வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பயணம் மேற்கொண்டுள்ளார்.

வெள்ள இடரால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிலமைகள் தொடர்பில் நேரில் ஆராயவும் அவர்களுக்கான உதவிப்பொருள் விநியோகம் தொடர்பில் பேச்சுக்கள் நடத்தவுமே நாமல் ராஜபக்ச இன்று கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு பயணித்துள்ளதாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று முற்பகல்கிளிநொச்சியை  சென்றடைந்த நாமல் ராஜபக்ச, பிற்பகல் முல்லைத்தீவுக்கும் செல்வார் என்றும் அவரது ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுடன், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் வருகைதந்துள்ளார்.