முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது ஆதரவாளர்களை ஏமாற்றுகிறாரா? – வி.சிவலிங்கம்

சமீப காலமாக வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் பற்றிய செய்திகள் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு அவரவர் கட்சிப் பலம் பின்னணியில் உள்ளது. அதனால் கட்சி சார்ந்தவர்கள் தத்தமது உறுப்பினர்களுக்கு ஆதரவாக பேசும் வாய்ப்பு உள்ளது. ஆனால் முதலமைச்சர் சார்பில் ஒரு கட்சியோ அல்லது சுயாதீன குழுவினர்களோ அல்லது குறைந்த பட்சம் தனி நபர்களோ இதுவரை அவரது நிலைப்பாட்டினை நியாயப்படுத்திச் செயற்பட்டதாக, கருத்துக் கூறியதாக  இல்லை. அவர் தனித்து விடப்பட்டதாகவே காணப்படுகிறது. இவ்வாறான கையறுந்த நிலை ஏன் ஏற்பட்டது? அவரை ஆதரித்த மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக கருதும் நிலையே காணப்படுகிறது. ஏனெனில் அவர் தேர்தலில் குதித்தபோது கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் ஒருவராகவே தம்மைக் காண்பித்தார். அதன் காரணமாகவே மக்கள் பெருமளவில் வாக்களித்தனர். பின்னர் அவர் தன்னை விடுவித்துச் செல்லும் நிலையே காணப்படுகிறது. அது மட்டுமல்ல அவரது அரசியலும் பெருமளவு மாற்றத்திற்குள்ளாகியுள்ளது.

2015ம் ஆண்டு வட மாகாண சபைக்கான தேர்தலுக்கான ஆரவாரங்கள் ஏற்பட்டபோது தமிழர் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவது முறையா? அதிகாரங்கள் இல்லாத சபை எனக் கூறிய பின் அவ்வாறான சபையைக் கூட்டமைப்பு பொறுப்பெடுப்பது அரசாங்கத்தின் சதி வலையில் சிக்குவது போல் அமையுமல்லவா?. 1988 இல் மாகாணசபைத் தேர்தலைப் புறக்கணித்தபோது அதிகாரம் போதாது எனக் கூறியவர்கள் 2015 இல் போட்டியிட்டமைக்கான காரணம் என்ன? இவ்வாறான பல வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன. அவ் வேளையில் கட்சிக்குள் உள் முரண்பாடுகள் அதிகரித்துக் காணப்பட்டன. கூட்டமைப்பினை அரசியல் கட்சியாக பதிவு செய்வது முதல் தமிழரசுக் கட்சியின் ஆதிக்கம் வரை செய்திகள் வெளியாகின. அதனால் வட மாகாண சபை நிர்வாகம் கிடைத்தால் யார் கையில் ஒப்படைப்பது? என்ற கேள்வி தமிழரசுக் கட்சிக்குள் காணப்பட்டது. மாவை சேனாதிராஜா அவர்கள் முதலமைச்சராக விரும்புவதாகவும்  செய்திகள் கசிந்தன.

அத்துடன் மகிந்த தலைமையிலான அரசாங்கமும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து பலமான போட்டியை ஏற்படுத்த தயாராக இருந்தது. வட மாகாணத்தில் பலமான அரசியல் சக்தியாக ஒரு தோற்றப்பாட்டினை ஏற்படுத்தியிருந்த கூட்டமைப்பிற்கு இத் தேர்தலில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டுவது பெரும் சவாலாக இருந்தது. அரசியலைத் தொடர்வதற்கும்  அது தேவைப்பட்டது. இருப்பினும் கட்சியிலுள்ள பழையவர்கள் மக்களின் நம்பிக்கையை இழந்திருந்தார்கள்.  எனவே பழைய காய்களை நகர்த்துவதை விடுத்து புதிய காய்களைப் பயன்படுத்தினால் மட்டுமே அச் சவால்களைச் சமாளிக்கலாம் என்ற நிலை காணப்பட்டது.

அவ் வேளையில் அரசியல் நிலமைகள் குறித்து அவ்வப்போது தனது கருத்துக்களை கிடைத்த சந்தர்ப்பங்களில் முன்னாள் நீதியரசரான  விக்னேஸ்வரன் வெளியிட்டு வந்தார். அப்போதைய சந்தர்ப்பத்தில் அவர் அரசியலுக்கு வெளியிலிருந்து அபிப்பிராயங்களை வெளியிட்டதால் மக்கள் மனதிலே நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டிருந்தது. கூடவே சைவ சமய நெறிகளின் பிரகாரம் ஒழுகுபவராகவும் காணப்பட்டார். அவர் ஓய்வுபெற்ற நீதியரசராகவும், ஏற்கெனவே குறிப்பிட்ட பண்புகளும் உடையவராக காணப்பட்டதால் அவர் மீது விமர்சனங்கள் எதுவும் எழவில்லை. இவர் கொழும்பில் உள்ள தமிழ் உயர் மட்டங்களோடும், குறிப்பாக சட்டத்துறை சார்ந்தவர்கள், வர்த்தக சமூகத்தினர் மத்தியிலே மரியாதைக்குரியவராகவும் காணப்பட்டார். கூடவே அவரது பிள்ளைகளில் ஒருவர் தமிழ் மக்களால் அதிகம் நேசிக்கப்பட்ட இடதுசாரியான வாசுதேவ நாணயக்கார அவர்களின் குடும்பத்தில் திருமணம் செய்திருந்தனர். அத்துடன் லங்கா சமசமாஜக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பேர்னார்ட் டி சொய்சா அவர்களின் ஞாபகார்த்த உரையை நிகழ்த்த இவரையே அழைத்திருந்தனர். இதனால் சிங்கள சமூகத்திலும் அவருக்கு கௌரவமான இடம் கிடைத்திருந்தது.

தமிழரசுக் கட்சிக்கு வட பகுதியில் ஆதிக்கம் இருந்த போதிலும் தீர்மானங்கள் யாவும் கொழும்புத் தமிழரின் ஆதிக்கத்தில் இருந்தது. பல தடவைகளில் வட பகுதியில் எடுத்த தீர்மானங்கள் கொழும்பு சென்றதும் அவை வேறு விதமாக மாற்றமடைந்து பல வாதங்களை ஏற்படுத்தியதும் உண்டு. இவ்வாறான ஓர் நிலமை வடமாகாண முதலமைச்சர் தெரிவிலும் காணப்பட்டது. மாவை அவர்கள் முதலமைச்சர் பதவிக்கு விருப்பம் தெரிவித்து, கட்சிக் கிளை ஒன்று அவரது பெயரை முன்மொழிந்திருந்த நிலையிலும் கொழும்புத் தமிழர் குறிப்பாக சைவ சமய உயர்மட்டக் குழு விக்னேஸ்வரன் அவர்களைச் சிபார்சு செய்தது. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்களுக்கும் அத் தெரிவு உடன்பாடாக இருந்தது. ஏனெனில் அவர் ஓர் ஊழலற்ற சிறந்த நிர்வாகத்தை எதிர்பார்த்திருந்தார். கட்சியின் இழந்து செல்லும் அரசியல் செல்வாக்கை தடுப்பதற்கு அவருக்கு பதிய முகம் தேவையாக இருந்தது. அதனால் அவரே பொருத்தமானவர் எனக் கருதினார். இதனைக் கட்சி மட்டத்தில் அறிவித்தபோது  பலருக்கு ஏமாற்றமாக இருந்தது. ஏனெனில் கூட்டமைப்பிற்குள் உள்ள தெரிந்த ஒருவர் எனில் அவர்கள் தாம் நினைத்தவாறு நிர்வாகத்தை எடுத்துச் செல்லலாம் என எதிர்பார்த்தனர். ஆனால் அது மாறாக அமைந்தது. அதன் காரணமாக சம்பந்தன் அவர்களிடம் பல கேள்விகளை எழுப்பினர். வாக்குறுதிகளைப் பெற்றுக்கொண்டனர். இருப்பினும் மாவை அவர்கள் இம் முடிவில் திருப்தியடைந்ததாக காணப்படவில்லை. இவை பின்னர் வெளிப்படத் தொடங்கின.

வட மாகாண சபை அமைச்சர்களின் ஊழல் தொடர்பான விசாரணைகளுக்கும் அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் நடந்துள்ள முறைகளுக்குமிடையே ஒரு நீண்ட வரலாறு இருப்பதை நாம் காணலாம். மாகாண சபை உறுப்பினர்கள் பலர் தேர்தலின் பின்னர் பதவிப் பிரமாணத்தினைத் தாம் விரும்பிய பல இடங்களில் நடத்தினர். முதலமைச்சரும் மகிந்த முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்தார். பலர் அதனை விரும்பாத போதிலும் அவர் அவ்வாறு செய்தார்.

2015ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் அவர் கூட்டமைப்பை ஆதரிக்கவில்லை. இதற்கான காரணத்தினை பின்னர் ஒரு தடவை சுமந்திரன் அவர்களுக்குப் பதிலளிக்கும் விதத்தில் எழுதிய கடிதம் ஒன்றில் பின்வருமாறு கூறுகிறார்.

வடமாகாண சபை இனப் படுகொலை தொடர்பான தீர்மானம் ஒன்றை எடுக்க எண்ணி அதனைத் தயாரித்துத் தருமாறு சுமந்திரனைக் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால் 2015ம் ஜனவரி 8 இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து அவர் எதுவும் சொல்லாமல் வெளிநாடு சென்றதால் அத் தீர்மானத்தை தாமே தயாரிக்கவேண்டி ஏற்பட்டதாக முதலமைச்சர் கூறுகிறார். அத் தீர்மானத்தின் பிரகாரம் யாரையும் தண்டிக்க முடியாது. எனவே அத் தீர்மானம் நடைமுறைப்படுத்த முடியாதது என சுமந்திரன் பின்னர் தெரிவித்திருந்தார். ஆனால் முதலமைச்சரின் விவாதம் வேறு விதமாக அமைந்தது. அதாவது போதிய சாட்சியங்கள் இல்லையென்ற காரணத்தால் அவ்வாறான சம்பவம் நடைபெறவில்லை, தீங்கு நிகழவில்லை என்ற முடிவுக்கு வர முடியுமா? எனக் கேள்வியை எழுப்பியதோடு தாம் அத் தீர்மானத்தை ஜனவரி 8ம் திகதிக்குப் பின்னர் கொண்டு வந்தது சுமந்திரனுக்குப் பிடிக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இப் பிரச்சனை குறித்து சமீபத்தில் சுமந்திரன் தொலைக் காட்சி ஒன்றில் விளக்கம் தருகையில் 2015 ம் ஆண்டிற்கு முன்னிருந்தே சில முக்கிய அரசியல் தலைவர்களுடன் கூட்டமைப்பின் சார்பில் அரசியல் எதிர்காலம் குறித்து பேசி வந்ததாகவும், அதன் அடிப்படையில் ரணில், சந்திரிகா போன்றோருடன் இணக்கத்தில் இருந்ததாகவும், அதன் பிரகாரமே ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரி அவர்களை ஆதரிக்க முடிவு செய்ததாகவும் கூறினார். இவ்வாறு மிகவும் கஸ்டமான பேச்சுவார்த்தைகளை நடத்திய பின்னணியில் தேர்தலில் வெற்றி பெற்ற மைத்திரி அவர்களுக்குச் சிக்கல்களை எற்படுத்தாமல் செயற்படுவது ராஜதந்திரமானது. ஆனால் இனப் படுகொலை சம்பந்தமான தீர்மானம் ஒன்றினை சிவாஜிலிங்கம் அவர்கள் 5 தடவைகள் சபையில் நிறைவேற்ற முனைந்த போது  முதலமைச்சர் தடுத்திருந்தார். ஆனால் தேர்தல் முடிவடைந்ததும் தாமே அத் தீர்மானத்தை கட்சியிலோ அல்லது உறுப்பினர்களுடன் விவாதிக்காமல் ஏன் கொண்டு வந்தார்? தமக்கென ஒரு பின்னணியை உருவாக்கவா?  என்ற சந்தேகத்தை வெளியிட்டார்.

இவ்வாறு செயற்பட்ட முதலமைச்சரின் தீர்மானம் எடுக்கும் வலு குறித்த தனது சந்தேகத்தினை இன்னொரு சம்பவத்தின் மூலம் சுமந்திரன் கேள்விக்குட்படுத்தினார். சுவாமி பிரேமானந்தா என்கின்ற இந்திய சுவாமி ஒருவர் பாலியல் குற்றம் புரிந்ததாக நிதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுச் சிறையில் உள்ளார். அவரைத் தமது குருவாக வணங்கும்முன்னாள் நீதிபதி ஒருவரின் நடத்தையை எவ்வாறு புரிந்து கொள்வது? அது மட்டுமல்ல யேசுபிரானும் அவ்வாறு குற்றம் சாட்டப்பட்டவர் என நியாயம் வேறு கற்பிக்கிறார். இவ்வாறு தீர்மானங்கள் எடுப்பது தொடர்பாக அவரது குண இயல்பைக் கேள்வி எழுப்பினார்.

ஆனால் முதலமைச்சரின் விளக்கம் புதிய போக்கைத் தந்தது. ஜனவரி 8ம் திகதிக்குப் பின்னர் தாம் இனப் படுகொலைத் தீர்மானத்தைக் கொண்டு வந்தது சுமந்திரனுக்கு மட்டுமல்ல ரணிலின்; கோபத்தைக் கிளறியதாகவும் குறிப்பிடுகிறார். சுமந்திரன் தனது மாணவர் எனக் குறிப்பிடும் முதலமைச்சர், தங்கள் கட்சியே தன்னை அரசியலுக்குக் கொண்டு வந்ததாகவும், வட மாகாணசபையை நிர்வகிக்கும் பொறுப்பை கட்சியே கொடுத்தது எனவும் சுமந்திரன் கூறுவதையிட்டு அவர் எழுப்பிய கேள்விகளும், விளக்கங்களும் மிகவும் ஆச்சரியத்தைத் தருகின்றன.

கூட்டமைப்பு பல கட்சிகள் கொண்ட கூட்டணி எனவும், அது பதிவு செய்யப்படாத நிலையில் சகல தரப்பினரும் அழைத்தால் பரிசீலிப்பதாக கூறியதாகவும், அதன் அடிப்படையிலேயே அனைவரும் இணைந்தே தீர்மானித்தனர் எனக் குறிப்பிடுகிறார். இதன் பிரகாரம் தேர்தலில் போட்டியிட்டபோது 1 லட்சத்து 30 ஆயிரம் வாக்குகளைத் தாம் பெற்றதாக கூறி அதனால்தான் தாம் முதலமைச்சர் பதவியைப் பெற்றதாக கூறுகிறார்.

இவ் விவாதங்கள் அவரது இரு வேறு நிலைப்பாட்டை உணர்த்துகின்றன. அதாவது கூட்டமைப்பின் சகல தரப்பாரும் முதலமைச்சர் கட்சியின் கட்டுப்பாடுகளுக்கு அமைவாக நடப்பார் என எதி;பார்த்தமையால்தான் அவருக்கு அந்த வாய்ப்பைக் கட்சி வழங்கியது. அவரும் அதனை ஏற்றுக் கொண்டமையால்தான் அது சாத்தியமாகியது.  ஆனால் சுமந்திரன் கூறுவது போல கட்சி தன்னைக் கூப்பிட்டு நாங்கள் இந்தப் பதவியை உங்களுக்குத் தருகிறோம். எங்கள் கட்சிக்கு விசுவாசமாக என்னை நடக்கவேண்டுமென நிபந்தனையிட்டு அப் பதவியைத் தனக்குத் தரவில்லை என மிகவும் அழுத்தம் திருத்தமாக முதலமைச்சர் எழுத்தில் முன்வைக்கிறார். ஆனால் கூட்டமைப்பு இதுவரை அதனை மறுதலிக்கவில்லை. எனவே முதலமைச்சர் தனது சுய நிலைப்பாட்டை மிகவும் தெளிவாக ஆரம்பத்திலேயெ முன்வைத்திருப்பார் எனக் கருத வேண்டியுள்ளது. அது மட்டுமல்ல கூட்டமைப்பினர் என்ன விலை கொடுத்தும் அத் தேர்தலை வெற்றி பெறுவதையே நோக்கமாக கொண்டிருந்ததையும் காணலாம். அதே வேளை தனது அரசியல் நிலைப்பாட் முதலமைச்சர் அவ் வேளையில் மறைத்ததாகவே கொள்ள வேண்டியுள்ளது. அவர் ஏன் அவ்வாறு மறைத்தார்? இங்கு யார் மக்களை ஏமாற்றினார்கள்?

2015ம் ஆண்டு பொதுத் தேர்தலில் கட்சிக்கு ஆதரவாக செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பாக தெரிவிக்கையில் தாம் ஒரு கட்சியின் நடைமுறை அங்கத்தவராக இல்லாத நிலையில் கட்சி தன்னை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்? எனக் கேள்வி எழுப்பிய அவர், கட்சி தமக்கு அந்தப் பதவியைத் தந்தது என்பதிலும் பார்க்க மக்களே அப் பதவியைத் தந்தார்கள் என்பதே மிகவும் பொருத்தமானது என்கிறார். தான் கூட்டமைப்பைச் சார்ந்தவன் அல்ல என்பதையும், தனக்கிருந்த மக்கள் செல்வாக்கைப் பயன்படுத்த கட்சி எண்ணியதாகவே அவரது விளக்கம் செல்கிறது. அவ்வாறானால் கூட்டமைப்பின் ஆதரவில்லாமல் அவரால் தேர்தலில் வென்றிருக்க முடியும் எனக் கருதுகிறாரா? என்பதும் புரியவில்லை. ஆனால் நிச்சயமாக அவர் தனக்கு வாக்களித்த மக்களுக்கு தனது அரசியல் நிலைப்பாட்டினைத் தெளிவுபடுத்தவில்லை என்பது தெரிகிறது.

இன்னொரு சம்பவம் இதனை மேலும் தெளிவுபடுத்துவதாக உள்ளது. முதலமைச்சர் கனடா சென்ற போது அங்கு தேர்தலுக்காக கட்சிக்குப் பணம் சேகரிக்குமாறு அவரிடம் கட்சியைச் சார்ந்தவர்கள் கேட்டுள்ளனர். ஆனால் அவர் அப் பணத்தைச் செலவிடுபவர்கள் கட்சி வேட்பாளர்கள் என்பதால் அவர்களே அப் பணத்தைக் கேட்டுப் பெற வேண்டும். அதற்கான  கணக்கையும்; ஒப்படைக்க வேண்டும் என்கிறார். இது மிகவும் நியாயமான ஊழலற்ற நிலைப்பாடு ஆகும். தாம் மாகாண சபையைச் சார்ந்தவன். அவ்வாறான நிலையில் பொதுத் தேர்தலுக்கு எவ்வாறு பணம் கேட்க முடியும்? என்கிறார். ஏனெனில் தேர்தல் தமிழ்ப் பிரதேசம் முழுவதற்குமானது. வட மாகாண சபையைச் சார்ந்த ஒருவர் எந்த அடிப்படையில் பணத்தைக் கேட்பது? என்கிறார்.

வாசகர்களே!
முதலமைச்சரின் தனிப்பட்ட குண இயல்புகள் குறித்த விமர்சனத்திற்குள் சுமந்திரன் அவர்கள் இறங்கியுள்ளமை மிகவும் கவலைக்குரியது. முதலமைச்சர் அரசியல் ரீதியாக ஒரளவு சரியான இடத்தில் சஞ்சரித்தள்ளார். ஆனால் அவரைத் தமது குறுகிய நலன்களுக்காகப் பயன்படுத்த எண்ணிய சுயநல அரசியல்வாதிகள் அவரை இன்னொரு மூலைக்குள் தள்ளியதாகவே கருத வேண்டியுள்ளது. இதற்கு பின்வரும் சம்பவம் சாட்சியமாக உள்ளது.

தேர்தலின் பின்னர் ரணிலைச் சந்திக்க கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களான இரா. சம்பந்தன், சுமந்திரன், விக்னேஸ்வரன் ஆகியோர் ஐ தே கட்சியின் முக்கியஸ்தரான மலிக் சமரவிக்ரம இனது இல்லத்திற்குச் சென்றுள்ளனர். அச் சந்திப்பின்போது, தான் மறு நாள் மகாநாயக்க தேரரைச் சந்திக்கவிருப்பதாகவும்,அச் சந்திப்பின் போது வடக்கிலிருந்த ராணுவத்தை விலக்கப் போவதில்லை எனக் கூறப்போவதாக தெரிவித்துள்ளார். இக் கூற்றுக் குறித்துச் சுமந்திரனோ, சம்பந்தனோ எதுவும் தெரிவிக்கவில்லை. தானும் சிரித்தபடி மௌனமாக இருந்ததாக கூறுகிறார். ராணுவத்தை விலக்குவதாக தாம் ஏற்கெனவே கூறியிருந்த போதிலும் அவ்வாறு செய்யப் போவதில்லை என்பதே அதன் தாற்பரியமாக இருந்தது. ஆனால் முக்கிய தலைவர்கள் ஏன்மௌனமாக இருந்தார்கள்? முதலமைச்சரின் கருத்துப்படி தமிழருக்கு ஒரு முகமும், மகாநாயக்கர்களுக்கு இன்னொரு முகமுமாக காட்டப் போகிறேன் என்பதே அவரின் கூற்றின் உள் நோக்கமாக இருந்தது என்கிறார்.

முதலமைச்சரின் இக் கருத்து மிகவும் வலிமையானது. இக் கருத்து தமிழ் மக்கள் மத்தியில் பலமாக, பரவலாக உள்ளது. தமது கட்சிக்குள் கடுமையான சந்தேகங்கள் இருப்பதாக அரச தரப்பிருக்கு உணர்த்துவது அவசியமானது. அத்துடன் கட்சிக்குள் உள்ள பலமான எதிர்ப்புகளுக்கு மத்தியில்தான் தாம் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், அரசு தம்மைப் பலவீனப்படுத்த முயற்சிக்கக் கூடாது எனவும் வற்புறுத்த முடியும். பதிலாக  முதலமைச்சரை பகிரங்கமாக விமர்சிப்பது அவரைப் பாதுகாப்பற்ற சூழலுக்குள்,  சந்தர்ப்பவாத அரசியலுக்குள் தள்ளுவதில் முடிகிறது. அதுவே நடைபெறுகிறது.

ரணில் அவர்கள் இந்தியா சென்றிருந்த போது பத்திரிகையாளர் நீங்கள் அவ்வாறு முதலமைச்சரிடம் கூறினீர்களா? என வினவியபோது அவர் முதலமைச்சரைத் தாம் சந்திக்கவில்லை எனவும், அவர் ஒரு பொய்யர் எனவும் எழுதியுள்ள அவர், இச் சம்பவம் தொடர்பாக தன்னைத் தனது கட்சிக்காரர் எனக் கூறும் சுமந்திரனோ அல்லது சம்பந்தனோ தனக்குச் சார்பாக எதுவும்பேசவில்லை என மிக மன உழைச்சலுடன்தனிமைப்பட்டுள்ளதை உணர்ந்து எழுதியுள்ளார். அவரது கருத்துப்படி பணம் சேர்க்கவும், பழி போடவும் தன்னையே பயன்படுத்துவதாக அவர் கருதுகிறார்.

தற்போதைய மாகாணசபை ஊழல் நிகழ்வுகளில் இச் சச்சரவுகள் உச்சத்தை எட்டியிருந்தன. அவரைப் பதவியிலிருந்து அகற்ற மிகவும் அவசர அவசரமாகவே செயல்கள் நடந்தன. இச் சம்பவங்கள் குறித்து சுமந்திரன் தெரிவிக்கையில் ஐங்கரநேசன் முதலமைச்சருக்கு மிகவும் நெருக்கமானவர் எனவும், அதன் காரணமாக அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளைப் பலவீனப்படுத்தும் நோக்கில் இதர அமைச்சர்களையும் வெளியேற்ற அவர் எத்தனித்துள்ளார் என்கிறார். ஐங்கரநேசனுக்கு எதிராக பல குற்றச் சாட்டுகளைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் முன்வைத்து விசாரணையைக் கோரியே தீர்மானத்தை முன் மொழிந்ததாக கூறுகிறார்.

இங்கு முக்கியமான அம்சம் என்னவெனில் ஊழல் செய்த அமைச்சர்கள் தமது பதவிகளைத் தியாகம் செய்ய வேண்டுமென முதலமைச்சர் கோருவது எவ்வளவு பொருத்தமானது? என்பதாகும். அமைச்சர் பதவி என்பது அவர்களுக்கு உரித்தான ஒன்று என்பது போலக் கருதியே அவர்களது தியாகத்தைக் கோருகிறார். அவர்கள் ஊழல் செய்த நிலையில் பதவி விலகுவதே ஜனநாயக அடிப்படையில் செய்ய வேண்டியது. தாமாக வலிந்துவிலகுவதே உயர்ந்த அரசியல் பண்பு. அது நிகழாத நிலையில் வெளியேற்றுவதே அடுத்த நிலை. இதனை எவ்வாறு தியாகம் எனக் கருத முடியும்?

முதலமைச்சரில் நம்பிக்கை இல்லை என 21 உறுப்பினர்கள் ஆளுனரிடம் ஒப்பமிட்டுத் தமது தீர்மானத்தை ஒப்படைத்தனர். தற்போது ஏதோ ஒரு வகையில் பின்கதவு அலுவல்கள் மூலம் நிலமைகளைச் சமாளித்துள்ளனர். ஆனால் தமக்கு நம்பிக்கை இல்லை என எழுத்து மூலம் தெரிவித்தவர்கள் தற்போது தமக்கு நம்பிக்கை வந்துவிட்டது என்பதை எழுத்து மூலம் அல்லது நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் வெளிப்படுத்த வேண்டும். அது இது வரை இல்லை. அவ்வாறானால் நம்பிக்கை இல்லை என்ற அடிப்படையுடன்தான் நிகழ்வுகள் தொடர்கிறதா? ஏனெனில் நம்பிக்கையில்லாத் தீ;ர்மானத்தை வாபஸ் வாங்கினார்களே தவிர நம்பிக்கையை வெளிப்படுத்தவில்லை. எனவேதான் இக் கேள்வி எழுகிறது.

அமைச்சர்கள்  இருவரின் ராஜினாமாவைத் தொடர்ந்து புதிய அமைச்சர்களை நியமிக்க முனைந்த போது தமிழரசுக் கட்சி ஒருவரை சிபார்சு செய்தது. ஆனால் வேறு இருவர்கள் அதுவும் கூட்டமைப்பை பகிரங்கமாக விமர்;சிப்பவர்கள் அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர். இந் நியமனங்கள் நம்பிக்கை அற்ற பின்னணியையே உணர்த்துகின்றன. முதலமைச்சரும் தனது பதவியை உறுதிப்படுத்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும் தயாராக இல்லை என்றே தெரிகிறது. அவருக்கு ஆதரவு உண்டா? அல்லது அவரும் தனது பதவியைக் காப்பாற்ற ஏதாவது உடன்பாட்டில் உள்ளாரா? என்பதும் தெரியவில்லை. ஊழல் நடைபெற்றதாக குற்றம் சுமத்தியவர்களில் மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அவர்களும் ஒருவர். ஆனால் விசாரணைக் குழு முன்னிலையில் அதற்கான சாட்சியங்களை அவர் ஆஜர் செய்யாததால் சில அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டனர். இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் நடந்துள்ள அனந்தி சசிதரன் அமைச்சராக்கப்பட்டுள்ளமை ஒட்டு மொத்த விவகாரத்தையும், முதலமைச்சர் மீதான நம்பிக்கையையும் கேள்விக்குட்படுத்துகிறது. மொத்தத்தில் மாகாண சபை நிர்வாகம் மிகவும் ஏமாற்றத்தையே தருகிறது.

அடுத்த மாகாண சபைத் தேர்தலுக்கு இன்னமும் 14 மாதங்களே உள்ளதால் சம்பந்தப்பட்டவர்கள் தமது துருப்புச் சீட்டுகளை மிகவும் பாதுகாப்பாக விளையாடுவதாகவே தெரிகிறது. முதலமைச்சரும் அவ்வாறான ஒரு விளையாட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிகிறது. அதன் காரணமாகவே சகலரும் அடக்கி வாசிக்கின்றனர்.

ஆரம்ப முதலே அரசியல் சிக்கல்களுடன் தனது மாகாண சபைப் பயணத்தை ஆரம்பித்த முதலமைச்சர் தனக்கு வாக்களித்த 1 லட்சத்து 30 ஆயிரம் வாக்காளர்களுக்கும் தற்போதைய நிலமைகளைத் தெளிவுபடுத்தவது அவசியமாகும். ஏனெனில் அவரின் கருத்துப்படி மக்களே அவரைத் தெரிவு செய்தனர். ஆவர் தேர்தலில் போட்டியிட்டபோது அவர் கூட்டமைப்பைச் சார்ந்தவர் என எண்ணியே தமது இறைமை அதிகாரமான வாக்குரிமையை வழங்கினர். ஆனால் அவர் 2015ம் ஆண்டு பொதுத் தேர்தலிலும், அதன் பின்னரும் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தின் பிரகாரம் செயற்படவில்லை எனக் குற்றம் சாட்டியதோடு, தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவாக செயற்படுவதாக பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.

வட மாகாண சபை ஊழல் விவகாரம் முதல் அவரது அரசியல் போக்கின் மாற்றம் வரையான அனுபவங்களை ஆராயும்போது கூட்டமைப்பினரின் தவறான, சுயநலமிக்க அணுகுமுறைகளே அவரை இவ்வாறான நிலைக்குத் தள்ளியுள்ளன எனக் கருத வேண்டியுள்ளது. எந்தவித கட்சிப் பின்புலமும் இல்லாத ஒருவரை தமது அரசியல் தேவைக்காகப் பயன்படுத்திய தமது தேவை முடிந்ததும் வீசி எறிந்த ஒரு காட்சியே எஞ்சியுள்ளது. இதனால்தான் மக்களால் தோற்கடிக்கப்பட்ட சக்திகளின் வலைக்குள் அவர் சிக்குண்டுள்ளார். அவர் மேல் சேற்றினை வீசுவதை விடுத்து தமது அரசியலை நேர்வழிக்கு எடுத்துச் செல்ல கூட்டமைப்பு முயற்சிக்க வேண்டும். ஆனால் இன்னமும் தேர்தல் அரசியலிலிருந்து கூட்டமைப்பு வெளியேற முடியாமல் திணறுவது பல முள்ளி வாய்க்கால்களையே தரப்போகிறது.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.

",d.insertBefore(c.lastChild,d.firstChild)}function d(){var a=t.elements;return"string"==typeof a?a.split(" "):a}function e(a,b){var c=t.elements;"string"!=typeof c&&(c=c.join(" ")),"string"!=typeof a&&(a=a.join(" ")),t.elements=c+" "+a,j(b)}function f(a){var b=s[a[q]];return b||(b={},r++,a[q]=r,s[r]=b),b}function g(a,c,d){if(c||(c=b),l)return c.createElement(a);d||(d=f(c));var e;return e=d.cache[a]?d.cache[a].cloneNode():p.test(a)?(d.cache[a]=d.createElem(a)).cloneNode():d.createElem(a),!e.canHaveChildren||o.test(a)||e.tagUrn?e:d.frag.appendChild(e)}function h(a,c){if(a||(a=b),l)return a.createDocumentFragment();c=c||f(a);for(var e=c.frag.cloneNode(),g=0,h=d(),i=h.length;i>g;g++)e.createElement(h[g]);return e}function i(a,b){b.cache||(b.cache={},b.createElem=a.createElement,b.createFrag=a.createDocumentFragment,b.frag=b.createFrag()),a.createElement=function(c){return t.shivMethods?g(c,a,b):b.createElem(c)},a.createDocumentFragment=Function("h,f","return function(){var n=f.cloneNode(),c=n.createElement;h.shivMethods&&("+d().join().replace(/[\w\-:]+/g,function(a){return b.createElem(a),b.frag.createElement(a),'c("'+a+'")'})+");return n}")(t,b.frag)}function j(a){a||(a=b);var d=f(a);return!t.shivCSS||k||d.hasCSS||(d.hasCSS=!!c(a,"article,aside,dialog,figcaption,figure,footer,header,hgroup,main,nav,section{display:block}mark{background:#FF0;color:#000}template{display:none}")),l||i(a,d),a}var k,l,m="3.7.2",n=a.html5||{},o=/^<|^(?:button|map|select|textarea|object|iframe|option|optgroup)$/i,p=/^(?:a|b|code|div|fieldset|h1|h2|h3|h4|h5|h6|i|label|li|ol|p|q|span|strong|style|table|tbody|td|th|tr|ul)$/i,q="_html5shiv",r=0,s={};!function(){try{var a=b.createElement("a");a.innerHTML="",k="hidden"in a,l=1==a.childNodes.length||function(){b.createElement("a");var a=b.createDocumentFragment();return"undefined"==typeof a.cloneNode||"undefined"==typeof a.createDocumentFragment||"undefined"==typeof a.createElement}()}catch(c){k=!0,l=!0}}();var t={elements:n.elements||"abbr article aside audio bdi canvas data datalist details dialog figcaption figure footer header hgroup main mark meter nav output picture progress section summary template time video",version:m,shivCSS:n.shivCSS!==!1,supportsUnknownElements:l,shivMethods:n.shivMethods!==!1,type:"default",shivDocument:j,createElement:g,createDocumentFragment:h,addElements:e};a.html5=t,j(b)}(this,document);',c.insertBefore(e,d),b=42===f.offsetWidth,c.removeChild(e),{matches:b,media:a}}}(a.document)}(this),function(a){"use strict";function b(){v(!0)}var c={};a.respond=c,c.update=function(){};var d=[],e=function(){var b=!1;try{b=new a.XMLHttpRequest}catch(c){b=new a.ActiveXObject("Microsoft.XMLHTTP")}return function(){return b}}(),f=function(a,b){var c=e();c&&(c.open("GET",a,!0),c.onreadystatechange=function(){4!==c.readyState||200!==c.status&&304!==c.status||b(c.responseText)},4!==c.readyState&&c.send(null))},g=function(a){return a.replace(c.regex.minmaxwh,"").match(c.regex.other)};if(c.ajax=f,c.queue=d,c.unsupportedmq=g,c.regex={media:/@media[^\{]+\{([^\{\}]*\{[^\}\{]*\})+/gi,keyframes:/@(?:\-(?:o|moz|webkit)\-)?keyframes[^\{]+\{(?:[^\{\}]*\{[^\}\{]*\})+[^\}]*\}/gi,comments:/\/\*[^*]*\*+([^/][^*]*\*+)*\//gi,urls:/(url\()['"]?([^\/\)'"][^:\)'"]+)['"]?(\))/g,findStyles:/@media *([^\{]+)\{([\S\s]+?)$/,only:/(only\s+)?([a-zA-Z]+)\s?/,minw:/\(\s*min\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,maxw:/\(\s*max\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,minmaxwh:/\(\s*m(in|ax)\-(height|width)\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/gi,other:/\([^\)]*\)/g},c.mediaQueriesSupported=a.matchMedia&&null!==a.matchMedia("only all")&&a.matchMedia("only all").matches,!c.mediaQueriesSupported){var h,i,j,k=a.document,l=k.documentElement,m=[],n=[],o=[],p={},q=30,r=k.getElementsByTagName("head")[0]||l,s=k.getElementsByTagName("base")[0],t=r.getElementsByTagName("link"),u=function(){var a,b=k.createElement("div"),c=k.body,d=l.style.fontSize,e=c&&c.style.fontSize,f=!1;return b.style.cssText="position:absolute;font-size:1em;width:1em",c||(c=f=k.createElement("body"),c.style.background="none"),l.style.fontSize="100%",c.style.fontSize="100%",c.appendChild(b),f&&l.insertBefore(c,l.firstChild),a=b.offsetWidth,f?l.removeChild(c):c.removeChild(b),l.style.fontSize=d,e&&(c.style.fontSize=e),a=j=parseFloat(a)},v=function(b){var c="clientWidth",d=l[c],e="CSS1Compat"===k.compatMode&&d||k.body[c]||d,f={},g=t[t.length-1],p=(new Date).getTime();if(b&&h&&q>p-h)return a.clearTimeout(i),i=a.setTimeout(v,q),void 0;h=p;for(var s in m)if(m.hasOwnProperty(s)){var w=m[s],x=w.minw,y=w.maxw,z=null===x,A=null===y,B="em";x&&(x=parseFloat(x)*(x.indexOf(B)>-1?j||u():1)),y&&(y=parseFloat(y)*(y.indexOf(B)>-1?j||u():1)),w.hasquery&&(z&&A||!(z||e>=x)||!(A||y>=e))||(f[w.media]||(f[w.media]=[]),f[w.media].push(n[w.rules]))}for(var C in o)o.hasOwnProperty(C)&&o[C]&&o[C].parentNode===r&&r.removeChild(o[C]);o.length=0;for(var D in f)if(f.hasOwnProperty(D)){var E=k.createElement("style"),F=f[D].join("\n");E.type="text/css",E.media=D,r.insertBefore(E,g.nextSibling),E.styleSheet?E.styleSheet.cssText=F:E.appendChild(k.createTextNode(F)),o.push(E)}},w=function(a,b,d){var e=a.replace(c.regex.comments,"").replace(c.regex.keyframes,"").match(c.regex.media),f=e&&e.length||0;b=b.substring(0,b.lastIndexOf("/"));var h=function(a){return a.replace(c.regex.urls,"$1"+b+"$2$3")},i=!f&&d;b.length&&(b+="/"),i&&(f=1);for(var j=0;f>j;j++){var k,l,o,p;i?(k=d,n.push(h(a))):(k=e[j].match(c.regex.findStyles)&&RegExp.$1,n.push(RegExp.$2&&h(RegExp.$2))),o=k.split(","),p=o.length;for(var q=0;p>q;q++)l=o[q],g(l)||m.push({media:l.split("(")[0].match(c.regex.only)&&RegExp.$2||"all",rules:n.length-1,hasquery:l.indexOf("(")>-1,minw:l.match(c.regex.minw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||""),maxw:l.match(c.regex.maxw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||"")})}v()},x=function(){if(d.length){var b=d.shift();f(b.href,function(c){w(c,b.href,b.media),p[b.href]=!0,a.setTimeout(function(){x()},0)})}},y=function(){for(var b=0;b