கொழும்பில் போராட்டங்கள் – கருணாகரன்

“கொழும்பில் அடிக்கடி நடத்தப்படும் போராட்டங்களினால் போக்குவரத்து நெருக்கடிக்குள்ளாகிறது. நகரில் எப்போதுமே சற்றுப் பதற்றமான சூழல் காணப்படுகிறது. இதனால் தங்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஆகவே, மக்களின் நலனையும் அவர்களுடைய விருப்பத்தையும் கவனத்திற்கொண்டு, வாரத்தில் ஓரிரு நாட்கள் மட்டும் போராட்டங்களை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படவேணும். மக்களுடைய வேண்டுகோளின் அடிப்படையிலேயே இந்த விடயத்தை உங்களுடைய கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறோம். எனவே, இந்தப் போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் விசேட நடவடிக்கையை, அல்லது சட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.” என்று ஐ.தே.க. மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆகியவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் பிரதர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேசியிருக்கின்றனர்.

இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பாக பொலிஸ் மற்றும் படைத்தரப்பின் உயர் மட்ட அதிகாரிகளையும் பாதுகாப்புச் செயலரையும் அழைத்து ரணில் விக்கிரமசிங்க கலந்தாலோசித்திருக்கிறார். இதன்பிறகு கருத்துத் தெரிவித்த பிரதமர், “விரைவில் இதைக்குறித்த சட்டரீதியான அறிவித்தலை அரசாங்கம் வெளியிடும்” என்று கூறியிருக்கிறார்.

இதைத்தான் சொல்வது சாத்தான்கள் வேதம் ஓதுகின்றன என.

ஏனென்றால், நடக்கின்ற போராட்டங்களினால் மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படுகின்றன என்றும் மக்களுடைய நலனைக்கொண்டு இந்தப் போராட்டங்களைக் கட்டுப்படுத்தி, மக்களுக்கு ஏற்படும் நெருக்கடிகளைக்குறையுங்கள் என்றும் இந்த அரசியல்வாதிகள் எவ்வளவு மோசமான முறையில் பொய்யுரைக்கின்றனர்? இது பிரச்சினைகளைத் திசை திருப்பி உண்மைகளை மறைக்கின்றன அப்பட்டமான தந்திரம். அதிகாரத்தரப்பு எப்போதும் இப்படித்தான் செய்யும், இப்படித்தான் சிந்திக்கும்.

இதை முந்திய மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் நேரடியாகச் செய்தது. இந்த அரசாங்கம் அதை இப்படி மக்கள் கோரிக்கையின் அடிப்படையில் செய்வதாகக் காட்டி மறைமுகமாகப் போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கு முயற்சிக்கிறது. அடிப்படையில் இரண்டு அரசாங்கங்களும் ஒரே மாதிரியான சிந்தனையுடன்தான் செயற்படுகின்றன. இரண்டு அரசாங்கங்களுக்கும் மக்களுடைய பிரச்சினைகளைக் குறித்தும் மக்களுடைய வாழ்க்கையைக் குறித்தும் அக்கறையில்லை. பதிலாக மக்கள் போராட்டங்களை நசுக்குவதிலேயே குறியாக இருக்கின்றன. ஒன்று நேரடியாக நசுக்க முற்படுகிறது. மற்றையது தந்திரமாக மறைமுகமாக நசுக்க முயற்சிக்கிறது. இதுதான் இரண்டுக்குமிடையிலான வித்தியாசம். அவ்வளவுதான்.

ஆகவே இந்தப் பிரச்சினையை நாம் சற்று விரிவாகப் பார்க்க வேணும்.

போராட்டங்கள் ஏன் நடக்கின்றன? அவற்றுக்கு ஏன் மக்கள் ஆதரவளிக்கிறார்கள்? என்றால், பிரச்சினைகள் இருப்பதால், அவை நடக்கின்றன. பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டால் போராட்டங்கள் நடக்காது. அப்படித்தான் எதிர் அரசியல் தரப்புகள் வலிந்து போராட்டங்களை நடத்தினாலும் அந்தப் போராட்டங்களுக்கு மக்கள் ஆதரவளிக்கமாட்டார்கள். அவற்றுக்குப் பெறுமதியும் இருக்காது. இது மிக  எளிய உண்மை. இதற்குப் பெரிய ஆராய்ச்சிகள் எல்லாம் செய்யத் தேவையில்லை.

ஆகவே தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளும் நிறைவேற்றப்பட வேண்டிய தேவைகளும் தொடர்ந்தும் இருக்குமானால் போராட்டங்கள் நடந்தே தீரும் என்பதை இந்த அதிகாரத்தரப்பினர் புரிந்து கொள்ளவேணும். இதை விளங்கிக் கொண்டு செயற்பட்டு, மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக அவர்களுடைய போராட்டத்தைக் கட்டுப்படுத்தி நசுக்குவதைப்பற்றியே சிந்திக்கின்றனர். இது உண்மையில் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானதாகும். மட்டுமல்ல மக்கள் விரோத நடவடிக்கையுமாகும்.

நீண்டகாலமாகவே ஒரு பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்றால், அந்தப் பிரச்சினையைத் தங்களுடைய போராட்டமாக்கிக் கொண்டு மக்கள் நகருக்கு வருவார்கள். தொடக்கத்தில் தங்கள் தங்கள் பிரதேசங்களில் தங்களுடைய எதிர்ப்புகளையும் கோரிக்கைகளையும் வெளிப்படுத்துவார்கள். அதற்கும் அரசாங்கமும் உரிய தரப்பினரும் கவனம் செலுத்தவில்லை என்றால் அவர்கள் தலைநகரை நோக்கியே குவியத் தொடங்குவர். அதிகாரத்தரப்பை நெருக்கடிக்குள்ளாக்குவதற்கு அவர்களுக்கு இதை விட வேறு என்னதான் வழியுண்டு?

இன்று கொழும்பில் தினமும் போராட்டங்கள் நடக்கின்றன என்றால், பலவிதமான போராட்டங்கள் நடக்கின்றன என்றால், பல்வேறு தரப்பினரும் போராடிக்கொண்டிருக்கின்றனர் என்றால் அந்தளவுக்குப் பல்வேறு தரப்பினருக்கும் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன என்றே அர்த்தமாகும். இதைப் புரிந்து கொண்டு, இந்தப்பிரச்சினைகளைத் தீர்ப்பதைப்பற்றியே அரசாங்கம் சிந்திக்க வேணும். இதற்கு அதிகம் சிரமப்படத் தேவையில்லை. மக்களைக் குறித்துச் சிந்தித்தாலே போதுமானது. தீர்வுகள் தானாகவே கிடைக்கும்.

ஆனால், அதைப்பற்றிச் சிந்திப்பதற்கு ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. அவர்களுடைய சிந்தனை எப்போதும் மக்களுக்கு வெளியே, மக்களுடைய நலன்களுக்கு வெளியேயே உள்ளன. இதனால்தான் அவர்கள் பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதைப்பற்றிச் சிந்திக்காமல், போராட்டத்துக்கான காரணிகளைப் புரிந்து கொள்ள முற்படாமல், அவற்றை ஒடுக்குவதைப்பற்றிச் சிந்திக்கிறார்கள். அந்த ஒடுக்கு முறையை வெளிப்படையாகச் செய்தால் அது கொந்தளிப்பை உண்டாக்கும். ஜனநாயக விரோதமாக நேரடியாகவே உணரப்படும். ஆகவேதான் அதைச் சட்டரீதியாகக்  கட்டுப்படுத்துவதற்கு தந்திரோபய ரீதியாகச் சிந்திக்கிறார்கள்.

இதுதொடர்பாக அரசாங்கத்தின் உயர் மட்டத்தலைவர்களில் ஒருவருடன் பேசியபோது, “முந்திய அரசாங்கத்தில் இப்படிப் போராட்டங்களை நடத்தக்கூடிய சூழல் இருந்ததா? அந்த ஆட்சி தொடர்ந்திருந்தால், இப்படி இவர்கள் கொழும்புவரை வந்து தெருவிலே சத்தம் போடுவார்களா?” என அவர்  பதிலுக்கு கேள்விகளை எழுப்பினார்.

இது இன்னொரு விதமான தப்பித்துக் கொள்ளல் முயற்சியாகும். அதாவது, முந்திய அரசாங்கத்தை விட, முந்திய ஆட்சியை விடத் தாம் எவ்வளவோ மேலானவர்கள். போராட்டத்தை நடத்தக்கூடிய சூழலை உங்களுக்குத் தந்திருக்கிறோம். இது போதாதா? என்று அவர் கேட்கிறார். இதே தொனியில் அவர் மட்டுமல்ல, இந்த ஆட்சியை ஆதரிக்கின்ற பலரும் பேசி வருகிறார்கள். இது எந்த வகையில் சிறப்புக்குரியதாகும் என்று புரியவில்லை.

மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்காத, மக்களுடைய தேவைகளை நிறைவேற்றாத எந்த ஆட்சியும் மக்கள் விரோத ஆட்சியே. முந்திய அரசாங்கத்திலிருந்து இந்த அரசாங்கம் எந்த வகையில் வேறுபடுகிறது? என்று யாராவது துலக்கமான அடையாளங்களை வெளிப்படுத்த முடியுமா? மேலோட்டமாகப் பார்த்தால், இரண்டு அரசாங்கத்துக்குமிடையில் பல வித்தியாசங்கள் உண்டென்று படும். ஆனால் அடிப்படையில் அப்படியல்ல. “இரண்டு அரசாங்கங்களுக்குமிடையில் நிறபேதங்கள் இருக்கலாம். குணபேதங்கள் கிடையாது” என்கிறார் ஒரு நண்பர். அவர் கூறுவது சரியானதே.

முந்திய அரசாங்கத்தின் முன்னே இருந்த பிரச்சினைகளில் எந்தப்பிரச்சினைகள் இந்த அரசாங்கத்தினால் தீர்த்து வைக்கப்பட்டிருக்கின்றன? தமிழ் மக்களுடைய பிரச்சினையை எடுத்துக்கொண்டால் கூட ஏதாவது முன்னேற்றகரமாக நடந்திருக்கிறதா? யுத்தக்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளைச் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் கடந்த அரசாங்கத்துக்கும் இந்த அரசாங்கத்துக்குமிடையில் என்ன வேறுபாடுகள் உண்டு? அரசியல் தீர்வைக்காணும் முயற்சியில் குறிப்பிடத்தக்க, நம்பிக்கையளிக்கும் நடவடிக்கைகள் ஏதாவது நடந்திருக்கிறதா? காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு ஏதாவது தீர்வு காணப்பட்டிருக்கிறதா? இப்போது கூடத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறதா? யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்கப்பட்டிருக்கிறதா? அல்லது அவர்களுக்கான விசேட வேலைத்திட்டங்களும் சிறப்பு நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளனவா? பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு எத்தகைய தீர்வுகள் முன்மொழியப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன? படையினரிடமிருந்து மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கிறதா? சிவில் வெளியிலிருந்து படையின் ஆதிக்கம் குறைக்கப்பட்டுள்ளதா? எதுவுமேயில்லை.

தவிர வேலை வாய்ப்புகள், தொழிற்துறை மேம்பாடு, புதிய உற்பத்தித்திட்டங்கள் என எதையாவது இந்தப் புதிய அரசாங்கம் முன்னெடுத்திருக்கிறதா? மலையக மக்களின் கோரிக்கைகள், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் என நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரதேசத்தினருக்கும் ஒவ்வொரு இனத்தினருக்கும் என பிரத்தியேகப் பிரச்சினைகளும் உண்டு. இவற்றை எல்லாம் புரிந்து கொண்டு செயற்படும் முனைப்பு அசாங்கத்திடம் உண்டா? குறைந்த பட்சம் தான் வழங்கிய வாக்குறுதிகளில் எத்தனை வீதமானவற்றை நிறைவேற்றியிருக்கிறது என்ற புள்ளிவிவரத்தையாவது ஆட்சியாளர்களால் முன்வைக்க முடியுமா?

இது எதையும் செய்யவில்லை என்றால், மக்கள் போராடுவார்கள். போராட்டங்கள் எல்லா இடங்களிலும் நடக்கும். அதுதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. வடக்கிலும் கிழக்கிலும் சிறிய கிராமங்களிலேயே தொடர்ச்சியான போராட்டங்கள் நடக்கத்தொடங்கியுள்ளன. இப்படி எல்லா இடங்களிலும் நடக்கின்ற போரட்டங்களின், எதிர்ப்புக்குரல்களின் நீட்சியும் தொடர்ச்சியுமே கொழும்பில் நடக்கின்ற போராட்டங்களாகும்.

தங்களுடைய இயல்பு வாழ்க்கையை வாழ முடியாத சூழல் தொடர்ந்து நிலவுகின்றபடியால் வேறு வழியின்றி மக்கள் போராட முன்வருகிறார்கள்! இல்லையென்றால் அவர்கள் எதற்காகப் போராடுகிறார்கள்? ஆகவே இந்த அடிப்படைப் பிரச்சினையைப் புரிந்து கொண்டு அரசாங்கம் செயற்பட வேணும். இது மாற்றங்களைச் செய்யக்கூடிய அரசாங்கம் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்தனர். அந்த நம்பிக்கை பொய்த்துப்போகின்ற நிலையில்தான் மக்கள் போராட்டங்களை நடத்துவதற்கு முன்வந்திருக்கிறார்கள். இது அவர்களுடைய பொறுமையில் உச்சக்கட்டத்தின் வெளிப்பாடு. இந்தப் போராட்டங்கள் வெறுமனே எதிர்ப்புக்குரலாக தொடர்ந்தும் இருக்கும் என்றில்லை. இலங்கையின் வரலாற்றை உன்னிப்பாக நோக்குவோருக்கு இந்த உண்மை புரியும்.

இலங்கை மக்கள் எப்போதும் போராட்டக் குணாம்சம் நிறைந்தவர்கள். அவர்கள் தங்களுடைய உரிமைகளுக்காகவும் பிரச்சினைகளுக்காகவும் தொடர்ச்சியாகப் போராடி வந்திருக்கின்றனர். உச்சமான ஆயுத அடக்குமுறையை அரசாங்கமோ பிற தரப்புகளோ பயன்படுத்தியபோதும் மக்கள் அதற்குக் கட்டுப்பட்டிருந்ததில்லை. அவர்கள் மீண்டும் மீண்டும் போராடியவரகள். இப்போது கூட இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக 2009 இல் நிகழ்த்தப்பட்ட உச்சகட்ட ஒடுக்குமுறையோடு தமிழ் மக்கள் அடங்கிப்போய் விடுவர் என்றே அரசாங்கமும் அதிகாரத்தரப்புகளும் எதிர்பார்த்தன. ஆனால் இந்த எதிர்பார்க்கையை முறியடித்துவிட்டு மீண்டும் தன்னெழுச்சியாகத் தமிழ் மக்கள் போராடுகிறார்கள். அதிலும் தாங்கள் தெரிவு செய்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைக்கூட எதிர்த்துப்போராட முன்வந்திருக்கிறார்கள். இது தனியே தமிழ் மக்களுடைய சிறப்புக்குணம் என்றில்லை. சிங்கள, முஸ்லிம், மலையக மக்களின் இயல்பும் இதுவே. இது இலங்கை மக்களின் மாண்பாகும்.

எனவே அரசாங்கம் இலங்கை மக்களின் குண இயல்பையும் இலங்கையின் வரலாற்றையும் முதலில் கற்றறிவது அவசியம். ஆனால் அதிகாரம் எப்போதும் கண்களை மறைத்து விடும். அதிலும் அறிவுக்கண்ணை அது திறக்காது. இதனால்தான் எப்போதும் அதிகாரத்தரப்புகள் நகமுடியாமல் மோதிச்சிதைகின்றன.

இந்த ஆட்சியும் அதிககாலம் நீடிக்கப்போவதில்லை என்பதை அதனுடைய நடவடிக்கைகளும் சிந்தனையும் வெளிப்படுத்துகின்றன. மாற்றங்களையும் புதுமைகளையும் செய்யாத எந்தத் தரப்பும் வரலாற்றில் முன்னகரவும் முடியாது. வரலாற்றைப் படைக்கவும் முடியாது.

கொழும்பைப் பாதுகாப்பது என்பது மக்களைப் பாதுகாப்பதாகும். இதை இன்னொரு வகையில் சொன்னால், ஆட்சியைப் பாதுகாப்பதாக இருந்தால் மக்களைப் பாதுகாக்க வேணும். மக்களுடைய பிரச்சினைகளைத்தீர்க்க வேணும். இல்லையென்றால், அந்தப் பிரச்சினைகள் அரசாங்கத்துக்கே பிரச்சினைகளாகும்.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.

",d.insertBefore(c.lastChild,d.firstChild)}function d(){var a=t.elements;return"string"==typeof a?a.split(" "):a}function e(a,b){var c=t.elements;"string"!=typeof c&&(c=c.join(" ")),"string"!=typeof a&&(a=a.join(" ")),t.elements=c+" "+a,j(b)}function f(a){var b=s[a[q]];return b||(b={},r++,a[q]=r,s[r]=b),b}function g(a,c,d){if(c||(c=b),l)return c.createElement(a);d||(d=f(c));var e;return e=d.cache[a]?d.cache[a].cloneNode():p.test(a)?(d.cache[a]=d.createElem(a)).cloneNode():d.createElem(a),!e.canHaveChildren||o.test(a)||e.tagUrn?e:d.frag.appendChild(e)}function h(a,c){if(a||(a=b),l)return a.createDocumentFragment();c=c||f(a);for(var e=c.frag.cloneNode(),g=0,h=d(),i=h.length;i>g;g++)e.createElement(h[g]);return e}function i(a,b){b.cache||(b.cache={},b.createElem=a.createElement,b.createFrag=a.createDocumentFragment,b.frag=b.createFrag()),a.createElement=function(c){return t.shivMethods?g(c,a,b):b.createElem(c)},a.createDocumentFragment=Function("h,f","return function(){var n=f.cloneNode(),c=n.createElement;h.shivMethods&&("+d().join().replace(/[\w\-:]+/g,function(a){return b.createElem(a),b.frag.createElement(a),'c("'+a+'")'})+");return n}")(t,b.frag)}function j(a){a||(a=b);var d=f(a);return!t.shivCSS||k||d.hasCSS||(d.hasCSS=!!c(a,"article,aside,dialog,figcaption,figure,footer,header,hgroup,main,nav,section{display:block}mark{background:#FF0;color:#000}template{display:none}")),l||i(a,d),a}var k,l,m="3.7.2",n=a.html5||{},o=/^<|^(?:button|map|select|textarea|object|iframe|option|optgroup)$/i,p=/^(?:a|b|code|div|fieldset|h1|h2|h3|h4|h5|h6|i|label|li|ol|p|q|span|strong|style|table|tbody|td|th|tr|ul)$/i,q="_html5shiv",r=0,s={};!function(){try{var a=b.createElement("a");a.innerHTML="",k="hidden"in a,l=1==a.childNodes.length||function(){b.createElement("a");var a=b.createDocumentFragment();return"undefined"==typeof a.cloneNode||"undefined"==typeof a.createDocumentFragment||"undefined"==typeof a.createElement}()}catch(c){k=!0,l=!0}}();var t={elements:n.elements||"abbr article aside audio bdi canvas data datalist details dialog figcaption figure footer header hgroup main mark meter nav output picture progress section summary template time video",version:m,shivCSS:n.shivCSS!==!1,supportsUnknownElements:l,shivMethods:n.shivMethods!==!1,type:"default",shivDocument:j,createElement:g,createDocumentFragment:h,addElements:e};a.html5=t,j(b)}(this,document);',c.insertBefore(e,d),b=42===f.offsetWidth,c.removeChild(e),{matches:b,media:a}}}(a.document)}(this),function(a){"use strict";function b(){v(!0)}var c={};a.respond=c,c.update=function(){};var d=[],e=function(){var b=!1;try{b=new a.XMLHttpRequest}catch(c){b=new a.ActiveXObject("Microsoft.XMLHTTP")}return function(){return b}}(),f=function(a,b){var c=e();c&&(c.open("GET",a,!0),c.onreadystatechange=function(){4!==c.readyState||200!==c.status&&304!==c.status||b(c.responseText)},4!==c.readyState&&c.send(null))},g=function(a){return a.replace(c.regex.minmaxwh,"").match(c.regex.other)};if(c.ajax=f,c.queue=d,c.unsupportedmq=g,c.regex={media:/@media[^\{]+\{([^\{\}]*\{[^\}\{]*\})+/gi,keyframes:/@(?:\-(?:o|moz|webkit)\-)?keyframes[^\{]+\{(?:[^\{\}]*\{[^\}\{]*\})+[^\}]*\}/gi,comments:/\/\*[^*]*\*+([^/][^*]*\*+)*\//gi,urls:/(url\()['"]?([^\/\)'"][^:\)'"]+)['"]?(\))/g,findStyles:/@media *([^\{]+)\{([\S\s]+?)$/,only:/(only\s+)?([a-zA-Z]+)\s?/,minw:/\(\s*min\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,maxw:/\(\s*max\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,minmaxwh:/\(\s*m(in|ax)\-(height|width)\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/gi,other:/\([^\)]*\)/g},c.mediaQueriesSupported=a.matchMedia&&null!==a.matchMedia("only all")&&a.matchMedia("only all").matches,!c.mediaQueriesSupported){var h,i,j,k=a.document,l=k.documentElement,m=[],n=[],o=[],p={},q=30,r=k.getElementsByTagName("head")[0]||l,s=k.getElementsByTagName("base")[0],t=r.getElementsByTagName("link"),u=function(){var a,b=k.createElement("div"),c=k.body,d=l.style.fontSize,e=c&&c.style.fontSize,f=!1;return b.style.cssText="position:absolute;font-size:1em;width:1em",c||(c=f=k.createElement("body"),c.style.background="none"),l.style.fontSize="100%",c.style.fontSize="100%",c.appendChild(b),f&&l.insertBefore(c,l.firstChild),a=b.offsetWidth,f?l.removeChild(c):c.removeChild(b),l.style.fontSize=d,e&&(c.style.fontSize=e),a=j=parseFloat(a)},v=function(b){var c="clientWidth",d=l[c],e="CSS1Compat"===k.compatMode&&d||k.body[c]||d,f={},g=t[t.length-1],p=(new Date).getTime();if(b&&h&&q>p-h)return a.clearTimeout(i),i=a.setTimeout(v,q),void 0;h=p;for(var s in m)if(m.hasOwnProperty(s)){var w=m[s],x=w.minw,y=w.maxw,z=null===x,A=null===y,B="em";x&&(x=parseFloat(x)*(x.indexOf(B)>-1?j||u():1)),y&&(y=parseFloat(y)*(y.indexOf(B)>-1?j||u():1)),w.hasquery&&(z&&A||!(z||e>=x)||!(A||y>=e))||(f[w.media]||(f[w.media]=[]),f[w.media].push(n[w.rules]))}for(var C in o)o.hasOwnProperty(C)&&o[C]&&o[C].parentNode===r&&r.removeChild(o[C]);o.length=0;for(var D in f)if(f.hasOwnProperty(D)){var E=k.createElement("style"),F=f[D].join("\n");E.type="text/css",E.media=D,r.insertBefore(E,g.nextSibling),E.styleSheet?E.styleSheet.cssText=F:E.appendChild(k.createTextNode(F)),o.push(E)}},w=function(a,b,d){var e=a.replace(c.regex.comments,"").replace(c.regex.keyframes,"").match(c.regex.media),f=e&&e.length||0;b=b.substring(0,b.lastIndexOf("/"));var h=function(a){return a.replace(c.regex.urls,"$1"+b+"$2$3")},i=!f&&d;b.length&&(b+="/"),i&&(f=1);for(var j=0;f>j;j++){var k,l,o,p;i?(k=d,n.push(h(a))):(k=e[j].match(c.regex.findStyles)&&RegExp.$1,n.push(RegExp.$2&&h(RegExp.$2))),o=k.split(","),p=o.length;for(var q=0;p>q;q++)l=o[q],g(l)||m.push({media:l.split("(")[0].match(c.regex.only)&&RegExp.$2||"all",rules:n.length-1,hasquery:l.indexOf("(")>-1,minw:l.match(c.regex.minw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||""),maxw:l.match(c.regex.maxw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||"")})}v()},x=function(){if(d.length){var b=d.shift();f(b.href,function(c){w(c,b.href,b.media),p[b.href]=!0,a.setTimeout(function(){x()},0)})}},y=function(){for(var b=0;b