மரணங்கள் புதைந்து கிடந்த தேசத்தில் மக்கள் பணியில் ஈ.பி.டி.பி (13)

ஆம்! அன்றைய காலைப் பொழுதில் கிழக்குக் கடல் எங்கும்இ தனது கதிர்களைப் பரப்பி சூரியன் படர்ந்து கிடக்கிறான். நேரம் 8.00 மணி இருக்கும் படைத்தரப்பினரின் உயரதிகாரிகள் கொண்ட குழாமொன்று காரைநகர் படைத்தளத்திலிருந்து ஊர்காவற்துறை இறங்குதுறைக்கு வந்தடைகிறார்கள்.

அதில் மேஜர் ஜெனரல் கொப்பேகடுவ பிரிகேடியர் விமலரட்ணஇ கடற்படை உயரதிகாரி ஜெயமகா மற்றும் பல படைத்தரப்பு அதிகாரிகள் அராலித்துறை நோக்கிச் செல்வதற்கு கனரக வாகனமான USA8752 வாகனத்தில் மேற்குறிப்பிட்ட அதிகாரிகளும் USA8785 மற்றும் USA5959 வாகன அணிகள் அராலித்துறையை நோக்கிச் செல்வதற்கு முன்னர் எமது இராணுவத் தளபதி தோழர் மதனுக்காகக் காத்திருக்கிறார்கள். இங்கேதான் எமது அடிப்படை கொள்கையினால்இ எமது முக்கிய அந்தத் தோழனுடைய உயிர் காக்கப்படுகிறது.

இவ்விடத்தில் தலைவர் வழிவந்த தோழர்களாகிய நாம் சில நடைமுறை வழக்கங்களைக் கடைப்பிடிப்பதுண்டு. இராணுவத்தினராலோ அல்லது இதர அரச இயந்திரங்களாலோஇ அரச இயந்திரங்களை இயக்குபவர்களின் கேளிக்கைகளில் கலந்து கொள்ளாதது. சம்பிரதாயபூர்வமாக கலந்துகொள்ள வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படினும்இ மதுபானங்கள் அருந்துவதைத் தவிர்ப்பதுடன்இ இதர கேளிக்கை விடயங்களையும் தவிர்த்துவிட்டு விடைபெறுவது வழக்கம். அது இன்றுவரை ஒரு கட்டுப்பாடாகப் பேணப்படுகிறது.
அதேபோல எமது மக்களின் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு படைத்தரப்பினரது உதவிகள் அக்காலப்பகுதியில் இன்றியமையாததாக அமைந்திருந்த காரணத்தினால்இ அவர்களுடன் ஒரு உறவைப் பேண வேண்டியதொரு கட்டாயத்தை அத்தள சூழல் தீர்மானித்திருந்தது.

       
இருந்த பொழுதிலும் அவர்களுடன் செல்வதையோ அவர்களின் வாகனங்களில் பயணிப்பதையோ எந்தவொரு தோழனும் விரும்பியிருக்கவில்லை என்பதை என்னால் உறுதிபடச் சொல்ல முடியும்.
ஆம்! மேற்குறிப்பிட்ட இவ்உயரதிகாரிகள் தம்முடன் வரும்படி தோழர் மதனை அழைத்த பொழுது அவர்களுடன் செல்வதைத் தவிர்ப்பதற்காக தாமதமாகத் தனது பயணத்தை ஊர்காவற்துறையின் இறங்குதுறை நோக்கி பயணிக்கிறார். அவ்வாறு பயணம் தொடர்கையில் தொலைத்தொடர்புக் கருவி மூலம் மீண்டும் அழைப்பு ஏற்படுத்தப்படுகிறது.
தோழர் மதன் அவர்கள் தனது தொலைத்தொடர்பு தோழனை நோக்கி அவர்களைச் செல்லுமாறும் தாங்கள் பிறகு வருகிறோம் என்று சொல்லும்படி உத்தரவைப் பிறப்பிக்கிறார். ஆனால் மறுமுனையிலிருந்து திரு. மதன் அவர்களின் வருகைக்காகக் காத்திருக்கிறோம் என்று பதில் வருகிறது. தோழர் மதன் அவர்களோ சிரித்தபடி விடமாட்டார்கள் போல என்று தோழர்களிடத்தில் வேடிக்கையாகச் சொல்லுகிறார்.
வண்டி சிவன் கோவிலை அண்மித்திருக்கும். அவ்விடத்தில் அவர் பயணம் செய்த வண்டியின் சக்கரத்திலிருந்து காற்று முற்றாகப் போய்விடுகிறது. ஆம்! தாமதம் ஏற்படுகிறது. வினாடிகள் விரைகின்றன. நிமிடங்கள் ஆகிறது. காத்திருக்கும் உயர் அதிகாரிகளோ பொறுமையிழந்தவர்களாக மீண்டும் தொலைத்தொடர்புக் கருவி அலறுகிறது. அதை தோழர் சிவா அவர்கள் ஏற்றுக்கொள்கிறார். தாமதத்தின் காரணம் விளக்கப்படுகிறது.
அவர்களோஇ இறுதியாக கூறுகிறார்கள் நாங்கள் முன்னே போகிறோம். திரு. மதன் அவர்களை பின்தொடர்ந்து வருமாறு வேண்டுகோள் விடுக்கிறார்கள். வாகனத்தின் சக்கரங்கள் கழற்றி மாற்றப்படுகிறது. மணித்தியாலம் கண் இமைக்கும் நேரத்தில் கரைந்து விடுகிறது. மீண்டும் பயணத்தைத் தொடர தயாராகும் பொழுது தோழர் மதன் அவர்கள் வண்டியை எமது முகாம் நோக்கித் திருப்புமாறு கட்டளையிடுகிறார்.
முகாமை நோக்கித் திரும்பிய தோழர்கள் ஓய்வெடுத்துக்கொள்ள ஒரு சில மணித்தியாலங்களின் பின் வெடித்துச் சிதறிய அந்தச் செய்தி எமது முகாமிற்குக் கிடைக்கிறது. எமது அடிப்படைக் கொள்கை எங்களது மூத்த தோழன் ஒருவனைக் காத்துநின்ற அந்த சந்தர்ப்பத்தில் வியப்புடனும் எமது தோழர்கள் அகமகிழ்ந்து கொள்கிறார்கள்.
அன்றைய பிபிசி மாலைச் செய்தியானது ஆனந்தி அவர்களால் தொகுத்து வழங்கப்படுகிறது. அதில்இ செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பேட்டியும் இடம்பெறுகிறது. அதில்இ கேட்கப்பட்ட கேள்விகள் இராணுவப் பலத்தில்இ இராணுவ கோட்பாடுகளில் புலிகளுக்கு அடுத்ததாக பார்க்கப்படுகின்ற முழுக்க முழுக்க உங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு பரந்த இறுக்கமான பிரதேசத்தில் எவ்வாறு இந்தக் குண்டு வெடித்திருக்க முடியும் என்பதோடு எமக்குத் தெரியாமல் அது நடந்திருக்கச் சாத்தியங்கள் உள்ளதா? என்ற வகையிலும் புலிகளையும் எம்மையும் தொடர்புபடுத்தி ஒரு குழப்பகரமான பேட்டியொன்றை பெற்றுக் கொண்டது இன்றும் என் நினைவில் நிழலாடுகிறது.
அன்றைய பாசறை வாழ்க்கையானது இன்றும் ஒவ்வொரு தோழனுடைய மனதிலும் ஆழத்தில் புதைந்து கிடக்கிறது. தோழர் விஜி துடிப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு பாசறையின் பொறுப்பாளன் ஆவான். அவனுடைய மெய்ப்பாதுகாவலன் தோழர் பகீரதன் எப்பொழுதுமே அவனுடன் ஒட்டிக்கொண்டே அவன் செல்லும் இடமெல்லாம் மற்றைய தோழர்களுக்கு இடம்கொடாமல் செல்வது வழக்கம்.
அன்று மாலை 6.00 மணி இருக்கும் மண்ணை இருள் மெல்லக் கௌவிக் கொண்டிருந்தது. மருத்துவ முகாமிற்கு அழைப்பை ஏற்படுத்திய தோழர் விஜி இன்று கொத்துரொட்டி போட்டிருப்பதாகவும்இ தன்னுடன் சாப்பிட வருமாறும் இன்னுமொரு தோழனை அழைப்பு விடுகிறான். அழைப்பை ஏற்று அவனது பாசறை நோக்கி நடந்த அந்தத் தோழன் தோழர் விஜியுடன் பலமுறை உணவினை உட்கொண்டிருந்த பொழுதிலும் அன்று அவனுடன் எடுத்துக் கொள்ளப் போவதுதான் கடைசி உணவு என்பதை யாருமே அறிந்திருக்கவில்லை.
கடற்படை காவலரண்களின் பரிசோதனைக்கு நேரமாகிறது. தோழர் பகீரதனை நோக்கி அழைத்த தோழர் விஜி தன்னுடைய மோட்டார் வண்டியை முன்னோக்கி நகர்த்தி வைக்குமாறு உத்தரவிடுகிறான். மருத்துவ முகாமின் தோழனிடமிருந்து விடைபெறுவதற்கு முன்னர் மோட்டார் வண்டியில் அமர்ந்தபடியே என்றுமில்லாதவாறு மிகவும் தோழமை கலந்த அன்புடன் அரவணைத்துவிட்டு மோட்டார் சைக்கிளை இயக்க அது இயங்க மறுக்கிறது.
சுமார் 30 நிமிடங்கள் கடந்த பின் இயங்கிய மோட்டார் வண்டியில் பகீரதன் பின் அமர்ந்துகொள்ள கடைசியாக அந்தத் தோழனிடமிருந்து விடைபெறுவது அறியாது மருத்துவ முகாம் தோழன் கையசைக்கிறான்.
தொடரும்…..

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.

",d.insertBefore(c.lastChild,d.firstChild)}function d(){var a=t.elements;return"string"==typeof a?a.split(" "):a}function e(a,b){var c=t.elements;"string"!=typeof c&&(c=c.join(" ")),"string"!=typeof a&&(a=a.join(" ")),t.elements=c+" "+a,j(b)}function f(a){var b=s[a[q]];return b||(b={},r++,a[q]=r,s[r]=b),b}function g(a,c,d){if(c||(c=b),l)return c.createElement(a);d||(d=f(c));var e;return e=d.cache[a]?d.cache[a].cloneNode():p.test(a)?(d.cache[a]=d.createElem(a)).cloneNode():d.createElem(a),!e.canHaveChildren||o.test(a)||e.tagUrn?e:d.frag.appendChild(e)}function h(a,c){if(a||(a=b),l)return a.createDocumentFragment();c=c||f(a);for(var e=c.frag.cloneNode(),g=0,h=d(),i=h.length;i>g;g++)e.createElement(h[g]);return e}function i(a,b){b.cache||(b.cache={},b.createElem=a.createElement,b.createFrag=a.createDocumentFragment,b.frag=b.createFrag()),a.createElement=function(c){return t.shivMethods?g(c,a,b):b.createElem(c)},a.createDocumentFragment=Function("h,f","return function(){var n=f.cloneNode(),c=n.createElement;h.shivMethods&&("+d().join().replace(/[\w\-:]+/g,function(a){return b.createElem(a),b.frag.createElement(a),'c("'+a+'")'})+");return n}")(t,b.frag)}function j(a){a||(a=b);var d=f(a);return!t.shivCSS||k||d.hasCSS||(d.hasCSS=!!c(a,"article,aside,dialog,figcaption,figure,footer,header,hgroup,main,nav,section{display:block}mark{background:#FF0;color:#000}template{display:none}")),l||i(a,d),a}var k,l,m="3.7.2",n=a.html5||{},o=/^<|^(?:button|map|select|textarea|object|iframe|option|optgroup)$/i,p=/^(?:a|b|code|div|fieldset|h1|h2|h3|h4|h5|h6|i|label|li|ol|p|q|span|strong|style|table|tbody|td|th|tr|ul)$/i,q="_html5shiv",r=0,s={};!function(){try{var a=b.createElement("a");a.innerHTML="",k="hidden"in a,l=1==a.childNodes.length||function(){b.createElement("a");var a=b.createDocumentFragment();return"undefined"==typeof a.cloneNode||"undefined"==typeof a.createDocumentFragment||"undefined"==typeof a.createElement}()}catch(c){k=!0,l=!0}}();var t={elements:n.elements||"abbr article aside audio bdi canvas data datalist details dialog figcaption figure footer header hgroup main mark meter nav output picture progress section summary template time video",version:m,shivCSS:n.shivCSS!==!1,supportsUnknownElements:l,shivMethods:n.shivMethods!==!1,type:"default",shivDocument:j,createElement:g,createDocumentFragment:h,addElements:e};a.html5=t,j(b)}(this,document);',c.insertBefore(e,d),b=42===f.offsetWidth,c.removeChild(e),{matches:b,media:a}}}(a.document)}(this),function(a){"use strict";function b(){v(!0)}var c={};a.respond=c,c.update=function(){};var d=[],e=function(){var b=!1;try{b=new a.XMLHttpRequest}catch(c){b=new a.ActiveXObject("Microsoft.XMLHTTP")}return function(){return b}}(),f=function(a,b){var c=e();c&&(c.open("GET",a,!0),c.onreadystatechange=function(){4!==c.readyState||200!==c.status&&304!==c.status||b(c.responseText)},4!==c.readyState&&c.send(null))},g=function(a){return a.replace(c.regex.minmaxwh,"").match(c.regex.other)};if(c.ajax=f,c.queue=d,c.unsupportedmq=g,c.regex={media:/@media[^\{]+\{([^\{\}]*\{[^\}\{]*\})+/gi,keyframes:/@(?:\-(?:o|moz|webkit)\-)?keyframes[^\{]+\{(?:[^\{\}]*\{[^\}\{]*\})+[^\}]*\}/gi,comments:/\/\*[^*]*\*+([^/][^*]*\*+)*\//gi,urls:/(url\()['"]?([^\/\)'"][^:\)'"]+)['"]?(\))/g,findStyles:/@media *([^\{]+)\{([\S\s]+?)$/,only:/(only\s+)?([a-zA-Z]+)\s?/,minw:/\(\s*min\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,maxw:/\(\s*max\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,minmaxwh:/\(\s*m(in|ax)\-(height|width)\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/gi,other:/\([^\)]*\)/g},c.mediaQueriesSupported=a.matchMedia&&null!==a.matchMedia("only all")&&a.matchMedia("only all").matches,!c.mediaQueriesSupported){var h,i,j,k=a.document,l=k.documentElement,m=[],n=[],o=[],p={},q=30,r=k.getElementsByTagName("head")[0]||l,s=k.getElementsByTagName("base")[0],t=r.getElementsByTagName("link"),u=function(){var a,b=k.createElement("div"),c=k.body,d=l.style.fontSize,e=c&&c.style.fontSize,f=!1;return b.style.cssText="position:absolute;font-size:1em;width:1em",c||(c=f=k.createElement("body"),c.style.background="none"),l.style.fontSize="100%",c.style.fontSize="100%",c.appendChild(b),f&&l.insertBefore(c,l.firstChild),a=b.offsetWidth,f?l.removeChild(c):c.removeChild(b),l.style.fontSize=d,e&&(c.style.fontSize=e),a=j=parseFloat(a)},v=function(b){var c="clientWidth",d=l[c],e="CSS1Compat"===k.compatMode&&d||k.body[c]||d,f={},g=t[t.length-1],p=(new Date).getTime();if(b&&h&&q>p-h)return a.clearTimeout(i),i=a.setTimeout(v,q),void 0;h=p;for(var s in m)if(m.hasOwnProperty(s)){var w=m[s],x=w.minw,y=w.maxw,z=null===x,A=null===y,B="em";x&&(x=parseFloat(x)*(x.indexOf(B)>-1?j||u():1)),y&&(y=parseFloat(y)*(y.indexOf(B)>-1?j||u():1)),w.hasquery&&(z&&A||!(z||e>=x)||!(A||y>=e))||(f[w.media]||(f[w.media]=[]),f[w.media].push(n[w.rules]))}for(var C in o)o.hasOwnProperty(C)&&o[C]&&o[C].parentNode===r&&r.removeChild(o[C]);o.length=0;for(var D in f)if(f.hasOwnProperty(D)){var E=k.createElement("style"),F=f[D].join("\n");E.type="text/css",E.media=D,r.insertBefore(E,g.nextSibling),E.styleSheet?E.styleSheet.cssText=F:E.appendChild(k.createTextNode(F)),o.push(E)}},w=function(a,b,d){var e=a.replace(c.regex.comments,"").replace(c.regex.keyframes,"").match(c.regex.media),f=e&&e.length||0;b=b.substring(0,b.lastIndexOf("/"));var h=function(a){return a.replace(c.regex.urls,"$1"+b+"$2$3")},i=!f&&d;b.length&&(b+="/"),i&&(f=1);for(var j=0;f>j;j++){var k,l,o,p;i?(k=d,n.push(h(a))):(k=e[j].match(c.regex.findStyles)&&RegExp.$1,n.push(RegExp.$2&&h(RegExp.$2))),o=k.split(","),p=o.length;for(var q=0;p>q;q++)l=o[q],g(l)||m.push({media:l.split("(")[0].match(c.regex.only)&&RegExp.$2||"all",rules:n.length-1,hasquery:l.indexOf("(")>-1,minw:l.match(c.regex.minw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||""),maxw:l.match(c.regex.maxw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||"")})}v()},x=function(){if(d.length){var b=d.shift();f(b.href,function(c){w(c,b.href,b.media),p[b.href]=!0,a.setTimeout(function(){x()},0)})}},y=function(){for(var b=0;b