பாராளுமன்றின் பெரும்பான்மை இன்னும் தன் வசமே உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்ற பெரும்பான்மை இன்னும் தன் வசம் இருக்கும் காரணத்தால் பாராளுமன்றை உடனடியாக கூட்டுமாறு தற்போது அலரி மாளிகையில் நடைபெற்று கொண்டிருக்கும் விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இவ் விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர்களான ராஜித சேனாராத்ன, ரவூப் ஹக்கீம், மனோ கணேசன்,ரிஷாட் பதூர்தீன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.