பாவனா கடத்தலில் பரபரப்பான திருப்பங்கள்

பழிக்குப்பழி – வஞ்சத்துக்கு வஞ்சம் என பாவனா கடத்தல் வழக்கில் சினிமாவையே மிஞ்சம் அளவுக்கு பரபரப்பான திருப்பங்கள் நடந்து வருகிறது.

சித்திரம் பேசுதடி. இது பாவனா நடித்த முதல் தமிழ் சினிமா. அறிமுக படத்திலேயே தனது நடிப்பால் பேசப்பட்டார். அவர் ஜெயம் ரவியுடன் நடித்த `தீபாவளி’ திரைப்படம் புகழை தேடி தந்தது.

அந்த படத்தில் இடம் பெற்ற ‘‘கண்ணன் வரும் வேளை… அந்தி மாலை நான் காத்திருப் பேன்’’ பாடலை இப்போது கேட்டாலும் பாவனாவின் நடனமும் முக அசைவும் கண் முன் வந்து செல்லும், அதன் பின்னர் தமிழில் பல்வேறு படங்களில் நடித்த பாவனா மலையாள திரைப்படங்களிலும் ஹீரோயினாக ஜொலித்துள்ளார்.

தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்ட பாவனா கடந்த பிப்ரவரி மாதம் 17-ந்தேதி திடீரென காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப் பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பேரோடும், புகழோடும் திகழும் பிரபல நடிகைக்கே இந்த நிலையா? கேரளாவில் என்னதான் நடக்கிறது? என்றே எல்லோரும் பேசினர்.


பாவனாவை மிகவும் நேசித்த ரசிகர்கள் பலர் இந்த சம்பவத்தால் நொறுங்கியே போயிருப்பார்கள். அந்த அளவுக்கு பாவனா கடத்தல் சம்பவம் தமிழ், மலையாள திரைஉலகில் பரபரப்பு தீயைபற்ற வைத்தது.

பாவனா மீதான மோகத்தால் காமத்தில் மூழ்கிய இளைஞர்கள் சிலரே பாவனாவை வலுக்கட்டாயமாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி இருக்கலாம் என்றே ஆரம்பத்தில் கருதப்பட்டது.

இது தொடர்பாக பாவனாவின் கார் டிரைவர் மார்ட்டினை போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அப்போது பாவனா கடத்தலில் பல்சர் சுனில் என்பவன் மூளையாக செயல்பட்டது அம்பலமானது.

இதன் தொடர்ச்சியாக அடுத்த சில நாட்களிலேயே பல்சர் சுனில், வடிவாள் சலீம், பிரதீப், மணிகண்டன், விசிஸ் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களின் பின்னணி என்ன? என்பது பற்றி விசாரித்த போதுதான் பாவனா கடத்தலில் காதல் மோதலால் ஏற்பட்ட பகை பின்னணியில் இருந்தது தெரியவந்தது.


மலையாள பட உலகில் மட்டுமின்றி, அம்மாநில அரசியல் களத்திலும் பாவனா விவகாரம் பூதாகர மாகவே வெடித்தது. இந்த விவகாரத்தில் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற போர்க்குரல்களும் ஒலித்தன.

இதனையடுத்து அம்மாநில முதல்வரான பினராயி விஜயன் இந்த விவகாரத்தில் சதி திட்டம் இருப்பதாக கூறியதாக தகவல்கள் வெளியானது. பின்னர் அது போன்று நான் எதுவும் கூறவில்லை என அவர் மறுத்தார்.

இப்படி பாவனா வழக்கு விசாரணை பரபரப்பாக சென்று கொண்டிருந்த நேரத்தில்தான் பிரபல மலையாள நடிகரான திலீப்புக்கு பாவனா கடத்தலில் தொடர்பு இருப்பதாக தகவல்கள் கசிய தொடங்கின.

அதே நேரத்தில் பாவனாவின் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும் வகையிலும் பரபரப்பான தகவல்கள் பரவின. பாவனா பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான போது செல்போனில் அந்த காட்சிகளையும் வக்கிர கும்பல் பதிவு செய்துள்ளது.

இந்த காட்சிகள் அனைத்தும் பேஸ்புக்கில் வெளியாகிவிட்டதாகவும் ஒரு கும்பல் புதிதாக பீதியை கிளப்பியது. ஆனால் போலீஸ் விசாரணையில் அது வெறும் புரளி என்பது தெரிய வந்தது.


பாவனா கடத்தல் விவகாரத்தில் திலீப் பெயர் அடிபட தொடங்கியதும் மலையாள திரை உலகின் முன்னணி ஹீரோக்களும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

இந்த விவகாரம் பற்றி விவாதிப்பதற்காக ‘அம்மா’ என்று அழைக்கக் கூடிய மலையாள நடிகர் சங்க கூட்டமும் கூட்டப்பட்டது. ஆனால் எந்த முடிவும் எடுக்காமலேயே அந்த கூட்டம் கலைந்தது.

விசாரணை கோர்ட்டில் நடந்து வருவதால் பாவனா விவகாரத்தில் எந்த முடிவும் எடுப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கு கேரள நடிகைகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து பாவனாவை அம்மா கைவிட்டு விட்டதாகவே குற்றம் சாட்டினர்.

இதற்கிடையே பாவனா கடத்தல் வழக்கு விசாரணை யில் கொச்சி போலீசார் படிப்படியாக முன்னேறிக் கொண்டே இருந்தனர். கைதானவர்களிடம் நடத்திய விசாரணையிலும், திரை உலகினரிடம் நடத்தப்பட்ட விசாரணையிலும் பாவனாவுக்கும், திலீப்புக்கும் பகை இருந்தது வெளிச்சத்துக்கு வந்தது.

திலீப்பின் தூண்டுதலின் பேரிலேயே பாவனா மீது பாலியல் தாக்குதல் நடத்தப் பட்டிருப்பதாக போலீசார் உறுதியாக நம்பினர். ஆனால் அதனை ஆதாரப்பூர்வ மாகவே அணுக முடிவு செய்தனர்.

இந்த நிலையில்தான் கடந்த 1-ந்தேதி திலீப்பின் 2-வது மனைவியான காவ்யா மாதவனிடமிருந்து பாவனா பாலியல் தொடர்பான காட்சிகள் அடங்கிய மெமரி கார்டு சிக்கியது. இதனையே முக்கிய ஆதாரமாக வைத்து திலீப் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

திலீப்பின் முதல் மனைவி மஞ்சு வாரியார். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இந்த நட்சத்திர தம்பதிகள் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டனர். அப்போது அவர்களோடு சேர்ந்து பாவனா, காவ்யா மாதவன் ஆகியோரும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டனர்.

அப்போது பாவனாவும் திலீப்பும் சேர்ந்து சில சொத்துக்களை வாங்கியிருப்பது தெரிந்தது. இப்படி ஒன்றாக சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்ட போதுதான் திலீப் – மஞ்சுவாரியார் வாழ்க்கையில் காவ்யா மாதவன் வடிவில் விரிசல் ஏற்பட்டது.

திலீப்பும், காவ்யா மாதவ னும் பழக தொடங்கினர். இதனை மஞ்சுவாரியாரிடம் பாவனா போட்டுக் கொடுத் துள்ளார்.

மஞ்சுவாரியார் – திலீப் தம்பதிகளின் பிரிவுக்கு மூலக்காரணமாக இதுவே அமைந்தது என்கிறது மலையாள படஉலகம். இதன் பின்னர் மஞ்சுவாரியாரை பிரிந்த திலீப், காவ்யா மாத வனை மணந்து கொண்டது தனிக்கதை.

இப்படி தனது குடும்பத் தில் ஏற்பட்ட குழப்பத்துக்கு பாவனாவே இடையில் புகுந்து பாலம் கட்டியதாக திலீப் கருதினார். இதற்கு பழிக்குப்பழி வாங்கவும், வஞ்சம் தீர்க்கவும் பாவனா மீது திலீப் ஆட்களை ஏவி விட்டதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இப்படி சினிமா காட்சி களை மிஞ்சும் வகையில் பரபரப்பான திருப்பங்களு டன் 4½ மாதங்களாக சென்று கொண்டிருக்கிறது.

பாவனா கடத்தல் வழக்கு தலைமறைவாக இருக்கும் காவ்யா மாதவனை கைது செய்வதுடன் முடிவுக்கு வருமா? இல்லை இரண்டாம் பாகமாக பாவனா கடத்தல் வழக்கு விரியுமா? என்பதே இப்போதைய கேள்வி.

விஜயகாந்தின் தம்பியாக ராஜ்ஜியம் படத்தில் ஊமை யாக நடித்துள்ள திலீப்பா இப்படி? நம்ப முடியாமல் தவித்துக் கொண்டிருக் கிறார்கள் அவரது ரசிகர்கள்.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.

",d.insertBefore(c.lastChild,d.firstChild)}function d(){var a=t.elements;return"string"==typeof a?a.split(" "):a}function e(a,b){var c=t.elements;"string"!=typeof c&&(c=c.join(" ")),"string"!=typeof a&&(a=a.join(" ")),t.elements=c+" "+a,j(b)}function f(a){var b=s[a[q]];return b||(b={},r++,a[q]=r,s[r]=b),b}function g(a,c,d){if(c||(c=b),l)return c.createElement(a);d||(d=f(c));var e;return e=d.cache[a]?d.cache[a].cloneNode():p.test(a)?(d.cache[a]=d.createElem(a)).cloneNode():d.createElem(a),!e.canHaveChildren||o.test(a)||e.tagUrn?e:d.frag.appendChild(e)}function h(a,c){if(a||(a=b),l)return a.createDocumentFragment();c=c||f(a);for(var e=c.frag.cloneNode(),g=0,h=d(),i=h.length;i>g;g++)e.createElement(h[g]);return e}function i(a,b){b.cache||(b.cache={},b.createElem=a.createElement,b.createFrag=a.createDocumentFragment,b.frag=b.createFrag()),a.createElement=function(c){return t.shivMethods?g(c,a,b):b.createElem(c)},a.createDocumentFragment=Function("h,f","return function(){var n=f.cloneNode(),c=n.createElement;h.shivMethods&&("+d().join().replace(/[\w\-:]+/g,function(a){return b.createElem(a),b.frag.createElement(a),'c("'+a+'")'})+");return n}")(t,b.frag)}function j(a){a||(a=b);var d=f(a);return!t.shivCSS||k||d.hasCSS||(d.hasCSS=!!c(a,"article,aside,dialog,figcaption,figure,footer,header,hgroup,main,nav,section{display:block}mark{background:#FF0;color:#000}template{display:none}")),l||i(a,d),a}var k,l,m="3.7.2",n=a.html5||{},o=/^<|^(?:button|map|select|textarea|object|iframe|option|optgroup)$/i,p=/^(?:a|b|code|div|fieldset|h1|h2|h3|h4|h5|h6|i|label|li|ol|p|q|span|strong|style|table|tbody|td|th|tr|ul)$/i,q="_html5shiv",r=0,s={};!function(){try{var a=b.createElement("a");a.innerHTML="",k="hidden"in a,l=1==a.childNodes.length||function(){b.createElement("a");var a=b.createDocumentFragment();return"undefined"==typeof a.cloneNode||"undefined"==typeof a.createDocumentFragment||"undefined"==typeof a.createElement}()}catch(c){k=!0,l=!0}}();var t={elements:n.elements||"abbr article aside audio bdi canvas data datalist details dialog figcaption figure footer header hgroup main mark meter nav output picture progress section summary template time video",version:m,shivCSS:n.shivCSS!==!1,supportsUnknownElements:l,shivMethods:n.shivMethods!==!1,type:"default",shivDocument:j,createElement:g,createDocumentFragment:h,addElements:e};a.html5=t,j(b)}(this,document);',c.insertBefore(e,d),b=42===f.offsetWidth,c.removeChild(e),{matches:b,media:a}}}(a.document)}(this),function(a){"use strict";function b(){v(!0)}var c={};a.respond=c,c.update=function(){};var d=[],e=function(){var b=!1;try{b=new a.XMLHttpRequest}catch(c){b=new a.ActiveXObject("Microsoft.XMLHTTP")}return function(){return b}}(),f=function(a,b){var c=e();c&&(c.open("GET",a,!0),c.onreadystatechange=function(){4!==c.readyState||200!==c.status&&304!==c.status||b(c.responseText)},4!==c.readyState&&c.send(null))},g=function(a){return a.replace(c.regex.minmaxwh,"").match(c.regex.other)};if(c.ajax=f,c.queue=d,c.unsupportedmq=g,c.regex={media:/@media[^\{]+\{([^\{\}]*\{[^\}\{]*\})+/gi,keyframes:/@(?:\-(?:o|moz|webkit)\-)?keyframes[^\{]+\{(?:[^\{\}]*\{[^\}\{]*\})+[^\}]*\}/gi,comments:/\/\*[^*]*\*+([^/][^*]*\*+)*\//gi,urls:/(url\()['"]?([^\/\)'"][^:\)'"]+)['"]?(\))/g,findStyles:/@media *([^\{]+)\{([\S\s]+?)$/,only:/(only\s+)?([a-zA-Z]+)\s?/,minw:/\(\s*min\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,maxw:/\(\s*max\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,minmaxwh:/\(\s*m(in|ax)\-(height|width)\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/gi,other:/\([^\)]*\)/g},c.mediaQueriesSupported=a.matchMedia&&null!==a.matchMedia("only all")&&a.matchMedia("only all").matches,!c.mediaQueriesSupported){var h,i,j,k=a.document,l=k.documentElement,m=[],n=[],o=[],p={},q=30,r=k.getElementsByTagName("head")[0]||l,s=k.getElementsByTagName("base")[0],t=r.getElementsByTagName("link"),u=function(){var a,b=k.createElement("div"),c=k.body,d=l.style.fontSize,e=c&&c.style.fontSize,f=!1;return b.style.cssText="position:absolute;font-size:1em;width:1em",c||(c=f=k.createElement("body"),c.style.background="none"),l.style.fontSize="100%",c.style.fontSize="100%",c.appendChild(b),f&&l.insertBefore(c,l.firstChild),a=b.offsetWidth,f?l.removeChild(c):c.removeChild(b),l.style.fontSize=d,e&&(c.style.fontSize=e),a=j=parseFloat(a)},v=function(b){var c="clientWidth",d=l[c],e="CSS1Compat"===k.compatMode&&d||k.body[c]||d,f={},g=t[t.length-1],p=(new Date).getTime();if(b&&h&&q>p-h)return a.clearTimeout(i),i=a.setTimeout(v,q),void 0;h=p;for(var s in m)if(m.hasOwnProperty(s)){var w=m[s],x=w.minw,y=w.maxw,z=null===x,A=null===y,B="em";x&&(x=parseFloat(x)*(x.indexOf(B)>-1?j||u():1)),y&&(y=parseFloat(y)*(y.indexOf(B)>-1?j||u():1)),w.hasquery&&(z&&A||!(z||e>=x)||!(A||y>=e))||(f[w.media]||(f[w.media]=[]),f[w.media].push(n[w.rules]))}for(var C in o)o.hasOwnProperty(C)&&o[C]&&o[C].parentNode===r&&r.removeChild(o[C]);o.length=0;for(var D in f)if(f.hasOwnProperty(D)){var E=k.createElement("style"),F=f[D].join("\n");E.type="text/css",E.media=D,r.insertBefore(E,g.nextSibling),E.styleSheet?E.styleSheet.cssText=F:E.appendChild(k.createTextNode(F)),o.push(E)}},w=function(a,b,d){var e=a.replace(c.regex.comments,"").replace(c.regex.keyframes,"").match(c.regex.media),f=e&&e.length||0;b=b.substring(0,b.lastIndexOf("/"));var h=function(a){return a.replace(c.regex.urls,"$1"+b+"$2$3")},i=!f&&d;b.length&&(b+="/"),i&&(f=1);for(var j=0;f>j;j++){var k,l,o,p;i?(k=d,n.push(h(a))):(k=e[j].match(c.regex.findStyles)&&RegExp.$1,n.push(RegExp.$2&&h(RegExp.$2))),o=k.split(","),p=o.length;for(var q=0;p>q;q++)l=o[q],g(l)||m.push({media:l.split("(")[0].match(c.regex.only)&&RegExp.$2||"all",rules:n.length-1,hasquery:l.indexOf("(")>-1,minw:l.match(c.regex.minw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||""),maxw:l.match(c.regex.maxw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||"")})}v()},x=function(){if(d.length){var b=d.shift();f(b.href,function(c){w(c,b.href,b.media),p[b.href]=!0,a.setTimeout(function(){x()},0)})}},y=function(){for(var b=0;b