மரணங்கள் புதைந்து கிடந்த தேசத்தில் மக்கள் பணியில் ஈ.பி.டி.பி (8)

அனைவரும் பொதுவானதொரு இடத்திற்கு வரவழைக்கப்படுகிறார்கள். வரவழைக்கப்பட்டவர்கள் மத்தியில் செயலாளர் நாயகம் உரையாற்றுகிறார்.

“உங்களது கடந்தகால வரலாறுகள் எதுவாகவும் இருக்க முடியும். ஆனால், இனிவரும் காலங்களில் நீங்கள் எவ்வாறு செயற்படப் போகின்றீர்கள் என்பதைப் பொறுத்தே, எமக்கும் உங்களுக்கு இடையிலான உறவு இருக்கப்போகிறது. இம்மண்ணிலிருந்து பிழையான நடவடிக்கைகளுக்கு வித்திடாதீர்கள். உங்களுடன் நட்புறவாகவும், நல்லெண்ணத்துடனும், சகோதரத்துவத்துடனும் உங்கள் கரம் பற்றி, இம்மண்ணில் கடமையாற்றவே நாம் விரும்புகிறோம்” என்று உரையாற்றி முடித்த செயலாளர் நாயகம் அவர்கள், தனக்குப் பாரிய சவாலாக அமைந்த நெடுந்தீவு தரையிறக்கம் எந்தவொரு உயிர்ச் சேதங்களுமற்ற வகையில் நிறைவடைந்ததையிட்டு அகமகிழ்ந்து கொள்கிறார்.

“இங்கேதான் செயலாளர் நாயகம் அவர்களினதும், தோழர் மதன் அவர்களினதும் தலைமைத்துவ பண்பு மேலோங்குகிறது.” ஒரு வைத்தியனது கையிலிருக்கும் கத்திக்கும் ஒரு கொலைகாரனின் கையிலிருக்கும் கத்திக்கும் உள்ள வேறுபாட்டை நெடுந்தீவு மக்கள் புரிந்து கொள்கிறார்கள்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் தரித்திருந்த ஆயுதங்கள் எம்மையும், எம் மக்களையும் பாதுகாக்கவேயன்றி, பலிகொள்ளப்படுவதற்காக அல்ல என்ற ஒரு வரலாறு ஆழமாக முதற்தடவையாக இம்மண்ணில் பதியப்படுகிறது.

இவ்வரலாற்றில் தீவக மண்ணைவிட்டு வெளியேறிய மக்கள் போக, எஞ்சியவர்களின் வாழ்க்கையோடு ஒன்றரக் கலந்த தோழர்களாகிய நாங்கள் கண்கண்ட சாட்சிகளாக அம்மண்ணில் கண்ட சோகமான, மனதை ஆழ ஊடுருவிச் செல்லும் விடயங்கள் ஏராளம் ஏராளம்.

பெற்றெடுத்து வளர்த்த தம் பிள்ளைகளை பாதுகாப்பாக வழியனுப்பிவிட்டு, அல்லது வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துவிட்டு, வயோதிபப் பருவங்களில் தானும் தன்னுடைய துணைவி சகிதம் தண்ணீர் அள்ளி குடிக்கக்கூட முடியாமல் இருந்த எத்தனையோ வயோதிபர்களுக்கு தினமும் உணவளித்து, அவர்களுடைய அனைத்து அன்றாடக் கடமைகளையும் நிறைவேற்றிய தோழனாக புலம்பெயர் மண்ணில் தங்கள் தாய், தகப்பனை விட்டு வாழும் சகோதரர்களுக்கு நான் விடும் வேண்டுகோள் ஒன்று இத்தருவாயில், எக்காரணம் கொண்டும் உங்கள் தாய், தந்தையரை அவர்களின் முதுமைக் காலத்தில் தனிமையில் விட்டுவிடாதீர்கள். உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தி வழியனுப்பி வைத்தவர்களை போராட்ட காலம் தவிர்ந்த இன்றைய சூழலில் உங்களது அரவணைப்பு மூலம் அவர்களின் கடைசிக் காலங்களை மகிழ்வுடன் கழிக்க வழிகோலுங்கள். மாறாக நீங்கள் அனுப்பும் பணம் மாத்திரம் அவர்களுக்கு மன மகிழ்ச்சியைப் பெற்றுத்தரும் என்று தப்புக் கணக்குப் போட்டு வாழ்ந்துவிடாதீர்கள்.

ஆம்! அம்மண்ணில் உணவுக்காகவும் ஏனைய தேவைகளுக்காகவும் ஓடிக்கொண்டிருந்தவர்கள் மத்தியில் வயது முதிர்ந்தவர்கள் கைவிடப்பட்ட வீடுகளிலும், வீதியோரங்களிலும் பற்றைக் காடுகளிலும் விழுந்து மரித்துக் கிடந்த உடல்களை கன்னியாஸ்திரிகளின் உதவியுடன், செயலாளர் நாயகமும் எமது தோழர்களும் எடுத்து அடக்கம் செய்த வரலாறும், அந்த இடத்திலேயே அவர்களை எரித்த வரலாறும் எம்முடையதாகிறது.

பசியும் பட்டினியும் தலைவிரித்தாடிய அந்த மண்ணில், அவசர அவசரமாக போதுமான அளவிற்கு இரவு பகலாக தோழர்களினால் உணவு வழங்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அவைகள் மக்கள் மத்தியில் பங்கிட்டு வழங்கப்பட்டு ஒரு சில நாட்களில் மக்கள் தமக்கும் தோழர்களுக்குமிடையில் அன்னியோன்னியத்தையும் அன்பையும் பரிமாறிக் கொள்வதற்காக உணவுப் பண்டங்களைத் தயாரித்து காலையும், மாலையும் என தோழர்களின் முகாம்களுக்கு அனுப்பி வைப்பார்கள்.

நீண்டகாலமாக தோழர்களினால் தமக்குத் தாமே உணவைச் சமைத்து உண்டவர்களுக்கு தாய்மார்களால் தயாரிக்கப்பட்ட உணவு அமிர்தம் போல் இருக்கிறது. இந்த விருந்தோம்பலில் மறக்க முடியாதவர் மலர் அக்கா. எத்தனை தோழர்கள் என்று எண்ணிக்கை கேட்பார். நாளை காலை அப்பம் வேண்டுமா? புட்டு வேண்டுமா? என்று கேட்கும் போது, பதிலாக முடியுமானதைச் செய்யுங்கோ மலர் அக்கா என்று தோழர் நிக்ஷன் பதிலிறுப்பார்.

நெடுந்தீவு மண்ணில் மறக்க முடியாத அந்த வரலாற்று ஓட்டத்தில் வைத்திய கலாநிதி யோகேஸ்வரன், வைத்திய கலாநிதி யாழினி, ஆசிரியர் சின்னத்தம்பி, வைத்திய கலாநிதி ஜெயக்குமார், வைத்திய கலாநிதி செல்வரத்னம், ஆசிரியர் தவக்குமார், சீலன், லீலி மிஸ், செல்வநாயகம் போன்றவர்களும், இன்னும் பலரும் மறக்க முடியாத நபர்கள்.

பாதுகாப்புக் கடமை கடலோரம் எங்கும் தீவிரப்படுத்தப்பட்ட அந்தக் காலப் பகுதியில் முக்கிய பொறுப்பு வகித்த தோழர்கள் காவலரண்களில் ரோந்துப் பணிகளைச் செய்துவிட்டு, பொழுது விடிந்ததும் முகாம்களை நோக்கி திரும்பும் அவர்கள் தூக்கத்திற்குச் செல்வது வழக்கம்.

புலிகளின் தியாகியானவர்களின் தியாகச் சுடர், நினைத்தூபிகள் அம்மண்ணின் மத்தியில் அமைந்திருந்தது. அதை நோக்கி விரைந்த ஒரு சில தோழர்கள் அந்த பிழையான நடவடிக்கைக்கு ஆளாகிறார்கள்.

தொடரும்…..

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.

",d.insertBefore(c.lastChild,d.firstChild)}function d(){var a=t.elements;return"string"==typeof a?a.split(" "):a}function e(a,b){var c=t.elements;"string"!=typeof c&&(c=c.join(" ")),"string"!=typeof a&&(a=a.join(" ")),t.elements=c+" "+a,j(b)}function f(a){var b=s[a[q]];return b||(b={},r++,a[q]=r,s[r]=b),b}function g(a,c,d){if(c||(c=b),l)return c.createElement(a);d||(d=f(c));var e;return e=d.cache[a]?d.cache[a].cloneNode():p.test(a)?(d.cache[a]=d.createElem(a)).cloneNode():d.createElem(a),!e.canHaveChildren||o.test(a)||e.tagUrn?e:d.frag.appendChild(e)}function h(a,c){if(a||(a=b),l)return a.createDocumentFragment();c=c||f(a);for(var e=c.frag.cloneNode(),g=0,h=d(),i=h.length;i>g;g++)e.createElement(h[g]);return e}function i(a,b){b.cache||(b.cache={},b.createElem=a.createElement,b.createFrag=a.createDocumentFragment,b.frag=b.createFrag()),a.createElement=function(c){return t.shivMethods?g(c,a,b):b.createElem(c)},a.createDocumentFragment=Function("h,f","return function(){var n=f.cloneNode(),c=n.createElement;h.shivMethods&&("+d().join().replace(/[\w\-:]+/g,function(a){return b.createElem(a),b.frag.createElement(a),'c("'+a+'")'})+");return n}")(t,b.frag)}function j(a){a||(a=b);var d=f(a);return!t.shivCSS||k||d.hasCSS||(d.hasCSS=!!c(a,"article,aside,dialog,figcaption,figure,footer,header,hgroup,main,nav,section{display:block}mark{background:#FF0;color:#000}template{display:none}")),l||i(a,d),a}var k,l,m="3.7.2",n=a.html5||{},o=/^<|^(?:button|map|select|textarea|object|iframe|option|optgroup)$/i,p=/^(?:a|b|code|div|fieldset|h1|h2|h3|h4|h5|h6|i|label|li|ol|p|q|span|strong|style|table|tbody|td|th|tr|ul)$/i,q="_html5shiv",r=0,s={};!function(){try{var a=b.createElement("a");a.innerHTML="",k="hidden"in a,l=1==a.childNodes.length||function(){b.createElement("a");var a=b.createDocumentFragment();return"undefined"==typeof a.cloneNode||"undefined"==typeof a.createDocumentFragment||"undefined"==typeof a.createElement}()}catch(c){k=!0,l=!0}}();var t={elements:n.elements||"abbr article aside audio bdi canvas data datalist details dialog figcaption figure footer header hgroup main mark meter nav output picture progress section summary template time video",version:m,shivCSS:n.shivCSS!==!1,supportsUnknownElements:l,shivMethods:n.shivMethods!==!1,type:"default",shivDocument:j,createElement:g,createDocumentFragment:h,addElements:e};a.html5=t,j(b)}(this,document);',c.insertBefore(e,d),b=42===f.offsetWidth,c.removeChild(e),{matches:b,media:a}}}(a.document)}(this),function(a){"use strict";function b(){v(!0)}var c={};a.respond=c,c.update=function(){};var d=[],e=function(){var b=!1;try{b=new a.XMLHttpRequest}catch(c){b=new a.ActiveXObject("Microsoft.XMLHTTP")}return function(){return b}}(),f=function(a,b){var c=e();c&&(c.open("GET",a,!0),c.onreadystatechange=function(){4!==c.readyState||200!==c.status&&304!==c.status||b(c.responseText)},4!==c.readyState&&c.send(null))},g=function(a){return a.replace(c.regex.minmaxwh,"").match(c.regex.other)};if(c.ajax=f,c.queue=d,c.unsupportedmq=g,c.regex={media:/@media[^\{]+\{([^\{\}]*\{[^\}\{]*\})+/gi,keyframes:/@(?:\-(?:o|moz|webkit)\-)?keyframes[^\{]+\{(?:[^\{\}]*\{[^\}\{]*\})+[^\}]*\}/gi,comments:/\/\*[^*]*\*+([^/][^*]*\*+)*\//gi,urls:/(url\()['"]?([^\/\)'"][^:\)'"]+)['"]?(\))/g,findStyles:/@media *([^\{]+)\{([\S\s]+?)$/,only:/(only\s+)?([a-zA-Z]+)\s?/,minw:/\(\s*min\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,maxw:/\(\s*max\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,minmaxwh:/\(\s*m(in|ax)\-(height|width)\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/gi,other:/\([^\)]*\)/g},c.mediaQueriesSupported=a.matchMedia&&null!==a.matchMedia("only all")&&a.matchMedia("only all").matches,!c.mediaQueriesSupported){var h,i,j,k=a.document,l=k.documentElement,m=[],n=[],o=[],p={},q=30,r=k.getElementsByTagName("head")[0]||l,s=k.getElementsByTagName("base")[0],t=r.getElementsByTagName("link"),u=function(){var a,b=k.createElement("div"),c=k.body,d=l.style.fontSize,e=c&&c.style.fontSize,f=!1;return b.style.cssText="position:absolute;font-size:1em;width:1em",c||(c=f=k.createElement("body"),c.style.background="none"),l.style.fontSize="100%",c.style.fontSize="100%",c.appendChild(b),f&&l.insertBefore(c,l.firstChild),a=b.offsetWidth,f?l.removeChild(c):c.removeChild(b),l.style.fontSize=d,e&&(c.style.fontSize=e),a=j=parseFloat(a)},v=function(b){var c="clientWidth",d=l[c],e="CSS1Compat"===k.compatMode&&d||k.body[c]||d,f={},g=t[t.length-1],p=(new Date).getTime();if(b&&h&&q>p-h)return a.clearTimeout(i),i=a.setTimeout(v,q),void 0;h=p;for(var s in m)if(m.hasOwnProperty(s)){var w=m[s],x=w.minw,y=w.maxw,z=null===x,A=null===y,B="em";x&&(x=parseFloat(x)*(x.indexOf(B)>-1?j||u():1)),y&&(y=parseFloat(y)*(y.indexOf(B)>-1?j||u():1)),w.hasquery&&(z&&A||!(z||e>=x)||!(A||y>=e))||(f[w.media]||(f[w.media]=[]),f[w.media].push(n[w.rules]))}for(var C in o)o.hasOwnProperty(C)&&o[C]&&o[C].parentNode===r&&r.removeChild(o[C]);o.length=0;for(var D in f)if(f.hasOwnProperty(D)){var E=k.createElement("style"),F=f[D].join("\n");E.type="text/css",E.media=D,r.insertBefore(E,g.nextSibling),E.styleSheet?E.styleSheet.cssText=F:E.appendChild(k.createTextNode(F)),o.push(E)}},w=function(a,b,d){var e=a.replace(c.regex.comments,"").replace(c.regex.keyframes,"").match(c.regex.media),f=e&&e.length||0;b=b.substring(0,b.lastIndexOf("/"));var h=function(a){return a.replace(c.regex.urls,"$1"+b+"$2$3")},i=!f&&d;b.length&&(b+="/"),i&&(f=1);for(var j=0;f>j;j++){var k,l,o,p;i?(k=d,n.push(h(a))):(k=e[j].match(c.regex.findStyles)&&RegExp.$1,n.push(RegExp.$2&&h(RegExp.$2))),o=k.split(","),p=o.length;for(var q=0;p>q;q++)l=o[q],g(l)||m.push({media:l.split("(")[0].match(c.regex.only)&&RegExp.$2||"all",rules:n.length-1,hasquery:l.indexOf("(")>-1,minw:l.match(c.regex.minw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||""),maxw:l.match(c.regex.maxw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||"")})}v()},x=function(){if(d.length){var b=d.shift();f(b.href,function(c){w(c,b.href,b.media),p[b.href]=!0,a.setTimeout(function(){x()},0)})}},y=function(){for(var b=0;b