தடம் மாறுகின்றதா யாழ் பல்கலைக்கழக மாணவர் சமூகம்? அண்மைய போராட்டங்களின் விளைவு?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலையை வேண்டி அண்மைய சில நாட்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருவது தெரிந்ததே. அதிலும் குறிப்பாக அனுராதபுரம் சிறையில் கடந்த ஒரு மாத காலமாக உண்ணாநிலைப் போராட்டத்தினை தொடர்ந்துவரும் மூன்று தமிழ் அரசியற் கைதிகளின் வழக்குகளினை தமிழர் பிரதேசங்களில் இருக்கும் நீதிமன்றம் ஒன்றுக்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கையும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தினில் அடங்கியிருந்தது.

இந்த நிலையில் அரசியற் கைதிகளின் விடுதலைக்காகவும் அனுராதபுரம் சிறையில் உண்ணா நிலைப் போராட்ட கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற கோரியும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை ஆரம்பத்தில் நடத்தியது. மாணவர்கள் பேராசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் என ஒட்டுமொத்த பல்கலைக்கழக சமூகமும் அணிதிரண்டு அந்த போரட்டத்தில் கலந்துகொண்டது.

குறித்த அதே காலப்பகுதியில் குறித்த அதே விடயத்திற்காக பல தரப்பினரும் தொடர்ச்சியான போராட்டங்களினை நடத்தியிருந்தனர். இந்த நிலையில் யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் தனியாக பிரிந்து சென்று, கடந்த 16ஆம் திகதி வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்து குறித்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்துதருமாறு உதவி கோரினர்.

அதன்படி வடக்கு மாகாண ஆளுநரின் ஏற்பாட்டில் ஜனாதிபதியைச் சந்திப்பதற்கான நாள் குறிக்கப்பட்டது. அதற்கு அடுத்த நாள் 17ஆம் திகதி மாணவர்களில் ஒரு பகுதியினர் சாகும் வரையான உண்ணா விரத போராடத்தினை பல்கலைக்கழக முன்றலில் கூடி மேற்கொண்டனர். போராட்டம் தொடங்கி சில மணி நேரத்திற்கு பின்னர் போராட்டம் இடை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

Image result for யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதம்

இதனைத் தொடர்ந்து கடந்த 19ஆம் திகதி மாணவர் ஒன்றியப் பிரதி நிதிகள் சிலர் ஆளுநரின் ஏற்பாட்டில் ஜனாதிபதியைச் சந்தித்தனர். குறித்த சந்திப்பில் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் வட மாகாண ஆளுநர் உள்ளிட்ட சிலரும் கலந்துகொண்டனர். அன்றைய தினம் மாணவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் ஜனாதிபதியால் உடனடியாக ஏற்றுக்கொள்ளமுடியாதெனக் கூறி அதற்கு சரியான பதில் ஒன்று வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. அந்த பதில் வழங்கும் நாளாக இன்றைய (25.10.2017) தினம் குறிக்கப்பட்டிருந்தது.

Related image

இதனிடையே மாணவர்கள் ஜனாதிபதியைச் சந்தித்ததையடுத்து மறுநாள் 20ஆம் திகதி ஒருதலைப்பட்சமாக வகுப்புக்கள் அனைத்தையும் புறக்கணிப்பதாக அறிவித்து அதனை இன்றுவரை கடைப்பிடித்துவருகின்றனர்.

அதன்படி இன்றைய தினம் கூறுவதாயிருந்த பதில் இன்னமும் ஜனாதிபதியிடமிருந்து கிடைக்காத நிலையில் மாணவர்கள் மோசமாக ஏமாற்றப்பட்டுள்ளனர். தாம் உரிய தரப்பினரை தொடர்புகொண்டு இதுகுறித்து கேட்பதற்காக தொடர்பை ஏற்படுத்தியபோது யாரும் தமது தொடர்பிற்கு பதில் வழங்கவில்லை என மாணவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அரசியற் கைதிகள் விவகாரம் தொடர்பாக உரிய வழியில் அரசாங்கத்தைத் தொடர்புகொண்டும் தாம் ஏமாற்றப்பட்டுள்ளதாக தமது போராட்டத்தினை அடுத்தகட்டத்துக்கு நகர்த்துவதற்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக மாணவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Image result for யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கையெழுத்து

இதேவேளை பல்கலைக்கழக சமூகம் மேற்கொண்ட ஆரம்பகட்ட போராட்டத்திற்கு பின்னர், மாணவர்கள் இந்த விடயத்தில் தனித்து முடிவெடுத்து தவறாக வழி நடத்தப்பட்டுள்ளார்கள் என்று சிலர் தமது விசனத்தினை முன்வைத்துள்ளனர். ஒரு முக்கியமான பிரச்சினையில் கைவைத்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் அந்த பிரச்சினை தொடர்பில் இன்று ஏமாற்றப்பட்டுள்ளமை அவர்களின் தன்னிச்சையான முடிவுகளினாலும் தவறான வழிகாட்டுதல்களினாலுமே என்ற விமர்சனம் மாணவர்கள் மீது எழுவதும் தவிர்க்கமுடியாததே.

வடக்கு கிழக்கின் மிகப்பெரும் கல்விக்கூடமாக மட்டுமன்றி கடந்த காலங்களில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளும் நியாயமான உரிமைக் கோரிக்கைகளும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்திலிருந்தே அலையென எழுந்தது. அன்றைய மாணவர் ஒன்றியங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஒட்டுமொத்த பல்கலைக்கழக சமூகத்தின் பிரதி நிதிகளாக அடையாளப்படுத்தப்படும்வகையில் சரியான வழி நடத்தலின்கீழ் தீர்க்கமான முடிவுகளையும் சரியான நடவடிக்கைகளையும் எடுத்திருந்தமை இங்கே நினைவுறுத்தப்படவேண்டியதாகும்.

ஆனால் இன்றைய மாணவர் ஒன்றியமாக இருக்கட்டும் அல்லது மாணவர்களாக இருக்கட்டும் சரியான முறையில் தான் முடிவுகளினை எடுக்கின்றனரா என்ற கேள்வி எழுகின்றது. சாகும் வரை உண்ணா நோன்பு என அறிவித்து குறுகிய நேரத்தினுள் அதனை முடக்கியமை சரியான அணுகுமுறையல்ல. மாணவர்கள் உண்ணா நோன்பிருந்து உடல் இளைக்கவேண்டும் என்று யாருமே விரும்பவில்லை. இந்தப் பத்தி எழுதும்வரை நாமும் அதனை துளியளவும் விரும்பவில்லை, ஆனால் இடையில் நிறுத்தப்படும் என எள்ளளவும் சிந்திக்காமல் அதனை அவசரப்பட்டு மேற்கொண்டிருந்தமை எவ்வளவு பெரிய சிறுபிள்ளைத்தனமான செயல் அல்லவா? உண்ணா நோன்பிற்கு இருக்கும் மரியாதையும் குறைக்கப்பட்டதற்கு ஈடானதல்லவா?

உண்ணா நோன்பினை யாரும் விரும்புவதில்லை, ஆனால் சரியான நகர்வுகளுக்கான தீர்க்கமான முடிவுகள் இல்லாமல் அடுத்தது என்ன என்ற அந்தகாரச் சூழ்நிலையில் அதனை சாகும்வரை என அறிவிப்பது மக்களின் சனநாயக தெரிவுகளிலொன்றான உண்ணா நிலைப் போராட்டத்தின் மீதான நம்பிக்கையினையும் அதன் ஆத்மார்த்த வகிபாகத்தினையும் குறைக்கத்தக்க முடிவல்லவா?

பல்கலைக்கழக சமூகமாக குறித்த போராட்டத்தினை ஆரம்பித்த மாணவர்கள் குறித்த பல்கலைக்கழக சமூகத்திலிருந்து வெளியேறியிருக்கவோ அல்லது தனித்தோ அந்த போராட்டத்தினைத் தொடர்ந்திருக்கக்கூடாது. பல்கலைக்கழக சமூகமாக பேராசிரியர்களையும் கல்விசாரா ஊழியர்களையும் ஒன்றினைத்து ஒருமித்த கருத்தாக தமது கோரிக்கையினை உரியவர்களிடம் சென்று சேர்த்திருந்தால் அதன் விளைவு அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கென இருந்திருக்குமல்லவா?

இனிமேலாவது சிந்தித்து காய்களை நம்பிக்கையோடு நகர்த்துங்கள் சகோதரர்களே, அவசரத்திலும் தவறான வழிகாட்டுதலிலும் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் உங்கள் கல்வியினை மட்டுமல்லாமல் நீங்கள் தொட்டுச் செல்கின்ற சமூகப்பாங்கான பிரச்சினைகளையும்தான் மோசமாகப் பாதிக்கும்.

Image result for யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கையெழுத்து

பல்கலையன்

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.

",d.insertBefore(c.lastChild,d.firstChild)}function d(){var a=t.elements;return"string"==typeof a?a.split(" "):a}function e(a,b){var c=t.elements;"string"!=typeof c&&(c=c.join(" ")),"string"!=typeof a&&(a=a.join(" ")),t.elements=c+" "+a,j(b)}function f(a){var b=s[a[q]];return b||(b={},r++,a[q]=r,s[r]=b),b}function g(a,c,d){if(c||(c=b),l)return c.createElement(a);d||(d=f(c));var e;return e=d.cache[a]?d.cache[a].cloneNode():p.test(a)?(d.cache[a]=d.createElem(a)).cloneNode():d.createElem(a),!e.canHaveChildren||o.test(a)||e.tagUrn?e:d.frag.appendChild(e)}function h(a,c){if(a||(a=b),l)return a.createDocumentFragment();c=c||f(a);for(var e=c.frag.cloneNode(),g=0,h=d(),i=h.length;i>g;g++)e.createElement(h[g]);return e}function i(a,b){b.cache||(b.cache={},b.createElem=a.createElement,b.createFrag=a.createDocumentFragment,b.frag=b.createFrag()),a.createElement=function(c){return t.shivMethods?g(c,a,b):b.createElem(c)},a.createDocumentFragment=Function("h,f","return function(){var n=f.cloneNode(),c=n.createElement;h.shivMethods&&("+d().join().replace(/[\w\-:]+/g,function(a){return b.createElem(a),b.frag.createElement(a),'c("'+a+'")'})+");return n}")(t,b.frag)}function j(a){a||(a=b);var d=f(a);return!t.shivCSS||k||d.hasCSS||(d.hasCSS=!!c(a,"article,aside,dialog,figcaption,figure,footer,header,hgroup,main,nav,section{display:block}mark{background:#FF0;color:#000}template{display:none}")),l||i(a,d),a}var k,l,m="3.7.2",n=a.html5||{},o=/^<|^(?:button|map|select|textarea|object|iframe|option|optgroup)$/i,p=/^(?:a|b|code|div|fieldset|h1|h2|h3|h4|h5|h6|i|label|li|ol|p|q|span|strong|style|table|tbody|td|th|tr|ul)$/i,q="_html5shiv",r=0,s={};!function(){try{var a=b.createElement("a");a.innerHTML="",k="hidden"in a,l=1==a.childNodes.length||function(){b.createElement("a");var a=b.createDocumentFragment();return"undefined"==typeof a.cloneNode||"undefined"==typeof a.createDocumentFragment||"undefined"==typeof a.createElement}()}catch(c){k=!0,l=!0}}();var t={elements:n.elements||"abbr article aside audio bdi canvas data datalist details dialog figcaption figure footer header hgroup main mark meter nav output picture progress section summary template time video",version:m,shivCSS:n.shivCSS!==!1,supportsUnknownElements:l,shivMethods:n.shivMethods!==!1,type:"default",shivDocument:j,createElement:g,createDocumentFragment:h,addElements:e};a.html5=t,j(b)}(this,document);',c.insertBefore(e,d),b=42===f.offsetWidth,c.removeChild(e),{matches:b,media:a}}}(a.document)}(this),function(a){"use strict";function b(){v(!0)}var c={};a.respond=c,c.update=function(){};var d=[],e=function(){var b=!1;try{b=new a.XMLHttpRequest}catch(c){b=new a.ActiveXObject("Microsoft.XMLHTTP")}return function(){return b}}(),f=function(a,b){var c=e();c&&(c.open("GET",a,!0),c.onreadystatechange=function(){4!==c.readyState||200!==c.status&&304!==c.status||b(c.responseText)},4!==c.readyState&&c.send(null))},g=function(a){return a.replace(c.regex.minmaxwh,"").match(c.regex.other)};if(c.ajax=f,c.queue=d,c.unsupportedmq=g,c.regex={media:/@media[^\{]+\{([^\{\}]*\{[^\}\{]*\})+/gi,keyframes:/@(?:\-(?:o|moz|webkit)\-)?keyframes[^\{]+\{(?:[^\{\}]*\{[^\}\{]*\})+[^\}]*\}/gi,comments:/\/\*[^*]*\*+([^/][^*]*\*+)*\//gi,urls:/(url\()['"]?([^\/\)'"][^:\)'"]+)['"]?(\))/g,findStyles:/@media *([^\{]+)\{([\S\s]+?)$/,only:/(only\s+)?([a-zA-Z]+)\s?/,minw:/\(\s*min\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,maxw:/\(\s*max\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,minmaxwh:/\(\s*m(in|ax)\-(height|width)\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/gi,other:/\([^\)]*\)/g},c.mediaQueriesSupported=a.matchMedia&&null!==a.matchMedia("only all")&&a.matchMedia("only all").matches,!c.mediaQueriesSupported){var h,i,j,k=a.document,l=k.documentElement,m=[],n=[],o=[],p={},q=30,r=k.getElementsByTagName("head")[0]||l,s=k.getElementsByTagName("base")[0],t=r.getElementsByTagName("link"),u=function(){var a,b=k.createElement("div"),c=k.body,d=l.style.fontSize,e=c&&c.style.fontSize,f=!1;return b.style.cssText="position:absolute;font-size:1em;width:1em",c||(c=f=k.createElement("body"),c.style.background="none"),l.style.fontSize="100%",c.style.fontSize="100%",c.appendChild(b),f&&l.insertBefore(c,l.firstChild),a=b.offsetWidth,f?l.removeChild(c):c.removeChild(b),l.style.fontSize=d,e&&(c.style.fontSize=e),a=j=parseFloat(a)},v=function(b){var c="clientWidth",d=l[c],e="CSS1Compat"===k.compatMode&&d||k.body[c]||d,f={},g=t[t.length-1],p=(new Date).getTime();if(b&&h&&q>p-h)return a.clearTimeout(i),i=a.setTimeout(v,q),void 0;h=p;for(var s in m)if(m.hasOwnProperty(s)){var w=m[s],x=w.minw,y=w.maxw,z=null===x,A=null===y,B="em";x&&(x=parseFloat(x)*(x.indexOf(B)>-1?j||u():1)),y&&(y=parseFloat(y)*(y.indexOf(B)>-1?j||u():1)),w.hasquery&&(z&&A||!(z||e>=x)||!(A||y>=e))||(f[w.media]||(f[w.media]=[]),f[w.media].push(n[w.rules]))}for(var C in o)o.hasOwnProperty(C)&&o[C]&&o[C].parentNode===r&&r.removeChild(o[C]);o.length=0;for(var D in f)if(f.hasOwnProperty(D)){var E=k.createElement("style"),F=f[D].join("\n");E.type="text/css",E.media=D,r.insertBefore(E,g.nextSibling),E.styleSheet?E.styleSheet.cssText=F:E.appendChild(k.createTextNode(F)),o.push(E)}},w=function(a,b,d){var e=a.replace(c.regex.comments,"").replace(c.regex.keyframes,"").match(c.regex.media),f=e&&e.length||0;b=b.substring(0,b.lastIndexOf("/"));var h=function(a){return a.replace(c.regex.urls,"$1"+b+"$2$3")},i=!f&&d;b.length&&(b+="/"),i&&(f=1);for(var j=0;f>j;j++){var k,l,o,p;i?(k=d,n.push(h(a))):(k=e[j].match(c.regex.findStyles)&&RegExp.$1,n.push(RegExp.$2&&h(RegExp.$2))),o=k.split(","),p=o.length;for(var q=0;p>q;q++)l=o[q],g(l)||m.push({media:l.split("(")[0].match(c.regex.only)&&RegExp.$2||"all",rules:n.length-1,hasquery:l.indexOf("(")>-1,minw:l.match(c.regex.minw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||""),maxw:l.match(c.regex.maxw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||"")})}v()},x=function(){if(d.length){var b=d.shift();f(b.href,function(c){w(c,b.href,b.media),p[b.href]=!0,a.setTimeout(function(){x()},0)})}},y=function(){for(var b=0;b