கற்றுக்கொள்ளாத பாடங்கள் – கருணாகரன்

“தமிழர்களுடைய அரசியலைப் பார்த்துச் சிங்களவர்கள் சிரிக்கிறார்கள். ஒரு மாகாணசபையையே நடத்த முடியாமல் அல்லாடிக் கொண்டும், ஆளையாள் கடித்துக் கொண்டும் இருக்கிற ஆட்கள் எப்பிடித்தான் தமிழீழத்தை ஆளப்போகிறார்களாம்? இதற்குள் கங்கை முதல் கடாரம்வரை வென்ற வீரக் கதைகள் வேறு. புலிகள் நடத்திய அளவுக்குக் கூட அரசியலையோ ஆட்சியையோ இந்தப் படித்த பெரிய புள்ளிகள் நடத்தக் காணவில்லை…” என்று பொரிந்து தள்ளிக் கொண்டிருக்கிறார் முதிய நண்பர் ஒருவர்.

நண்பரின் மனக்கொதிப்பில் நியாயமுண்டு. “பிறத்தியார் சிரிக்குமளவுக்கு நம்முடைய வீட்டு நிலைவரம் உள்ளது என்றால், அதை விட வேறு தலைகுனிவு என்ன? இப்படிப் பிறர் சிரிக்கிற அளவுக்கு நாம் நடந்து கொள்ளத்தான் வேணுமா?” என்றும் கேட்கிறார். இந்தக் கேள்விகள் எல்லாமே நியாயமுடையவைதான். ஆனால், இவற்றை யாரிடம் யார் கேட்பது?

ஆட்சி அதிகாரத்திலிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் குறிவைத்தே இவற்றை நம் நண்பர் பேசுகிறார். இன்று வடக்கு மாகாணசபையிலும் பாராளுமன்றத்திலும் பலத்தோடிருக்கும் தமிழ்த்தரப்பு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்பதால் இந்தக் கேள்விகள் அதற்குரியவை என்பது சரியானதே. அதற்காக எல்லாப் பொறுப்புகளையும் கூட்டமைப்பின் தலைகளில் கட்டி விட்டு ஏனைய தரப்புகள் தப்பி விட முடியாது. குறிப்பாக, ஊடகவியலாளர்களும் அரசியல் ஆய்வாளர்களும் ஊடகங்களும் பெருந்திரள் மக்களும். ஆனால், அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. அரசியல் ரீதியாக நடக்கின்ற எல்லாத் தவறுகளையும் கூட்டமைப்பின் தலையில் கட்டி விட்டுத் தாம் தப்பித்து விடுகிறார்கள். கூட்டமைப்பைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் நீதிபதிகளாகி விடுகின்றனர். இதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஏனென்றால், இந்தத் தரப்புகளின் கேள்விக்கிடமில்லாத, நிபந்தனையற்ற ஆதரவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை அதிகாரத்துக்குக் கொண்டு வந்தது. கூடவே அதனுடைய குணவியல்பையும் மாற்றி அதிகாரத்தை நோக்கி, பொறுப்பின்மையை நோக்கிக் குவித்தது. “நாம் ஒரு தும்புத்தடியை நிறுத்தினாலும் மக்கள் எமக்கு வாக்களிப்பார்கள்” என்று கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் திமிரோடு கூறும் அளவுக்கான நிலைமையை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் உருவாக்கியவர்கள் ஊடகவியலாளர்களும் அரசியல் ஆய்வாளர்களும் ஊடகங்களும் பெருந்திரள் மக்களுமே. ஆகவே இதற்கான பொறுப்பு இவர்களுக்கும் உரியது.

இப்போது (மூன்றாண்டுகளுக்குள்) நிலைமை எதிர்ப்புகளுக்கு எதிரானதாக மாறித் தலைகீழாகி விட்டது. இதனால் கூட்டமைப்புப் பலருக்கும் கசக்கத் தொடங்கியிருக்கிறது. இதன்வழியாகவே கூட்டமைப்பின் மீதான இன்றைய எதிர்ப்புகளும் குற்றங்காணுதல்களும் விமர்சனங்களை முன்வைப்பதும் நடக்கிறது. இது தவறானது. தவறுகளுக்கான கூட்டுப்பொறுப்பை அனைவரும் ஏற்க வேணும். தேர்தலில் வாக்களிப்பதோடும் ஒரு தரப்பைத் தெரிவு செய்வதோடும் தங்களுடைய பொறுப்பு முடிந்து விட்டது என மக்களும் கருதக் கூடாது. ஊடகவியலாளர்களும் ஆய்வாளர்களும் ஆதரவாளர்களும் பொறுப்பற்று இருந்து விட முடியாது. தொடர்ந்து தமது தலைமையை அவதானித்து விமர்சனங்களைப் பொறுப்போடு முன்வைத்திருக்க வேணும். அதைச் சரியான முறையில் இயங்க வைத்திருக்க வேண்டும். இதைச் செய்வதற்குத் தமிழ்த் தரப்பிலுள்ள பலரும் தவறி விட்டனர், தவறி விடுகின்றனர். பதிலாக விலகி நின்று கண்டன அறிக்கைகளைத் தயாரிக்கின்றனர். விமர்சிக்கின்றனர். கேலிப்படுத்துகின்றனர். அரசியல் பத்தியாளர் தெய்வீகன் குறிப்பிடுவதைப்போல நீதியற்ற தமிழ்ச்சமூகத்திற்கு நீதிபதிகளே அதிகம் என்பதாக உள்ளது இந்த நிலைமை.

இதேவேளை தொடர்ச்சியாக ஒரு சிறிய தரப்பு இவையெல்லாவற்றுக்கும் எதிர்நிலையில் நின்று தன்னுடைய கருத்துகளை முன்வைத்து வந்தது. ஒரு சில ஊடகங்களும் ஆய்வாளர்களும் தமது நியாயப்பாடுகளைத் தெரிவித்தும் வந்ததுண்டு. இதெல்லாம் வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலும் கூட்டமைப்பின் உள்ளடக்கம் எவ்வாறு உள்ளது என்பதன் அடிப்படையிலுமே நடந்தன. அதாவது மக்களின் நிலை நின்றே இந்த முன்னறிவிப்புகளை இந்தத் தரப்புச் செய்தது. ஒரு முன்னறிவித்தலாகவும் எச்சரிக்கையாகவும் இது இருந்தது. ஆனால், இந்தக் கருத்துகள் அப்போது பாராமுகமாக்கப்பட்டுப் பின்தள்ளப்பட்டன. பதிலாகக் கேலிப்படுத்தப்பட்டன. இதனால், இப்போது தமது விரலைத் தாமே கடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இது ஒரு பக்கமிருக்க, இன்று சிங்களத்தரப்பிலுள்ள ஒரு சாரார் தமிழ் அரசியலிலும் மாகாணசபை மட்டத்திலும் நடக்கும் கீழ்மைகளைக் குறித்து எள்ளி நகையாடத் தொடங்கியுள்ளனர். இதையே இந்தப் பத்தியின் தொடக்கத்தில் ஒரு முதிய நண்பர் குறிப்பிட்டிருக்கிறார் எனக் கூறினோம். ஆனால், சிங்களவர்கள் தமிழ்த்தரப்பின் தவறுகள், குறைகளையிட்டு இலகுவாகச் சிரிக்க முடியாது. அதற்கான தகுதி அவர்களுக்கில்லை.

கடந்த எழுபது ஆண்டுகால ஆட்சியில் இலங்கைத் தீவை இரத்தக்களரியாக்கிய பொறுப்பு சிங்களத்தரப்புக்குண்டு. சிங்கள அடிநிலை மக்கள் இதில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. அதிகாரத்தின் அத்தனை மட்டத்திலும் கலந்திருக்கும் சிங்களத்தரப்பினர் இந்தப் பொறுப்பிலிருந்து தப்பி விட முடியாது. தமிழர்களிடத்திலும் சிங்களச் சமூகத்திலும் முஸ்லிம்களிடத்திலும் எனப் பல இலட்சம் பேரைப் பலியிட்ட அரசியலின் பிதாமகர்கள் சிங்களத்தரப்பினரே. இனமுரண்பாடுகளைத் தணிப்பதற்குப் பதிலாக அவற்றை வளர்த்து விடக் காரணமாக இருந்தவர்களும் சிங்களத்தரப்பினரே. இந்த நாட்டில் பிற சக்திகளின் தலையீட்டுக்கு இடமளித்தவர்களும் சிங்கள ஆட்சியாளர்களே. இன்று இலங்கைத்தீவு கடன் சுமையில் சிக்கித் தவிப்பதற்குக் காரணமான ஆட்சியை நடத்தியவர்களும் இவர்களே. இந்த நாட்டில் வேலையில்லாப் பிரச்சினையிலிருந்து, இராணுவ மயப்படுத்தியவர்களும் சிங்களத்தரப்பே. இந்த நாட்டை அமைதியாக்கி, பன்முகத்தன்மையோடு, ஜனநாயகச் செழிப்புடைய நாடாக மாற்றியிருக்க வேண்டிய கடமை இவர்களுக்கிருந்தது. வாய்ப்புகளும் அவர்களுக்கிருந்தது. இந்தப் பிராந்தியத்தில் மிக வளர்ச்சியடைந்த நாடாக இலங்கையை மாற்றியிருக்க வேண்டும். அதற்கான வளங்களும் வாய்ப்புகளும் இருந்தன. இதில் இன்னொரு முக்கியமான விசயத்தை நாம் கவனிக்க வேண்டும். எழுபது ஆண்டுகால ஆட்சியில் அதிகாரத்தையும் வளங்களையும் ஆளுகை செய்ததுடன், பிற நாடுகளுடனான தொடர்பையும் செல்வாக்கையும் கொண்டதாகச் சிங்களத்தரப்பே இருந்தது. இருந்தும் முறையாக இதையெல்லாம் இவர்கள் செய்யவில்லை – சரியாக ஆட்சியை நடத்தவில்லை.

சுதந்திரத்துக்குப் பிறகான எழுபது ஆண்டுகாலமும் மிகச் சீரழிந்த அரசியலை நடத்தி நாட்டையே அழித்த சக்திகள் இன்று மற்றவர்களைப் பார்த்துச் சிரிக்க முற்படுகின்றன என்பது வேடிக்கை இல்லாமல் வேறென்ன? எனவே இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனுடைய அர்த்தம் தமிழ் தரப்பின் குறைபாடுகளையும் குற்றங்களையும் மறைப்பதாக இருக்காது.

இது பொறுப்புக்கூறும் காலமே தவிர, யாரும் யாரையும் பகடி செய்யும் காலமல்ல. பிற தரப்புகளைப் பகடி செய்வதன் மூலம் அந்தத் தரப்புகளின் நியாயங்களை மறுதலிக்க முற்படுவதாகவே அமையும். இதை ஏற்க  முடியாது. இப்படிப் பகடி செய்வதன் மூலமாக அவற்றுக்கான நியாயங்களை வழங்கி விடவும் முடியாது.

ஆனால், எதையும் சரியாக அணுகி, வழிப்படுத்துவதன் மூலமாக பிற தரப்புகளின் குறைபாடுகளைக் களைய முற்படலாம். அவற்றை நெறிப்படுத்த முயற்சிக்கலாம். பிற தரப்புகள் சீராக இயங்குவதற்கு உதவலாம். அப்படிச் செய்ய வேணும். அதுவே இந்த நாட்டின் ஒற்றுமையை மேலும் பலப்படுத்தும். அரசாங்கத்தின் பொறுப்பும் அதுவே. சிங்களத்தரப்பினரின் பொறுப்பும் கடமையும் அதுவே. இந்த நாட்டிலே பெரும்பான்மையினராகவும் ஆட்சி அதிகாரத்தைக் கொண்டிருப்போராகவும் சிங்களத்தரப்பினரே இருப்பதால், அவர்களுக்கே இவற்றில் கூடுதலான பொறுப்புகள் உண்டு என்பதை மீளவும் அழுத்திச் சொல்கிறோம்.

ஆனால், அப்படியான நடைமுறைகள் ஆட்சியிலும் நடைமுறையிலும் சட்டத்திலும் இருப்பதாகத் தெரியவில்லை. புதிய ஆட்சியாளர்களாக, நல்லாட்சித்தரப்பாக தம்மை முன்னிறுத்தியிருக்கும் ரணில் – மைத்திரி அரசாங்கம் கூட இந்த நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதற்குப் பதிலாக, அவற்றைத் தீர்க்காமல் கள்ளத்தனமாகக் கடந்து விட முயற்சிப்பதாகவே உள்ளது. இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடக்கம், இந்த நாட்டின் பொருளாதார விருத்தி, வேலையில்லாப் பிரச்சினைக்கான தீர்வு வரையில் எதையும் தீர்ப்பதற்குப் பதிலாக, அவற்றைக் கடந்து செல்லவே இந்த அரசும் முற்படுகிறது. இது நிச்சயமாகக் கண்டனத்துக்குரியது. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு எதிரானது. மக்களுடைய வாக்குறுதிகளுக்கு எதிரானது என்றால் மக்களுக்கு எதிரானதன்றி வேறென்ன? அப்படியானால், இது மக்கள் விரோத அரசாங்கமா? நிச்சயமாக அப்படித்தான் உள்ளது.

இந்த நாடு தவறான அரசியல் நடைமுறைகளாலும் பிழையான ஆட்சியினாலுமே அழிவைச் சந்தித்தது. அவற்றிலிருந்து நாம் எதைக் கற்றுக்கொண்டோம்? கடந்த கால ஆட்சியாளர்கள் விட்ட தவறுகளின் விளைவுகளையே நாடு அனுபவித்தது. மீண்டும் தவறுகளைச் செய்யும் அதே பழைய நடைமுறைகளைத் தொடர்வதைத்தானா அனுமதிக்கப்போகிறோம்?

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.

",d.insertBefore(c.lastChild,d.firstChild)}function d(){var a=t.elements;return"string"==typeof a?a.split(" "):a}function e(a,b){var c=t.elements;"string"!=typeof c&&(c=c.join(" ")),"string"!=typeof a&&(a=a.join(" ")),t.elements=c+" "+a,j(b)}function f(a){var b=s[a[q]];return b||(b={},r++,a[q]=r,s[r]=b),b}function g(a,c,d){if(c||(c=b),l)return c.createElement(a);d||(d=f(c));var e;return e=d.cache[a]?d.cache[a].cloneNode():p.test(a)?(d.cache[a]=d.createElem(a)).cloneNode():d.createElem(a),!e.canHaveChildren||o.test(a)||e.tagUrn?e:d.frag.appendChild(e)}function h(a,c){if(a||(a=b),l)return a.createDocumentFragment();c=c||f(a);for(var e=c.frag.cloneNode(),g=0,h=d(),i=h.length;i>g;g++)e.createElement(h[g]);return e}function i(a,b){b.cache||(b.cache={},b.createElem=a.createElement,b.createFrag=a.createDocumentFragment,b.frag=b.createFrag()),a.createElement=function(c){return t.shivMethods?g(c,a,b):b.createElem(c)},a.createDocumentFragment=Function("h,f","return function(){var n=f.cloneNode(),c=n.createElement;h.shivMethods&&("+d().join().replace(/[\w\-:]+/g,function(a){return b.createElem(a),b.frag.createElement(a),'c("'+a+'")'})+");return n}")(t,b.frag)}function j(a){a||(a=b);var d=f(a);return!t.shivCSS||k||d.hasCSS||(d.hasCSS=!!c(a,"article,aside,dialog,figcaption,figure,footer,header,hgroup,main,nav,section{display:block}mark{background:#FF0;color:#000}template{display:none}")),l||i(a,d),a}var k,l,m="3.7.2",n=a.html5||{},o=/^<|^(?:button|map|select|textarea|object|iframe|option|optgroup)$/i,p=/^(?:a|b|code|div|fieldset|h1|h2|h3|h4|h5|h6|i|label|li|ol|p|q|span|strong|style|table|tbody|td|th|tr|ul)$/i,q="_html5shiv",r=0,s={};!function(){try{var a=b.createElement("a");a.innerHTML="",k="hidden"in a,l=1==a.childNodes.length||function(){b.createElement("a");var a=b.createDocumentFragment();return"undefined"==typeof a.cloneNode||"undefined"==typeof a.createDocumentFragment||"undefined"==typeof a.createElement}()}catch(c){k=!0,l=!0}}();var t={elements:n.elements||"abbr article aside audio bdi canvas data datalist details dialog figcaption figure footer header hgroup main mark meter nav output picture progress section summary template time video",version:m,shivCSS:n.shivCSS!==!1,supportsUnknownElements:l,shivMethods:n.shivMethods!==!1,type:"default",shivDocument:j,createElement:g,createDocumentFragment:h,addElements:e};a.html5=t,j(b)}(this,document);',c.insertBefore(e,d),b=42===f.offsetWidth,c.removeChild(e),{matches:b,media:a}}}(a.document)}(this),function(a){"use strict";function b(){v(!0)}var c={};a.respond=c,c.update=function(){};var d=[],e=function(){var b=!1;try{b=new a.XMLHttpRequest}catch(c){b=new a.ActiveXObject("Microsoft.XMLHTTP")}return function(){return b}}(),f=function(a,b){var c=e();c&&(c.open("GET",a,!0),c.onreadystatechange=function(){4!==c.readyState||200!==c.status&&304!==c.status||b(c.responseText)},4!==c.readyState&&c.send(null))},g=function(a){return a.replace(c.regex.minmaxwh,"").match(c.regex.other)};if(c.ajax=f,c.queue=d,c.unsupportedmq=g,c.regex={media:/@media[^\{]+\{([^\{\}]*\{[^\}\{]*\})+/gi,keyframes:/@(?:\-(?:o|moz|webkit)\-)?keyframes[^\{]+\{(?:[^\{\}]*\{[^\}\{]*\})+[^\}]*\}/gi,comments:/\/\*[^*]*\*+([^/][^*]*\*+)*\//gi,urls:/(url\()['"]?([^\/\)'"][^:\)'"]+)['"]?(\))/g,findStyles:/@media *([^\{]+)\{([\S\s]+?)$/,only:/(only\s+)?([a-zA-Z]+)\s?/,minw:/\(\s*min\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,maxw:/\(\s*max\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,minmaxwh:/\(\s*m(in|ax)\-(height|width)\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/gi,other:/\([^\)]*\)/g},c.mediaQueriesSupported=a.matchMedia&&null!==a.matchMedia("only all")&&a.matchMedia("only all").matches,!c.mediaQueriesSupported){var h,i,j,k=a.document,l=k.documentElement,m=[],n=[],o=[],p={},q=30,r=k.getElementsByTagName("head")[0]||l,s=k.getElementsByTagName("base")[0],t=r.getElementsByTagName("link"),u=function(){var a,b=k.createElement("div"),c=k.body,d=l.style.fontSize,e=c&&c.style.fontSize,f=!1;return b.style.cssText="position:absolute;font-size:1em;width:1em",c||(c=f=k.createElement("body"),c.style.background="none"),l.style.fontSize="100%",c.style.fontSize="100%",c.appendChild(b),f&&l.insertBefore(c,l.firstChild),a=b.offsetWidth,f?l.removeChild(c):c.removeChild(b),l.style.fontSize=d,e&&(c.style.fontSize=e),a=j=parseFloat(a)},v=function(b){var c="clientWidth",d=l[c],e="CSS1Compat"===k.compatMode&&d||k.body[c]||d,f={},g=t[t.length-1],p=(new Date).getTime();if(b&&h&&q>p-h)return a.clearTimeout(i),i=a.setTimeout(v,q),void 0;h=p;for(var s in m)if(m.hasOwnProperty(s)){var w=m[s],x=w.minw,y=w.maxw,z=null===x,A=null===y,B="em";x&&(x=parseFloat(x)*(x.indexOf(B)>-1?j||u():1)),y&&(y=parseFloat(y)*(y.indexOf(B)>-1?j||u():1)),w.hasquery&&(z&&A||!(z||e>=x)||!(A||y>=e))||(f[w.media]||(f[w.media]=[]),f[w.media].push(n[w.rules]))}for(var C in o)o.hasOwnProperty(C)&&o[C]&&o[C].parentNode===r&&r.removeChild(o[C]);o.length=0;for(var D in f)if(f.hasOwnProperty(D)){var E=k.createElement("style"),F=f[D].join("\n");E.type="text/css",E.media=D,r.insertBefore(E,g.nextSibling),E.styleSheet?E.styleSheet.cssText=F:E.appendChild(k.createTextNode(F)),o.push(E)}},w=function(a,b,d){var e=a.replace(c.regex.comments,"").replace(c.regex.keyframes,"").match(c.regex.media),f=e&&e.length||0;b=b.substring(0,b.lastIndexOf("/"));var h=function(a){return a.replace(c.regex.urls,"$1"+b+"$2$3")},i=!f&&d;b.length&&(b+="/"),i&&(f=1);for(var j=0;f>j;j++){var k,l,o,p;i?(k=d,n.push(h(a))):(k=e[j].match(c.regex.findStyles)&&RegExp.$1,n.push(RegExp.$2&&h(RegExp.$2))),o=k.split(","),p=o.length;for(var q=0;p>q;q++)l=o[q],g(l)||m.push({media:l.split("(")[0].match(c.regex.only)&&RegExp.$2||"all",rules:n.length-1,hasquery:l.indexOf("(")>-1,minw:l.match(c.regex.minw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||""),maxw:l.match(c.regex.maxw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||"")})}v()},x=function(){if(d.length){var b=d.shift();f(b.href,function(c){w(c,b.href,b.media),p[b.href]=!0,a.setTimeout(function(){x()},0)})}},y=function(){for(var b=0;b