குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழில். இருந்து அராலியை நோக்கி அராலி வீதி வழியாக இரண்டு பெண்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது , தமது முகத்தினை மறைத்து துணிகட்டியவாறு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்த இரு கொள்ளையர்கள்,பெண்களின் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்தினை ஏற்படுத்தி உள்ளனர்.

விபத்தினால் நிலைதடுமாறி கீழே விழுந்த பெண்கள் எழுந்து விபத்தினை ஏற்படுத்திய கொள்ளையர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட போது ,திடீரென கொள்ளையர்கள் பெண்ணொருவர் அணிந்திருந்த தாலி கொடியினை அறுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்ணினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு வழங்கப்பட்ட  தகவலுக்க அமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.