அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி இரத்தினபுரம் பிள்ளையார் கோவில் வளாகத்தில் ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்திப்பில் கலந்து ஈடுப்பட்டார். குறித்த சந்திப்பு இன்று பகல் 1 மணியளவில் இடம்பெற்றது.

இதன்போது அமைச்சர் பொன்னாடை போர்த்தி வரவேற்கப்பட்டதுடன், விசேட வழிபாடும் இடம்பெற்றது. தொடர்ந்து பொதுமக்கள் மற்றும், ஐயப்ப பக்தர்களுடன் அமைச்சர் கலந்துரையாடினார்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர்,

இன்று பிரதான பிரச்சினையாக வீட்டுத்திட்டம் உள்ளிட்ட பல பிரச்சினைகள் காணப்படுகின்றது.

அவற்றினை தீர்ப்பதற்கு எனக்கு கிடைத்துள்ள குறுகியகாலமானாலும் இயன்றவரை செய்து முடிப்பேன்.

மேலும் இங்கிருந்து ஐயப்ப பக்தர்களாக இந்தியாவிற்கு சென்று வருவதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளனர்.

ஏனைய மதத்தவர்கள் மக்கா உள்ளிட்டவற்றிற்கு சென்று வருவதுபோல் எமது மக்களும் ஐயப்ப வழிபாட்டிற்கு சென்று வருவதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளேன்.

இவர்களிற்காக இலவச விசா வழங்குவதற்கு பேச்சுக்களை மேற்கொண்டுள்ளேன்.

அதேபோன்று இந்தியாவிற்கும் இலங்கைக்கும் கப்பல் சேவை ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பிலும் பல்வேறு முயற்சிகளை நான் மேற்கொண்டுள்ளேன்.

10 ஆயிரம் ரூபாவுடன் சென்று வருவதற்கும், 100 கிலோ வரையிலான பொருட்களை எடுத்து வருவதற்கும் குறித்த கப்பல் சேவை தொடர்பில் முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.