மாறிவரும் இன்றைய அரசியல் அரங்கு – ஜான்சி

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை நோக்கிய தமிழ்த் தலைமைகளின் ஆயுத மற்றும் ஜனநாயகப் போராட்டங்களின் மீள்பார்வையுடன் சமகால அரசியல் அரங்கின்நிலை தொடர்பில் இந்த கட்டுரையில் ஆராயப்படுகிறது.

 

இன விடுதலையை வலியுறுத்தியும், தமிழ் மக்களுக்கான சமதீர்வைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலும் சிங்கள அரசுகளுடனான தமிழ் பற்றாளர்களின் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு, பல இயக்க வடிவங்களாக விரிவடைந்து, வெவ்வேறு தலைமைகளின் கீழ் எமது இளைஞர்கள் செயற்பட்ட அன்றைய காலத்தில் இயக்கங்களின் தலைவர்கள் பலராக இருந்த போதிலும், சிங்கள அரசுகளுடனான போராட்டம் அல்லது அரசுகளுடனான பேச்சுவார்த்தை என்று வருகின்ற போது அனைவரும் ஒரு இணக்கப்பட்டுடனேயே செயற்பட்டிருந்தார்கள்.

 

அதன்பின்னர் 1983ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தைத் தொடர்ந்து பெருமளவான இளைஞர், யுவதிகள் போராட்ட அமைப்புகளுடன் இணைந்து கொண்ட காலத்தில் பலமடைந்த அமைப்புகளிடையே முரண்பாடுகளும் தோற்றம் பெற்றிருந்தன. இதன் தொடர்ச்சியாக 1986ஆம் ஆண்டு பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் ரெலோ அமைப்பினர் மீது வெளிப்படையாக தாக்குதல்களை நடத்தி, சக இயக்கங்களுக்கு இடையிலான போராட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.

 

இச்செயற்பாடுகளின் உச்சமாக விடுதலைப் புலிகள், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் உள்ளிட்ட தமிழ் அமைப்புகளுக்கிடையில் முரண்பாடுகள் வலுவடைந்து, ஒருவருக்கொருவர் எதிரிகள் என்ற சூழல் தோன்றியிருந்தது. அதன் ஒரு அங்கமாக ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பைச் சேர்ந்தவர்கள் புலிகளால் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட சம்பவங்களும் காணப்படுகின்றன.

 

இவ்வாறு புலிகள் பலமடைந்து, சக இயக்கங்கள் மீதான தாக்குதல்களை நடத்திவந்ததன் விளைவாக, ரெலோ அமைப்பின் தலைவர் ஸ்ரீசபாரத்தினம் முதற்கொண்டு அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் உள்ளிட்ட பல தலைவர்கள் புலிகளால் கொன்றொழிக்கப்பட்டனர். இன விடுதலைக்காக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் திசைவழி மாறிச் சென்று கொண்டிருந்த போதிலும், சிங்கள அரசுகளுக்கு புலித்தலைமை பெரும் சவாலாக இருந்து வந்திருந்தது.

 

இதனிடையே, தென்னிலங்கை அரசாங்கங்களுடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் அதனூடாக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்கள் என்பனவும் தமிழ்த் தலைமைகளின் ஸ்திரமற்ற தன்மைகளால் வெற்றியளிக்கவில்லை. குறிப்பாக, இலங்கை – இந்திய ஒப்பந்தம், பண்டா – செல்வா ஒப்பந்தம், டட்லி – செல்வா ஒப்பந்தம் மற்றும் சந்திரிக்காவின் தீர்வுப் பொதி ஆகியவற்றின் ஊடாக தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கிய நகர்வுகளை மேற்கொள்வதில் வெற்றி கொள்ளப்படவில்லை என்பதே யதார்த்தம்.

 

இது இவ்வாறிருக்க, 2001ஆம் ஆண்டு வடக்குக் கிழக்கில் உதிரிகளாகக் காணப்பட்ட ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழரசுக் கட்சி உள்ளிட்ட அமைப்புகளை உள்ளடக்கி புலித் தலைமையால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு, தேர்தல் களத்தில் நிறுத்தப்பட்டார்கள்.

 

இதனிடையே, திசைமாறிச் சென்றுகொண்டிருந்த ஆயுதப் போராட்டத்தினால் தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியாது. ஜனநாயக வழிமுறையின் ஊடாக அதாவது, தென்னிலங்கை அரசுகளுடனான பேச்சுவார்த்தைகள், அதனூடாக எட்டப்படும் இணக்கப்பாடுகளின் ஊடாகவே எமது மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்ற நோக்கில் வடக்கில் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து ஈ.பி.டி.பி கட்சி டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் செயற்பட்டுக் கொண்டிருந்ததுடன், 1994ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் போட்டியிட்டு 09 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர். அதன்பின்னர் 1998ஆம் ஆண்டு தை மாதம் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஊர்காவற்துறை, நெடுந்தீவு, வேலணை உள்ளிட்ட 10 பிரதேச சபைகளைக் கைப்பற்றி, அவர்களால் மக்கள் சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இதன்பின்னர் 2001ஆம் இடம்பெற்ற தேர்தலைத் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்ட ரணில் – பிரபா ஒப்பந்த காலம் முதல் தமிழ் மக்களின் பிரதிநிதிகளென நாடாளுமன்றத்திற்குச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விடுதலைப் புலிகளின் கைப்பொம்மைகளாகவே செயற்பட்டு வந்த நிலையில், 2009ஆம் ஆண்டு புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் புலித் தலைமையின் அழுத்தங்களிலிருந்து விடுபட்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சுதந்திரமாகச் செயற்பட ஆரம்பித்தனர்.

 

அதாவது, தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் தேசியம், தமிழர் உரிமையென பலவாறு கோஷங்களை முன்வைத்தாலும், தமக்கான தேவைகளைப் பெற்றுக் கொள்வதில் சிங்கள அரசாங்கத்திடம் கையேந்தும் நிலையையும் ஏற்றுக்கொண்டிருந்தனர்.

 

ஆனால், ஆரம்பகாலம் தொட்டு, தென்னிலங்கை அரசாங்கத்துடன் இணக்க அரசியலை முன்னெடுப்பதன் ஊடாகவே எமது மக்களுக்கான தீர்வைப் பெற்றுத்தர முடியும் என்ற நிலைப்பாட்டில் ஈ.பி.டி.பி செயற்பட்டு வந்ததுடன், யதார்த்த வழிமுறை ஊடாகவே இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கி நகர முடியும் என்பதில் தெளிவடைந்த நிலையிலுமே அக்கட்சி செயற்பட்டு வந்துள்ளது.

அன்றைய காலகட்டத்தில் ஈ.பி.டி.பியின் வழிமுறையை தவறானதெனவும், அவர்கள் தமிழ் மக்களுக்குத் துரோகமிழைக்கிறார்கள் எனவும் கூட்டமைப்பு சாரார் மக்கள் மத்தியில் பிரசாரங்களை முன்னெடுத்து வந்த நிலையில், 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தலைமையில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவுக்கு தமது ஆதரவை வழங்கியிருந்தனர்.

 

அதன்பின்னர் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்தின் 15 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டதுடன், எழுதப்படாத, நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி, தென்னிலங்கை அரசாங்கத்துடன் தமிழ் கூட்டமைப்பினர் இணக்க அரசியலை ஆரம்பித்தனர்.

 

இது இவ்வாறிருக்க, இவர்களுக்கு வாக்களித்த தமிழ் மக்கள் தமது பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் பல்வேறு தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வீதிகளில் தமது வாழ்க்கையைக் கழிக்கும் அவலத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

 

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த மக்களின் பிரச்சினைகளை அணுகுவதற்கோ, அவர்கள் தொடர்பில் தென்னிலங்கை அரசாங்கத்துடன் காத்திரமான பேச்சுக்களை முன்னெடுப்பதற்கோ தயாராகவில்லை. மாறாக, மக்களின் மத்தியில் வருவதன் ஊடாக தமது பிரசாரங்களை மாத்திரமே முன்னெடுக்கின்றனர்.

கடந்த சில மாதங்களாக கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கான தீர்வையோ, கேப்பாப்புலவில் போராட்டத்தை முன்னெடுத்துவரும் மக்களுடைய நிலங்களையோ, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியாயமானதொரு தீர்வையோ அரசாங்கத்துடன் இணக்க அரசியல் செய்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பெற்றுக் கொடுக்க விரும்பவில்லை என்பதுடன், அவர்களால் முடியவில்லை என்றுமே கூறவேண்டும்.

இவற்றிற்கான பிரதான காரணங்களை ஆராயும் போது, தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைத்துவிட்டால், தம்மால் மக்கள் மத்தியில் நிலைத்திருக்க முடியாது என்பதுடன், தமக்கான ஆடம்பர வாழ்க்கையையும் அனுபவிக்க முடியாது என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புரிந்து கொண்டுள்ளனர்.

அத்துடன், கூட்டமைப்பிற்குள் தலைதூக்கியுள்ள உட்கட்சி முரண்பாடுகளும் மற்றுமொரு காரணமாக அமைகிறது. அதாவது, நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலுள்ள சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரின் நடவடிக்கைகளால் ஏனையவர்களுக்கிடையில் அதிருப்தி நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோன்று வடமாகாண சபை ஆளும் தரப்பிலுள்ளவர்களுக்கிடையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சக கட்சி உறுப்பினர்களுடையிலான பதவிப் போட்டி உள்ளிட்ட பல முரண்பாடுகள், பிரச்சினைகள் காணப்படும் நிலையில் மக்களின் தேவைகள், பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்த முடியாதவர்களாக இவர்கள் செயற்பட்டு வருகின்றனர்.

 

கடந்தகாலங்களில் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ்த் தேசியம் பேசியவர்கள் இன்று அரசாங்கத்துடன் இணக்க அரசியலை முன்னெடுப்பது மாத்திரமல்லாமல், அந்த இணக்க அரசியலின் ஊடாக வடக்குக் கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க முயற்சிகளையேனும் மேற்கொள்ளாமல் இருந்து வருகின்றனர்.

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதை ஏற்றுக் கொண்டு தற்போது அரசாங்கத்துடன் இவர்கள் இணக்க அரசியலை முன்னெடுத்து வருகின்றமையானது ஆரம்பகாலம் தொட்டு ஈ.பி.டி.பி கட்சி முன்னெடுத்துவரும் கொள்கையே தமிழர்களுக்கான தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் என்பதை தேசியம், தனிநாடு என்று பேசிய இவர்களாலேயே மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ள போதிலும், ஈ.பி.டி.பி தனது இணக்க அரசியலின் ஊடாக தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுத்த அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களை இவர்கள் பெற்றுக் கொடுக்காதது மக்களின் இன்றைய துரதிஷ்டமே.

 

தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையை நோக்கினால், கடந்த காலங்களில் தமிழ் மக்கள் மத்தியில் தேசியம், சமஷ்டி என்று பேசி மக்களை ஏமாற்றி வாக்குப் பெற்றவர்கள் இன்று தமது கொள்கைகளை மீண்டும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடியாதவர்களாக காணப்படுகின்றனர்.

 

ஆனால், தமிழ் மக்களின் தீர்வுக்கான வழிமுறை தென்னிலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை மூலம் எட்டப்படும் இணக்கப்பாடுகளின் ஊடாகவே பெற்றுக்கொள்ள முடியும் என்ற வழிமுறையை அன்று முதல் இன்று வரை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதுடன், அந்த வழிமுறையே சரியானதென இதர கட்சிகளும் ஏற்றுக் கொள்ளும் வகையில் செயற்பட்டுவரும் ஈ.பி.டி.பி கட்சி இன்று மக்கள் மத்தியில் மேலும் செல்வாக்கைப் பெற்று வருவதை அவதானிக்க முடிகிறது.

குறிப்பாக, கடந்த முப்பது வருடங்களாக தமிழரசுக் கட்சியின் ஆளுகையில் இருந்த யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச கூட்டுறவுச் சங்க நிர்வாகத்தின் அண்மைய தெரிவில் ஈ.பி.டி.பி சார்பில் போட்டியிட்டவர்கள் வெற்றி பெற்றுள்ளமையை சுட்டிக்காட்டலாம். இது இன்று மக்கள் மத்தியில் ஏற்பட்டு வரும் மாற்றத்தையும், தமக்கான சேவைகளை வழங்கக் கூடியவர்கள் யார் என்பதை மக்கள் அடையாளம் கண்டு வருவதையுமே எடுத்துக்காட்டுகிறது.

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஸ்திரமற்ற அரசியல் செயற்பாடுகள் மக்களிடம் அம்பலப்பட்டுவரும் இன்றையை சூழலானது, ஈ.பி.டி.பி கட்சிக்கு பெரும் வாய்ப்பாகவே அமைந்துள்ளது. இந்த வாய்ப்பு மக்களாலும், ஈ.பி.டி.பியினாலும் சரிவரப் பயன்படுத்தப்படும் பட்சத்திலேயே காலம் தமிழர்களுக்கான தீர்வை நோக்கிய சரியான பாதையில் வழிநடத்திச் செல்லும் என்பது யதார்த்தம்.

 

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.

",d.insertBefore(c.lastChild,d.firstChild)}function d(){var a=t.elements;return"string"==typeof a?a.split(" "):a}function e(a,b){var c=t.elements;"string"!=typeof c&&(c=c.join(" ")),"string"!=typeof a&&(a=a.join(" ")),t.elements=c+" "+a,j(b)}function f(a){var b=s[a[q]];return b||(b={},r++,a[q]=r,s[r]=b),b}function g(a,c,d){if(c||(c=b),l)return c.createElement(a);d||(d=f(c));var e;return e=d.cache[a]?d.cache[a].cloneNode():p.test(a)?(d.cache[a]=d.createElem(a)).cloneNode():d.createElem(a),!e.canHaveChildren||o.test(a)||e.tagUrn?e:d.frag.appendChild(e)}function h(a,c){if(a||(a=b),l)return a.createDocumentFragment();c=c||f(a);for(var e=c.frag.cloneNode(),g=0,h=d(),i=h.length;i>g;g++)e.createElement(h[g]);return e}function i(a,b){b.cache||(b.cache={},b.createElem=a.createElement,b.createFrag=a.createDocumentFragment,b.frag=b.createFrag()),a.createElement=function(c){return t.shivMethods?g(c,a,b):b.createElem(c)},a.createDocumentFragment=Function("h,f","return function(){var n=f.cloneNode(),c=n.createElement;h.shivMethods&&("+d().join().replace(/[\w\-:]+/g,function(a){return b.createElem(a),b.frag.createElement(a),'c("'+a+'")'})+");return n}")(t,b.frag)}function j(a){a||(a=b);var d=f(a);return!t.shivCSS||k||d.hasCSS||(d.hasCSS=!!c(a,"article,aside,dialog,figcaption,figure,footer,header,hgroup,main,nav,section{display:block}mark{background:#FF0;color:#000}template{display:none}")),l||i(a,d),a}var k,l,m="3.7.2",n=a.html5||{},o=/^<|^(?:button|map|select|textarea|object|iframe|option|optgroup)$/i,p=/^(?:a|b|code|div|fieldset|h1|h2|h3|h4|h5|h6|i|label|li|ol|p|q|span|strong|style|table|tbody|td|th|tr|ul)$/i,q="_html5shiv",r=0,s={};!function(){try{var a=b.createElement("a");a.innerHTML="",k="hidden"in a,l=1==a.childNodes.length||function(){b.createElement("a");var a=b.createDocumentFragment();return"undefined"==typeof a.cloneNode||"undefined"==typeof a.createDocumentFragment||"undefined"==typeof a.createElement}()}catch(c){k=!0,l=!0}}();var t={elements:n.elements||"abbr article aside audio bdi canvas data datalist details dialog figcaption figure footer header hgroup main mark meter nav output picture progress section summary template time video",version:m,shivCSS:n.shivCSS!==!1,supportsUnknownElements:l,shivMethods:n.shivMethods!==!1,type:"default",shivDocument:j,createElement:g,createDocumentFragment:h,addElements:e};a.html5=t,j(b)}(this,document);',c.insertBefore(e,d),b=42===f.offsetWidth,c.removeChild(e),{matches:b,media:a}}}(a.document)}(this),function(a){"use strict";function b(){v(!0)}var c={};a.respond=c,c.update=function(){};var d=[],e=function(){var b=!1;try{b=new a.XMLHttpRequest}catch(c){b=new a.ActiveXObject("Microsoft.XMLHTTP")}return function(){return b}}(),f=function(a,b){var c=e();c&&(c.open("GET",a,!0),c.onreadystatechange=function(){4!==c.readyState||200!==c.status&&304!==c.status||b(c.responseText)},4!==c.readyState&&c.send(null))},g=function(a){return a.replace(c.regex.minmaxwh,"").match(c.regex.other)};if(c.ajax=f,c.queue=d,c.unsupportedmq=g,c.regex={media:/@media[^\{]+\{([^\{\}]*\{[^\}\{]*\})+/gi,keyframes:/@(?:\-(?:o|moz|webkit)\-)?keyframes[^\{]+\{(?:[^\{\}]*\{[^\}\{]*\})+[^\}]*\}/gi,comments:/\/\*[^*]*\*+([^/][^*]*\*+)*\//gi,urls:/(url\()['"]?([^\/\)'"][^:\)'"]+)['"]?(\))/g,findStyles:/@media *([^\{]+)\{([\S\s]+?)$/,only:/(only\s+)?([a-zA-Z]+)\s?/,minw:/\(\s*min\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,maxw:/\(\s*max\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,minmaxwh:/\(\s*m(in|ax)\-(height|width)\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/gi,other:/\([^\)]*\)/g},c.mediaQueriesSupported=a.matchMedia&&null!==a.matchMedia("only all")&&a.matchMedia("only all").matches,!c.mediaQueriesSupported){var h,i,j,k=a.document,l=k.documentElement,m=[],n=[],o=[],p={},q=30,r=k.getElementsByTagName("head")[0]||l,s=k.getElementsByTagName("base")[0],t=r.getElementsByTagName("link"),u=function(){var a,b=k.createElement("div"),c=k.body,d=l.style.fontSize,e=c&&c.style.fontSize,f=!1;return b.style.cssText="position:absolute;font-size:1em;width:1em",c||(c=f=k.createElement("body"),c.style.background="none"),l.style.fontSize="100%",c.style.fontSize="100%",c.appendChild(b),f&&l.insertBefore(c,l.firstChild),a=b.offsetWidth,f?l.removeChild(c):c.removeChild(b),l.style.fontSize=d,e&&(c.style.fontSize=e),a=j=parseFloat(a)},v=function(b){var c="clientWidth",d=l[c],e="CSS1Compat"===k.compatMode&&d||k.body[c]||d,f={},g=t[t.length-1],p=(new Date).getTime();if(b&&h&&q>p-h)return a.clearTimeout(i),i=a.setTimeout(v,q),void 0;h=p;for(var s in m)if(m.hasOwnProperty(s)){var w=m[s],x=w.minw,y=w.maxw,z=null===x,A=null===y,B="em";x&&(x=parseFloat(x)*(x.indexOf(B)>-1?j||u():1)),y&&(y=parseFloat(y)*(y.indexOf(B)>-1?j||u():1)),w.hasquery&&(z&&A||!(z||e>=x)||!(A||y>=e))||(f[w.media]||(f[w.media]=[]),f[w.media].push(n[w.rules]))}for(var C in o)o.hasOwnProperty(C)&&o[C]&&o[C].parentNode===r&&r.removeChild(o[C]);o.length=0;for(var D in f)if(f.hasOwnProperty(D)){var E=k.createElement("style"),F=f[D].join("\n");E.type="text/css",E.media=D,r.insertBefore(E,g.nextSibling),E.styleSheet?E.styleSheet.cssText=F:E.appendChild(k.createTextNode(F)),o.push(E)}},w=function(a,b,d){var e=a.replace(c.regex.comments,"").replace(c.regex.keyframes,"").match(c.regex.media),f=e&&e.length||0;b=b.substring(0,b.lastIndexOf("/"));var h=function(a){return a.replace(c.regex.urls,"$1"+b+"$2$3")},i=!f&&d;b.length&&(b+="/"),i&&(f=1);for(var j=0;f>j;j++){var k,l,o,p;i?(k=d,n.push(h(a))):(k=e[j].match(c.regex.findStyles)&&RegExp.$1,n.push(RegExp.$2&&h(RegExp.$2))),o=k.split(","),p=o.length;for(var q=0;p>q;q++)l=o[q],g(l)||m.push({media:l.split("(")[0].match(c.regex.only)&&RegExp.$2||"all",rules:n.length-1,hasquery:l.indexOf("(")>-1,minw:l.match(c.regex.minw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||""),maxw:l.match(c.regex.maxw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||"")})}v()},x=function(){if(d.length){var b=d.shift();f(b.href,function(c){w(c,b.href,b.media),p[b.href]=!0,a.setTimeout(function(){x()},0)})}},y=function(){for(var b=0;b