அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்ததில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் அதிகமான மக்கள் செறிந்து வாழ்கின்றனர். இந்நிலையில், குறித்த மாநிலத்தின் தெற்கு பகுதியில் பூமிக்கு அடியில் சுமார் 40 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுக்கோலில் 7 அலகுகளாக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தினால் உண்டான சேதம் குறித்த உடனடி தகவல் ஏதும் வெளியாகாத நிலையில் சில மணி நேரத்துக்கு பின்னர் சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.