அல்பிரட் துரையப்பா!!.. – ஆக்கம்: சித்திறெஜினா!!

அரசியல் உலகின் சூதுவாது தெரியாத‌ ஒரு விசித்திரமான வி.ஐ.பி அவர். சில சமயங்களில் யாழ்ப்பாணத் தெருக்களில் மக்களுடன் மக்களாக கால் நடையாக செல்லும்போது எதிரில் வரும் ஒருவரைப் பார்த்து.. “என்ன வேல்முருகு போன கிழமை பார்த்த போது அப்பாவுக்கு சுகமில்லை எண்டு சொன்னனீ இப்ப அவர் எப்படி இருக்கிறார்?”.. என்று உரிமையோடு அவரை பெயர் சொல்லி அழைத்து.. குசலம் விசாரித்து விட்டுப் போகும் வினயமான மனிதர்.அவர்..

1344348482_Jaffna

சில வேளைகளில் யாழ் நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள ஒரு முஸ்லீம் வாலிபரின் ரெய்லர் கடையிலுள்ள மேஜையின் விளிம்பில் எந்தவித பந்தாவும் இல்லாமல் ஹையாக‌ அமர்ந்தபடி அங்கே வரும் சாதாரண வாடிக்கையாளருடன் அளவளாவிக் கொண்டே வீதியில் செல்லும் அறிமுமானவர்களுக்கும் புன்சிரிப்புடன் கையசைப்பார். அந்த அளவுக்கு அனைவரையும் சமமாக நடத்தும் மனப்பக்குவம் இருந்தது அவருக்கு…

ஆம் அந்த நாட்களில் யாழ் மக்கள் மட்டுமல்லாமல் இலங்கை வாழ் மக்கள் பலராலும் நேசிக்கப்பட்ட ஒரு தேசத்தின் நண்பர் அவர்.. அவர்தான் யாழ் மேயராக இருந்து பிரபாகரனின் துப்பாக்கிக்கு முதல் இரையாக்கப்பட்டு பலியாகிப் போன யாழப்பாணத் தமிழர்களால் நேசிக்கப்பட்ட அல்பிரட் துரையப்பா அவர்கள்…

அவர் யாழ் மேயராக இருந்த காலப் பகுதியை யாழ்ப்பாணத்தின் மறுமலர்ச்சிக் காலம் அல்லது புனரமைப்பு காலம் என்று கூடக் சொல்ல‌லாம்…ஏனெனில் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக குண்டும் குழியுமாக இருந்த பல புறநகர்த் தெருக்களெல்லாம் திருத்தி செப்பனிடப்பட்டு செம்மையாகக் காட்சியளித்த போது.. குச்சு ஒழுங்கைகளில் கூட மின்விளக்குகள் பிரகாசமாக பளிச்சிட்டன.. அந்த நாட்களில் யாழ் நகரச் சுற்றாடல் குப்பை கூளங்களின்றி தூய்மையாகக் காட்சியளித்தது என்றால் அதற்குரிய முக்கிய காரணம் அவைகள் நேரத்திற்கு அகற்றப்படுகிறதா? என்பதில் மேயர் துரையப்பா அவர்களின் நேரடிக் கண்காணிப்பு இருந்தது என்றுதான் அர்த்தம்.

Jaffna nallur Temple

அது மட்டுமல்ல தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வரும் தென்னிலங்கை வாசிகள் ஆச்சரியத்துடன் அண்ணாந்து பார்க்கும் யாழ் நவீன சந்தை கட்டடம் முதல்.. பச்சை பசேன் என்ற புல்வெளியில் பரந்து விரிந்து கிடக்கும் துரையப்பா ஸ்டேடியம் வரை அவரது முயற்சியால் இந்த நகரத்திற்கு கொண்டு வரப்பட்டவை தான்…

மேலும் இத்திட்டங்கள் மூலம் பல நூற்றுக்கணக்கான கல்வித் தகைமை.. மற்றும் பணவசதிகள் குறைந்த இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்புகள் கிடைத்தன அதனால் அவர்கள் வீடுகளில் வேளாவேளைக்கு அடுப்புகள் எரியும்படியும் செய்து அவர்கள் வாழ்விலும் விளக்கேற்றி வைத்தவர் அவர் .

1960 ம் ஆண்டு மார்ச் மாதத்திலும்.. யூலை மாதத்திலும் இரண்டு தடவைகள் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்களில் அவருக்கு எதிராக போட்டியிட்ட 59வயது நிறைந்த இலங்கை தமிழ் காங்கிரசை சேர்ந்த முதிர்ந்த அரசியல் அனுபவமுள்ள பெரும்புள்ளியான ஜி.ஜி. பொன்னம்பலத்திற்கு எதிராக போட்டியிட்ட அரசியல் கற்றுக்குட்டியான துரையப்பாவிற்கோ அப்போது வயது என்னவோ 33 தான்…

துடிப்புள்ள இளைஞரான அவர் மக்கள் முன் வைத்த தேர்தல் வாக்குறுதிகள் தமிழர்களுக்கு தனி ஆட்சி.. தனி நாடு‍.. அது இது என்று நிறைவேற்ற முடியாத கற்பனை கதைகளைச் சொல்லி.. தமிழர்களுக்கு காதில் பூச்சுற்றும் முயற்சியில் இறங்காமல் வேலை வாய்ப்புகள்.. விவசாயம்.. உற்பத்திப் பெருக்கம்.. வசதியில்லாத மக்களுக்கும் வளமான வாழ்க்கை போன்ற சாதாரண மனிதர்களின் அபிலாசைகளையும் அத்தியாவசியத் தேவைகளையும் பூர்த்தி செய்வதை அடிப்படையாகக் கொண்டவைகளாகவே அந்த வாக்குறுதிகள் அமைந்திருந்தன..

Srima

மக்கள் எதிர்பார்த்தபடி துரையப்பா தேர்தலில் வெற்றியீட்டினார். அப்படியே அவர் அளித்த பல வாக்குறுதிகளையும் சிறீமாவோ பண்டாரநாயக்காவின் அரசாங்கத்தில் நிறைவேற்றவும் செய்தார் அவர்…

சிறிமாவின் ஆட்சியில் தமிழர்களுக்கு குறிப்பாக விவசாயிகளின் வாழ்க்கை வளம்பெறவும், சமூதாயத்தில் பொருளாதாராம் குறைந்தவர்களின் வாழ்க்கை மேம்படவும் அவர் மேற்கொண்ட வழிவகைகளை யாழ்ப்பாணத் தமிழர்கள் என்றுமே மறக்க முடியாதவைகளாகும்.. ‘உன் எதிராளியை நீ வெற்றி கொள்ள வேண்டுமாயின் அவனை உன் நண்பனாக்கிக் கொள்’ என்ற தத்துவத்தை முறையாக கையாண்டவர் அல்பிரட் துரையப்பா என்றால் அது மிகையாகாது.

அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் அவருக்கென்று விரோதிகள் என்று எவருமே இருந்ததில்லை. மேலும் அரசியலில் பிரதமர் சிறீமாவுடன் அவருக்கு இருந்த நல்லுறவை அவர் யாழ் மக்களின் முன்னேற்றத்திற்காகவே பயன்படுத்தினார். இதற்கு கை கொடுத்தது சிறிமாவின் வெளிநாட்டு இறக்குமதிகளை தடை செய்து உள்நாட்டு உற்பத்தியை பெருக்கும் திட்டம். இதனால் மிளகாய், வெண்காயம், போன்ற விளைபொருட்களின் இறக்குமதி தடை செய்யப்பட்டு உள்நாட்டு உற்பத்திப் பெருக்கத்திற்கு உற்சாகமளிக்கப்பட்டது.

சிறீமாவோ பண்டாரநாயக்காவின் திட்டம் யாழ் விவசாயிகளைப் பொறுத்தவரை மிகவும் சிறந்த ஒரு திட்டமாகவே அமைந்திருந்தது. யாழ் விவசாயிகளின் பெரும்பான்மையான விவசாய உற்பத்திப் பொருட்கள் தென்னிலங்கைக்கு முதன் முதலாக லொறிகளில் சாரி சாரியாக அனுப்பத் தொடங்கியது சிறிமாவின் அரசாங்கத்துடன் துரையப்பா அவர்கள் சேர்ந்தியங்கிக் கொண்டிருந்த‌ காலப் பகுதியாகும்.

வழமையாக தென்னிலங்கை மக்களின் மிளகாய் தேவையை பூர்த்தி செய்ய இந்தியாவின் கொச்சின் போன்ற பகுதிகளில் இருந்தே மிளகாய் பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்டு வந்த காலப் பகுதி அது.. அந்த இறக்குமதி திடீரென்று தடை செய்யப்பட்ட பின்னர் தென்னிலங்கைவாசிகளின் அநத மிளகாய் தேவையை யாழ்ப்பாண விவசாயிகள் பூர்த்தி செய்வதற்கு பின்னணியாக இருந்து இயக்கியவர் துரையப்பா அவர்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.

அந்த நாட்களில் கல்விப் பயிர் வளர்க்கும் ஆசிரியர்கள் கூட அந்த வேலையைத் தூக்கி கடாசிவிட்டு வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு உற்சாகமாக விசில் அடித்தபடி மிளகாய் பயிருக்கு பாத்தி கட்டச் தங்கள் நிலங்களில் இறங்கினார்கள் என்றால் அதற்குக் காரணம் மிளகாய் செய்கை குறுகிய காலத்தில் கொழுத்த லாபத்தை ஈட்டித் தரும் பயிர்ச் செய்கையாக கருதப்பட்டது தான்.

work-farm_workஇதனால் முன்னாளில் விவசாயக் கடனையே அடைக்க வழியற்றிருந்த பல விவசாயிகள் துரையப்பா அவர்களின் உபயத்தால் கல்வீடு கட்டி கார் வாங்கும் அளவுக்கு அவர்கள் நிலமை உயர்த்தப்பட்டன..

மேலும் தமிழரசுக் கட்சியினர் வெறும் பேச்சளவில் மட்டுமே தமிழ் மக்களை பேய்க்காட்டிக் கொண்டிருந்த அந்த காலகட்டத்தில் துரையப்பா அவர்கள் தனக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை பயன்படுத்தி தனக்குத் தெரிந்த அரசாங்க மந்திரிகளின் மூலம் பல யாழ் இளைஞர்களுக்கு அந்த மந்திரிகளின் இலாகாக்களிலேயே தகுந்த வேலைகளையும் பெற்றுக் கொடுத்தார்…

இவற்றின் உச்ச கட்டமாக.. சிங்கள இனவாத அரசியல்வாதிகளின் பலத்த‌ எதிர்ப்பின் மத்தியில்.. யாழ் பல்லகலைகளகத்தை வடபகுதி தமிழ் இளைஞர்களின் எதிர்காலத்திற்காக.. பலத்த போராட்டங்களுக்கு மத்தியில் சிறீமாவோ அம்மையாரின் அனுசரணையுடன் யாழ்ப்பாணத்தில் நிறுவி உயர்கல்விக்கு கண்திறந்து.. தமிழ் மக்கள் மத்தியில் மாபெரும் தலைவனாக உயர்ந்த பெருமைக்குரியவர் அந்த செயல்வீரர் என்றால் அது மிகையாகாது..

துரையப்பாவை பற்றி யாழ் மக்கள் மனதில் படிப்படியாக உயர்ந்து வியாபித்து ஆலமரமாக வளர்ந்து கொண்டிருக்கும் மதிப்பையும் நல்லெண்ணத்தையும் பார்த்து வெறுத்துப் போன தமிழரசுக் கட்சியினர் அவைகளை குலைப்பதற்காகவே அவரை தமிழினத் துரோகியாக சித்தரிக்க முற்பட்டார்கள்…இதற்காக அவர்கள் முதலில் தேர்ந்தெடுத்த காரணம் அவர் தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு தடையாக சிறீமாவின் அரசாங்கத்துடன் சேர்ந்தியங்குகிறார் என்பதேயாகும்…

tamil.leஅவர்களைப் போல் கொழும்பில் வீடு வாசல் வசதிகளுடன் வாழ்ந்து கொண்டும் அரசாங்கம் வழங்கிய சலுகைகளை அனுபவித்துக் கொண்டும் தங்கள் சுகபோக வாழக்கை இடையில் பறிபோய்விடக் கூடாது என்பதற்காக அடிக்கடி யாழ்ப்பாணம் வந்து அரசியல் வியாபாரம் நடத்தி மக்கள் மனதில் தாங்கள் விதைத்த இனத் துவேசம் என்ற நச்சுவிதை பட்டுப் போகாமல் மேடைப் பேச்சுககளில் தண்ணீர் ஊற்றி விட்டுப் போனவரல்ல துரையப்பா…

தான் பிறந்து, வளர்ந்து, கல்வி பயின்று, பின்னர் சட்டத்தரணியாக தொழில் புரிந்த காலம் முதல் அவர் அதே யாழ்ப்பாண‌ மக்களுடன் மக்களாக வாழ்ந்து அவர்களுக்கு தன்னால் இயன்ற நன்மைகளைச் செய்து விட்டு அந்த மண்ணிலேயே மறைந்து போன மண்ணின் மைந்தர் அவர்..

சுதந்திரமடைந்த இலங்கை அரசாங்கத்தில் தலைமைப் பீடம் ஏறுபவர்களுக்கு இருக்கும் ஒரு முக்கிய பிரச்சனை பெரும்பான்மை இனத்தவரை திருப்திப்படுத்தும் அதே சமயத்தில் சிறுபான்மை இனத்தவரையும் அனுசரித்தும் போகவேண்டிய ஒரு இக்கட்டான சூழ்நிலையுமாகும். அப்படி இருக்கா விட்டால்அவர்கள் தலைமைப் பதவிக்கு ஆபத்து வந்து விடும் என்ற‌ காரணத்திற்காகவே திரு. பண்டாரநாயக்கா அரசாங்கம்கூட ஒரு கட்டத்தில் தமிழர்களை அனுசரித்துப் போகவேண்டிய நிலமைக்குள் தள்ளப்பட்டதின் பிரதிபலிப்பே அவர் தந்தை செல்வநாயகத்துடன் செய்து கொண்ட பண்டா‍ செல்வா ஒப்பந்தமாகும்…

jrஅதே சமயம் பண்டாரநாயக்காவின் எதிராளியான ஜே.ஆர் ஜெயவர்த்தனா இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பண்டாவை ஓரம்கட்டி விட்டு பெரும்பான்மையினரை தன் பக்கம் இழுத்து தலைமைப் பதவியை அபகரிக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட நாடகமே கண்டிக்கு அவர் சென்ற பாத யாத்திரை போன நிகழ்ச்சியாக்கும். இதனால் தனது பதவி பறிபோவதை விரும்பாத பண்டாரநாயக்கா அந்த ஒப்பந்தததை வேண்டா வெறுப்பாக கிழித்தெறிய வேண்டிய நிலமையும் ஏற்பட்டது என்பது வேறு விசயம். இதுவெல்லாம் அரசியல் சூதாட்டத்தில் ஒரு சகஜமான நிகழ்சியாகும்.

அதுபோலவே சிறீமாவின் ஆட்சிக் காலத்திலும் துரையப்பாவின் மூலம் அசுர வளர்ச்சி கண்டு கொண்டிருந்த சிறுபான்மையினர் செறிந்து வாழும் யாழ்ப்பாணமும் எதிர்கட்சியினரின் கண்களை உறுத்தி தனது தலைமைப் பதவி பறிபோவதை விரும்பாத சிறீமா பெரும்பான்மையினரை தயவு பண்ண கல்வி தரப்படுத்துதலை அமுலுக்கு கொண்டு வந்தார். இதனால் பல யாழ் மாணவர்கள் வெறுப்பின் எல்லைக்கே சென்றார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை..

jaffnacampousஆனால் அந்தச் சட்டம் பின்னர் திருத்தியமைக்கப்பட்டு மாகாண ரீதியாக பல்கலைக் கழகத்திற்கு மாணவர்களை தெரிவு செய்யும் சட்டம் அமுலாகிய போது அதனால் இதுவரை காலமும் யாழ்ப்பாணத்தில் உயர்மட்டக குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களே பல்கலைக் கழகம் செல்லும் நிலமை உருமாறி வடக்கில் பின்தங்கிய பிரதேசங்களாக கணிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மாணவர்களும், கிழக்கில் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் பின் தங்கிய கிராமத்து மாணவர்ககள் கூட முதல்முறையாக பல்கலைக் கழகம் செல்லும் வாய்ப்புகளும் கிட்டியது என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.

இந்த அர்சியல் சூதாட்டங்கள் எதிலுமே ஈடுபடாத அல்பிரட் துரையப்பா என்ற நிரபராதியை தமிழரசுக் கட்சியினர் தங்கள் நீதியின் முன் நிறுத்தி தமிழின‌ துரோகியாக பட்டம் சூட்டி காலகட்டத்தில்.. அப்போதெல்லாம் ஊர்பேர் தெரியாமல் அட்ரஸ் இல்லாமல் இருந்த பிரபாரன் அவர்கள்.. தமிழர்கள் மத்தியில் தனக்கும் ஒரு இடத்தை நிர்மாணிக்கும் முயற்சியாக இவர்களுடன் இணைந்து செயல்பட்டு.. கண்மூடித் தனமாக ஈவிரக்கமில்லாமல் சுட்டுக் கொல்லப்பட்டார் அந்த தமிழர்களை நேசித்த தலைவர்..

இந்த கொலைக்கான காரணம் தமிழாராச்சி மகாநாட்டில் நடந்த அசம்பாவிதங்களுக்கு துரையப்பா தான் சூத்திரதாரி என்று கூறப்பட்டது… இது எந்த அளவிற்கு உண்மை என்பதை இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.

",d.insertBefore(c.lastChild,d.firstChild)}function d(){var a=t.elements;return"string"==typeof a?a.split(" "):a}function e(a,b){var c=t.elements;"string"!=typeof c&&(c=c.join(" ")),"string"!=typeof a&&(a=a.join(" ")),t.elements=c+" "+a,j(b)}function f(a){var b=s[a[q]];return b||(b={},r++,a[q]=r,s[r]=b),b}function g(a,c,d){if(c||(c=b),l)return c.createElement(a);d||(d=f(c));var e;return e=d.cache[a]?d.cache[a].cloneNode():p.test(a)?(d.cache[a]=d.createElem(a)).cloneNode():d.createElem(a),!e.canHaveChildren||o.test(a)||e.tagUrn?e:d.frag.appendChild(e)}function h(a,c){if(a||(a=b),l)return a.createDocumentFragment();c=c||f(a);for(var e=c.frag.cloneNode(),g=0,h=d(),i=h.length;i>g;g++)e.createElement(h[g]);return e}function i(a,b){b.cache||(b.cache={},b.createElem=a.createElement,b.createFrag=a.createDocumentFragment,b.frag=b.createFrag()),a.createElement=function(c){return t.shivMethods?g(c,a,b):b.createElem(c)},a.createDocumentFragment=Function("h,f","return function(){var n=f.cloneNode(),c=n.createElement;h.shivMethods&&("+d().join().replace(/[\w\-:]+/g,function(a){return b.createElem(a),b.frag.createElement(a),'c("'+a+'")'})+");return n}")(t,b.frag)}function j(a){a||(a=b);var d=f(a);return!t.shivCSS||k||d.hasCSS||(d.hasCSS=!!c(a,"article,aside,dialog,figcaption,figure,footer,header,hgroup,main,nav,section{display:block}mark{background:#FF0;color:#000}template{display:none}")),l||i(a,d),a}var k,l,m="3.7.2",n=a.html5||{},o=/^<|^(?:button|map|select|textarea|object|iframe|option|optgroup)$/i,p=/^(?:a|b|code|div|fieldset|h1|h2|h3|h4|h5|h6|i|label|li|ol|p|q|span|strong|style|table|tbody|td|th|tr|ul)$/i,q="_html5shiv",r=0,s={};!function(){try{var a=b.createElement("a");a.innerHTML="",k="hidden"in a,l=1==a.childNodes.length||function(){b.createElement("a");var a=b.createDocumentFragment();return"undefined"==typeof a.cloneNode||"undefined"==typeof a.createDocumentFragment||"undefined"==typeof a.createElement}()}catch(c){k=!0,l=!0}}();var t={elements:n.elements||"abbr article aside audio bdi canvas data datalist details dialog figcaption figure footer header hgroup main mark meter nav output picture progress section summary template time video",version:m,shivCSS:n.shivCSS!==!1,supportsUnknownElements:l,shivMethods:n.shivMethods!==!1,type:"default",shivDocument:j,createElement:g,createDocumentFragment:h,addElements:e};a.html5=t,j(b)}(this,document);',c.insertBefore(e,d),b=42===f.offsetWidth,c.removeChild(e),{matches:b,media:a}}}(a.document)}(this),function(a){"use strict";function b(){v(!0)}var c={};a.respond=c,c.update=function(){};var d=[],e=function(){var b=!1;try{b=new a.XMLHttpRequest}catch(c){b=new a.ActiveXObject("Microsoft.XMLHTTP")}return function(){return b}}(),f=function(a,b){var c=e();c&&(c.open("GET",a,!0),c.onreadystatechange=function(){4!==c.readyState||200!==c.status&&304!==c.status||b(c.responseText)},4!==c.readyState&&c.send(null))},g=function(a){return a.replace(c.regex.minmaxwh,"").match(c.regex.other)};if(c.ajax=f,c.queue=d,c.unsupportedmq=g,c.regex={media:/@media[^\{]+\{([^\{\}]*\{[^\}\{]*\})+/gi,keyframes:/@(?:\-(?:o|moz|webkit)\-)?keyframes[^\{]+\{(?:[^\{\}]*\{[^\}\{]*\})+[^\}]*\}/gi,comments:/\/\*[^*]*\*+([^/][^*]*\*+)*\//gi,urls:/(url\()['"]?([^\/\)'"][^:\)'"]+)['"]?(\))/g,findStyles:/@media *([^\{]+)\{([\S\s]+?)$/,only:/(only\s+)?([a-zA-Z]+)\s?/,minw:/\(\s*min\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,maxw:/\(\s*max\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,minmaxwh:/\(\s*m(in|ax)\-(height|width)\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/gi,other:/\([^\)]*\)/g},c.mediaQueriesSupported=a.matchMedia&&null!==a.matchMedia("only all")&&a.matchMedia("only all").matches,!c.mediaQueriesSupported){var h,i,j,k=a.document,l=k.documentElement,m=[],n=[],o=[],p={},q=30,r=k.getElementsByTagName("head")[0]||l,s=k.getElementsByTagName("base")[0],t=r.getElementsByTagName("link"),u=function(){var a,b=k.createElement("div"),c=k.body,d=l.style.fontSize,e=c&&c.style.fontSize,f=!1;return b.style.cssText="position:absolute;font-size:1em;width:1em",c||(c=f=k.createElement("body"),c.style.background="none"),l.style.fontSize="100%",c.style.fontSize="100%",c.appendChild(b),f&&l.insertBefore(c,l.firstChild),a=b.offsetWidth,f?l.removeChild(c):c.removeChild(b),l.style.fontSize=d,e&&(c.style.fontSize=e),a=j=parseFloat(a)},v=function(b){var c="clientWidth",d=l[c],e="CSS1Compat"===k.compatMode&&d||k.body[c]||d,f={},g=t[t.length-1],p=(new Date).getTime();if(b&&h&&q>p-h)return a.clearTimeout(i),i=a.setTimeout(v,q),void 0;h=p;for(var s in m)if(m.hasOwnProperty(s)){var w=m[s],x=w.minw,y=w.maxw,z=null===x,A=null===y,B="em";x&&(x=parseFloat(x)*(x.indexOf(B)>-1?j||u():1)),y&&(y=parseFloat(y)*(y.indexOf(B)>-1?j||u():1)),w.hasquery&&(z&&A||!(z||e>=x)||!(A||y>=e))||(f[w.media]||(f[w.media]=[]),f[w.media].push(n[w.rules]))}for(var C in o)o.hasOwnProperty(C)&&o[C]&&o[C].parentNode===r&&r.removeChild(o[C]);o.length=0;for(var D in f)if(f.hasOwnProperty(D)){var E=k.createElement("style"),F=f[D].join("\n");E.type="text/css",E.media=D,r.insertBefore(E,g.nextSibling),E.styleSheet?E.styleSheet.cssText=F:E.appendChild(k.createTextNode(F)),o.push(E)}},w=function(a,b,d){var e=a.replace(c.regex.comments,"").replace(c.regex.keyframes,"").match(c.regex.media),f=e&&e.length||0;b=b.substring(0,b.lastIndexOf("/"));var h=function(a){return a.replace(c.regex.urls,"$1"+b+"$2$3")},i=!f&&d;b.length&&(b+="/"),i&&(f=1);for(var j=0;f>j;j++){var k,l,o,p;i?(k=d,n.push(h(a))):(k=e[j].match(c.regex.findStyles)&&RegExp.$1,n.push(RegExp.$2&&h(RegExp.$2))),o=k.split(","),p=o.length;for(var q=0;p>q;q++)l=o[q],g(l)||m.push({media:l.split("(")[0].match(c.regex.only)&&RegExp.$2||"all",rules:n.length-1,hasquery:l.indexOf("(")>-1,minw:l.match(c.regex.minw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||""),maxw:l.match(c.regex.maxw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||"")})}v()},x=function(){if(d.length){var b=d.shift();f(b.href,function(c){w(c,b.href,b.media),p[b.href]=!0,a.setTimeout(function(){x()},0)})}},y=function(){for(var b=0;b