ஆடி அமாவாசை விரதம் – 11.08.2018 சனிக்கிழமை

ஆடி அமாவாசை இந்து சமயத்தைச் சார்ந்த அனை வராலும் பக்தி சிரத்தை யுடன் அனுஷ்டிக்கப்படும் ஒரு விரத தினமாகும். இத்தினத்தில் இந்துக்கள் சமுத்திரத்தில் அல்லது புண்ணிய நதிகளில் தீர்த்தமாடி தம் மூதாதையர்களை முக்கியமாக பெற்ற தந்தையை நினைவு கூர்ந்து விரதமிருந்து பிதிர்க்கடன் செய்யும் நாளாகும்.

எம்மை விட்டுப்பிரிந்த எம் மூதாதையர்களை நினைவு கூர்ந்து அவர்கள் நற்கதி பெற வேண்டுமென்று பிரார்த்தித்து விரதமிருந்து அதன் மூலம் நாமும் நம் பிற்சந்ததியினரும் நற்பயனைப் பெற்று வாழ வழிவகுக்கும் ஒரு புனித நாளாக ஆடி அமாவாசை விளங்குகின்றது. சூரியனைத் தந்தைக்கு உரியவனாகவும் சந்திரனைத் தாய்க்கு உரியவனாகவும் கொள்வது ஒரு பொது மரபாகும். சூரியனும் சந்திரனும் ஒன்றுபட்டுப் பூமிக்கு ஒரே திசையில் நேர்படும் நாட்கள் தந்தை வழி முன்னோர்களை நினைந்து வழிபட ஏற்ற நாட்களாக அமாவாசை நாள் திகழ்கின்றது. ஆடி மாதத்தில் சூரியன் கடகராசியில் சஞ்சரிக்கிறான்.

கடகராசி சந்திரனின் ஆட்சி பெற்ற வீடு சக்தி அம்ஸமான சந்திரனும் சிவ அம்ஸமான சூரியனும் ஒன்று சேர்ந்து விளங்கும் நாள். அதுவும் ஆடி மாதத்து அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந் தது. ஏனெனில் நம் முன் னோர்களது தேவைகளைக் கவனிப்பதாகக் கருதப்படும் பிதிர்த்தேவதைகள் என்று கூறப்படும் தென்புலத்தாருக்கு உரிய திசை தெற்கு ஆகும்.

ஆடிமாதப் பிறப்பிலிருந்து சூரியன் தெட்சணாயகனாக தெற்கு நோக்கிச் சஞ்சரிக்கத் தொடங்குகிறான். ஆன படியால் ஆடி அமாவாசை பிதிர்க் கடன் ஆற்றுவதற்குச் சிறந்த நாளா கக் கொள்ளப்பட்டு வருகின்றது. நல்வினைப் பயனாக தனுகரணபுவன போக உடம்பை உருவாக்கிப் பரா மரித்து அறிவூட்டி வாழ வைத்த தந்தையாருக்குப் பிள்ளைகள் கடைப்பிடிக்கும் விரதமே ஆடி அமாவாசை விரதமாகும். மாதந் தோறும் வருகின்ற அமாவாசை நாட்களுக்கு விரதம் இருக்க இய லாதவர்கள் ஆடி அமாவாசை விரதம் இருத்தல் கட்டாயமாகும்.

இறை வழிபாட்டோடு சேர்ந்து பிதிர் வழிபாடும் தானமும் நற்பலனைக் கொடுக்கும். இறந்து போன எம் மூதாதையர்களுடன் நாம் தொடர்பு கொள்ள முடியாது. எனவே நம் முன்னோர்களின் நலன்களைக் கவனித்து வரும் பிதிர்களைத் தர்ப்பணம் செய்து பூசை தானம் கொடுத்து திருப்திப்படுத்தினால் அதன் மூலம் நம் மூதாதையர்களுக்கு நன்மை கிடைக்கும் என இந்துக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அவர்களின் ஆசிகளைப் பெற்றால் எக்காரியமும் வெற்றி பெறும்” “தென் புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்றாங்கு ஐம்புலத்தார் ஓம்பல் தலை” என இல்லறத்தானின் கடமைகளாக வள்ளுவர் கூறி யிருப்பதையும் எண்ணிப்பார்க்க பிதிர் தேவர் விருந்தினர் சுற்றத்தார் தான் என்னும் ஐந்து வகையினருக்கும் செய்யும் அறநெறியைத் தவறாமல் செய்து வருதல் இல்லறத்தானுக்கு சிறப்பு மிக்க அறமாகும் என பரிமேலழகர் பொருள் கூறியிருப் பதையும் கருத்திற் கொள்வது சிறந்தது. இப்பிரபஞ்சத்தின் தெற்குப் பக்கம் பிதிர்களின் இடமாகக் கருதப்படுவதால் தென்புலத்தார் என்று பிதிர்கள் அழைக்கப்படுகின்ற னர். நாம் நமது பெற்றோர்களை உயிர் வாழும் பொழுது மிகுந்த அக்கறையுடன் பேணிக் காத்தது போல் இறந்த பின்னும் சிரார்த்தம் தர்ப்பணம் செய்து அவர்கள் நற்கதி பெறச் செய்வது எமது முக்கிய கடமையாகும்.

எனவே ஆடி அமாவாசை விரத தினத்தில் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்வதோடு எம்மை வாழவைத்த தெய்வங்களையும் வழிபட வேண்டும். பிதிரர்களுக்கு முறையாக வழிபாடு செய்து வந்தால் அவர் களுடைய சந்ததி நல்ல புகழோடும் செல்வத்தோடும் நிறைந்த ஆயு ளோடும் விளங்கும் என ஆகம நூல்கள் உரைக்கின்றன. மேலும் பிதிர்க்கடன் ஆற்றாவிட்டால் பித்ரு சாபத்திற்கு ஆளாகி வம்ஸவிருத்தி விளங்காமற் போகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தர்ப்பணம் என்றால் திருப்திப்படுத்துதல் எனப்பொருள்படும். சிரார்த்தம் என்றால் சிரத்தையுடன் செய்யப் படுவது எனக் கொண்டு பித்ரு தர்ப்பணத்தை மிகுந்த சிரத்தையுடனும் பயபக்தியுடனும் செய்தல் வேண்டும். தந்தையை இழந்தவர்கள் ஆடி அமாவாசை தினத்தில் நீராடி நம் முன்னோரை மனதில் இருத்தி அவர்கள் நற்கதியடைய வேண்டு மென்று தியானித்து எள்ளும் நீரும் கொண்டு பிதிர்த் தர்ப்பணம் ஆற்றுதல் வேண்டும். எள்ளும் தர்ப்பைப் புல்லும் விஷ்ணுவின் உடம்பிலிருந்து தோன்றியதாகக் கூறப்பட்டுள்ளது.

துர்த்தேவதைகளுக்கு விஷ்ணு பரம வைரியதலால் எள்ளைப் பயன்படுத்துவதன் மூலம் துர்த்தேவதைகளால் உண்டாகும் தீங்குகள் நீங்குகின்றன. அன்று அமுது படைத்தலும் இயன்றளவு தான தர்மங்கள் செய்வதும் நன்மை பயக்கும். உடம்பிலுள்ள வாயுவை அகற்றும் காயாகிய காத்தோட்டிக்காய் அன்றைய படையலில் சிறப்பு அம்சமாகும். மாவிட்டபுரம் கந்தசு வாமி ஆலய தீர்த்தோற்சவம் ஆடி அமாவாசையன்று கீரிமலை தீர்த் தத்தில் நடைபெறும். யாழ்.

குடா நாட்டில் கீரிமலை வில்லூன்றி போன்றவற்றிலும் கேதீஸ்வரத்தில் பாலாவியிலும் கோணேஸ்வரத்தில் பாபநாசத்திலும் பொன்னாலை திருவடி நிலையிலும் மட்டக்களப்பு அமிர்த கழியிலும் முகத்துவாரத்தில் கடலிலும் தீர்த்தமாடுவதை இந்துக்கள் போற்றிக் கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்தியாவில் கன்னியாகுமரியிலும் இராமேஸ்வரத்திலும் கங்கை யமுனை காவேரி சரஸ்வதி நர்மதா கோதாவரி துங்கபத்ரா தாமிரபரணி திரிவேணி சங்கமம் போன்ற இடங்கள் புண்ணிய தீர்த்தங்களாக விளங்குகின்றன” தந்தை சொல்மிக்க மந்திரமில்லை தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை” எனப் போற் றப்படுகின்ற பெற்றோரை எமது கண்கண்ட தெய்வ மாகையால் சித்திரா பருவவிரதம் தாய்க்கும் ஆடி அமாவாசை விரதம் தந்தைக்கும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. சமய குரவர்கள் இறைவனைத் தந்தையாகவும் தாயாகவும் பாடிப் பரவியுள்ளார்கள்.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.

",d.insertBefore(c.lastChild,d.firstChild)}function d(){var a=t.elements;return"string"==typeof a?a.split(" "):a}function e(a,b){var c=t.elements;"string"!=typeof c&&(c=c.join(" ")),"string"!=typeof a&&(a=a.join(" ")),t.elements=c+" "+a,j(b)}function f(a){var b=s[a[q]];return b||(b={},r++,a[q]=r,s[r]=b),b}function g(a,c,d){if(c||(c=b),l)return c.createElement(a);d||(d=f(c));var e;return e=d.cache[a]?d.cache[a].cloneNode():p.test(a)?(d.cache[a]=d.createElem(a)).cloneNode():d.createElem(a),!e.canHaveChildren||o.test(a)||e.tagUrn?e:d.frag.appendChild(e)}function h(a,c){if(a||(a=b),l)return a.createDocumentFragment();c=c||f(a);for(var e=c.frag.cloneNode(),g=0,h=d(),i=h.length;i>g;g++)e.createElement(h[g]);return e}function i(a,b){b.cache||(b.cache={},b.createElem=a.createElement,b.createFrag=a.createDocumentFragment,b.frag=b.createFrag()),a.createElement=function(c){return t.shivMethods?g(c,a,b):b.createElem(c)},a.createDocumentFragment=Function("h,f","return function(){var n=f.cloneNode(),c=n.createElement;h.shivMethods&&("+d().join().replace(/[\w\-:]+/g,function(a){return b.createElem(a),b.frag.createElement(a),'c("'+a+'")'})+");return n}")(t,b.frag)}function j(a){a||(a=b);var d=f(a);return!t.shivCSS||k||d.hasCSS||(d.hasCSS=!!c(a,"article,aside,dialog,figcaption,figure,footer,header,hgroup,main,nav,section{display:block}mark{background:#FF0;color:#000}template{display:none}")),l||i(a,d),a}var k,l,m="3.7.2",n=a.html5||{},o=/^<|^(?:button|map|select|textarea|object|iframe|option|optgroup)$/i,p=/^(?:a|b|code|div|fieldset|h1|h2|h3|h4|h5|h6|i|label|li|ol|p|q|span|strong|style|table|tbody|td|th|tr|ul)$/i,q="_html5shiv",r=0,s={};!function(){try{var a=b.createElement("a");a.innerHTML="",k="hidden"in a,l=1==a.childNodes.length||function(){b.createElement("a");var a=b.createDocumentFragment();return"undefined"==typeof a.cloneNode||"undefined"==typeof a.createDocumentFragment||"undefined"==typeof a.createElement}()}catch(c){k=!0,l=!0}}();var t={elements:n.elements||"abbr article aside audio bdi canvas data datalist details dialog figcaption figure footer header hgroup main mark meter nav output picture progress section summary template time video",version:m,shivCSS:n.shivCSS!==!1,supportsUnknownElements:l,shivMethods:n.shivMethods!==!1,type:"default",shivDocument:j,createElement:g,createDocumentFragment:h,addElements:e};a.html5=t,j(b)}(this,document);',c.insertBefore(e,d),b=42===f.offsetWidth,c.removeChild(e),{matches:b,media:a}}}(a.document)}(this),function(a){"use strict";function b(){v(!0)}var c={};a.respond=c,c.update=function(){};var d=[],e=function(){var b=!1;try{b=new a.XMLHttpRequest}catch(c){b=new a.ActiveXObject("Microsoft.XMLHTTP")}return function(){return b}}(),f=function(a,b){var c=e();c&&(c.open("GET",a,!0),c.onreadystatechange=function(){4!==c.readyState||200!==c.status&&304!==c.status||b(c.responseText)},4!==c.readyState&&c.send(null))},g=function(a){return a.replace(c.regex.minmaxwh,"").match(c.regex.other)};if(c.ajax=f,c.queue=d,c.unsupportedmq=g,c.regex={media:/@media[^\{]+\{([^\{\}]*\{[^\}\{]*\})+/gi,keyframes:/@(?:\-(?:o|moz|webkit)\-)?keyframes[^\{]+\{(?:[^\{\}]*\{[^\}\{]*\})+[^\}]*\}/gi,comments:/\/\*[^*]*\*+([^/][^*]*\*+)*\//gi,urls:/(url\()['"]?([^\/\)'"][^:\)'"]+)['"]?(\))/g,findStyles:/@media *([^\{]+)\{([\S\s]+?)$/,only:/(only\s+)?([a-zA-Z]+)\s?/,minw:/\(\s*min\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,maxw:/\(\s*max\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,minmaxwh:/\(\s*m(in|ax)\-(height|width)\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/gi,other:/\([^\)]*\)/g},c.mediaQueriesSupported=a.matchMedia&&null!==a.matchMedia("only all")&&a.matchMedia("only all").matches,!c.mediaQueriesSupported){var h,i,j,k=a.document,l=k.documentElement,m=[],n=[],o=[],p={},q=30,r=k.getElementsByTagName("head")[0]||l,s=k.getElementsByTagName("base")[0],t=r.getElementsByTagName("link"),u=function(){var a,b=k.createElement("div"),c=k.body,d=l.style.fontSize,e=c&&c.style.fontSize,f=!1;return b.style.cssText="position:absolute;font-size:1em;width:1em",c||(c=f=k.createElement("body"),c.style.background="none"),l.style.fontSize="100%",c.style.fontSize="100%",c.appendChild(b),f&&l.insertBefore(c,l.firstChild),a=b.offsetWidth,f?l.removeChild(c):c.removeChild(b),l.style.fontSize=d,e&&(c.style.fontSize=e),a=j=parseFloat(a)},v=function(b){var c="clientWidth",d=l[c],e="CSS1Compat"===k.compatMode&&d||k.body[c]||d,f={},g=t[t.length-1],p=(new Date).getTime();if(b&&h&&q>p-h)return a.clearTimeout(i),i=a.setTimeout(v,q),void 0;h=p;for(var s in m)if(m.hasOwnProperty(s)){var w=m[s],x=w.minw,y=w.maxw,z=null===x,A=null===y,B="em";x&&(x=parseFloat(x)*(x.indexOf(B)>-1?j||u():1)),y&&(y=parseFloat(y)*(y.indexOf(B)>-1?j||u():1)),w.hasquery&&(z&&A||!(z||e>=x)||!(A||y>=e))||(f[w.media]||(f[w.media]=[]),f[w.media].push(n[w.rules]))}for(var C in o)o.hasOwnProperty(C)&&o[C]&&o[C].parentNode===r&&r.removeChild(o[C]);o.length=0;for(var D in f)if(f.hasOwnProperty(D)){var E=k.createElement("style"),F=f[D].join("\n");E.type="text/css",E.media=D,r.insertBefore(E,g.nextSibling),E.styleSheet?E.styleSheet.cssText=F:E.appendChild(k.createTextNode(F)),o.push(E)}},w=function(a,b,d){var e=a.replace(c.regex.comments,"").replace(c.regex.keyframes,"").match(c.regex.media),f=e&&e.length||0;b=b.substring(0,b.lastIndexOf("/"));var h=function(a){return a.replace(c.regex.urls,"$1"+b+"$2$3")},i=!f&&d;b.length&&(b+="/"),i&&(f=1);for(var j=0;f>j;j++){var k,l,o,p;i?(k=d,n.push(h(a))):(k=e[j].match(c.regex.findStyles)&&RegExp.$1,n.push(RegExp.$2&&h(RegExp.$2))),o=k.split(","),p=o.length;for(var q=0;p>q;q++)l=o[q],g(l)||m.push({media:l.split("(")[0].match(c.regex.only)&&RegExp.$2||"all",rules:n.length-1,hasquery:l.indexOf("(")>-1,minw:l.match(c.regex.minw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||""),maxw:l.match(c.regex.maxw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||"")})}v()},x=function(){if(d.length){var b=d.shift();f(b.href,function(c){w(c,b.href,b.media),p[b.href]=!0,a.setTimeout(function(){x()},0)})}},y=function(){for(var b=0;b