சம்மந்தனின் கையில் திறப்பு எப்போது வந்தது? – கருணாகரன்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைப் பற்றி ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் பேசப்போவதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்மந்தன் திடீரென அறிவித்திருக்கிறார்.

சம்மந்தனுக்கு அரசியல் கைதிகளின் மீது எதற்காக இந்தத் திடீர்க்கரிசனை? இருந்தாற் போல என்ன இப்படியொரு ஞானோதயம்? எனப் பலரும் ஆச்சரியப்படுகிறார்கள்.

எல்லோருக்கும் ஏனிந்த ஆச்சரியமென்றால், கடந்த ஆண்டு அரசியல் கைதிகளின் விடுதலையைப் பற்றிப் பேசுவதற்காக ஏற்கனவே  விடுதலையானவர்கள்  சம்மந்தனைச் சந்திக்க முற்பட்டனர். அப்பொழுது அவர்களை  உதாசீனப்படுத்தியிருந்தார் சம்மந்தன். அந்தச் செய்தியும் வீடியோ மற்றும் ஒளிப்படக் காட்சியும் இணையத்தளங்களில் வைரலாகப் பரவிப் பெரும் பரபரப்பை உண்டாக்கின. அப்படியே அவை  சம்மந்தனுக்கும் கூட்டமைப்புக்கும் எதிரான உணர்வலைகளையும் உண்டாக்கியிருந்தன.

இந்தச் சம்பவத்தையிட்டுச் சம்மந்தனோ கூட்டமைப்போ இதுவரையில் மன்னிப்புக் கோரவும் இல்லை. வெட்கப்படவும் இல்லை. குறைந்த பட்சம் தமது தவறை உணர்ந்த மாதிரியும் இல்லை.

இந்த நிலையில் இருந்தாற் போல இப்பொழுது தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலையைப் பற்றிச் சம்மந்தன் பேசுகிறார் என்றால் நிச்சயமாக எவருக்கும் ஆச்சரியம் ஏற்படத்தானே செய்யும்!

ஆனால் இது ஒன்றும் உண்மையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் சங்கதி அல்ல என்பதே நாம் கவனிக்க வேண்டியது. இது தற்போதைய ரணில் – மைத்திரி – சம்மந்தன் அரசாங்கத்தினுடைய நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் அரசும் இணைந்து நடாத்தும் ஒரு அரசியல் நடவடிக்கை. அல்லது நாடகம்.
SAMPANTHA KILI
தமிழ் அரசியல் கைதிகளுக்குப் பொது மன்னிப்பை வழங்குவதன் மூலம் போர்க்குற்றச்சாட்டுக்குள்ளாகியிருக்கும் இராணுவத்தினருக்கும் அரச பிரதிநிதிகளுக்கும் பொது மன்னிப்பை வழங்கலாம் என்பது அரசாங்கத்தின் திட்டம்.

இதன் மூலம் சர்வதேச நெருக்குவாரங்களிலிருந்து இலங்கையை நிரந்தரமாக விடுவித்துக் கொள்ளலாம். குறிப்பாகத் தலைக்கு மேலே எப்போதும் தொங்கிக் கொண்டிருக்கும் “போர்க்குற்றம் என்ற அபாயக் கத்தி”யைத் தூக்கித் தூர வீசி விடலாம். இதன் மூலம் சிங்கள மக்களின் பேராதரவைப் பெற்றுக் கொள்ளலாம். ஆகவே தாம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் பெரியதொரு பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண்பதற்காகவே அரசாங்கம் முயற்சி எடுத்துள்ளது.

இதன்படி ஒட்டுமொத்தமாகவே அனைத்து அரசியல் குற்றவாளிகளுக்கும் பொது மன்னிப்பு என்று அறிவித்து விட்டால், அதிலே யுத்தக் குற்றங்களுக்குட்பட்டிருக்கும் படைத்தரப்பினரையும் அரசியல் தலைவர்களையும் காப்பாற்றி விடலாம். யுத்தக் குற்றம் என்பது அரசியல் பிரச்சினையின் விளைவான ஒன்று. ஆகவே அரசியல் ரீதியான கணக்குகள் அத்தனையையும் பொது மன்னிப்பின் கீழ் ரத்துச் செய்வது என்பதே இந்தத்திட்டத்தின் அடிப்படை. பகை மறப்பு, மீளிணக்கம், அமைதித்தீர்வுக்கு பொது மன்னிப்பு அவசியமான ஒன்று எனவும் இதற்கு வியாக்கியானப்படுத்தப்படுகிறது. ஆகவே இதையெல்லாம் ஒருங்கிணைத்து அரசாங்கம் தனக்கான நிகழ்ச்சித்திட்டத்தை வலு சிறப்பாகச் செய்துள்ளது.

இது வெற்றியளிக்குமாக இருந்தால் சிங்களச் சமூகத்தில் எப்போதும் கொதிப்பாக இருக்கும் ஒரு பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதாக அமைந்துவிடும். அப்படி அமையும்போது யுத்தக் குற்றங்களுக்கு இலகுவாகத் தீர்வைக் கண்டு விட்டதாக அரசாங்கம் சிங்கள மக்களிடம் தன்னுடைய மதிப்பை மேலும் உயர்த்திக் கொள்ளும். இதன்மூலம் பொருளாதார நெருக்கடி, அரசியல் சிக்கல்கள் போன்றவற்றினால் கசப்படைந்திருக்கும் சிங்களச் சமூகத்தின் மனதில் தேனை ஊற்றிக் கொள்ளலாம். இது தற்போதைய அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருக்கும் சரிவைச் சற்று நிமிர்த்தி விடலாம். இதுவே அரசாங்கத்தின் திட்டம்.

இதில் தமிழ் அரசியல் கைதிகளுடைய விடுதலையும் உள்ளடக்கப்பட்டிருப்பதால் தமிழ்த்தரப்பிலிருந்தும் இந்தப் பொது மன்னிப்புக்கு எதிரான குரல்கள் மேலெழாது – ஆதரவு கிடைக்கும் என்பது அரசாங்கத்தின் கணிப்பு. அதாவது தமக்குக் கிடைக்கும் பெரிய லாபத்துக்காக (போர்க்குற்றவாளிகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்தல்) சிறிய விட்டுக் கொடுப்பொன்றைச் செய்து கொள்வது. அப்படிச் செய்து தமிழர்களின் வாயை அடைத்து விடுவது. (ஜெனிவாக் காவடியை இல்லாமல் செய்வது)  இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் சொல்லும் ஒரு முதுமொழி நினைவுக்கு வருகிறது, அதாவது இதைத்தான் “இறால் போட்டு சுறாப்பிடிப்பது” என்பது.

எனவே இந்த விசயத்தைப்பற்றி அரசாங்கம் எல்லாத் தரப்பினரோடும் இரகசிய நிகழ்ச்சி நிரலில் பேசியுள்ளது.

இதைத் தொடர்ந்து அரசாங்கத்தின் இந்த நிகழ்ச்சி நிரலின்படி சம்மந்தன் ஒரு வழியிலும் இன்னொரு வழியில்  அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன்  உள்ளிட்ட பலரும் அரசியல் கைதிகளுக்குப் பொது மன்னிக்கு வழங்கலாம் என்று சொல்லத் தொடங்கியிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து இந்த விடயம் அமைச்சரவை மட்டத்திற்குக் கொண்டு செல்லப்படலாம். சிலவேளை அமைச்சரவைத்தீர்மானத்திற்கு அமைய ஜனாதிபதி பொதுமன்னிப்பைப் பிரகடனப்படுத்தவும் கூடும்.

இதையே மெல்லியதொரு மனிதாபிமான அரசியல் நிறத்தைப் பூசி, தமிழர்களின் காதில் பூவைச் சொருகும் விதமாக “அரசியல் கைதிகளைப் பற்றி அரசுடன் பேசவுள்ளேன்” என்று கதை விட்டிருக்கிறார் சம்மந்தன். சனங்களை மாங்காய் மடையர்கள் என எண்ணுவதன் விளைவே இது என்கிறார் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தின் உயர்மட்டப் போராளியாக இருந்த ஒருவர். இதை ஒத்த கருத்தினையே வெளிப்படுத்தினார் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மூத்த போராளி ஒருவரும். இவர் நீண்டகாலம் அரசியல் கைதியாகவும் இருந்தவர். சமூகத்திலுள்ள பலருடைய கருத்தும்  ஏறக்குறைய இதுதான்.

ஆகவே இந்த விடயத்தில் சம்மந்தனுடைய அல்லது கூட்டமைப்பினுடைய நிலைப்பாட்டைப் பற்றியும் அணுகுமுறையைப் பற்றியும் பலருக்கும் எதிர் மனப்பதிவுகளே உண்டு. என்பதால் அவர்கள் கடுமையான கோபத்தோடிருக்கின்றனர்.

எமது அரசியற் கைதிகளைப் பகடைக்காயாகப் பயன்படுத்தி, அரசாங்கம் தன்னுடைய சகாக்களைக் காப்பாற்ற முற்படுகிறது என்ற கோபம் இது. இதற்குக் கூட்டமைப்பு தானும் பலியாகி, கைதிகளையும் பலியாக்கி, தமிழ்ச்சமூகத்தையும் பலியாக்குகிற வேலையைச் செய்கிறது என்ற கோபம்.
tna mayday
ஆனால், என்ன செய்ய முடியும்? அதிகாரத்தில் அவர்களே இருக்கிறார்கள். அப்படியென்றால், இதற்கு எதிராக மக்கள் திரண்டு எதிர்ப்புக் குரல் எழுப்ப வேண்டும். அந்த எதிர்ப்புக் குரலின் வீச்சு இவர்களை – இவர்களுடைய இந்த எண்ணத்தை – தந்திரோபாயத்தைச் சிதறடிப்பதாக இருக்கும். அதுவே அரசாங்கத்தையும் கூட்டமைப்பையும் நெருக்கடிக்குள்ளாக்கும். இதற்கு யார் தலைமை தாங்குவது? யார் இதை முன்னெடுப்பது? விக்கினேஸ்வரனோ, கஜேந்திரகுமாரோ, டக்ளஸ் தேவானந்தாவோ, சுரேஸ் பிரேமச்சந்திரனோ, முருகேசு சந்திரகுமாரோ, பிள்ளையான் தரப்போ இதைப்பற்றி என்ன சொல்லப்போகின்றன?

ஏனென்றால், இது ஒரு பொல்லாத பொறி. பொதுமன்னிப்பு என்பதற்குள் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையும் உள்ளடக்கப்பட்டிருப்பதால் இதை எதிர்ப்போர் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையையும் எதிர்ப்பதாக அமையும். எனவே இதைப்பற்றிக் கதைக்கும்போது வலு கவனமாகக் கதைக்க வேணும். இல்லையென்றால் இதைக் கூட்டமைப்புத் தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும். எப்படியென்றால், நாங்கள் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நாங்கள் முயற்சி எடுத்தோம். ஆனால் அதை நீங்கள் குழப்பி விட்டீர்கள் என்ற விதமாக.

இப்படித் தந்திரோபாயமாகவும் தமக்கு நம்பி வாக்களித்த மக்களுக்கு விரோதமாகவும் சிந்திக்கும் அரசியலுக்கு என்ன பெயர்? இவ்வாறு சொந்த மக்களையே ஏமாளிகள் என எண்ணும் தலைவர்களை என்ன பெயரில் அழைப்பது?  என உங்களுக்குத் தெரியும்.

மெய்யாகவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் சமந்தனுக்கும் கூட்டமைப்புக்கும் கரிசனை இருந்திருக்குமாக இருந்தால் அதற்கான நடவடிக்கையிலும் போராட்டத்திலும் ஏற்கனவே ஈடுபட்டிருக்க வேணும். குறைந்த பட்சம் கைதிகளாக இருக்கும் குடும்பத்தினரின் நெருக்கடிகளில் பங்கெடுத்திருக்க வேணும். அவர்களின் மன உணர்வுகளைக் கேட்டறிந்திருக்க வேண்டும். இதெல்லாம் நடந்தா? இல்லையே. அரசியல் கைதிகளைப் பற்றிப் பேச வந்தவர்களையே புறங்காலால் தள்ளியதே நடந்தது.
ஆனால், அரசாங்கம் தனக்கிசைவானதொரு நிகழ்ச்சி நிரலைத் தயாரித்து அதை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிக்கும்போது அதற்கு அனுசரணையும் ஆதரவும் கொடுப்பதற்கு கூட்டமைப்பு இன்று முன்னிற்கிறது. இதிலிருந்தே தெரிகிறது மக்களையும் விட தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு அரசாங்கம் முக்கியமானதாகி விட்டது என்று. இதைப்பற்றி நாளை கூட்டமைப்பிலுள்ள ஒவ்வொருவரும் தமக்கேற்றவாறு எதையோ எல்லாம் சொல்லி, வியாக்கியானப்படுத்தித்  தப்பி விடுவார்கள். இதுதான் முன்பும் பல தடவை நடந்தது.

தமது பிள்ளைகளுக்குப் பொய் சொல்லும் பெற்றோரையும் தம்முடைய மாணவர்களுக்குப் பொய் கூறும் ஆசிரியர்களையும் தன்னுடைய மக்களுக்குப் பொய் சொல்வதும் தலைவரையும் யாரும் மன்னிக்க மாட்டார்கள். மன்னிக்கவும் கூடாது. அப்படி மன்னித்தால் அது மரணக்குழியில் விழுவதற்கே சமமாகும்.

எனவே இந்த விடயத்தைத் தமிழ்ச்சமூகம் எப்படி அணுகப் போகிறது என்பதே இப்போதுள்ள சவால். இதை எதிர்த்தால் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை பின் தள்ளப்படும். ஆதரித்தால் போர்க்குற்றம் சாட்டப்பட்ட படையினரும் அரசியல் முக்கியஸ்தர்களும் தப்பி விடுவர். விடவும் முடியாது. பிடிக்கவும் முடியாத இருபக்கத்திலும் கூருள்ள கத்தியாக மாறியிருக்கிறது இந்தப் பிரச்சினை.

இதைக்குறித்து தமிழ் அரசியல் கைதிகளின் மன நிலை என்ன? அரசியல் நிலைப்பாடு என்ன என்று இதுவரை யாரும் பகிரங்கமாக  வெளிப்படுத்தவில்லை. அதைப்போல அரசியல் கைதிகளாக இருப்போரின்  குடும்பத்தினருடைய நிலைப்பாடு என்ன என்றும் நாங்கள் பார்க்க வேண்டும். தொடர்ந்து வலியைச் சுமந்து கொண்டிருப்போர் அவர்களே. ஆகவே அவர்களுடைய அபிப்பிராயங்களே இங்கே முதன்மை அடைய வேணும்.

நான் அவதானித்த வரையில் அரசியல் கைதிகளாக இருப்போரும் அவர்களுடைய குடும்பத்தினரும் என்ன விதத்திலாவது விடுதலை கிடைத்தால் போதும் என்ற எண்ணத்திலும் எதிர்பார்ப்பிலுமே உள்ளனர். அவர்கள் இனியும் சுமைகளைத் தாங்குவதற்குத் தயாரில்லை. வலியை அனுபவிக்க முடியாத நிலையில் உள்ளனர்.

விதி விலக்காக ஒரு சிலர் இதை மறுத்து படையினருக்கும் பொது மன்னிப்புத் தேவை இல்லை என்று சொல்லக்கூடும். ஆனால்  அவ்வாறான குரல்களும் கைதிகளிடமிருந்து இன்னும் வரவில்லை.

இதேவேளை வெளியே அரசாங்கத்தினதும் கூட்டமைப்பினதும் இந்த ஏற்பாட்டைத் தமிழ்த்தரப்பில் ஒரு சாரார் எதிர்க்கவே போகிறார்கள். போர்க்குற்றம் சாட்டப்பட்ட படையினருக்கும் முன்னாள் – இந்நாள் அரச பிரதானிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்க முடியாது என்றே அவர்கள் சொல்வார்கள்.

ஆனாலும் அது எந்தளவுக்குச் செல்லுபடியாகும் என்ற கேள்வியே இப்போதுண்டு. அரசாங்கமும் கூட்டமைப்பும் இணைந்த பலத்தின் முன்னால் இந்த எதிர்ப்புகள் எந்தளவுக்கு எடுபடும் என்பது கேள்வியே.

எப்படியோ இங்கே குளத்தை யாரும் குழப்ப வேண்டியதில்லை. அரசியல் கைதிகளின் விடுதலையை நாடி நிற்கும் குடும்பங்களின் நிலையும் அந்தக் கைதிகளின் நிலையுமே நம் கண்களில் முதல் தெரிவு. ஆனால், அதற்காக சம்மந்தனும் கூட்டமைப்புமே தமிழ் அரசியல் கைதிகளின் சிறைக் கதவைத்திறந்ததாக யாரும் சொல்ல முடியாது.

அதுதான் தன்னிடம் கைதிகளைத் திறந்து விடுவதற்கான திறப்பு இல்லை என்று ஏற்கனவே பகிரங்கமாகவே சம்மந்தன் சொல்லி விட்டாரே!

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.

",d.insertBefore(c.lastChild,d.firstChild)}function d(){var a=t.elements;return"string"==typeof a?a.split(" "):a}function e(a,b){var c=t.elements;"string"!=typeof c&&(c=c.join(" ")),"string"!=typeof a&&(a=a.join(" ")),t.elements=c+" "+a,j(b)}function f(a){var b=s[a[q]];return b||(b={},r++,a[q]=r,s[r]=b),b}function g(a,c,d){if(c||(c=b),l)return c.createElement(a);d||(d=f(c));var e;return e=d.cache[a]?d.cache[a].cloneNode():p.test(a)?(d.cache[a]=d.createElem(a)).cloneNode():d.createElem(a),!e.canHaveChildren||o.test(a)||e.tagUrn?e:d.frag.appendChild(e)}function h(a,c){if(a||(a=b),l)return a.createDocumentFragment();c=c||f(a);for(var e=c.frag.cloneNode(),g=0,h=d(),i=h.length;i>g;g++)e.createElement(h[g]);return e}function i(a,b){b.cache||(b.cache={},b.createElem=a.createElement,b.createFrag=a.createDocumentFragment,b.frag=b.createFrag()),a.createElement=function(c){return t.shivMethods?g(c,a,b):b.createElem(c)},a.createDocumentFragment=Function("h,f","return function(){var n=f.cloneNode(),c=n.createElement;h.shivMethods&&("+d().join().replace(/[\w\-:]+/g,function(a){return b.createElem(a),b.frag.createElement(a),'c("'+a+'")'})+");return n}")(t,b.frag)}function j(a){a||(a=b);var d=f(a);return!t.shivCSS||k||d.hasCSS||(d.hasCSS=!!c(a,"article,aside,dialog,figcaption,figure,footer,header,hgroup,main,nav,section{display:block}mark{background:#FF0;color:#000}template{display:none}")),l||i(a,d),a}var k,l,m="3.7.2",n=a.html5||{},o=/^<|^(?:button|map|select|textarea|object|iframe|option|optgroup)$/i,p=/^(?:a|b|code|div|fieldset|h1|h2|h3|h4|h5|h6|i|label|li|ol|p|q|span|strong|style|table|tbody|td|th|tr|ul)$/i,q="_html5shiv",r=0,s={};!function(){try{var a=b.createElement("a");a.innerHTML="",k="hidden"in a,l=1==a.childNodes.length||function(){b.createElement("a");var a=b.createDocumentFragment();return"undefined"==typeof a.cloneNode||"undefined"==typeof a.createDocumentFragment||"undefined"==typeof a.createElement}()}catch(c){k=!0,l=!0}}();var t={elements:n.elements||"abbr article aside audio bdi canvas data datalist details dialog figcaption figure footer header hgroup main mark meter nav output picture progress section summary template time video",version:m,shivCSS:n.shivCSS!==!1,supportsUnknownElements:l,shivMethods:n.shivMethods!==!1,type:"default",shivDocument:j,createElement:g,createDocumentFragment:h,addElements:e};a.html5=t,j(b)}(this,document);',c.insertBefore(e,d),b=42===f.offsetWidth,c.removeChild(e),{matches:b,media:a}}}(a.document)}(this),function(a){"use strict";function b(){v(!0)}var c={};a.respond=c,c.update=function(){};var d=[],e=function(){var b=!1;try{b=new a.XMLHttpRequest}catch(c){b=new a.ActiveXObject("Microsoft.XMLHTTP")}return function(){return b}}(),f=function(a,b){var c=e();c&&(c.open("GET",a,!0),c.onreadystatechange=function(){4!==c.readyState||200!==c.status&&304!==c.status||b(c.responseText)},4!==c.readyState&&c.send(null))},g=function(a){return a.replace(c.regex.minmaxwh,"").match(c.regex.other)};if(c.ajax=f,c.queue=d,c.unsupportedmq=g,c.regex={media:/@media[^\{]+\{([^\{\}]*\{[^\}\{]*\})+/gi,keyframes:/@(?:\-(?:o|moz|webkit)\-)?keyframes[^\{]+\{(?:[^\{\}]*\{[^\}\{]*\})+[^\}]*\}/gi,comments:/\/\*[^*]*\*+([^/][^*]*\*+)*\//gi,urls:/(url\()['"]?([^\/\)'"][^:\)'"]+)['"]?(\))/g,findStyles:/@media *([^\{]+)\{([\S\s]+?)$/,only:/(only\s+)?([a-zA-Z]+)\s?/,minw:/\(\s*min\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,maxw:/\(\s*max\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,minmaxwh:/\(\s*m(in|ax)\-(height|width)\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/gi,other:/\([^\)]*\)/g},c.mediaQueriesSupported=a.matchMedia&&null!==a.matchMedia("only all")&&a.matchMedia("only all").matches,!c.mediaQueriesSupported){var h,i,j,k=a.document,l=k.documentElement,m=[],n=[],o=[],p={},q=30,r=k.getElementsByTagName("head")[0]||l,s=k.getElementsByTagName("base")[0],t=r.getElementsByTagName("link"),u=function(){var a,b=k.createElement("div"),c=k.body,d=l.style.fontSize,e=c&&c.style.fontSize,f=!1;return b.style.cssText="position:absolute;font-size:1em;width:1em",c||(c=f=k.createElement("body"),c.style.background="none"),l.style.fontSize="100%",c.style.fontSize="100%",c.appendChild(b),f&&l.insertBefore(c,l.firstChild),a=b.offsetWidth,f?l.removeChild(c):c.removeChild(b),l.style.fontSize=d,e&&(c.style.fontSize=e),a=j=parseFloat(a)},v=function(b){var c="clientWidth",d=l[c],e="CSS1Compat"===k.compatMode&&d||k.body[c]||d,f={},g=t[t.length-1],p=(new Date).getTime();if(b&&h&&q>p-h)return a.clearTimeout(i),i=a.setTimeout(v,q),void 0;h=p;for(var s in m)if(m.hasOwnProperty(s)){var w=m[s],x=w.minw,y=w.maxw,z=null===x,A=null===y,B="em";x&&(x=parseFloat(x)*(x.indexOf(B)>-1?j||u():1)),y&&(y=parseFloat(y)*(y.indexOf(B)>-1?j||u():1)),w.hasquery&&(z&&A||!(z||e>=x)||!(A||y>=e))||(f[w.media]||(f[w.media]=[]),f[w.media].push(n[w.rules]))}for(var C in o)o.hasOwnProperty(C)&&o[C]&&o[C].parentNode===r&&r.removeChild(o[C]);o.length=0;for(var D in f)if(f.hasOwnProperty(D)){var E=k.createElement("style"),F=f[D].join("\n");E.type="text/css",E.media=D,r.insertBefore(E,g.nextSibling),E.styleSheet?E.styleSheet.cssText=F:E.appendChild(k.createTextNode(F)),o.push(E)}},w=function(a,b,d){var e=a.replace(c.regex.comments,"").replace(c.regex.keyframes,"").match(c.regex.media),f=e&&e.length||0;b=b.substring(0,b.lastIndexOf("/"));var h=function(a){return a.replace(c.regex.urls,"$1"+b+"$2$3")},i=!f&&d;b.length&&(b+="/"),i&&(f=1);for(var j=0;f>j;j++){var k,l,o,p;i?(k=d,n.push(h(a))):(k=e[j].match(c.regex.findStyles)&&RegExp.$1,n.push(RegExp.$2&&h(RegExp.$2))),o=k.split(","),p=o.length;for(var q=0;p>q;q++)l=o[q],g(l)||m.push({media:l.split("(")[0].match(c.regex.only)&&RegExp.$2||"all",rules:n.length-1,hasquery:l.indexOf("(")>-1,minw:l.match(c.regex.minw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||""),maxw:l.match(c.regex.maxw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||"")})}v()},x=function(){if(d.length){var b=d.shift();f(b.href,function(c){w(c,b.href,b.media),p[b.href]=!0,a.setTimeout(function(){x()},0)})}},y=function(){for(var b=0;b