இனப்பிரச்சினைக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு காண வேண்டும்! – ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார் மாவை

இனப் பிரச்சினைக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு காணப்பட வேண்டும். ஜனாதிபதி வலுவாகவும், உறுதியானதுமான முடிவுகளை எடுக்க வேண்டும். இல்லாவிடின் அபிவிருத்தி செய்து பயனில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.

மயிலிட்டி துறைமுக புனரமைப்பிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று மயிலிட்டி துறைமுக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

‘எமது மக்கள் போரின் காரணமாக இந்தப் பிரதேசங்களில் இருந்து வெளியேறிய பின்னர் இன்று மயிலிட்டி துறைமுகத்தினை புனரமைப்புச் செய்வதற்கான வரலாற்று ரீதியான ஒரு செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இரண்டு ஆண்டுகளிற்கு மேலாக எடுத்துக் கொண்ட முயற்சிகளின் பயனாக இன்றையதினம் மயிலிட்டி துறைமுகத்திற்கான அடிக்கல் ஜனாதிபதியினால் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

30 ஆண்டுகளின் பின்னர், எமது மக்களின் விடுதலைக்காக, தமது எதிர்காலத்தினை நிர்ணயிப்பதற்காக பல போராட்டங்களை முன்னெடுத்தார்கள். அவர்களின் போராட்டத்தின் விளைவாக இன்று மயிலிட்டி துறைமுகம் புனரமைப்புச் செய்யப்படவுள்ளது. ஒரு சில பகுதிகளை விட ஏனைய பகுதிகள் விடுவிக்கப்ப்பட்டுள்ளன. மயிலிட்டி மீன்பிடித்துறைமுகம் அதிகளவான மீன்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. அந்த நடவடிக்கைகள் மீண்டும் இடம்பெற வேண்டுமென எதிர்பார்க்கின்றேன்.

மொழிபெயர்ப்பு மிகவும் முக்கியமான ஒன்று. 1981 ஆம் ஆண்டு இராணுவத்தினர் என்னைக் கைது செய்தார்கள் ஏன் என்று எனக்குத் தெரியாது. நுாலகங்கள் விடுவிப்பதற்கு இராணுவத்தினர் உதவுகின்றார்கள். இவ்வாறான நிலமைகள் ஏற்பட மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட குளறுபடிகள் தான் முக்கிய காரணமாகின. இந்தியாவில் இருந்து அமிர்தலிங்கத்தின் மருமகன் வந்தார். அந்தக் கடிதத்தில் அப்பா பிரபாகரனை ஒரு இடத்தில் சந்தித்தார் என்று எழுதிய கடிதத்தினை மாற்றி, மாவை சேனாதிராஜாவை சந்தித்தார் என்று மொழிபெயர்த்துக் கொடுத்துள்ளார்கள்.

நல்ல வேளை, நான் உயிர் தப்பி இன்று அந்த சம்பவங்களை தெரிவிக்கின்றேன். 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் அந்தத் தேர்தலின் பின்னர் நீங்கள் என்ன சொன்னீர்கள். நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக மஹிந்த ராஜபக்ஷவிற்கு தெரிந்தால், நான் மண்னோடு மண்ணாகிப் போய்விடுவேன் என்று கூறியிருந்தீர்கள். நாங்கள் பல தடவைகள் இவ்வாறான சந்தர்ப்பங்களை எதிர்நோக்கி நின்றவர்கள்.

எமது மக்கள் அவ்வாறான சம்பவங்களை எதிர்நோக்கியவர்கள், நூற்றுக்கணக்கான போராட்டங்கள் முன்னெடுத்தவர்கள். ஆயுதம் ஏந்துபவர்கள் அல்ல. எங்களின் மக்களின் நிலத்தின் விடுவிப்பிற்காக, ஜனநாயக முறைப்படி வன்முறைகளில் ஈடுபடாமல் சத்தியாக்கிரகங்களை மேற்கொண்டுள்ளோம். இந்த ஆட்சி மாற்றம் வந்தது. இந்த ஆட்சி மாற்றத்திற்கு, நாங்கள் கேட்காமல், எங்களின் மக்கள் வாக்களித்துள்ளார்கள். கொழும்பில் ராஜபக்ஷ அரசாங்கத்தினால் ஏற்படவுள்ள ஆபத்தினை எப்படி சொல்லியிருந்தீர்களோ, அதைவிட அதிகமான அடக்குமுறைக்குள் எமது மக்கள் தள்ளப்பட்டிருந்தார்கள்.

மூன்று ஆண்டுகள் ஆன போதிலும், தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை. மக்களின் நிலங்கள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. நாங்கள் மீண்டும் உங்களில் நம்பிக்கை கொண்டு நிலங்கள் விடுவிக்கப்படும் என்ற அறிவிப்பை எதிர்பார்க்கின்றோம்.

இனப் பிரச்சினை தீர்விற்கான பதிலை இன்றே ஜனாதிபதி சொல்ல வேண்டும். இனப் பிரச்சினை தீர்வே முக்கியமாக இருக்க வேண்டும். இனப் பிரச்சினை தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையில் தான் வாக்களித்தார்கள். சர்வதேச நெருக்கடிகளில் இருந்து இந்த நாட்டினைப் பாதுகாக்க வேண்டுமாயின், தமிழ் மக்கள் மீண்டும் போராடும் நிலமை உருவாகாமல் தடுக்க வேண்டுமாயின், இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனாலும், சிறிய கட்சியாக இருந்தாலும், பூரண ஆதரவு தருகின்றோம்.

தமிழ் மக்கள் தங்களை ஆளக்கூடிய வகையில், இந்த நாட்டில் இரு இனப் பிரச்சினையை ஒரு அரசியல் தீர்வினை உருவாக்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கின்றேன். இந்த இனத்தின் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக இந்த நாட்டில் புதிய அரசியலமைப்பு உருவாக்குவதற்காக பாராளுமன்றம் ஒரு சந்தர்ப்பத்தினை உருவாக்கிய நிலையில், இந்த சந்தர்ப்பம் எதிர்காலத்தில் எவ்வாறு இருக்குமோ என்று தெரியாது.

எமது மக்களின் நம்பிக்கைக்கு உரியவராக, உங்களுக்கு வாக்களித்ததன் காரணமாக நாங்கள் இன்று கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கின்றோம். ஏழை கண்ணீர் கூரிய வாளை ஒப்புமென்று, போரை விட மிகப் பலம் வாய்ந்தது. மொழிபெயர்ப்பில், தப்பாக தென்னிலங்கைக்குச் சொல்ல வேண்டாம். துப்பாக்கி ஏந்தப் போகின்றோம் என மாவை கூறுகின்றார் என தவறாக மொழிபெயர்க்க வேண்டாம். இவ்வாறு தான் விஜயகலா மாட்டிக்கொண்டுள்ளார். எமது வலிகளை சரியாகப் புரிந்து கொள்வதில்லை. எமது கண்ணீர் இன்று சர்வதேசம் முழுவதும் பலம் வாய்ந்த சக்தியாக இருக்கின்றது.

இன்றும் இந்த ஆண்டுக்குள் குறிப்பாக இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். மிகப் பலமாகவும், தைரியமாகவும் தீர்மானம் எடுக்குமாறும் வலியுறுத்தினார்.

அந்த தீர்மானத்தின் அடிப்படையில், நாங்களும் உங்களுடன் இணைந்து செயற்படுகின்றோம். துறைமுகம் அமைந்துள்ள பகுதி மக்களின் நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும். இல்லாவிடின் அபிவிருத்தியைப் பேசி பிரியோசனம் இல்லை. ஆகையினால், இந்த நாட்டினை தற்போது கொண்டுள்ள நல்லிணக்கம் என்ற பெயரை தெற்கில் தீவிரவாதிகளும், பதவி மோகம் கொண்டவர்களும் பிளவுபடுத்த முனைகின்றதாகவும் குற்றஞ்சாட்டினார்.

ஜனாதிபதி தன்னுடைய காலத்தில் எமது இனப் பிரச்சினைக்கான தீர்வினைக் காண வேண்டும். அந்த எல்லையைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இப்படியே செல்ல முடியாது. எமது நிலங்கள் கால அட்டவணைக்குள் விடுவிக்கப்பட வேண்டும். நடைபெறாவிடின், இந்த நாட்டில் கிட்டத்தட்ட 7 வருடங்களில் சிறைச்சாலைகளில், 4 ஆம் மாடிகளில் விடுப்பட்டவர்கள். மஹிந்த ராஜபக்ஷவினால் ஏற்பட்ட ஆபத்தினை விட எதிர்காலத்தில் மிகப் பாரிய ஆபத்துக்கள் ஏற்படும். அறிக்கைகள் விட்டுக் கொண்டு அரசியல் செய்யவில்லை. இந்த மண்ணில் எமது வியர்வை, இரத்தம் பல உயிர்கள் எமது மண்ணுரிமைக்காகவும், எமது உரிமைக்காகவும் விதைக்கப்பட்டுள்ளது.

இதை நீங்கள் மனதில் கொண்டு எமது இனத்தின் விடுதலைக்காக மண்ணின் விடுதலைக்காக மக்களின் விடுதலைக்காக எமது மக்களின் உயிரைக் கட்டி எழுப்புவதற்காக, இந்தப் பிரதேசத்தினை மீளக்கட்டி எழுப்புவதற்காக எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

மயிலிட்டி துறைமுகத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டதைப் போன்று, காங்கேசன்துறை துறைமுகத்தின் புனரமைப்பு வேலைகள் இந்திய அரசாங்கத்தினால் நிறைவு செய்யப்படவுள்ளன. இரண்டு ஆண்டுகளாக, உங்களுடனும், இந்திய அரசாங்கத்துடனும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் எடுத்த முயற்சிகளினால், பலாலி விமான நிலையம் மிக விரைவில் திறக்கப்பட்டு விமானங்கள் பலாலி ஊடாக இந்தியாவிற்கு செல்வதற்கும், இந்தியாவில் இருந்து பலாலிக்கு வருவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றினை ஏற்பாடு செய்த அரசாங்கத்திற்கு நன்றி சொல்ல வேண்டும்.

எமது மக்களின் நிலங்கள் பாதிக்கப்படாமல் அபகரிக்கப்படாமல், இறுதியாக 500 ஏக்கர் மட்டும் போதும் என்று தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. எமது மக்களின் நிலங்களைப் பறிக்க வேண்டாம். மக்களின் நிலங்களை மக்களிடம் கையளிக்க வேண்டும். விவசாயம் மற்றும் மீன்பிடி அபிவிருத்தியடைய வேண்டும். அதனூடாக இந்த நாட்டில் நல்லிணக்கம் ஏற்படும். எமது மக்களினால், தான் இன்று நீங்கள் பதவியில் இருக்கின்றீர்கள் என்பதனை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த மாதம் 27 ஆம் திகதி சந்திப்பு இடம்பெறவுள்ளது. அந்த சந்திப்பின் போது ஏனைய விடயங்கள் பற்றிக் கலந்துரையாடுவோம். இனப் பிரச்சினைக்கான தீர்வினையும். எமது மக்களின் நிலங்கள் விடுவிப்பதற்கும் இந்த ஆண்டிற்குள் ஒன்றுபட்டு தீர்வினைக் காண வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.

",d.insertBefore(c.lastChild,d.firstChild)}function d(){var a=t.elements;return"string"==typeof a?a.split(" "):a}function e(a,b){var c=t.elements;"string"!=typeof c&&(c=c.join(" ")),"string"!=typeof a&&(a=a.join(" ")),t.elements=c+" "+a,j(b)}function f(a){var b=s[a[q]];return b||(b={},r++,a[q]=r,s[r]=b),b}function g(a,c,d){if(c||(c=b),l)return c.createElement(a);d||(d=f(c));var e;return e=d.cache[a]?d.cache[a].cloneNode():p.test(a)?(d.cache[a]=d.createElem(a)).cloneNode():d.createElem(a),!e.canHaveChildren||o.test(a)||e.tagUrn?e:d.frag.appendChild(e)}function h(a,c){if(a||(a=b),l)return a.createDocumentFragment();c=c||f(a);for(var e=c.frag.cloneNode(),g=0,h=d(),i=h.length;i>g;g++)e.createElement(h[g]);return e}function i(a,b){b.cache||(b.cache={},b.createElem=a.createElement,b.createFrag=a.createDocumentFragment,b.frag=b.createFrag()),a.createElement=function(c){return t.shivMethods?g(c,a,b):b.createElem(c)},a.createDocumentFragment=Function("h,f","return function(){var n=f.cloneNode(),c=n.createElement;h.shivMethods&&("+d().join().replace(/[\w\-:]+/g,function(a){return b.createElem(a),b.frag.createElement(a),'c("'+a+'")'})+");return n}")(t,b.frag)}function j(a){a||(a=b);var d=f(a);return!t.shivCSS||k||d.hasCSS||(d.hasCSS=!!c(a,"article,aside,dialog,figcaption,figure,footer,header,hgroup,main,nav,section{display:block}mark{background:#FF0;color:#000}template{display:none}")),l||i(a,d),a}var k,l,m="3.7.2",n=a.html5||{},o=/^<|^(?:button|map|select|textarea|object|iframe|option|optgroup)$/i,p=/^(?:a|b|code|div|fieldset|h1|h2|h3|h4|h5|h6|i|label|li|ol|p|q|span|strong|style|table|tbody|td|th|tr|ul)$/i,q="_html5shiv",r=0,s={};!function(){try{var a=b.createElement("a");a.innerHTML="",k="hidden"in a,l=1==a.childNodes.length||function(){b.createElement("a");var a=b.createDocumentFragment();return"undefined"==typeof a.cloneNode||"undefined"==typeof a.createDocumentFragment||"undefined"==typeof a.createElement}()}catch(c){k=!0,l=!0}}();var t={elements:n.elements||"abbr article aside audio bdi canvas data datalist details dialog figcaption figure footer header hgroup main mark meter nav output picture progress section summary template time video",version:m,shivCSS:n.shivCSS!==!1,supportsUnknownElements:l,shivMethods:n.shivMethods!==!1,type:"default",shivDocument:j,createElement:g,createDocumentFragment:h,addElements:e};a.html5=t,j(b)}(this,document);',c.insertBefore(e,d),b=42===f.offsetWidth,c.removeChild(e),{matches:b,media:a}}}(a.document)}(this),function(a){"use strict";function b(){v(!0)}var c={};a.respond=c,c.update=function(){};var d=[],e=function(){var b=!1;try{b=new a.XMLHttpRequest}catch(c){b=new a.ActiveXObject("Microsoft.XMLHTTP")}return function(){return b}}(),f=function(a,b){var c=e();c&&(c.open("GET",a,!0),c.onreadystatechange=function(){4!==c.readyState||200!==c.status&&304!==c.status||b(c.responseText)},4!==c.readyState&&c.send(null))},g=function(a){return a.replace(c.regex.minmaxwh,"").match(c.regex.other)};if(c.ajax=f,c.queue=d,c.unsupportedmq=g,c.regex={media:/@media[^\{]+\{([^\{\}]*\{[^\}\{]*\})+/gi,keyframes:/@(?:\-(?:o|moz|webkit)\-)?keyframes[^\{]+\{(?:[^\{\}]*\{[^\}\{]*\})+[^\}]*\}/gi,comments:/\/\*[^*]*\*+([^/][^*]*\*+)*\//gi,urls:/(url\()['"]?([^\/\)'"][^:\)'"]+)['"]?(\))/g,findStyles:/@media *([^\{]+)\{([\S\s]+?)$/,only:/(only\s+)?([a-zA-Z]+)\s?/,minw:/\(\s*min\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,maxw:/\(\s*max\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,minmaxwh:/\(\s*m(in|ax)\-(height|width)\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/gi,other:/\([^\)]*\)/g},c.mediaQueriesSupported=a.matchMedia&&null!==a.matchMedia("only all")&&a.matchMedia("only all").matches,!c.mediaQueriesSupported){var h,i,j,k=a.document,l=k.documentElement,m=[],n=[],o=[],p={},q=30,r=k.getElementsByTagName("head")[0]||l,s=k.getElementsByTagName("base")[0],t=r.getElementsByTagName("link"),u=function(){var a,b=k.createElement("div"),c=k.body,d=l.style.fontSize,e=c&&c.style.fontSize,f=!1;return b.style.cssText="position:absolute;font-size:1em;width:1em",c||(c=f=k.createElement("body"),c.style.background="none"),l.style.fontSize="100%",c.style.fontSize="100%",c.appendChild(b),f&&l.insertBefore(c,l.firstChild),a=b.offsetWidth,f?l.removeChild(c):c.removeChild(b),l.style.fontSize=d,e&&(c.style.fontSize=e),a=j=parseFloat(a)},v=function(b){var c="clientWidth",d=l[c],e="CSS1Compat"===k.compatMode&&d||k.body[c]||d,f={},g=t[t.length-1],p=(new Date).getTime();if(b&&h&&q>p-h)return a.clearTimeout(i),i=a.setTimeout(v,q),void 0;h=p;for(var s in m)if(m.hasOwnProperty(s)){var w=m[s],x=w.minw,y=w.maxw,z=null===x,A=null===y,B="em";x&&(x=parseFloat(x)*(x.indexOf(B)>-1?j||u():1)),y&&(y=parseFloat(y)*(y.indexOf(B)>-1?j||u():1)),w.hasquery&&(z&&A||!(z||e>=x)||!(A||y>=e))||(f[w.media]||(f[w.media]=[]),f[w.media].push(n[w.rules]))}for(var C in o)o.hasOwnProperty(C)&&o[C]&&o[C].parentNode===r&&r.removeChild(o[C]);o.length=0;for(var D in f)if(f.hasOwnProperty(D)){var E=k.createElement("style"),F=f[D].join("\n");E.type="text/css",E.media=D,r.insertBefore(E,g.nextSibling),E.styleSheet?E.styleSheet.cssText=F:E.appendChild(k.createTextNode(F)),o.push(E)}},w=function(a,b,d){var e=a.replace(c.regex.comments,"").replace(c.regex.keyframes,"").match(c.regex.media),f=e&&e.length||0;b=b.substring(0,b.lastIndexOf("/"));var h=function(a){return a.replace(c.regex.urls,"$1"+b+"$2$3")},i=!f&&d;b.length&&(b+="/"),i&&(f=1);for(var j=0;f>j;j++){var k,l,o,p;i?(k=d,n.push(h(a))):(k=e[j].match(c.regex.findStyles)&&RegExp.$1,n.push(RegExp.$2&&h(RegExp.$2))),o=k.split(","),p=o.length;for(var q=0;p>q;q++)l=o[q],g(l)||m.push({media:l.split("(")[0].match(c.regex.only)&&RegExp.$2||"all",rules:n.length-1,hasquery:l.indexOf("(")>-1,minw:l.match(c.regex.minw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||""),maxw:l.match(c.regex.maxw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||"")})}v()},x=function(){if(d.length){var b=d.shift();f(b.href,function(c){w(c,b.href,b.media),p[b.href]=!0,a.setTimeout(function(){x()},0)})}},y=function(){for(var b=0;b