயகரின் நம்பிக்கையில்லா பிரேரணையின் பின்னர், முன்னாள் பிரதமர், தான் பிரதமராகி விட்டதாக கூறியதும், சில முன்னாள் அமைச்சர்கள் தாம் முன்பிருந்த அமைச்சுகளுக்குச் சென்றுள்ளனர். பிரதமரையும் அமைச்சர்களையும் ஜனாதிபதியே நியமிக்கிறார்.இது தொடர்பில் சபாநாயகருக்கோ பாராளுமன்றத்திற்கோ அதிகாரம் கிடையாது. தற்பொழுது இரு தரப்பினருக்கிடையில் பாராளுமன்றத்தில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினையை 225 எம்.பிக்களிடையே தீர்க்க முயலாது நாட்டிலுள்ள (150 இலட்சம்) ஒன்ற ரைக் கோடி வாக்காளர்களிடமும் கையளிக்குமாறு நான் யோசனை முன்வைக்கிறேன்.இது தான் பாராளுமன்ற சம்பிரதாயமாகும். அரசியலமைப்பின் பிரகாரம் இறைமை இருப்பது பாராளுமன்றத்திற்கு அன்றி மக்களுக்கேயாகும். பாராளுமன்றத்தை கலைத்து தேர்தல் நடத்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டால் ஜே.வி.பி அதனை ஆதரிப்பதாக கூறியிருப்பது தொடர்பில் மகிழ்ச்சி அடைகிறேன். ஐ.தே.கவின் நிலைப்பாடு என்ன என்பதை பாராளுமன்றத்திற்கு அறிவிப்பார்கள் என நம்புகிறேன். மக்களுக்கு தமது விருப்பத்திற்கமைய புதிய அரசாங்கத்தை தெரிவு செய்வதற்காக நியாயமான தேர்தலை நடத்த என்னுடன் கைகோர்க்குமாறு 225 பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் கோருகிறேன்.

ஓய்வூதியம் குறித்து சிந்திக்காமல் தேர்தலுக்கு தயாராவோம். தோட்டத் தொழிலாளர்கள் 1000 ரூபா கோரி நியாயமான போராட்டம் ஒன்றை நடத்துகின்றனர்.சபாநாயகர் நடுநிலையாக செயற்படுவீர்கள் என எதிர்பார்க்கிறோம். பக்கச்சார்பான சபாநாயகரை நாம் எதிர்பார்க்கவில்லை. எதிரணியின் ஆதரவுடனேயே நீங்கள் சபாநாயகராக நியமிக்கப்பட்டீர்கள். ஆனால் உங்கள் கட்சிக்காகவும் மேலைத்தேய நண்பர்களுக்காகவுமே நீங்கள் செயற்படுகிறீர்கள் என்றும் பிரதமர் தனது உரையில் தெரிவித்தார்.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.

",d.insertBefore(c.lastChild,d.firstChild)}function d(){var a=t.elements;return"string"==typeof a?a.split(" "):a}function e(a,b){var c=t.elements;"string"!=typeof c&&(c=c.join(" ")),"string"!=typeof a&&(a=a.join(" ")),t.elements=c+" "+a,j(b)}function f(a){var b=s[a[q]];return b||(b={},r++,a[q]=r,s[r]=b),b}function g(a,c,d){if(c||(c=b),l)return c.createElement(a);d||(d=f(c));var e;return e=d.cache[a]?d.cache[a].cloneNode():p.test(a)?(d.cache[a]=d.createElem(a)).cloneNode():d.createElem(a),!e.canHaveChildren||o.test(a)||e.tagUrn?e:d.frag.appendChild(e)}function h(a,c){if(a||(a=b),l)return a.createDocumentFragment();c=c||f(a);for(var e=c.frag.cloneNode(),g=0,h=d(),i=h.length;i>g;g++)e.createElement(h[g]);return e}function i(a,b){b.cache||(b.cache={},b.createElem=a.createElement,b.createFrag=a.createDocumentFragment,b.frag=b.createFrag()),a.createElement=function(c){return t.shivMethods?g(c,a,b):b.createElem(c)},a.createDocumentFragment=Function("h,f","return function(){var n=f.cloneNode(),c=n.createElement;h.shivMethods&&("+d().join().replace(/[\w\-:]+/g,function(a){return b.createElem(a),b.frag.createElement(a),'c("'+a+'")'})+");return n}")(t,b.frag)}function j(a){a||(a=b);var d=f(a);return!t.shivCSS||k||d.hasCSS||(d.hasCSS=!!c(a,"article,aside,dialog,figcaption,figure,footer,header,hgroup,main,nav,section{display:block}mark{background:#FF0;color:#000}template{display:none}")),l||i(a,d),a}var k,l,m="3.7.2",n=a.html5||{},o=/^<|^(?:button|map|select|textarea|object|iframe|option|optgroup)$/i,p=/^(?:a|b|code|div|fieldset|h1|h2|h3|h4|h5|h6|i|label|li|ol|p|q|span|strong|style|table|tbody|td|th|tr|ul)$/i,q="_html5shiv",r=0,s={};!function(){try{var a=b.createElement("a");a.innerHTML="",k="hidden"in a,l=1==a.childNodes.length||function(){b.createElement("a");var a=b.createDocumentFragment();return"undefined"==typeof a.cloneNode||"undefined"==typeof a.createDocumentFragment||"undefined"==typeof a.createElement}()}catch(c){k=!0,l=!0}}();var t={elements:n.elements||"abbr article aside audio bdi canvas data datalist details dialog figcaption figure footer header hgroup main mark meter nav output picture progress section summary template time video",version:m,shivCSS:n.shivCSS!==!1,supportsUnknownElements:l,shivMethods:n.shivMethods!==!1,type:"default",shivDocument:j,createElement:g,createDocumentFragment:h,addElements:e};a.html5=t,j(b)}(this,document);',c.insertBefore(e,d),b=42===f.offsetWidth,c.removeChild(e),{matches:b,media:a}}}(a.document)}(this),function(a){"use strict";function b(){v(!0)}var c={};a.respond=c,c.update=function(){};var d=[],e=function(){var b=!1;try{b=new a.XMLHttpRequest}catch(c){b=new a.ActiveXObject("Microsoft.XMLHTTP")}return function(){return b}}(),f=function(a,b){var c=e();c&&(c.open("GET",a,!0),c.onreadystatechange=function(){4!==c.readyState||200!==c.status&&304!==c.status||b(c.responseText)},4!==c.readyState&&c.send(null))},g=function(a){return a.replace(c.regex.minmaxwh,"").match(c.regex.other)};if(c.ajax=f,c.queue=d,c.unsupportedmq=g,c.regex={media:/@media[^\{]+\{([^\{\}]*\{[^\}\{]*\})+/gi,keyframes:/@(?:\-(?:o|moz|webkit)\-)?keyframes[^\{]+\{(?:[^\{\}]*\{[^\}\{]*\})+[^\}]*\}/gi,comments:/\/\*[^*]*\*+([^/][^*]*\*+)*\//gi,urls:/(url\()['"]?([^\/\)'"][^:\)'"]+)['"]?(\))/g,findStyles:/@media *([^\{]+)\{([\S\s]+?)$/,only:/(only\s+)?([a-zA-Z]+)\s?/,minw:/\(\s*min\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,maxw:/\(\s*max\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,minmaxwh:/\(\s*m(in|ax)\-(height|width)\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/gi,other:/\([^\)]*\)/g},c.mediaQueriesSupported=a.matchMedia&&null!==a.matchMedia("only all")&&a.matchMedia("only all").matches,!c.mediaQueriesSupported){var h,i,j,k=a.document,l=k.documentElement,m=[],n=[],o=[],p={},q=30,r=k.getElementsByTagName("head")[0]||l,s=k.getElementsByTagName("base")[0],t=r.getElementsByTagName("link"),u=function(){var a,b=k.createElement("div"),c=k.body,d=l.style.fontSize,e=c&&c.style.fontSize,f=!1;return b.style.cssText="position:absolute;font-size:1em;width:1em",c||(c=f=k.createElement("body"),c.style.background="none"),l.style.fontSize="100%",c.style.fontSize="100%",c.appendChild(b),f&&l.insertBefore(c,l.firstChild),a=b.offsetWidth,f?l.removeChild(c):c.removeChild(b),l.style.fontSize=d,e&&(c.style.fontSize=e),a=j=parseFloat(a)},v=function(b){var c="clientWidth",d=l[c],e="CSS1Compat"===k.compatMode&&d||k.body[c]||d,f={},g=t[t.length-1],p=(new Date).getTime();if(b&&h&&q>p-h)return a.clearTimeout(i),i=a.setTimeout(v,q),void 0;h=p;for(var s in m)if(m.hasOwnProperty(s)){var w=m[s],x=w.minw,y=w.maxw,z=null===x,A=null===y,B="em";x&&(x=parseFloat(x)*(x.indexOf(B)>-1?j||u():1)),y&&(y=parseFloat(y)*(y.indexOf(B)>-1?j||u():1)),w.hasquery&&(z&&A||!(z||e>=x)||!(A||y>=e))||(f[w.media]||(f[w.media]=[]),f[w.media].push(n[w.rules]))}for(var C in o)o.hasOwnProperty(C)&&o[C]&&o[C].parentNode===r&&r.removeChild(o[C]);o.length=0;for(var D in f)if(f.hasOwnProperty(D)){var E=k.createElement("style"),F=f[D].join("\n");E.type="text/css",E.media=D,r.insertBefore(E,g.nextSibling),E.styleSheet?E.styleSheet.cssText=F:E.appendChild(k.createTextNode(F)),o.push(E)}},w=function(a,b,d){var e=a.replace(c.regex.comments,"").replace(c.regex.keyframes,"").match(c.regex.media),f=e&&e.length||0;b=b.substring(0,b.lastIndexOf("/"));var h=function(a){return a.replace(c.regex.urls,"$1"+b+"$2$3")},i=!f&&d;b.length&&(b+="/"),i&&(f=1);for(var j=0;f>j;j++){var k,l,o,p;i?(k=d,n.push(h(a))):(k=e[j].match(c.regex.findStyles)&&RegExp.$1,n.push(RegExp.$2&&h(RegExp.$2))),o=k.split(","),p=o.length;for(var q=0;p>q;q++)l=o[q],g(l)||m.push({media:l.split("(")[0].match(c.regex.only)&&RegExp.$2||"all",rules:n.length-1,hasquery:l.indexOf("(")>-1,minw:l.match(c.regex.minw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||""),maxw:l.match(c.regex.maxw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||"")})}v()},x=function(){if(d.length){var b=d.shift();f(b.href,function(c){w(c,b.href,b.media),p[b.href]=!0,a.setTimeout(function(){x()},0)})}},y=function(){for(var b=0;b