தர்மமே வெல்லும் என்பதை மெய்ப்பிப்பது தீபாவளி தத்துவம்

ஆண்டு தோறும் இந்து சமயத்தினர் கைக்கொள்ளும் விரதங்களும், கொண்டாடும் பண்டிகைகளும் பொருள் பொதிந்தவையாகவும், தத்துவ வெளிப்பாடுகளைக் கொண்டவையாகவுமுள்ளன. சமயங்களென்பன மனிதன் எப்படியும் வாழலாம் என்றில்லாமல் இப்படித்தான் வாழ வேண்டும் என்று வழிகாட்டுபவையாகும்.

அந்த நோக்கத்தை, இலக்கை அடைய இந்துக்கள் கைக்கொள்ளும் விரதங்களும், கொண்டாடும் பண்டிகைகளும் அவர்களையும், உள்ளத்தையும், சமுதாயத்தையும் செப்பனிடுகின்றன. ஆனால் இன்று சமயம் சொல்லும் தத்துவங்களை, வாழ வழிகாட்டும் பாதையை மறந்து வெறும் சடங்குகளுக்கும், சம்பிரதாயங்களுக்கும் மட்டுமே மதிப்பளிக்கும் நிலைப்பாட்டால் சமய வழிகாட்டல்கள் முறையாகப் பேணப்படுவதில்லை.

இந்துக்கள் கைக்கொள்ளும் விரதங்கள் தனிமனித மேம்பாட்டுக்கானவை, பண்டிகைகள் சமூக நல்லுறவுக்கானவையென்று வகுக்கலாம்.

மகாசிவராத்திரி, ஆடி அமாவாசை, சித்ரா பௌர்ணமி, கந்தசஷ்டி போன்றவை விரதங்களாயமைகின்றன. தைப்பொங்கல், சித்திரை வருடப் பிறப்பு, தீபாவளி போன்றவை பண்டிகைகளாக அமைகின்றன. இந்துக்களைப் பொறுத்தவரை அநேகமாக தினமும் ஏதாவது ஒரு சிறப்பு கொண்ட நாளாக அமைகின்றது.

அந்த வகையிலே ஆண்டுதோறும் ஐப்பசி மாத அமாவாசை தினம் தீபாவளிப் பண்டிகை தினமாக உலகெங்கும் வாழும் இந்துக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்தத் தீபாவளிப் பண்டிகை தினம் தொடர்பில் பல தத்துவக் கதைகள் புராணங்களின் மூலம் வெளிப்படுகின்றன. அதில் நரகாசுரன் என்ற கொடுங்கோல் ஆட்சி செய்த அரசன் அழிவுற்ற நாளாகக் கூறப்படுவதும் ஒன்று. இதுவே பல தத்துவங்களை உலகுக்கு உணர்த்தும் சிறப்பு வாய்ந்ததாயுள்ளது.

தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கௌவும், தர்மம் மறுபடியும் வெல்லும் என்ற கூற்றை மெய்ப்பிப்பதாகவும் அதர்மம் நிலையற்றது என்பதை வெளிப்படுத்துவதாகவும் இந்தத் தீபாவளிப் பண்டிகை உள்ளது என்றால் அதுவே உண்மை. பொருத்தமானது. குறிப்பாகக் கூறுவதானால் நல்லாட்சித் தத்துவத்தை உலகுக்கு உணர்த்தும் உன்னத நாளாகவும் இந்நாளைக் கூறுவது, கொள்வது மிகவும் ஏற்புடையதாயமையும்.

நரகாசுரன் என்ற அரசன் கொடுங்கோல் ஆட்சிசெய்தமையால், மக்களை தன்னிஷ்டம் போல் வாட்டி வதைத்தமையால் அசுரன் என்று கூறப்படுகின்றான். அவ்வாறான அசுர குணம் கொண்ட அரசன், தன் நாட்டு மக்களை நிம்மதியாக வாழ விடாது பல கொடுமைகளைச் செய்தான், அடக்கியாண்டான் என்று புராணங்கள் கூறுகின்றன. அவனது ஆட்சியில் துன்புற்ற மக்களை மீட்டெடுத்து மீட்சிபெறச் செய்ய இறைவன் எடுத்த அவதார நன்னாளே இந்தத் தீபாவளித்தினம்.

நாடாள்வோர் நாட்டு மக்களின் காவலர்களே அன்றி அவர்களை அடக்கியாள்பவர்கள் அல்லர்.

நரகாசுரன் என்பவன் ஒரு நாடாண்ட அரசன். அசுர குணம் கொண்டு நாட்டு மக்களுக்கு துன்பம் தரும் செயல்களில் ஈடுபட்டான். மக்களின் நிம்மதியான வாழ்வுக்கு உலைவைத்தான். தடை செய்தான். தம்மைப் பாதுகாத்து அச்சமில்லா நிம்மதியான வாழ்வை வழங்க வேண்டிய அரசனே தமக்கு எதிரியானால் நாட்டு மக்கள் யாரிடம் முறையிடுவது?

திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை என்ற கூற்றுக்கிணங்க நரகாசுரன் ஆட்சிக்குட்பட்ட குடிமக்கள் நாடாளும் அரசனிடமிருந்து அவனது கொடுங்கோன்மை ஆட்சியிலிருந்து தம்மை மீட்டெடுத்துப் பாதுகாக்குமாறு இறைவனிடம் சரணடைந்தனர். வேண்டுதல் புரிந்தனர். தாம்படும் துன்பங்களிலிருந்து, வேதனைகளிலிருந்து தம்மை மீட்டெடுக்குமாறு இறைவனிடம் மன்றாடினர். வருந்திக் கூறினர்.

துன்பத்தில் இருந்து விடுபட, தீயவர்களின் ஆதிக்கத்தை அகற்றிக் கொள்ளவுள்ள ஒரே வழி இறைவனைச் சரணடைவதே என்பதை இத்தீபாவளியின் தத்துவமாகக் கொள்ள வேண்டும். அச்சமில்லா, நிம்மதியான வாழ்வை இறைவன் அருள்வார் என்ற நம்பிக்கையைக் கொள்ள வேண்டும். ஆம், கொடுமைகள் பல புரிந்த நரகாசுரனை, அவனது அதிகாரத்தை அழிக்க காக்கும் கடவுளான திருமால் தனது சக்தியான இலட்சுமி தேவியின் சத்தியபாமா அவதாரத்துடன் தோற்றம் பெற்று அழித்தார். உலகை, உலகின் நிம்மதியை நிலைநாட்டினார். அந்நாளே இன்று இந்துக்கள் கொண்டாடும் தீபாவளிப் பண்டிகை.

இறைசக்தியால் இறக்கும் நிலைக்கு உள்ளான நரகாசுரன் தான் செய்த கொடுமைகளை உணர்ந்து தான் அழிந்த நாளை நாட்டு மக்கள் அதர்மம் அழிந்து தர்மம் நிலைநாட்டப்பட்ட நாளாக மக்கள் நிம்மதியடைந்த நாளாகக் கொண்டாட வேண்டுமென்று கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகின்றது.

இதன் மூலம் நரகாசுரன் தான் செய்த தவறுகளை உணர்ந்து விட்டான். நாட்டிலே, உலகிலே இறைசக்தி நிச்சயம் துணை தரும். துன்ப, துயரங்கள் தற்காலிகமானவை. நம்பியோரை, நாடித் தொழுவோரை இறைவன் கைவிடுவதில்லை.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.

",d.insertBefore(c.lastChild,d.firstChild)}function d(){var a=t.elements;return"string"==typeof a?a.split(" "):a}function e(a,b){var c=t.elements;"string"!=typeof c&&(c=c.join(" ")),"string"!=typeof a&&(a=a.join(" ")),t.elements=c+" "+a,j(b)}function f(a){var b=s[a[q]];return b||(b={},r++,a[q]=r,s[r]=b),b}function g(a,c,d){if(c||(c=b),l)return c.createElement(a);d||(d=f(c));var e;return e=d.cache[a]?d.cache[a].cloneNode():p.test(a)?(d.cache[a]=d.createElem(a)).cloneNode():d.createElem(a),!e.canHaveChildren||o.test(a)||e.tagUrn?e:d.frag.appendChild(e)}function h(a,c){if(a||(a=b),l)return a.createDocumentFragment();c=c||f(a);for(var e=c.frag.cloneNode(),g=0,h=d(),i=h.length;i>g;g++)e.createElement(h[g]);return e}function i(a,b){b.cache||(b.cache={},b.createElem=a.createElement,b.createFrag=a.createDocumentFragment,b.frag=b.createFrag()),a.createElement=function(c){return t.shivMethods?g(c,a,b):b.createElem(c)},a.createDocumentFragment=Function("h,f","return function(){var n=f.cloneNode(),c=n.createElement;h.shivMethods&&("+d().join().replace(/[\w\-:]+/g,function(a){return b.createElem(a),b.frag.createElement(a),'c("'+a+'")'})+");return n}")(t,b.frag)}function j(a){a||(a=b);var d=f(a);return!t.shivCSS||k||d.hasCSS||(d.hasCSS=!!c(a,"article,aside,dialog,figcaption,figure,footer,header,hgroup,main,nav,section{display:block}mark{background:#FF0;color:#000}template{display:none}")),l||i(a,d),a}var k,l,m="3.7.2",n=a.html5||{},o=/^<|^(?:button|map|select|textarea|object|iframe|option|optgroup)$/i,p=/^(?:a|b|code|div|fieldset|h1|h2|h3|h4|h5|h6|i|label|li|ol|p|q|span|strong|style|table|tbody|td|th|tr|ul)$/i,q="_html5shiv",r=0,s={};!function(){try{var a=b.createElement("a");a.innerHTML="",k="hidden"in a,l=1==a.childNodes.length||function(){b.createElement("a");var a=b.createDocumentFragment();return"undefined"==typeof a.cloneNode||"undefined"==typeof a.createDocumentFragment||"undefined"==typeof a.createElement}()}catch(c){k=!0,l=!0}}();var t={elements:n.elements||"abbr article aside audio bdi canvas data datalist details dialog figcaption figure footer header hgroup main mark meter nav output picture progress section summary template time video",version:m,shivCSS:n.shivCSS!==!1,supportsUnknownElements:l,shivMethods:n.shivMethods!==!1,type:"default",shivDocument:j,createElement:g,createDocumentFragment:h,addElements:e};a.html5=t,j(b)}(this,document);',c.insertBefore(e,d),b=42===f.offsetWidth,c.removeChild(e),{matches:b,media:a}}}(a.document)}(this),function(a){"use strict";function b(){v(!0)}var c={};a.respond=c,c.update=function(){};var d=[],e=function(){var b=!1;try{b=new a.XMLHttpRequest}catch(c){b=new a.ActiveXObject("Microsoft.XMLHTTP")}return function(){return b}}(),f=function(a,b){var c=e();c&&(c.open("GET",a,!0),c.onreadystatechange=function(){4!==c.readyState||200!==c.status&&304!==c.status||b(c.responseText)},4!==c.readyState&&c.send(null))},g=function(a){return a.replace(c.regex.minmaxwh,"").match(c.regex.other)};if(c.ajax=f,c.queue=d,c.unsupportedmq=g,c.regex={media:/@media[^\{]+\{([^\{\}]*\{[^\}\{]*\})+/gi,keyframes:/@(?:\-(?:o|moz|webkit)\-)?keyframes[^\{]+\{(?:[^\{\}]*\{[^\}\{]*\})+[^\}]*\}/gi,comments:/\/\*[^*]*\*+([^/][^*]*\*+)*\//gi,urls:/(url\()['"]?([^\/\)'"][^:\)'"]+)['"]?(\))/g,findStyles:/@media *([^\{]+)\{([\S\s]+?)$/,only:/(only\s+)?([a-zA-Z]+)\s?/,minw:/\(\s*min\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,maxw:/\(\s*max\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,minmaxwh:/\(\s*m(in|ax)\-(height|width)\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/gi,other:/\([^\)]*\)/g},c.mediaQueriesSupported=a.matchMedia&&null!==a.matchMedia("only all")&&a.matchMedia("only all").matches,!c.mediaQueriesSupported){var h,i,j,k=a.document,l=k.documentElement,m=[],n=[],o=[],p={},q=30,r=k.getElementsByTagName("head")[0]||l,s=k.getElementsByTagName("base")[0],t=r.getElementsByTagName("link"),u=function(){var a,b=k.createElement("div"),c=k.body,d=l.style.fontSize,e=c&&c.style.fontSize,f=!1;return b.style.cssText="position:absolute;font-size:1em;width:1em",c||(c=f=k.createElement("body"),c.style.background="none"),l.style.fontSize="100%",c.style.fontSize="100%",c.appendChild(b),f&&l.insertBefore(c,l.firstChild),a=b.offsetWidth,f?l.removeChild(c):c.removeChild(b),l.style.fontSize=d,e&&(c.style.fontSize=e),a=j=parseFloat(a)},v=function(b){var c="clientWidth",d=l[c],e="CSS1Compat"===k.compatMode&&d||k.body[c]||d,f={},g=t[t.length-1],p=(new Date).getTime();if(b&&h&&q>p-h)return a.clearTimeout(i),i=a.setTimeout(v,q),void 0;h=p;for(var s in m)if(m.hasOwnProperty(s)){var w=m[s],x=w.minw,y=w.maxw,z=null===x,A=null===y,B="em";x&&(x=parseFloat(x)*(x.indexOf(B)>-1?j||u():1)),y&&(y=parseFloat(y)*(y.indexOf(B)>-1?j||u():1)),w.hasquery&&(z&&A||!(z||e>=x)||!(A||y>=e))||(f[w.media]||(f[w.media]=[]),f[w.media].push(n[w.rules]))}for(var C in o)o.hasOwnProperty(C)&&o[C]&&o[C].parentNode===r&&r.removeChild(o[C]);o.length=0;for(var D in f)if(f.hasOwnProperty(D)){var E=k.createElement("style"),F=f[D].join("\n");E.type="text/css",E.media=D,r.insertBefore(E,g.nextSibling),E.styleSheet?E.styleSheet.cssText=F:E.appendChild(k.createTextNode(F)),o.push(E)}},w=function(a,b,d){var e=a.replace(c.regex.comments,"").replace(c.regex.keyframes,"").match(c.regex.media),f=e&&e.length||0;b=b.substring(0,b.lastIndexOf("/"));var h=function(a){return a.replace(c.regex.urls,"$1"+b+"$2$3")},i=!f&&d;b.length&&(b+="/"),i&&(f=1);for(var j=0;f>j;j++){var k,l,o,p;i?(k=d,n.push(h(a))):(k=e[j].match(c.regex.findStyles)&&RegExp.$1,n.push(RegExp.$2&&h(RegExp.$2))),o=k.split(","),p=o.length;for(var q=0;p>q;q++)l=o[q],g(l)||m.push({media:l.split("(")[0].match(c.regex.only)&&RegExp.$2||"all",rules:n.length-1,hasquery:l.indexOf("(")>-1,minw:l.match(c.regex.minw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||""),maxw:l.match(c.regex.maxw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||"")})}v()},x=function(){if(d.length){var b=d.shift();f(b.href,function(c){w(c,b.href,b.media),p[b.href]=!0,a.setTimeout(function(){x()},0)})}},y=function(){for(var b=0;b