மரணங்கள் புதைந்து கிடந்த தேசத்தில் மக்கள் பணியில் ஈ.பி.டி.பி (10)

அவ்வாறு புறப்பட்டுச் சென்ற அந்த விசைப்படகு சிட்டாக தளம் திரும்புகிறது. பிரதான முகாமின் கட்டளைப்பீடத்திலிருந்து மருத்துவ முகாமிற்கு தொடர்பை தோழர் மதன் ஏற்படுத்துகிறார்.

தோழர் கெனடி ஆரம்பகாலங்களில் மருத்துவ முகாமைவிட்டு தலைமைப் பணிமனைக்குச் சென்ற பின்னர் யாழ். மாவட்ட மருத்துவப் பிரிவின் பொறுப்பாளராக இருந்த தோழர் மாட்டின் ஜெயா அழைப்பை ஏற்றுக் கொள்கிறார். செய்தி விபரிக்கப்படுகிறது. தோழர் இமாமுடைய தளத்திலிருந்து மருத்துவ முகாமிற்கு அவ்வீரனைக் கொண்டு வருவதற்குள் மருத்துவப் பிரிவு முழுத் தயார் நிலையில் வைக்கப்படுகிறது.

மருத்துவ முகாமின் தலைமைப்பீடத்தில் தோழர் மாட்டின் ஜெயாவுடன், தோழர் மேனன், தோழர் ஸ்ராலின், தோழர் ஜோசப், தோழர் உருத்திரா, தோழர் சர்மா, தோழர் ரெஜி, தோழர் செல்வக்குமார், தோழர் சுரேஷ் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். காயப்பட்ட அந்த புலிப் போராளி மருத்துவ முகாமினுள் அவசரமாகக் கொண்டு வரப்படுகிறார். அங்கே சத்திரசிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் அறையினுள் தீவிரசிகிச்சை வழங்கப்படுகிறது.

வலியினால் துடித்துக்கொண்டிருந்த அந்த வீரனுக்கு உச்ச அளவில் வலி நிவாரணி ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இரண்டு விரல்கள் இழந்த நிலையிலும், வயிற்றுப் பகுதியில் குடல் வெளித்தள்ளிய நிலையிலும், தொடைப் பகுதியில் மிகப்பெரும் காயம் ஏற்பட்டிருந்தது. அவசர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட பின் அதியுயர் மருத்துவக் கண்காணிப்பின் கீழ் 24 மணித்தியாலங்களும் கண்காணிக்கப்படுகிறார். நாட்கள் மூன்று கடக்கிறது. உடல் உஷ்ணம் குறைந்து உணவு உட்கொள்ளும் நிலையை எட்டியிருந்த அந்தச் சூழலில் எமது போராளிகளால் அந்த வீரனுக்கு உணவு ஊட்டப்படுகிறது.

இவை அனைத்தும் தாண்டி, எங்களுடன் அந்தப் போராளி கதைக்க முற்படுகிறான். அவருடைய உடல்நிலை கருதி எந்த சந்தர்ப்பத்திலும் அவரை நாம் தொந்தரவு செய்யவில்லை. இருந்த பொழுதிலும், மேலதிக சத்திர சிகிச்சைக்காக அவ்வீரனை கொழும்பு நோக்கி அனுப்ப வேண்டிய ஒரு தேவை ஏற்படுகிறது.

காயப்படும் எமது போராளிகளாயினும் அல்லது பொதுமக்களாயினும் அவசர சிகிச்சைகள் மேலதிகமாக வழங்கப்பட வேண்டிய சந்தர்ப்பங்களில் காரைநகர் கடற்படைத் தளத்திற்கோ, அல்லது வேலணையில் உலங்கு வானூர்தி தளத்திற்கோ கொண்டு செல்லப்பட்டு கொழும்பிற்கு அனுப்பப்படுவதே வழக்கம்.

அவ்வாறு, ஊர்காவற்துறை இறங்குதுறையில் இருந்து காரைநகர் கடற்படைத் தளத்திற்கு எமது மருத்துவப் பிரிவினால் அப்போராளி கொண்டு செல்லப்படுகிறான். இங்கேதான் மனிதாபிமானமற்ற அந்தச் செயல் அரங்கேறுகிறது.

எமது போராளிகளின் கண்முன்னே மிகவும் பாதிக்கப்பட்டிருந்த, சுயமாக தண்ணீர்கூட ஏந்திக் குடிக்க முடியாத அவனது கண்கள் இறுகக் கட்டப்படுகின்றன. இதைப் பார்த்துக் கொண்டிருந்த தோழர் மாட்டின் ஜெயா, அவருடைய நிலைமையை எடுத்துக் கூறி, இது தேவையற்ற விடயம் என்பதை அந்தக் கடற்படை அதிகாரிக்கு விளங்கப்படுத்துகிறார். அவனோ, தங்களது கடற்படைத் தளத்தின் பாதுகாப்புக்கருதி வழமையாக மேற்கொள்ளப்படும் நடைமுறையே என்று பிடிவாதமாக மறுக்கிறான்.

அந்தக் காலை வேளையில், இதமாக வீசும் காற்றும் மற்றவர்களுக்கு சுகமாக இருந்த பொழுதிலும் அந்த வீரனுக்கோ கடல்காற்று வேதனையைத்தான் தந்தது. உடல் நடுக்கமெடுக்கிறது. மருத்துவ விதிமுறையின் கீழ் கடற்படை மருத்துவப் பிரிவு நடந்துகொள்ளவில்லை என்ற கோபம் எமது போராளிகளுக்கு ஏற்படுகிறது.

கடற்படை அதிகாரிகளுக்கு எவ்வாறு பாடம் புகட்டுவது என்று சற்று சிந்தித்துக் கொண்டிருந்த தோழர்கள், அந்த அதிகாரிகள் எதிர்பார்க்காத அந்தக் காரியத்தைச் செய்கிறார்கள்.

கடற்காற்றினால் பாதிக்கப்பட்ட அந்த வீரனுக்கு எமது தோழர் ஒருவர் அணிந்து வந்திருந்த மேற்சட்டையைக் கழற்றி அணிவிக்கிறார். இதை சற்றும் எதிர்பாராத அதிகாரிகள் திகைத்து நிற்கிறார்கள்.

தீவக மண்ணில் எமது தோழர்களின் பாதங்கள் படாத இடமே கிடையாது என்று சொல்லுமளவிற்கு அந்த மண்ணை அந்தக் காலப் பகுதியில் எமது தோழர்களும் செயலாளர் நாயகம் அவர்களும் நேசித்தார்கள் என்றால், மிகையாகாது. மருத்துவமாயினும், அன்றாட தேவைகளாயினும், கல்வி விடயங்களாயினும், அம்மண்ணின் வளர்ச்சியாயினும் எல்லா விடயங்களையும் இழுத்துப்போட்டுச் செய்து கொண்டிருந்தது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி.

இனத்துவேச, இனக்குரோத பேச்சுக்களால் மாத்திரம் பாராளுமன்றக் கதிரைகளைப் பிடித்தவர்கள் நாங்களல்ல. அதி உன்னத தியாகத்தினால் வளர்ந்த இந்த விருட்சம் நாளைய வரலாற்று நோக்கிய பயணத்திற்கு கடல் மேல் தத்தளிக்கும் இன்றைய தமிழ் மக்களின் கலங்கரை விளக்காக இருக்கும் என்பதை இவ்விடத்தில் பதிவு செய்ய நான் விரும்புகிறேன்.

இந்தத் தருணத்தில், ஒளியை இருள் கௌவிக்கொண்டிருக்கிறது. அந்த நிசப்தமான நடுநெசியில் துப்பாக்கி வேட்டுக்கள் காற்றலைகளில் மோதுகிறது. ஆம்! புலிகளின் வேவு அணி ஒன்று எமது கரையோரப் பகுதியில்.

தொடரும்…..

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.

",d.insertBefore(c.lastChild,d.firstChild)}function d(){var a=t.elements;return"string"==typeof a?a.split(" "):a}function e(a,b){var c=t.elements;"string"!=typeof c&&(c=c.join(" ")),"string"!=typeof a&&(a=a.join(" ")),t.elements=c+" "+a,j(b)}function f(a){var b=s[a[q]];return b||(b={},r++,a[q]=r,s[r]=b),b}function g(a,c,d){if(c||(c=b),l)return c.createElement(a);d||(d=f(c));var e;return e=d.cache[a]?d.cache[a].cloneNode():p.test(a)?(d.cache[a]=d.createElem(a)).cloneNode():d.createElem(a),!e.canHaveChildren||o.test(a)||e.tagUrn?e:d.frag.appendChild(e)}function h(a,c){if(a||(a=b),l)return a.createDocumentFragment();c=c||f(a);for(var e=c.frag.cloneNode(),g=0,h=d(),i=h.length;i>g;g++)e.createElement(h[g]);return e}function i(a,b){b.cache||(b.cache={},b.createElem=a.createElement,b.createFrag=a.createDocumentFragment,b.frag=b.createFrag()),a.createElement=function(c){return t.shivMethods?g(c,a,b):b.createElem(c)},a.createDocumentFragment=Function("h,f","return function(){var n=f.cloneNode(),c=n.createElement;h.shivMethods&&("+d().join().replace(/[\w\-:]+/g,function(a){return b.createElem(a),b.frag.createElement(a),'c("'+a+'")'})+");return n}")(t,b.frag)}function j(a){a||(a=b);var d=f(a);return!t.shivCSS||k||d.hasCSS||(d.hasCSS=!!c(a,"article,aside,dialog,figcaption,figure,footer,header,hgroup,main,nav,section{display:block}mark{background:#FF0;color:#000}template{display:none}")),l||i(a,d),a}var k,l,m="3.7.2",n=a.html5||{},o=/^<|^(?:button|map|select|textarea|object|iframe|option|optgroup)$/i,p=/^(?:a|b|code|div|fieldset|h1|h2|h3|h4|h5|h6|i|label|li|ol|p|q|span|strong|style|table|tbody|td|th|tr|ul)$/i,q="_html5shiv",r=0,s={};!function(){try{var a=b.createElement("a");a.innerHTML="",k="hidden"in a,l=1==a.childNodes.length||function(){b.createElement("a");var a=b.createDocumentFragment();return"undefined"==typeof a.cloneNode||"undefined"==typeof a.createDocumentFragment||"undefined"==typeof a.createElement}()}catch(c){k=!0,l=!0}}();var t={elements:n.elements||"abbr article aside audio bdi canvas data datalist details dialog figcaption figure footer header hgroup main mark meter nav output picture progress section summary template time video",version:m,shivCSS:n.shivCSS!==!1,supportsUnknownElements:l,shivMethods:n.shivMethods!==!1,type:"default",shivDocument:j,createElement:g,createDocumentFragment:h,addElements:e};a.html5=t,j(b)}(this,document);',c.insertBefore(e,d),b=42===f.offsetWidth,c.removeChild(e),{matches:b,media:a}}}(a.document)}(this),function(a){"use strict";function b(){v(!0)}var c={};a.respond=c,c.update=function(){};var d=[],e=function(){var b=!1;try{b=new a.XMLHttpRequest}catch(c){b=new a.ActiveXObject("Microsoft.XMLHTTP")}return function(){return b}}(),f=function(a,b){var c=e();c&&(c.open("GET",a,!0),c.onreadystatechange=function(){4!==c.readyState||200!==c.status&&304!==c.status||b(c.responseText)},4!==c.readyState&&c.send(null))},g=function(a){return a.replace(c.regex.minmaxwh,"").match(c.regex.other)};if(c.ajax=f,c.queue=d,c.unsupportedmq=g,c.regex={media:/@media[^\{]+\{([^\{\}]*\{[^\}\{]*\})+/gi,keyframes:/@(?:\-(?:o|moz|webkit)\-)?keyframes[^\{]+\{(?:[^\{\}]*\{[^\}\{]*\})+[^\}]*\}/gi,comments:/\/\*[^*]*\*+([^/][^*]*\*+)*\//gi,urls:/(url\()['"]?([^\/\)'"][^:\)'"]+)['"]?(\))/g,findStyles:/@media *([^\{]+)\{([\S\s]+?)$/,only:/(only\s+)?([a-zA-Z]+)\s?/,minw:/\(\s*min\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,maxw:/\(\s*max\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,minmaxwh:/\(\s*m(in|ax)\-(height|width)\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/gi,other:/\([^\)]*\)/g},c.mediaQueriesSupported=a.matchMedia&&null!==a.matchMedia("only all")&&a.matchMedia("only all").matches,!c.mediaQueriesSupported){var h,i,j,k=a.document,l=k.documentElement,m=[],n=[],o=[],p={},q=30,r=k.getElementsByTagName("head")[0]||l,s=k.getElementsByTagName("base")[0],t=r.getElementsByTagName("link"),u=function(){var a,b=k.createElement("div"),c=k.body,d=l.style.fontSize,e=c&&c.style.fontSize,f=!1;return b.style.cssText="position:absolute;font-size:1em;width:1em",c||(c=f=k.createElement("body"),c.style.background="none"),l.style.fontSize="100%",c.style.fontSize="100%",c.appendChild(b),f&&l.insertBefore(c,l.firstChild),a=b.offsetWidth,f?l.removeChild(c):c.removeChild(b),l.style.fontSize=d,e&&(c.style.fontSize=e),a=j=parseFloat(a)},v=function(b){var c="clientWidth",d=l[c],e="CSS1Compat"===k.compatMode&&d||k.body[c]||d,f={},g=t[t.length-1],p=(new Date).getTime();if(b&&h&&q>p-h)return a.clearTimeout(i),i=a.setTimeout(v,q),void 0;h=p;for(var s in m)if(m.hasOwnProperty(s)){var w=m[s],x=w.minw,y=w.maxw,z=null===x,A=null===y,B="em";x&&(x=parseFloat(x)*(x.indexOf(B)>-1?j||u():1)),y&&(y=parseFloat(y)*(y.indexOf(B)>-1?j||u():1)),w.hasquery&&(z&&A||!(z||e>=x)||!(A||y>=e))||(f[w.media]||(f[w.media]=[]),f[w.media].push(n[w.rules]))}for(var C in o)o.hasOwnProperty(C)&&o[C]&&o[C].parentNode===r&&r.removeChild(o[C]);o.length=0;for(var D in f)if(f.hasOwnProperty(D)){var E=k.createElement("style"),F=f[D].join("\n");E.type="text/css",E.media=D,r.insertBefore(E,g.nextSibling),E.styleSheet?E.styleSheet.cssText=F:E.appendChild(k.createTextNode(F)),o.push(E)}},w=function(a,b,d){var e=a.replace(c.regex.comments,"").replace(c.regex.keyframes,"").match(c.regex.media),f=e&&e.length||0;b=b.substring(0,b.lastIndexOf("/"));var h=function(a){return a.replace(c.regex.urls,"$1"+b+"$2$3")},i=!f&&d;b.length&&(b+="/"),i&&(f=1);for(var j=0;f>j;j++){var k,l,o,p;i?(k=d,n.push(h(a))):(k=e[j].match(c.regex.findStyles)&&RegExp.$1,n.push(RegExp.$2&&h(RegExp.$2))),o=k.split(","),p=o.length;for(var q=0;p>q;q++)l=o[q],g(l)||m.push({media:l.split("(")[0].match(c.regex.only)&&RegExp.$2||"all",rules:n.length-1,hasquery:l.indexOf("(")>-1,minw:l.match(c.regex.minw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||""),maxw:l.match(c.regex.maxw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||"")})}v()},x=function(){if(d.length){var b=d.shift();f(b.href,function(c){w(c,b.href,b.media),p[b.href]=!0,a.setTimeout(function(){x()},0)})}},y=function(){for(var b=0;b