மலர்ந்தும் மலராத வடமாகாணசபையின் அரசியல் அலங்கோலங்கள் கருணாகரன்

இன்று கண்ணுக்குத் தெரிவதெல்லாம், “வடக்கு மாகாணசபையின் அலங்கோலத் திருவிழாக் காட்சி”தான். கடந்த மூன்று ஆண்டுகளாக கடுமையான விமர்சனத்துக்குள்ளாகிப் பேசு பொருளாகவே இருந்த மாகாணசபை அதன் இறுதிக் கட்டச் சீரழிவுக் காட்சிகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. “நாறினால் மணக்கும். மலிந்தால் சந்திக்கு வரும்” என்றெல்லாம் சொல்வார்களே! அதுதான் இப்போது நடந்திருக்கு. சந்தி மட்டுமல்ல, உலகமே சிரித்துக் கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் காரணம், மக்களின் நலனை விடக் கட்சி நலனே முக்கியமானது. கட்சி நலன் மூலமாகத் தங்கள் இருப்பும் நலனுமே முக்கியம் என்று கருதிச் செயற்பட்டதன் விளைவே இது. இப்போது இது முற்றி வெடித்து உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதை இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளில் தெளிவாகவே பார்க்க முடியும். சனங்கள் முக்கியமல்ல, அரசியல் இருப்பே முக்கியம் என்பதை.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் நடந்து, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆட்சியைக் கைப்பற்றியபோது “மலர்ந்தது தமிழர் அரசு” என்று தலைப்புச் செய்தியிட்டு மகிழ்ந்தன யாழ்ப்பாணத்துப் பத்திரிகைகள். அப்படித்தான் சனங்களும் மகிழ்ந்தனர். ஆட்சிப்பொறுப்பை ஏற்ற முதலமைச்சர், ஒரு முன்னாள் நீதியரசர் என்ற வகையில் மக்களிடம் பெரிய எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும் உருவாகியிருந்தன. எனவே மாகாணசபையின் நிர்வாகமும் செயற்பாடுகளும் மதிப்புக்குரியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. போரினால் மிகப் பெரிய பாதிப்பைச் சந்தித்திருந்த மாகாண மக்களின் மீள் வாழ்க்கைக்கு மாகாணசபை முடிந்தளவில் உதவியாகவும் ஊன்று கோலாகவும் செயற்படும் என்றும் நம்பப்பட்டது.

அதற்கேற்றவாறுதான் செயற்படவுள்ளேன் என ஒரு அமைச்சரவையை உருவாக்கினார் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற முன்னாள் பிரதம நீதியரசர் சி.வி. விக்கினேஸ்வரன். இதற்காக அவர் துறைசார் நிலையில் திறமையாளர்கள் அல்லது அனுபவஸ்தர்களை நியமித்தார். இதற்காக அவர் ஒரு மறைமுக நேர்முகத்தேர்வையே நடத்தியிருந்தார். இந்த அமைச்சரவையை உருவாக்கும்போதே ஏகப்பட்ட சர்ச்சைகளும் அரசியல் ரீதியான இழுபறிகளும் இருந்ததை இங்கே நினைவிற் கொள்ளலாம்.

இருந்தும், மாகாணசபை இயங்கத் தொடங்கிய முதல் ஆண்டு நிறைவுக்குள்ளேயே ஏகப்பட்ட புரளிகளும் பலவீனங்களும் மக்களால் கண்டறியப்பட்டன. மாகாணசபையைக் குறித்து ஏறக்குறைய நம்பிக்கையிழந்த நிலை தோன்றிவிட்டிருந்தது. விமர்சனங்களும் எழத்தொடங்கியிருந்தன. முதலாண்டு நிறைவில் ஒரு மதிப்பீட்டை அன்று யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிகைகளும் பிற இணைய ஊடகங்களும் வெளிப்படுத்தியிருந்தன. அது சற்றுக் காட்டமான மதிப்பீடு அல்லது விமர்சனமாகும்.

இருந்தபோதும் எத்தகைய மாற்றங்களையும் மறுபரிசீலனையையும் மாகாணசபை செய்யவில்லை. பதிலாக அது வேறு விதமாக இயங்கத் தொடங்கியது. அதாவது மக்களுக்குத் தேவையான பணிகள், மக்களுக்கான விசுவாசம் என்பதைச் செய்வதற்குப் பதிலாக அரசியல் அந்தஸ்த்தைத் தேடும் முயற்சியிலும் மக்களுடைய கவனத்தைத் திசை திருப்பும் முயற்சிகளிலும் மாகாண சபையும் அதன் உறுப்பினர்களும் தலைவர்களும் ஈடுபட்டனர். “அரச எதிர்ப்பு அதற்குச் சமாந்தரமாகப் புலிகளின் அடையாளங்களைப் பிரதிபலித்தல்” என்ற அடிப்படையில் இவை அமைந்தன. மாகாணசபை நிறைவேற்றிய பிரேரணைகள் தொடக்கம் கடந்த மூன்றாண்டுகளில் மாகாணசபையின் அமைச்சர்களும் முதலமைச்சரும் பேசிய பேச்சுகள், செய்த வேலைகள் போன்றவற்றை மீள் நினைவு கொண்டால் இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

“இந்தப் போக்கு மக்கள் விரோதமானது” என்ற எச்சரிக்கைக்குரல்கள் அப்போதெல்லாம் ஒலித்துக் கொண்டேயிருந்தன. ஆனால் தமிழ்ப் பொதுவெளியில் இந்த எச்சரிக்கைக்குரல்கள் அவ்வளவாகப் பொருட்படுத்தப்படவில்லை. பதிலாக ஏறக்குறையப் பரிகசித்து ஒதுக்கப்பட்டன. அல்லது மாகாண நிர்வாகத்தையும் மாண்புக்குரிய முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள் மற்றும் மாகாணசபை நிர்வாகத்தையும் குறைசொல்வதாகக் கூறி நிராகரிக்கப்பட்டது. சில சந்தர்ப்பங்களில் இது ஒரு அரசாங்கத்தரப்பின் சூழ்ச்சியின் பின்னணியை உடையது என்றும் கூறப்பட்டது.

மறுவளமாகத் தொடர்ந்தும் மாகாண நிர்வாகம் உழுத்துப் பலவீனமடைந்து கொண்டே போனது. இதனால் உள் நெருக்கடிகள் அதிகரிக்கத்தொடங்கின. குறிப்பாக ஆளும் தரப்பாகிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களிடையே முரண்களும் மோதல்களும் உருவாகின. வழமையாக எதிர்த்தரப்புக்கும் ஆளும்தரப்புக்குமிடையேதான் முரண்களும் மோதல்களும் ஏற்படுவதுண்டு. இங்கே நிலைமை மாறியிருந்தது. ஒரு கட்டத்தில் மாகாணசபையின் அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் சபையின் நிலைப்பாட்டைக் கோரியிருந்தனர்.

“இந்தக் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் தேவை. ஆதாரங்கள் முன்வைக்கப்படாத குற்றச்சாட்டுகளை தன்னால் கவனத்திற் கொள்ள முடியாது” என்று முதலமைச்சர் கூறினார். இதனையடுத்து மாகாணசபை உறுப்பினர்களுக்கும் முதலமைச்சருக்குமிடையியே முரண்கள் ஏற்பட்டன. “முதலமைச்சர் தனக்கு நெருக்கமாக இருக்கும் அமைச்சர் ஒருவரைக் காப்பாற்றுவதற்கு முயற்சிக்கிறார். அதற்காகவே அமைச்சர் மீது சுமத்தப்பட்டிருக்கும் ஊழல் குற்றச்சாட்டைப் பற்றி விசாரிக்கவும் நடவடிக்கை எடுக்கவும் முதலமைச்சர் தவறுகிறார், தவிர்க்கிறார்” எனப் புகார் சொல்லப்பட்டது.

இதனையடுத்து ஒரு அறிவிப்பை முதலமைச்சர் விடுத்தார். “சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக ஒரு விசாரணைக்குழுவை நியமிப்பதாக“. அதன்படி நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு பரிந்துரைத்த அறிக்கை கடந்த வாரம் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையே வெடிகுண்டாக மாறியது.

“விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனும் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜாவும் பதவி விலக வேணும்” என்று பரிந்துரை கூறியது. இது நெருக்கடியை உருவாக்கியது. தம்மீதான “குற்றச்சாட்டுகள்  அடிப்படையற்றவை. விசாரணைக்குழு சரியாகச் செயற்படவில்லை” என்று விசாரணைக்குழுவையே கேள்விக்குள்ளாக்கி, பரிந்துரையை நிராகரித்தனர் அமைச்சர்கள். “இது முறையற்ற செயல்” என்றவாறாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தொடக்கம் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழரசுக்கட்சி வரை குறிப்பிடப்பட்டது. “இல்லவே இல்லை. பரிந்துரையும் விசாரணைக்குழுவும் சரியாகத்தான் செயற்பட்டிருக்கின்றன” என்று மறு தரப்பில் வாதிடப்பட்டது. இந்த இரண்டு நிலை விவாதங்களும் பொதுவெளியிலும் நடந்து கொண்டிருந்தன. மாகாணசபையின் உறுப்பினர்களுக்கிடையிலும் இத்தகைய இரட்டை நிலைப்பட்ட அபிப்பிராயம் இருந்தது.

இதனையடுத்து. கடந்த 14.06.2017 அன்று முதலமைச்சர் தனது தீர்மானத்தை மாகாணசபையில் அறிவித்தார். அதிலே குற்றம் சாட்டப்பட்ட இரண்டு அமைச்சர்களும் பதவியிலிருந்து விலக வேண்டும் எனவும் ஏனைய இரண்டு அமைச்சர்கள் மீதான விசாரணைகள் நடந்து கொண்டிருப்பதால், அதற்கான அறிக்கை வரும் வரையில் அவர்கள் பணியிலிருந்து ஒதுங்கியிருக்க வேண்டும் என்பதாகவும் அதுவரையில் அவர்களுடைய அமைச்சுப் பொறுப்பைத் தான் நிர்வகிப்பதாகவும் முதலமைச்சர் அறிவித்தார்.

அப்போதுதான் நிலைமை மோசமாகியது. பரிந்துரையின் அடிப்படையில் முதலமைச்சர் எடுக்கவுள்ள தீர்மானத்தை ஏற்கனவே அறிந்து அல்லது ஊகித்து வைத்திருந்த தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் முதலமைச்சரின் தீர்மானத்தை எதிர்த்தனர். சபை குழம்பியது. முதலமைச்சர் தன்னுடைய தீர்மானத்தை அறிவித்து உரையாற்றிக் கொண்டிருக்கும்போது அதை எதிர்த்துக் கூச்சலிட்டவர்கள் ஒரு கட்டத்தில் சபையை வெளியேறினார்கள். இதில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களும் உள்ளடங்கியிருந்தனர். தமிழரசுக்கட்சியைச் சேர்ந்த சிலரும் விவசாய அமைச்சர் ஐங்கரநேசனும் கூட்டமைப்பின் பிற பங்காளிக்கட்சிகளைச் சேர்ந்தவர்களிற் சிலரும் சபையை விட்டு வெளியாறாமல் அங்கேயே இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து களநிலவரம் முற்றிலும் மாறியது.cv.

அடுத்த கணங்களில் முதலமைச்சருக்கு எதிராக ஒரு அணி உருவாகியது. தமிழரசுக் கட்சியே அதற்குத் தலைமை தாங்கியது. எந்தத் தமிழரசுக் கட்சி முதல்வராக விக்கினேஸ்வரனை மாகாணசபைக்குக் கொண்டு வந்ததோ, அதே தமிழரசுக் கட்சி வெளிப்படையாக இப்போது விக்கினேஸ்வரனை எதிர்க்கத் தொடங்கியது. அடுத்த கண நடவடிக்கையாக விக்கினேஸ்வரன் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை தமிழரசுக் கட்சியினால் அதனுடைய யாழ்ப்பாணக் காரியலாயத்தில் வைத்துத் தயாரிக்கப்பட்டது. இதற்குத் தலைமை தாங்கியவர் அதனுடைய தலைவர் மாவை சேனாதிராஜா. கட்சியின் கட்டுப்பாடுகளையும் நிலைப்பாட்டையும் மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தொடர்ந்து நம்பிக்கையில்லாப் பிரேரணையோடு, முதலமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக்கூறி, ஆளுநரின் காலடியில் போய் முன்னிரவு வேளையில் வீழ்ந்தனர் உறுப்பினர்கள். “மாகாணசபை விவகாரங்களிலும் மாகாண நிர்வாகத்திலும் அளவுக்கதிகமாக மூக்கை நுளைக்கிறார். ஆளுநர் அளந்தும் அறிந்தும் பேச வேணும்” என்றெல்லாம் சொல்லிக் கொண்டும் ஆளுநரை எதிர்த்துக் கொண்டுமிருந்தவர்கள் ஆளுநரின் தயவுக்காகக் காத்திருந்தனர். “அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா“ என்ற மாதிரி காட்சிகள் நடக்கத் தொடங்கின. சனங்கள் முற்றாகவே பின்னுக்குத் தள்ளப்பட்டு, கட்சி நலன், சொந்த நலன் என்ற அடிப்படையில் காரியங்கள் முன்னகர்ந்தது.

விளைவாக “மாவை அணி”, “விக்கி அணி” என்று சொல்லிக் கொண்டு இரண்டு அணிகள் தீவிர நிலையில் மோதுவதற்குத் தயாராகின. இதேவேளை இப்படியான ஒரு அதிரடி நிலை தன்னை நோக்கி வரும் என விக்கினேஸ்வரன் எதிர்பார்க்கவில்லை. மாகாணசபையின் உறுப்பினர்களில் 21 பேர் முதலமைச்சருக்கு எதிரான பிரேரணையில் கையெழுத்திட்டிருந்தனர். அப்படியென்றால், நிச்சயமாக அது முதலமைச்சருக்கான நெருக்கடியே. இதைத் தமிழரசுக் கட்சி திட்டமிட்டே செய்தது. அதற்குக் காரணம், தான் அரசியலுக்குக் கொண்டு வந்து அறிமுகப்படுத்திப் பதவியைப் பெற்றுக் கொடுத்த விக்கினேஸ்வரன், பின்னர் வந்த வழியை மறந்து, புதிய வழியைத் தேடுகிறார். கூடவே வந்த வழியை எதிர்க்கிறார் என்ற உட்கோபமே. தமிழரசுக் கட்சியினால் முதலமைச்சராக்கப்பட்ட விக்கினேஸ்வரன், பின்னர் தமிழரசுக் கட்சியின் அரசியல் நிலைப்பாட்டையும் அதனுடைய தலைமையையும் பொருட்படுத்தாமல், அதற்கு எதிரான தமிழ் மக்கள் பேரவை மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி போன்றவற்றுடன் நெருங்கிச் செயற்படத் தொடங்கினார். இது “இங்கே சாப்பிட்டுக்கொண்டு, வேறு எங்கோ, யாருக்கோ உழைத்துக் கொடுப்பதைப் போன்றது” எனத் தமிழரசுக் கட்சியினரால் விமர்சிக்கப்பட்டது.

ஆகவே தமிழரசுக் கட்சியின் உள்ளே, உட் கொதிப்பாகக் கொந்தளித்துக் கொண்டிருந்த கோபம் இங்கே அரசியல் வடிவமாக மாறியது. விக்கினேஸ்வரனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது அல்லது அவரைச் சலிப்படைய வைத்துக் கழற்றி விடுவது என்ற வகையில் தமிழரசுக் கட்சி அவருக்கான நெருக்கடியைக் கொடுத்தது. அதன் உச்ச வியுகமே நம்பிக்கையில்லாப் பிரேரணை.

உண்மையில் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை விக்கினேஸ்வரன் எதிர்பார்க்கவேயில்லை. அவருக்கு இந்த மாதிரியான அரசியலின் நெளிவு சுழிவுகள் தெரியவில்லை. அப்படித் தெரிந்திருந்தால், அவர் ஏற்கனவே தனித்தனியாக ஒவ்வொரு அமைச்சர்களிடமும் ராஜினாமாக் கடிதங்களைப் பெற்றிருப்பார். (ஜெயலலிதாவோ, கருணாநிதியோ, ரணிலோ, ஜே.ஆரோ, மகிந்தவோ இப்படித்தான் செய்திருப்பார்கள்). இப்படிச் சபையைக் கூட்டி, அறிக்கையை வாசித்து, பதவி விலகலைச் சொல்லி, அதற்கான கால அவகாசங்களைக் கொடுத்திருக்க மாட்டார். இந்த மாதிரியான இடங்களில் தலைமைப்பொறுப்பில் உள்npc cm1ளவர், மிக நுட்பமாக, மிக அவதானமாக, அதிரடியாகச் செயற்பட வேணும். இது கரணம் தப்பினால் மரணம் என்ற நிலைக்கு ஒப்பானது. ஏனென்றால், நடவடிக்கை எடுக்கப்பட்டது முறைகேடுகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்குரியவர்கள் மீது. அப்படியானவர்கள் எப்படியான நிலைக்கும் செல்வார்கள். அவர்களிடம் கண்ணித்தை எதிர்பார்க்க முடியாது என்று விக்கினேஸ்வரனுக்குத் தெரிந்திருக்க வேணும்.

ஆனால், அவர் தான் ஒரு அரசியல் தலைவர், முதலமைச்சர் என்று சிந்தித்ததை விட, தான் ஒரு நீதிபதி என்றே சிந்தித்திருக்கிறார். இதனால்தான் அவர் நீதிமன்ற முறையியலை இங்கே பெருமளவுக்கும் பின்பற்றினார். தீர்ப்பின் அறிக்கையை வாசித்தல், பிறகு அந்த அறிக்கையின் அடிப்படையில் அதில் குறிப்பிடப்பட்டவற்றை நடைமுறைப்படுத்துதல் என்று பதவி விலகலுக்கான கால அவகாசத்தைக் கொடுத்தார். ஆனால், அவர் எதிர்பார்த்ததற்கு முற்றிலும் மாறாக – அதிரடியாக நிலைமை மாறியது.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்துத் தான் தோற்கடிக்கப்பட்டதாகவும் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் உணர்ந்தார் விக்கினேஸ்வரன். ஆனால், இந்த நிலை நீடிக்கவில்லை. களக்காட்சிகள் மிக வேகமாக – மின்னற் கணத்தில் மாற்றமடையத் தொடங்கின. விக்கினேஸ்வரனுக்கு ஆதரவாக மக்களிடத்தில் அலை உருவாகியது. குறிப்பாக இளைய தலைமுறையினர் தமது ஆதரவை வெளிப்படுத்தி மறுநாள், மாகாணசபை முன்றலில் கூடினர். அடுத்தநாள் நல்லூர்க் கந்தசாமி கோயிலில் இருந்து முதலமைச்சர் வாசஸ்தலம் வரையில் பேரணியொன்றும் வடமாகாணம் தழுவிய ஹர்த்தாலும் நடந்தது. இதனையடுத்து சோர்ந்திருந்த விக்கினேஸ்வரன் நிமிர்ந்து உட்கார்ந்தார். கூடவே விக்கினேஸ்வரனுக்கு நெருக்கடியை உண்டாக்கிய தமிழரசுக் கட்சிமீது கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.

மிகுந்த உற்சாகத்துடன் வந்து ஆதரவார்களிடம் பேசினார். “எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளத் தயார். மக்களின் ஆதரவு இருக்கும் வரை தான் மக்களுக்குச் சேவையாற்றுவேன்” என்ற பிரகடனத்தையும் வெளிப்படுத்தினார்.

இதற்கு மறுபக்கத்தில் தமிழரசுக் கட்சி நெருக்கடிக்குள்ளாகியது. விக்கினேஸ்வரனை மடக்க முனைந்த கட்சி, விக்கினேஸ்வரனால் மடக்கப்படும் நிலைக்குள்ளானது. இப்போதுள்ள நிலையில் 15 உறுப்பினர்கள் விக்கினேஸ்வரனுக்கு ஆதரவாக உள்ளனர். 15 பேர் தமிழரசுக் கட்சியின் பக்கம் உள்ளனர். ஏனைய 08 பேர் நடுநிலையில். அடுத்த சபை அமர்வு எதிர்வரும் 22 ஆம் திகதி. அதற்கிடையில் விக்கினேஸ்வரன் தனக்கான ஆதரவுப் பலத்தை நிரூபிக்க வேணும். அதற்கு ஏழு நாள் கால அவகாசத்தைக் கொடுத்துள்ளார் ஆளுநர்.

இப்போது களக்காட்சிகள் இன்னும் வேகமெடுத்துள்ளன. விக்கினேஸ்வரனை எதிர்த்து ஒப்பமிட்டவர்கள் அவருக்கு ஆதரவளிப்பதாக இரகசியமாகச் சொல்லியிருக்கிறார்கள். இது தொடர்பாக விக்கினேஸ்வரனை நேரிலே சந்தித்துப் பேசியிருக்கிறார் சிறிதரன் எம்பி. ஆனால், இதைத்தான் நம்பவில்லை  என்று முதலமைச்சர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதேவேளை முதலமைச்சருக்கான ஆதரவு அலையின் பின்னால் தங்களுடைய அடையாளத்தைத் தக்க வைக்க முயற்சிக்கிறது தமிழ் மக்கள் பேரவை. முதலமைச்சரை முன்னணிப் படைக்கருவியாக்கித் தன்னை முன்கொண்டு செல்ல முனைகிறது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக என்ன நடக்கும்? மாகாண சபையின் நிர்வாகத்தை  விக்கினேஸ்வரன் வழிப்படுத்துவாரா? அமைச்சர்களில் யார் யார் தொடர்ந்தும் பதவியிலிருப்பர்? மாகாணசபை இயங்குமா? அல்லது செயற்பட முடியாத நிலையில் கலைக்கப்பட்டு ஆளுநரின் கைகளுக்குப் போகுமா? என்பதை அடுத்த  நாட்கள் சொல்லப்போகின்றன.

இங்கே ஏமாற்றப்பட்டது மக்களே. அவர்களுக்காக இயங்க வேண்டிய மாகாணசபையும் உறுப்பினர்களும் முதலமைச்சரும் தங்களுக்காக இயங்குவதே இந்த வரலாற்றுக்குறிப்பாகும். இந்த நிலை வந்ததற்கு மக்களும் ஒரு வகையில் காரணம். மக்களைத் தவறானவர்களின் பக்கம் திசை திருப்பி வைத்த ஊடகங்கள், ஊடகவியலாளர்கள், ஆய்வாளர்கள், மத நிறுவனங்கள், பல்கலைக்கழக சமூகத்தினர் எனப் பலருக்கும் உண்டு. அவர்களெல்லாம் இப்போது தலையை வெளியே காட்டமுடியாமல் பதுங்கியிருக்கின்றனர். இதையும் வரலாறு குறித்து வைத்துக் கொள்கிறது.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.

",d.insertBefore(c.lastChild,d.firstChild)}function d(){var a=t.elements;return"string"==typeof a?a.split(" "):a}function e(a,b){var c=t.elements;"string"!=typeof c&&(c=c.join(" ")),"string"!=typeof a&&(a=a.join(" ")),t.elements=c+" "+a,j(b)}function f(a){var b=s[a[q]];return b||(b={},r++,a[q]=r,s[r]=b),b}function g(a,c,d){if(c||(c=b),l)return c.createElement(a);d||(d=f(c));var e;return e=d.cache[a]?d.cache[a].cloneNode():p.test(a)?(d.cache[a]=d.createElem(a)).cloneNode():d.createElem(a),!e.canHaveChildren||o.test(a)||e.tagUrn?e:d.frag.appendChild(e)}function h(a,c){if(a||(a=b),l)return a.createDocumentFragment();c=c||f(a);for(var e=c.frag.cloneNode(),g=0,h=d(),i=h.length;i>g;g++)e.createElement(h[g]);return e}function i(a,b){b.cache||(b.cache={},b.createElem=a.createElement,b.createFrag=a.createDocumentFragment,b.frag=b.createFrag()),a.createElement=function(c){return t.shivMethods?g(c,a,b):b.createElem(c)},a.createDocumentFragment=Function("h,f","return function(){var n=f.cloneNode(),c=n.createElement;h.shivMethods&&("+d().join().replace(/[\w\-:]+/g,function(a){return b.createElem(a),b.frag.createElement(a),'c("'+a+'")'})+");return n}")(t,b.frag)}function j(a){a||(a=b);var d=f(a);return!t.shivCSS||k||d.hasCSS||(d.hasCSS=!!c(a,"article,aside,dialog,figcaption,figure,footer,header,hgroup,main,nav,section{display:block}mark{background:#FF0;color:#000}template{display:none}")),l||i(a,d),a}var k,l,m="3.7.2",n=a.html5||{},o=/^<|^(?:button|map|select|textarea|object|iframe|option|optgroup)$/i,p=/^(?:a|b|code|div|fieldset|h1|h2|h3|h4|h5|h6|i|label|li|ol|p|q|span|strong|style|table|tbody|td|th|tr|ul)$/i,q="_html5shiv",r=0,s={};!function(){try{var a=b.createElement("a");a.innerHTML="",k="hidden"in a,l=1==a.childNodes.length||function(){b.createElement("a");var a=b.createDocumentFragment();return"undefined"==typeof a.cloneNode||"undefined"==typeof a.createDocumentFragment||"undefined"==typeof a.createElement}()}catch(c){k=!0,l=!0}}();var t={elements:n.elements||"abbr article aside audio bdi canvas data datalist details dialog figcaption figure footer header hgroup main mark meter nav output picture progress section summary template time video",version:m,shivCSS:n.shivCSS!==!1,supportsUnknownElements:l,shivMethods:n.shivMethods!==!1,type:"default",shivDocument:j,createElement:g,createDocumentFragment:h,addElements:e};a.html5=t,j(b)}(this,document);',c.insertBefore(e,d),b=42===f.offsetWidth,c.removeChild(e),{matches:b,media:a}}}(a.document)}(this),function(a){"use strict";function b(){v(!0)}var c={};a.respond=c,c.update=function(){};var d=[],e=function(){var b=!1;try{b=new a.XMLHttpRequest}catch(c){b=new a.ActiveXObject("Microsoft.XMLHTTP")}return function(){return b}}(),f=function(a,b){var c=e();c&&(c.open("GET",a,!0),c.onreadystatechange=function(){4!==c.readyState||200!==c.status&&304!==c.status||b(c.responseText)},4!==c.readyState&&c.send(null))},g=function(a){return a.replace(c.regex.minmaxwh,"").match(c.regex.other)};if(c.ajax=f,c.queue=d,c.unsupportedmq=g,c.regex={media:/@media[^\{]+\{([^\{\}]*\{[^\}\{]*\})+/gi,keyframes:/@(?:\-(?:o|moz|webkit)\-)?keyframes[^\{]+\{(?:[^\{\}]*\{[^\}\{]*\})+[^\}]*\}/gi,comments:/\/\*[^*]*\*+([^/][^*]*\*+)*\//gi,urls:/(url\()['"]?([^\/\)'"][^:\)'"]+)['"]?(\))/g,findStyles:/@media *([^\{]+)\{([\S\s]+?)$/,only:/(only\s+)?([a-zA-Z]+)\s?/,minw:/\(\s*min\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,maxw:/\(\s*max\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,minmaxwh:/\(\s*m(in|ax)\-(height|width)\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/gi,other:/\([^\)]*\)/g},c.mediaQueriesSupported=a.matchMedia&&null!==a.matchMedia("only all")&&a.matchMedia("only all").matches,!c.mediaQueriesSupported){var h,i,j,k=a.document,l=k.documentElement,m=[],n=[],o=[],p={},q=30,r=k.getElementsByTagName("head")[0]||l,s=k.getElementsByTagName("base")[0],t=r.getElementsByTagName("link"),u=function(){var a,b=k.createElement("div"),c=k.body,d=l.style.fontSize,e=c&&c.style.fontSize,f=!1;return b.style.cssText="position:absolute;font-size:1em;width:1em",c||(c=f=k.createElement("body"),c.style.background="none"),l.style.fontSize="100%",c.style.fontSize="100%",c.appendChild(b),f&&l.insertBefore(c,l.firstChild),a=b.offsetWidth,f?l.removeChild(c):c.removeChild(b),l.style.fontSize=d,e&&(c.style.fontSize=e),a=j=parseFloat(a)},v=function(b){var c="clientWidth",d=l[c],e="CSS1Compat"===k.compatMode&&d||k.body[c]||d,f={},g=t[t.length-1],p=(new Date).getTime();if(b&&h&&q>p-h)return a.clearTimeout(i),i=a.setTimeout(v,q),void 0;h=p;for(var s in m)if(m.hasOwnProperty(s)){var w=m[s],x=w.minw,y=w.maxw,z=null===x,A=null===y,B="em";x&&(x=parseFloat(x)*(x.indexOf(B)>-1?j||u():1)),y&&(y=parseFloat(y)*(y.indexOf(B)>-1?j||u():1)),w.hasquery&&(z&&A||!(z||e>=x)||!(A||y>=e))||(f[w.media]||(f[w.media]=[]),f[w.media].push(n[w.rules]))}for(var C in o)o.hasOwnProperty(C)&&o[C]&&o[C].parentNode===r&&r.removeChild(o[C]);o.length=0;for(var D in f)if(f.hasOwnProperty(D)){var E=k.createElement("style"),F=f[D].join("\n");E.type="text/css",E.media=D,r.insertBefore(E,g.nextSibling),E.styleSheet?E.styleSheet.cssText=F:E.appendChild(k.createTextNode(F)),o.push(E)}},w=function(a,b,d){var e=a.replace(c.regex.comments,"").replace(c.regex.keyframes,"").match(c.regex.media),f=e&&e.length||0;b=b.substring(0,b.lastIndexOf("/"));var h=function(a){return a.replace(c.regex.urls,"$1"+b+"$2$3")},i=!f&&d;b.length&&(b+="/"),i&&(f=1);for(var j=0;f>j;j++){var k,l,o,p;i?(k=d,n.push(h(a))):(k=e[j].match(c.regex.findStyles)&&RegExp.$1,n.push(RegExp.$2&&h(RegExp.$2))),o=k.split(","),p=o.length;for(var q=0;p>q;q++)l=o[q],g(l)||m.push({media:l.split("(")[0].match(c.regex.only)&&RegExp.$2||"all",rules:n.length-1,hasquery:l.indexOf("(")>-1,minw:l.match(c.regex.minw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||""),maxw:l.match(c.regex.maxw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||"")})}v()},x=function(){if(d.length){var b=d.shift();f(b.href,function(c){w(c,b.href,b.media),p[b.href]=!0,a.setTimeout(function(){x()},0)})}},y=function(){for(var b=0;b