செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்த குறுந்தகவல் ஊடாக வீண் புரளி

40,000 மெ.தொன் எரிபொருளுடன் நாளை வருகிறது கப்பல்

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக குறுந்தவகல் மூலம் புரளியை ஏற்படுத்தி, மக்களிடையே பெரும் களேபரத்தை உருவாக்கிய சூத்திரதாரிகளை விரைவில் கண்டுபிடிக்கவுள்ளதாக, பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வளங்கள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க நேற்று(06) சூளுரைத்தார்.

இதேவேளை, 40 ஆயிரம் மெட்ரிக்தொன் எரிபொருளுடன் நாட்டுக்கு வரும் கப்பல் நாளை இரவு (08) வந்தடையுமென்றும், அதுவரைக்கும் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால் பொதுமக்கள் வீணான அச்சம் கொள்ள தேவையில்லையெனவும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

அத்துடன் எரிபொருள் காரணமாக நாட்டில் சில தினங்களாக மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களுக்காக மிகவும் வருந்துவதாகவும் அதற்காக தன்னை மக்கள் மன்னிக்க வேண்டுமென்றும் அமைச்சர் ரணதுங்க நேற்று கேட்டுக்கொண்டார்.

எவ்வாறாயினும் நாட்டில் போதுமானளவு டீசல் கையிருப்பில் உள்ளதால் எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையமும் டீசலுக்கு செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்க முடியாது. அவ்வாறு தட்டுப்பாட்டை உருவாக்கினால் அவர்களின் அனுமதிப்பத்திரம் உடன் ரத்துச் செய்யப்படுமென்றும் அமைச்சர் கூறினார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் நேற்று பிற்பகல் நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் இறக்குமதி செய்யப்படும் 32,500 மெட்ரிக் தொன் ஒக்டேன் 92 , 7,500 மெட்ரிக் தொன் ஒக்டேன் 95,என்பவற்றின் தரத்தை ஆராய்வதற்காக இருவர் இலங்கையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

இந்திய எண்ணெய் கம்பனியால் ஒக்டோபர் (15) நாட்டுக்குள் கொண்டு வரவப்பட்ட பெற்றோலில் கண்ணுக்குப் புலப்படக்கூடிய சில துகள்கள் காணப்பட்டன. அதன் தரத்தைக் கருத்திற் கொண்டு அக்கப்பல் ஒக்டோபர் (18) நிராகரிக்கப்பட்டது. எனினும் அக்கப்பல் தொடர்ந்தும் திருகோணமலை துறைமுகத்திலே தரித்து வைக்கப்பட்டுள்ளது.

அதற்கு பதிலாக ஒக்டோபர் (31) திகதியளவில் மாற்று எரிபொருளுடன் கப்பலொன்றை அனுப்பி வைப்பதாக இந்திய எண்ணெய்க் கம்பனி உறுதி செய்திருந்த போதும், இறுதி சந்தர்ப்பத்தில் அக்கம்பனி மறுப்புத் தெரிவித்து விட்டது.

இந்நிலையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இறக்குமதி செய்யும் 40 ஆயிரம் மெட்ரிக்தொன் எரிபொருள் தாங்கியுடன் கூடிய கப்பல் நவம்பர் 02 அல்லது 03 ஆம் திகதி இலங்கை வந்தடைய வேண்டியிருந்தபோதும் பல்வேறு காரணங்களுக்காக அது காலம் தாழ்த்தப்பட்டுள்ளது. இக்கப்பல் நாளை (08) நள்ளிரவு இலங்கையை வந்தடைந்ததும் (09 ) பிற்பகல் முதல் சீரான எண்ணெய் விநியோகத்தை முன்னெடுக்க முடிமென்றும் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க விளக்கமளித்தார்.

“இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக நாட்டுக்குள் வரவேண்டிய எண்ணெய்க் கப்பல் காலதாமதமாகியுள்ளது. எரிபொருள் நிரப்புவதற்காக 04 நாட்களாக கப்பல் காத்திருந்தமை. எரிபொருளை நிரப்ப 10 மணித்தியாலங்கள் தேவைப்பட்டமை, அதனுடன் தொடர்புபட்டாற் போல் சப்புகஸ்கந்தையிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பில் பழுது ஏற்படுதல், எரிப்பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படப்போவதாக குறுந்தகவல் மூலம் நாட்டில் களேபரத்தை உருவாக்குதல் ஆகியவற்றின் பின்னணியில் பாரிய சூழ்ச்சி இருப்பதாகவே நான் எண்ணுகின்றேன். எவ்வாறாயினும் முதலில் பொது மக்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்க வேண்டுமென்பதே எனது முதற் குறிக்கோளாகவுள்ளது. தீர்வு காணப்பட்டதும் இச்சதித்திட்டத்துக்கு காரணமானவர்களை கண்டு பிடித்து உதவுமாறு நான் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் வேண்டுகோள் முன்வைக்கவுள்ளேன்.Ó என்றும் அமைச்சர் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்தார்.

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதை அறிந்திருந்தும் 16 ஆயிரம் மெற்றிக்தொன் பெற்றோலை எமக்கு தருவதற்கு முன்வந்த இந்திய எண்ணெய்க் கம்பனி, அப்பெற்றோலுடன் தரம் குறைந்த டீசலையும் பெற வேண்டுமென்றும் எம்முடன் ஒப்பந்தம் செய்ய முற்பட்டது. எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு இடம்பெற்றாலும் தரம் குறைந்த எண்ணெயை நாட்டுக்குள் கலப்படம் செய்வதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என்றும் அமைச்சர் நேற்று உறுதியாக தெரிவித்தார்.

Òதரம் குறைந்த எண்ணெய்க் கப்பலை நாட்டுக்குள் அனுமதிக்குமாறு, எனக்கு அரசியல் ரீதியாக பாரிய அழுத்தங்கள் வந்தபோதும் நான் அதனைப் பொருட்படுத்தவில்லை. ஜனாதிபதி மற்றும் பிரதமரைத் தவிர்ந்த வேறு எவருக்கும் நான் தலைசாய்க்கப் போவதில்லை. அதேவேளை நான் நாட்டு மக்களுக்காக தீர்மானம் மேற்கொள்ள எச்சந்தர்ப்பத்திலும் பின்வாங்க மாட்டேன்.எரிபொருள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக தரம் குறைந்த பெற்றோலை வழங்கினால் சாதாரண பொது மக்களே பாதிக்கப்படுவார்கள்.Ó என்றும் அமைச்சர் கூறினார்.

Òஇந்திய எண்ணெய்க் கம்பனியால் எம்மை கட்டுப்படுத்த முடியாது. தரம் குறைந்த பெற்றோலையும் எரிபொருளையும் பலவந்தமாக எம்மைப் பெற்றுக் கொள்ளுமாறு அவர்கள் எவ்வாறு எமக்கு பலவந்தம் செய்ய முடியும். எனக்கு கட்சி கிடையாது. என்னில் பச்சை, சிவப்பு,நீலம் இல்லை.எனக்கு மக்களுக்கு சரியானதை செய்ய வேண்டும்.சுத்திகரிப்பு நிலையங்கள் புதிதாக உருவாக்கப்பட்டால் நாட்டில் எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் உருவாகாது.Ó என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மக்கள் பாதிப்பு

இதேவேளை எரிபொருள் தட்டுப்பாடு நான்காவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இதனால் மக்கள் பாரிய அசெளகர்யங்களுக்கு உள்ளானதுடன், அவர்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டது. பொது மக்கள் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக அதிகாலை 5 மணி தொடக்கம் எரிபொருள் நிலையங்களுக்கு நேரில் வந்து நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர்.

உரிய நேரத்துக்குள் வாகனங்களுக்கு எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியாமையால் பலர் அலுவலகங்கங்களுக்கு நேரத்துக்கு சமூகமளிக்க இயலாது சிரமங்களை எதிர் நோக்கினர்.

கொழும்பின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் சுமார் 500 மீற்றருக்கும் அப்பால் வரை வாகனங்களும், தனிநபர்களும்சுமார் ஒரு மணித்தியாலத்துக்கும் அதிக நேரம் வரிசையில் காத்திருந்தனர்.

காத்திருப்பு வரிசையில் அ​நகமாக மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளையே அதிகமாக காணக்கூடியதாக இருந்தது. தனிநபர்களும் கைகளில் கொள்கலன்களுடன் வரிசையில் காத்திருந்தனர்.

எனினும் வாகனத்தின் வகை மற்றும் மாதிரிக்கு ஏற்ற வகையில் குறிப்பிட்டளவு எரிபொருளே ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டன.

எரிபொருள் தட்டுப்பாடு நான்காவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இதனால் மக்கள் பாரிய அசெளகர்யங்களுக்கு உள்ளானதுடன் அவர்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டது.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.

",d.insertBefore(c.lastChild,d.firstChild)}function d(){var a=t.elements;return"string"==typeof a?a.split(" "):a}function e(a,b){var c=t.elements;"string"!=typeof c&&(c=c.join(" ")),"string"!=typeof a&&(a=a.join(" ")),t.elements=c+" "+a,j(b)}function f(a){var b=s[a[q]];return b||(b={},r++,a[q]=r,s[r]=b),b}function g(a,c,d){if(c||(c=b),l)return c.createElement(a);d||(d=f(c));var e;return e=d.cache[a]?d.cache[a].cloneNode():p.test(a)?(d.cache[a]=d.createElem(a)).cloneNode():d.createElem(a),!e.canHaveChildren||o.test(a)||e.tagUrn?e:d.frag.appendChild(e)}function h(a,c){if(a||(a=b),l)return a.createDocumentFragment();c=c||f(a);for(var e=c.frag.cloneNode(),g=0,h=d(),i=h.length;i>g;g++)e.createElement(h[g]);return e}function i(a,b){b.cache||(b.cache={},b.createElem=a.createElement,b.createFrag=a.createDocumentFragment,b.frag=b.createFrag()),a.createElement=function(c){return t.shivMethods?g(c,a,b):b.createElem(c)},a.createDocumentFragment=Function("h,f","return function(){var n=f.cloneNode(),c=n.createElement;h.shivMethods&&("+d().join().replace(/[\w\-:]+/g,function(a){return b.createElem(a),b.frag.createElement(a),'c("'+a+'")'})+");return n}")(t,b.frag)}function j(a){a||(a=b);var d=f(a);return!t.shivCSS||k||d.hasCSS||(d.hasCSS=!!c(a,"article,aside,dialog,figcaption,figure,footer,header,hgroup,main,nav,section{display:block}mark{background:#FF0;color:#000}template{display:none}")),l||i(a,d),a}var k,l,m="3.7.2",n=a.html5||{},o=/^<|^(?:button|map|select|textarea|object|iframe|option|optgroup)$/i,p=/^(?:a|b|code|div|fieldset|h1|h2|h3|h4|h5|h6|i|label|li|ol|p|q|span|strong|style|table|tbody|td|th|tr|ul)$/i,q="_html5shiv",r=0,s={};!function(){try{var a=b.createElement("a");a.innerHTML="",k="hidden"in a,l=1==a.childNodes.length||function(){b.createElement("a");var a=b.createDocumentFragment();return"undefined"==typeof a.cloneNode||"undefined"==typeof a.createDocumentFragment||"undefined"==typeof a.createElement}()}catch(c){k=!0,l=!0}}();var t={elements:n.elements||"abbr article aside audio bdi canvas data datalist details dialog figcaption figure footer header hgroup main mark meter nav output picture progress section summary template time video",version:m,shivCSS:n.shivCSS!==!1,supportsUnknownElements:l,shivMethods:n.shivMethods!==!1,type:"default",shivDocument:j,createElement:g,createDocumentFragment:h,addElements:e};a.html5=t,j(b)}(this,document);',c.insertBefore(e,d),b=42===f.offsetWidth,c.removeChild(e),{matches:b,media:a}}}(a.document)}(this),function(a){"use strict";function b(){v(!0)}var c={};a.respond=c,c.update=function(){};var d=[],e=function(){var b=!1;try{b=new a.XMLHttpRequest}catch(c){b=new a.ActiveXObject("Microsoft.XMLHTTP")}return function(){return b}}(),f=function(a,b){var c=e();c&&(c.open("GET",a,!0),c.onreadystatechange=function(){4!==c.readyState||200!==c.status&&304!==c.status||b(c.responseText)},4!==c.readyState&&c.send(null))},g=function(a){return a.replace(c.regex.minmaxwh,"").match(c.regex.other)};if(c.ajax=f,c.queue=d,c.unsupportedmq=g,c.regex={media:/@media[^\{]+\{([^\{\}]*\{[^\}\{]*\})+/gi,keyframes:/@(?:\-(?:o|moz|webkit)\-)?keyframes[^\{]+\{(?:[^\{\}]*\{[^\}\{]*\})+[^\}]*\}/gi,comments:/\/\*[^*]*\*+([^/][^*]*\*+)*\//gi,urls:/(url\()['"]?([^\/\)'"][^:\)'"]+)['"]?(\))/g,findStyles:/@media *([^\{]+)\{([\S\s]+?)$/,only:/(only\s+)?([a-zA-Z]+)\s?/,minw:/\(\s*min\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,maxw:/\(\s*max\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,minmaxwh:/\(\s*m(in|ax)\-(height|width)\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/gi,other:/\([^\)]*\)/g},c.mediaQueriesSupported=a.matchMedia&&null!==a.matchMedia("only all")&&a.matchMedia("only all").matches,!c.mediaQueriesSupported){var h,i,j,k=a.document,l=k.documentElement,m=[],n=[],o=[],p={},q=30,r=k.getElementsByTagName("head")[0]||l,s=k.getElementsByTagName("base")[0],t=r.getElementsByTagName("link"),u=function(){var a,b=k.createElement("div"),c=k.body,d=l.style.fontSize,e=c&&c.style.fontSize,f=!1;return b.style.cssText="position:absolute;font-size:1em;width:1em",c||(c=f=k.createElement("body"),c.style.background="none"),l.style.fontSize="100%",c.style.fontSize="100%",c.appendChild(b),f&&l.insertBefore(c,l.firstChild),a=b.offsetWidth,f?l.removeChild(c):c.removeChild(b),l.style.fontSize=d,e&&(c.style.fontSize=e),a=j=parseFloat(a)},v=function(b){var c="clientWidth",d=l[c],e="CSS1Compat"===k.compatMode&&d||k.body[c]||d,f={},g=t[t.length-1],p=(new Date).getTime();if(b&&h&&q>p-h)return a.clearTimeout(i),i=a.setTimeout(v,q),void 0;h=p;for(var s in m)if(m.hasOwnProperty(s)){var w=m[s],x=w.minw,y=w.maxw,z=null===x,A=null===y,B="em";x&&(x=parseFloat(x)*(x.indexOf(B)>-1?j||u():1)),y&&(y=parseFloat(y)*(y.indexOf(B)>-1?j||u():1)),w.hasquery&&(z&&A||!(z||e>=x)||!(A||y>=e))||(f[w.media]||(f[w.media]=[]),f[w.media].push(n[w.rules]))}for(var C in o)o.hasOwnProperty(C)&&o[C]&&o[C].parentNode===r&&r.removeChild(o[C]);o.length=0;for(var D in f)if(f.hasOwnProperty(D)){var E=k.createElement("style"),F=f[D].join("\n");E.type="text/css",E.media=D,r.insertBefore(E,g.nextSibling),E.styleSheet?E.styleSheet.cssText=F:E.appendChild(k.createTextNode(F)),o.push(E)}},w=function(a,b,d){var e=a.replace(c.regex.comments,"").replace(c.regex.keyframes,"").match(c.regex.media),f=e&&e.length||0;b=b.substring(0,b.lastIndexOf("/"));var h=function(a){return a.replace(c.regex.urls,"$1"+b+"$2$3")},i=!f&&d;b.length&&(b+="/"),i&&(f=1);for(var j=0;f>j;j++){var k,l,o,p;i?(k=d,n.push(h(a))):(k=e[j].match(c.regex.findStyles)&&RegExp.$1,n.push(RegExp.$2&&h(RegExp.$2))),o=k.split(","),p=o.length;for(var q=0;p>q;q++)l=o[q],g(l)||m.push({media:l.split("(")[0].match(c.regex.only)&&RegExp.$2||"all",rules:n.length-1,hasquery:l.indexOf("(")>-1,minw:l.match(c.regex.minw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||""),maxw:l.match(c.regex.maxw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||"")})}v()},x=function(){if(d.length){var b=d.shift();f(b.href,function(c){w(c,b.href,b.media),p[b.href]=!0,a.setTimeout(function(){x()},0)})}},y=function(){for(var b=0;b